இருளும் ஒளியும்

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள், சட்டப்பேரவையிலும் சட்டமன்ற மேலவையிலும் 26-2-1973-ல், எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற சோசலிசக் கொள்கையில் இந்த அரசு அசைக்கமுடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது என்பதையுணர்த்தும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்கள். அப்பேருரைகளின் தொகுப்பே இருளும் ஒளியும்” என்னும் இந்நூல்.

DOWNLOAD :

(Available Formats)

கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 1973 பிப்ரவரி 26 அன்று தமிழகச் சட்டப்பேரவையிலும், சட்டமன்ற மேலவையிலும் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைப் பேருரைகளின் தொகுப்பு. இந்தத் தொகுப்பு, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற சோசலிசக் கொள்கையின்பால் தமிழக அரசு கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.

சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், சாதிய ஒடுக்குமுறைகள், வறுமை போன்ற ‘இருளான’ பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் படைப்பு இது.

 

இருளும் ஒளியும்

சட்டப் பேரவையில்

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் துணைத்தலைவர் அவர்களே, இந்த மாமன்றதில் வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை மீது காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் பொன்னப்ப நாடார் அவர்கள் உட்பட 81 உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். 175 திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களில் 38 உறுப்பினர்களும், திராவிட முன்னேற்ற கழகம் அல்லாத மற்றக் கட்சிகளைச் சேர்ந்த 58 உறுப்பினர்களில் 43 உறுப்பினர்களும், இந்த விவாதத்தில் கலந்து கொண்டு, அரிய கருத்துக்கள் பலவற்றை அவரவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற கட்சிகளின் கொள்கைகளுக்கு ஏற்ப இங்கு விளக்கியிருக்கிறார்கள். அந்தக் கருத்துக்களில் சாதகமான கருத்துக்கள், பாதகமான கருத்துக்கள் எவை இரு தாலும் அவைகள் அனைத்தும் இந்த ஆட்சிச் சக்கரம் நல்ல முறையில் சுழல்வதற்குப் பயன்படும் என்ற வகையில் கருத்து அறிவித்த எல்லாக் கட்சியினுடைய உறுப்பினர்களுக்கும் நான் என்னுடைய நன்றியையும், பாராட்டுதலையும் முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன்.

வழக்கமாக ஆளுநர் உரையின்மீது நடைபெறுகிற விவாதம் ஆளும்கட்சி உறுப்பினரால் பாராட்டுத் தீர்மானம் கொண்டுவரப்பெற்று, அதற்குப் பிறகு தொடங்கும். முதலமைச்சருடைய அல்லது நிதிஅமைச்சருடைய நிதிநிலை அறிக்கையின் மீது தொடங்குகிற விவாதம் வழக்கமாக எதிர்க்கட்சி முதலில் எதிர்த்துப் பேசி, பிறகு தாடங்கும். ஆனால், முதல் தடவையாக என்று நான் கருதுகிறேன், இந்த மாமன்த்தில் ஆளும்கட்சியின் சார்பிலும் தொடங்கப் பெறாமல் மரபுவழி எதிர்க்கட்சியின் சார்பிலும் தொடங்கப் பெறாமல், தோழமைக்கட்சியின் சார்பில் இந்த வாதம் தொடங்கப்பெற்று, ஆக, ஆரம்பத்திலேயே இதற்கு எதிர்ப்பு இல்லை என்கிற அளவில் இந்த விவாதம் தொடங்கியிருப்பதைக் காண நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த மாண்புமிகு உறுப்பினர் வகாப் அவர்கள் இந்த நிதிநிலை அறிக்கையை ஆதரித்துப் பேசி, நல் வாழ்த்துக்களைக் கூறி, விவாதத்தைத் தொடங்கி வைத்தார்கள்.

திரு தங்கமணி வழக்கு

இங்குப் பேசிய கட்சித் தலைவர்களும், சில உறுப்பினர்களும், என்னுடைய அருமை நண்பரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவருமான கே.டி.கே. தங்கமணி அவர்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் அவர்களுடைய கருத்துக்களைக் கூறுவதற்கு முடியாமல் தடுக்கப்பட்டு விட்டார்கள் என்ற கருத்தினை எடுத்துச்சொன்னார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேசியபோது, எனக்கு அது புரிந்தது. சுதந்திராக் கட்சியின் சார்பில் திரு ஹண்டே அவர்கள் பேசியபோது அது எனக்குப் புரிந்தது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருமதி அனந்தநாயகி அம்மையார் அவர்கள் தவிர மற்றர்கள் பேசியபோதும் அது எனக்குப் புரிந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. பொன்னப்ப நாடார் அவர்களும், வேறு சிலரும் பேசிய நேரத்தில் எனக்கு அது புரியவில்லை. ஏனெனில், இங்கே சுதந்திராக் கட்சியோ, கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது ஆளுங் காங்கிரஸ் கட்சியோ தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கட்சிப் பொறுப்பை இது வரையில் ஏற்றுக்கொண்டு இருந்த கட்சிகள் அல்ல. ஆனால், நம்முடைய பொன்னப்ப நாடார் அவர்களுடைய காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டை 20 ஆண்டுக் காலம் அரசோச்சிய கட்சியாகும். அந்தக் கட்சியின் சார்பில் தம்முடைய நிறுவன காங்கிரஸ் கட்சியின் தலைவர் பான்னப்ப நாடார் அவர்கள் என்னை 62 நாட்கள் பாளையங் கோட்டை சிறையில் பூட்டிவைத்துவிட்டு இங்கே சட்டசபைநடத்துவதற்குத் துணையாக இருந்தவர்கள்.

நம்முடைய மாண்புமிகு கல்வியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர் தண்டிக்கப்பட்டுச் சென்னைச் சிறைச்சாலையில் இருந்த போது, அவர் தலைமை வகிக்கும் கணக்காய்வுக்குழுவிற்கு ஒரு நாள் வந்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று, குழுவை நடத்திவைக்க ஒரு நாள் விடுமுறை கேட்டபோது, அதற்காக வெளியே வந்துவிட்டுப்போக அனுமதி கேட்போது, அதை மறுத்த அன்றையப் பழைய கட்சியினுடைய போக்குக்குத் துணையாக இருந்த நாடார் அவர்கள் அதைப்பற்றிப் பேசும்போதுதான் எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால், நடைபெற்று இருப்பது என்ன ? திரு. தங்கமணி அவர்கள் மீது ஒரு வழக்கு. நான் அந்த வழக்கின் சாராம்சத்திற்குள்ளே நுழையவிரும்பவில்லை. அது நீதிமன்றத்தின் படிக்கட்டிற்குச் சென்றுவிட்ட காரணத்தால் அதை அரசு திரும்பப் பெற்றுவிடக்கூடாது என்று திரு. ஹண்டே அவர்கள் கேட்டார்கள். அது வேறு பிரச்சினை. ஆனால், அவருக்கு நீதிமன்றத்தில் தரப்பட்டிருக்கும் நிபந்தனை, அவர் சென்னையில் தங்கியிருக்கலாம் என்பது. சென்னையிலே தங்கியிருக்கலாம் என்று அளிக்கப் பட்டிருக்கும் அந்தத் தீர்ப்பு எப்படிச் சட்டசபைக்கு அவர் செல்லக்கூடாது என்று தடுக்கிறது என்பது எனக்குப் புரிய வில்லை.

சென்னையில்தான் சட்டசபை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. முன்பு ஒரு காலத்தில் நடந்தது போல் உதக மண்டலத்தில் சட்டசபை நடந்து, சென்னையில் தங்கமணி தங்கியிருக்க வேண்டுமென்று சொன்னால், ஐயோ, சட்டசபைக்கு அவர் வரமுடியாமல் தடுத்துவிட்டார்களே என்று ஆதங்கப்பட நியாயம் இருக்கமுடியும். சென்னையில் சட்டமன்றம் நடந்துகொண்டு இருக்கிறது..

தீர்ப்பு என்ன ?

நம்முடைய நண்பர் திரு. ஹண்டே நேற்றோ அதற்கு முதல் நாளோ என்று கருதுகிறேன். இன்று படித்து காட்டிய நண்பர் தங்கமணி அவர்களின் கடிதத்தை என்னிடம் காட்டி, அவர் சட்டசபைக்கு வருவதற்கு விரும்புகிறாரே, ஏன அவர் ஜாமீன் கோரினால் விட்டுவிடக்கூடாதா? என்று கேட்டார்கள். நான் உடனே அவரிடத்தில் சொன்னேன்; அது என் கையில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். அது நீதிமன்றத்தில் இருக்கும் விஷயம். ஆனால் நான் உங்களுக்கு ஒரு செய்தி சால்லுகிறேன். அவருக்கு அளிக்கப்பட்டு இருக்கும் தீர்ப்பில், அவர் சென்னையில் தங்கியிருக்கலாம் என்று இருக்கிறது. சட்டசபை நடவடி க்கை களுக்கு வர எந்தத் தடையுமில்லை என்று சொன்னேன். ஓகோ அப்படியா, என்று கேட்டுக்கொண்டார். ஆறுதல் பெற்றுச் சென்றார். இங்கே பேசுகிற போது அவர் அப்படித்தான் பேச வேண்டும்; பேசினார். ஆனால் அவர்கள் எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்டகருத்துக்களை அதிலும்

பான்னப்ப நாடார் அவர்கள் சொன்னபோது நான் உள்ள படியே வியப்பு அடைந்தேன். இப்போதும் நாட்கள் ஒன்றும் ஆகிவிடவில்லை. இந்த மாமன்றம் இந்த மாதம் இறுதி வரையிலும், அதைத் தாண்டி ஏப்ரல் திங்கள் முதல் வாரம் வரையிலும் கூட நடைபெறக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. இதிலே கலந்து]கொள்ளும் வாய்ப்பினை திரு. கே.டி.கே தங்க மணி அவர்கள் பெறமுடியும்.

நிதி ஆணைக் குழு

இந்த நிதி நிலை அறிக்கையில் பேசிய மாண்புமிகு உறுப் பினர்கள் சிலர் நான் கோடிட்டுக் காட்டி இருக்கின் ஒரு முக்கியமான விஷயத்தில் கொஞ்சம் கருத்து வேறுபாடு கொண்டார்கள். குறிப்பாக திரு சௌடி சுந்தரபாரதி அவர்களும், வேறு சில உறுப்பினர்களும் நிதி ஆணைக் குழு, தலையாய இடத்தை மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் வேண்டுமென்று நான் சுட்டிக்காட்டி இருக்கின்ற கருத்துக்களை அவர்கள், தங்களுக்கு இருக்கின்ற வேறுபாட்டுக் கருத்தின் மூலமாக மறுத்துரைத்தார்கள். திரு. சௌடி. சுந்தர பாரதி அவர்கள் நிதி ஆணைக்குழு மூலமாக மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற ஒரு கொள்கை சொல்லப் பட்டிருக்கிறது. அது ஒரு சரியான கொள்கையாக எனக்குத் தெரியவில்லை என்று இங்கே குறிப்பிட்டார்கள். நான் அவர்களுக்குச் சொல்லும் விளக்கம் எல்லாம், அரசுகள் மத்திய அரசிடமிருந்து நிதி பெற வழிவகுப்பதில் நிதி ஆணைக்குழுவே தலையாயஇடம் பெறவேண்டுமென்றுதான், நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறேனே அல்லாமல், திட்டத்திற்கு ஆகும் செலவுகளை நிதி ஆணைக்குழுவே கணக்கிலே எடுத்துப் பரிந்துரைக்க வேண்டும் என்பதும், நிதி ஆணைக் குழு வகுக்கும் கொள்கைக்கு ஏற்ப ஆண்டுக்கு ஆண்டு திட்டங்களுக்காக மாநிலங்களுக்கு உதவி அளிப்பதில் திட்டக்குழுவிற்குப் பொறுப்புக் கொடுக்கலாம் என்பதும் நம்முடைய கருத்தாகும். அதைத்தான் இந்த அறிக்கையில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். நிதி ஒதுக்குவதில் திட்டக்குழுவிற்கு எந்தவிதமான பங்கும் இருக்கக்கூடாது என்பது என்னுடைய வாதமல்ல.

மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு, நிதி ஆணைக்குழு கொடுக்கும் துண்டு மானியங்கள், இப்போதுள்ள நிலைமைகளில் நிதி ஆணைக் குழுவின் பரிந்துரைப்படி கொடுக்கப்படுகின்றன. அது அப்படியே இருக்கவேண்டுமென்று நாம் கூறுகிறோம் இவைகளை மாநில அரசு தன்னுடைய விருப்பப்படிச் செலவு செய்வதற்கான உரிமை பெற்ற அரசாக இருக்கிறது. ஆனால், திட்டக்குழு மாநிலத் திட்டச் செலவுகளுக்கு என்று ஒதுக்கும் தொகையில். அதை அனைவரும் அறிந்து கொள்வது நலம் என்று கருதுகிறேன். திட்டக்குழு மாநிலங்களுடைய திட்டச் செலவுகளுக்காக ஒதுக்குகின்ற தொகையில், உதவியாகத் தருவது, கடன் உதவியாகத் தருவது 70 சதவீதம்; மானியமாகத் தருவது’ 30 சதவீதந்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதிலே நான் சொல்வது இந்த உதவி மானியத்தைப் பொறுத்தவரையில் நிதி ஆணைக்குழுவின் பொதுவான பரிந்துரைப்படி, திட்டக்குழு மாநிலங்களுக்குக் கொடுக்கவேண்டுமென்பதும், மத்திய நிருவாகச் சீரமைப்புக் குழுவின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது என்பதுமாகும். திட்டக் கடன் உதவி, பெரிய குறிப்பிட்ட திட்டப்பணிகளுக்குக் கடன் அளிப்பதற்கு அனைத்து இந்தியக் கடன் நிறுவனம் ஒன்று ஏற்படுத்தி அதிலே மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பது இந்த அரசினுடைய கருத்தாகும்.

மத்திய அரசின் சார்பில் மாநிலம் நடத்தும் பணிகள் உதவி, (Centrally sponsored schemes) மத்திய அரசின் பல துறைகள் தொடங்கும் திட்டங்களை மாநிலத்தில் மாநில அரசு நடத்துவதற்கு உதவி, ஆகியவைகளை எல்லாம் நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு உட்படுத்த வேண்டும், என்று சொல்லி இருக்கிறோமேயல்லாமல் எல்லாவற்றையும் நிதி ஆணைக் குழுதான் வழங்க வேண்டும், திட்டக்குழு அந்தப் பணியைச் செய்ய வேண்டுமென்று நான் குறிப்பிடவில்லை.
பொதுச் சுகாதாரம்

இந்த நிதி நிலை அறிக்கையில் மாண்புமிகு உறுப்பினர்கள் பலரும் அவர்களுக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களைத் தங்களுடைய உரையில் குறிப்பிட்டார்கள். திருமதி அனந்தநாயகி அம்மையார் அவர்கள் ஒன்றைச் சுட்டிக்காட்டினார்கள். பொதுச் சுகாதாரம் என்பதின் கீழ், வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு 12.45 கோடி ரூபாய் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இதற்கான செலவு 10·04 கோடி ரூபாய் என்று காட்டப்பட்டிருக்கிறது; குறைந்து இருக்கிறது” என்று குறிப்பிட்டார்கள். அதை அவர்கள் கவனித்து எடுத்துக் காட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அவர்களுக்கு நான் விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். வரவு செலவுத் திட்டத்தில் 1245 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டு இருப்பதில், குடும்ப நலத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கம் 3.86 கோடியாகும். இதை நீக்கிவிட்டுப் பார்த்தால் 8.59 கோடி ரூபாய்தான் பொதுச் சுகாதாரத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது. அதில் இப்போது ஒதுக்கப்பட்டிருக்கிற 1004 கோடி ரூபாயில் இந்தக் குடும்ப நலத் திட்டத்திற்காகச் செலவு செய்யப்படுவது அதிலே சேர வில்லை. ,

திருமதி த.ந. அனந்தநாயகி : அதே நேரத்தில் அடுத்த பக்கத்தில் பார்த்தால் குடும்பநலத் திட்டத்திற்காக 6 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அது எப்படி வந்தது?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: அதைத்தான் நான் சொல்கிறேன் குடும்பநலத் திட்டத்திற்காக 6 கோடி தனியாகப் போடப்பட்ட காரணத்தால் இதிலே அதைச் சேர்க்கவில்லை. பொதுச் சுகாதாரம் நிதி ஒதுக்கீடு 8.59 கோடி ரூபாய். திருத்த மதிப்பீடு 10.04 கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ள முடியும். பொதுவாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத் திட்டம் என்ற மூன்று துறைகளுக்கும் 1972-73 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு 34.69 கோடி ரூபாய் மொத்த மதிப்பீடு; திருத்தப்பட்ட மதிப்பீடு 38.9 கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கிறது. இது ‘பட்ஜெட் டீடெய்ல்ஸ்’ என்ற புத்தகத்தில் பார்த்தால் விளக்கமாகத் தெரியும்.

வேளாண்மைச் செலவு

திரு. ஹண்டே அவர்கள் இதே போன்று இன்னொரு கருத்தைச் சொன்னார்கள். வேளாண்மைக்காகச் சலவிடப்படும் தொகை குறைந்து வருவதாகச் சொன்னார்கள். அதிலே இருப்பதை எடுத்துக் காட்டினார்கள். 1972-73 வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு இதற்கு 619 இலட்சம் ரூபாய். 1972-73 திருத்த மதிப்பீடு நிதி ஒதுக்கீடு 564 இலட்சம் ரூபாய் என்று இருப்பதை அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். இதிலே திட்டச் செலவு, திட்டம் இல்லாத செலவுகள் என்று இரண்டு இருக்கின்றன. நாம் இந்தக் குழப்பம் நீக்கப்பட வேண்டுமென்று அடிக்கடி நிதி நிலை அறிக்கையில் பேசுகிற நேரத்தில் எடுத்துச் சொல்லி வருகிறோம். திட்டச் செலவு, திட்டமில்லாத செலவு என்று இரண்டையும் சேர்த்துக் கொடுக்க வேண்டுமென்று அடிக்கடி எடுத்துக் காட்டி வருகிறோம். ஆனால் இந்த ரூ. 619 இலட்சத்தில் திட்டச்செலவு ரூ. 564 இலட்சம்; திட்டச் செலவு குறைந்து இருக்கிற அதே நேரத்தில் வேளாண்மைத் துறைக்குத் திட்டம் இல்லாத செலவுகளின் மூலமாக நிறைய ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த 619 இலட்சம் ரூபாய் திட்டச் செலவோடு 1972-73-ல் நிதி ஒதுக்கீடு 20.16 கோடி ரூபாய்தான். ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீடு 24.18 கோடி ரூபாயாகி இருக்கிறது. ஆகவே, அது குறைந்துவிடவில்லை; திட்டச் செலவு என்ற வகையில் பார்த்தால் திரு. ஹண்டே அவர்கள் சொன்னது சரியாக வரும். ஆனால் திட்டச் செலவு, திட்டம் இல்லாத செலவு என்று இணைத்துப் பார்க்கிற நேரத்தில் பொதுவாக வேளாண்மைத் துறைக்கு நாம் செலவு செய்யும் பணம் எதுவும் குறைந்து விடவில்லை என்று நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு காசிராமன் அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். அவர்கள் இங்கு இல்ல விட்டாலும், அவர்கள் சொன்ன கருத்து, பத்திரிகையில் வந்திருக்கின்ற காரணத்தினால் நான் அதற்குப் பதில் அளிக்க வேண்டிய கடமை உடையவனாக இருக்கிறேன். அவர்கள் எடுத்துக்காட்டிய குறிப்பு-1966-67-ல் நிலவரி, பாசன வாரி, செஸ் வரி, விவசாய வருமான வரி இவைகள் எல்லாமும் சேர்ந்து, இந்த அரசுக்கு இவைகளின் மூலம் மொத்தம் ரூ. 840 இலட்சம் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு அதே இனங்களில் இந்த அரசுக்குக் கிடைக்கும் தொகையு ரூ. 840 இலட்சம் தான். எனவே இதில், மாற்றம் இல்லை எந்த வரியும் குறைக்க வில்லை. ஆகவே நில வரியை குறைத்தோம் என்று சொல்லுவது ஒரு மாயை; ‘Myth’ என்று திரு. காசிராமன் அவர்கள் அன்றைக்குக் குறிப்பிட்டார்கள்

விவசாய வருமான வரி

இதற்கு நான் விளக்கம் அளிக்க வேண்டுமானால், விவசாய வருமான வரியில் நாம் செய்திருக்கிற மாற்றங்களை மறந்து விடக்கூடாது. 5 ஏக்கர் வரையிலே நஞ்சைக்கும், புஞ்சை நிலத்திற்கும் அடிப்படை நிலத்தீர்வை இல்லை என்று நாம் அறிவித்துவிட்ட பிறகு, பணப்பயிர்கள் செய்துகொண்டிருக் கற வசதிபடைத்த விவசாயிகளுக்கு விவசாய வருமான வரியை நாம் இங்கே உருவாக்கி, அதன் மூலமாகக் கொஞ்சம் அதிகமான பணத்தைப் பெறுகிறோம். அதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிக் கணக்கில் எடுத்துக் கொள்வது மாத்திரம் போதாது. இந்த நிலவரியைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஆண்டுக்கும் எவ்வளவு கிடைக்கின்றது என்ற கணக்கை விட, ஒவ்வொரு 5 ஆண்டுக் காலத்திற்கும் சராசரி எவ்வளவு கிடைத்திருக்கிறது என்பதைக் கணக்கிட வேண்டும். ஏனென்றால், சில ஆண்டுகளில் வரிவஜா அல்லது தவணை என்கின்ற இவைகளெல்லாம் வந்துசேரும். ஆகவே, ஒரு ஐந்தாண்டுக் கொரு கணக்கை எடுத்துப் பார்த்து, சராசரி பார்த்தால், 1966-67 முடிய திரு. காசிராமன் குறிப்பிட்டுக் காட்டிய 1966-67 முடிய உள்ள ஐந்து ஆண்டுகளுக்கு நில வரியின்கீழ்ச் சராசரி வருவாய் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 8 கோடி. அதுபோல 1973-74-ஆம் ஆண்டோடு முடிவடைகிற ஐந்து ஆண்டுகளுக்குச் சராசரி நிலவரி வருவாய் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 6.3 கோடி. ஆகவே, ரூ. 2 கோடி அளவுக்குக் குறைந்திருக்கிறது. அடிப்படை நில வரியை ரத்துச் செய்ததன் காரணமாகச் சாதாரண விவசாயிகளுக்கு இந்தச் சலுகைகள் மூலம் பயன்கிடைத்திருக்கிறது. இன்னும் போகப்போக இந்த வரியின் மூலம் கிடைக்கின்ற தொகை குறையக்கூடுமே அல்லாமல், அதிகரிப்பதற்கு வாய்ப்பு வசதிகள் இல்லை என்பதனையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழில் அபிவிருத்தி

நம்முடைய பழைய காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய கம்பம் தொகுதியைச் சேர்ந்த திரு. கோபால், அவர்கள் உன்னை சொன்னார்கள், 1965 – 66 இல் தொழில் அபிவிருத்திக்காக ரூபாய் 6.56 கோடி ஒதுக்கப்பட்டது. 1973 – 74 இல் ரூபாய் 4.48 கோடி தான் ஒதுக்கப்பட்டு இருக்கிறது” என்று சொன்னார்கள். அவர்கள் பட்ஜெட் மொமென்டம் பக்கம் 37-ஐ பார்ப்பார்கள் ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளலாம் எண் – 35 தொழில்கள் என்ற தலைப்பில் ஒதுக்கப்பட்டிருக்கிற தொகை 1965 – 66 ஆம் ஆண்டு ரூபாய் 6.56 கோடியாகும். வரும் ஆண்டில் அதே எண் – 35 தொழில்கள் என்ற தலைப்பில் கீழ் ஒதுக்கப்பட்ட தொகை நான்கு கோரிக்கைகளின் கீழ் வருகின்றது என்பதையும் மறந்து விடக்கூடாது. சென்ற ஆண்டையும் அதற்கு முந்தைய ஆண்டையும் பார்த்தால் இரண்டு மூன்று ஆண்டுகளாக தான் இம்மாதிரி தனித்தனியாக கோரிக்கைகள் வைக்கப்படுகின்ற ஒரு முறையை நாம் கடைப்பிடித்து வருகிறோம். இந்தக் கோரிக்கைகளையெல்லாம் சேர்த்துத்தான் 1965-66-ல் திரு கோபால் அவர்கள் சொன்னது போல ரூ. 6.56 கோடி தொழிலுக்காக ஒதுக்கப்பட்டது. இதில் ஒரு கோரிக்கையை மாத்திரம் எடுத்துச் சொல்வது சரியல்ல. ‘டான்ஸி நிறுவனத்திற்கு ரூ 3.35 கோடி ஒதுக்கியதும் அடங்கியிருக்கிறது. இப்பாழுது டான்ஸி நிறுவனத்தின் மூலம் செலவழிக்கப்படுகின்ற தாகை ரூ. 7 கோடி, அதிலே இது அடங்காமல் தனியாகச் செலவழிக்கப்படுகிறது. மாநில நிதிநிலை அறிக்கையில் இப்பொழுது தொழில்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ 7.5 கோடிக்கும் மேற்பட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே இந்த இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 1965-66-ல் ரூ. 6.56 கோடி தொழில் வளர்ச்சிக்காகச் செலவிடப்பட்டது என்பதற்கு மாறாக இப்பொழுது சுமார் 15 ரூ. கோடி அளவில் அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை புலனாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். .
வரியில் பங்குத் தொகை

திரு. ஜேம்ஸ் அவர்கள் இந்த நிதிநிலை அறிக்கையின் மீது பேசினார்கள். அவர்கள் இந்த நிதிநிலை அறிக்கையை இங்கு சமர்ப்பிப்பதற்கு முதல் அமைச்சருக்கு உரிமையே கிடையாது என்று பேசினார்கள். நல்ல வேளையாக அப்படிப்பட்ட தகுதியற்ற ஒருவர் நிதிநிலை அறிக்கையை அங்கே வைத்த காரணத்தினால், அதிலே தான் பேசமுடியாது என்று சொல்லிவிடாமல், என்பால் அன்பு வைத்து, அவர்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் தன்னுடைய ஆழ்ந்த கருத்துக்களையெல்லாம் எடுத்துச் சொன்னதற்கு, திரு. ஜேம்ஸ் அவர்கள் இங்கே இப்பொழுது இல்லாவிட்டாலும், திரு. பொன்னப்ப நாடார் அவர்களின் மூலம் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். 1966-67-ஆம் ஆண்டில் ரூ. 194 கோடி வருமானம் இருந்தது மாநில அரசுக்கு. 1973-74-ல் ரூ. 465 கோடி வருமானம் மாநில அரசுக்கு என்று சொல்லிவிட்டு 465-லிருந்து 194-ஐக் கழித்தார்கள். கழித்து, ஆக 271 கோடி ரூபாய் வரி அதிகமாக மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. ஆக வருமானம் முழுவதையும் வரி என்று கணக்கில் எடுத்துக்கொண்டு 465 கோடி வரி இப்பொழுது, 1966-67-ல் ரூ. 194 கோடி வரி, ஆக 465-ல் 194 போனால் ரூ.271 கோடி என்று கணக்கிட்டு ஒன்றைச் சொன்னார்கள். இது சுலபமான வாதம். “7-ம் 8-ம் 15” என்று சொல்கிறார்கள். நாம் அதை மறுக்கிறோம். “7-ம் 8-ம் 15 என்பதை எப்படி மறுக்கிறாய்? என்று கேட்கிறார்கள்.

சரியான கணக்கா ?
நாம் சொல்கிற சந்தேகம் எல்லாம் 7-ம், 8-ம் 15 தான், ஆனால் 7-ஐ நீங்கள் எப்படிக் கணக்கிட்டிருக்கிறீர்கள் என்றால், 4-ம் 2-ம் ஏழு என்று கணக்கிட்டு, பிறகு 7-ம், 8-ம் 15 என்று சொல்கிறீர்கள் என்றுதான் பதில் அளிக்கிறோம். அந்த வகையில் திரு. ஜேம்ஸ் அவர்கள் குறிப்பிட்ட ரூ.194 கோடி மாநில அரசுக்கு வரி மூலமாக 1966-67-ல் வருமானம் வந்திருக்கிறது என்பது ; அதுவும் தவறு. 1973-74-ல் ரூ. 465 கோடி, வரி மூலம் வந்தது என்பது; அதுவும் தவறாகும். இந்த வருமானத்தில் பல இனங்கள் சேருகின்றன. 1966-67-ல் ரூ. 29 கோடியாக இருந்த மத்திய வரியில் பங்கு இப்பொழுது ரூ. 96 கோடியாக உயர்ந்திருக்கிறது. அம்மையார் அவர்களுக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கும். பாருங்கள், 1966-67-ல் மத்திய அரசு ரூ. 29 கோடி தான் கொடுத்தது, இப்பொழுது ரூ.96 கோடி கொடுக்கிறது. இப்படிக் கொடுத்தும் கூடக் கருணாநிதி மாற்றாந்தாய் மனப் பான்மை என்று சொல்கிறாரே, இது நியாயமா, என்று கேட்பதற்கு அவர்களுக்கு மேடைக்கு ஒரு சரியான பாயின்ட் கிடைத்தது என்று கருதுகிறேன். ஆனால், நான் சொல்ல விரும்புவதெல்லாம் தமிழ்நாட்டிலும் சேர்த்து வசூல் பண்ணுகின்ற வரிப் பணத்திலிருந்துதான் மத்திய அரசு பங்குத் தொகையை அளித்து வருகிறது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. மத்திய அரசின் ரூ.29 கோடி வந்த வரிப்பங்கு, கோடியாக உயர்ந்திருக்கிறது. பாழுது 1966-67ல் கோடியாக இருந்த மத்திய அரசினுடைய மூலம் ரூ.96 ரூ. 23 உதவித்தாகை 12 இப்பொழுது ரூ. 54 கோடியாகியிருக்கிறது. 1966-67-ல் வரி தவிர்த்த வருமானம், அதாவது நான்டாக்ஸ் ரெவின்யூ, ரூ. 46 கோடியாக இருந்தது. அது இப்பொழுது 89 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதையெல்லாம் கழித்துப்பார்த்தால் 1966-67-ல் வரி ரூ. 194 கோடி அல்ல.

வருமானம் ரூ.194 கோடி. அதிலே வரி மாத்திரம் ரூ.95 கோடிதான் 1966-67ல். அதைப்போலக் கழித்துப் பார்த்தால் இப்பொழுது மாநில வரி ரூ. 225 கோடி. 1966-67-ல் ரூ. 95 கோடி வரி, இப்பொழுது மாநில வரி ரூ. 225 கோடி. இது எந்தப் புதிய வரிகளையும் தாங்க முடியாதவர்கள் மீது போட்டு உயர்ந்த வரி அல்ல என்பதையும் இந்த அவையிலே பல நேரங்களில் அமைச்சர்களும் நானும் எடுத்து விளக்கிருக்கிறோம்.

பழைய வரிகளைச் சிறிது உயர்த்தியதாலும், சீரமைப்புகள் பலவற்றைச் செய்ததாலும், நாட்டில் நம்முடைய மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் இவைகளிலே நாம் உண்டாக்கிய வளர்ச்சி முன்னேற்றங்களினாலும் ரூ. 95 கோடி என்கின்ற அந்த வரி 7 ஆ ண்டுக் காலத்தில் ரூ.225 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த 7 ஆண்டுக் காலத்தில் இவ்வளவு உயரலாமா? ஒரு நல்ல கேள்வி. ரூ.95 கோடியாக இருந்த வரி 7 ஆண்டுக் காலத்தில் ரூ. 225 கோடியாக உயரலாமா என்பது நல்ல கேள்விதான். அதே நேரத்தில் 1967-க்கு முன்பு ஒரு 7 ஆண்டு காலம் நாம் பின்நோக்கிச் சென்று பார்க்க வேண்டும். 1967-க்கு ஆண்டுக்கு முன்பு 1959-60-ல் ரூ. 39 ரூ.95 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது 2.45 மடங்கு அதிகம் கோடியாக இருந்த வரி, 1966-67-ல் 1959-60-ஐக் காட்டிலும் 1966-67-ல் உயர்ந்த வரி 2.45 மடங்கு அதிகம். அதை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த 7 ஆண்டுக் காலத்தில் 95 கோடி ரூபாயாக இருந்தது உயர்ந்திருப்பது 225 கோடி ரூபாயாக மடங்கு தான் அதிகம் என்பதை நன்றாகப் புலப்படுத்தும். ஆகவே முந்தைய ஏழாண்டுக் காலங்களிலே பார்க்கிறபோது 2.45 மடங்கு உயர்ந்திருக்கிறது; இப்பொழுது ஏழாண்டுக் காலங்களிலே 2.36 மடங்குதான் உயர்ந்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமதி த. ந. அனந்தநாயகி : இந்த 6, 7 ஆண்டுக் காலங்களிலே 6 ஆண்டுக் காலத்தைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 1967-லிருந்து 1973 வரை 130 கோடி ரூபாய் அளவுக்கு வரியிலே உயர்வு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா என்பதுதான் கேள்வி.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : ஒப்புக்கொள்ளா விட்டால் வரி வராதே !

பத்திரிகை விளம்பரம்

டாக்டர் எச். வி. ஹண்டே : மதிப்புக்குரிய முதலமைச்சரவர்கள் திரு கோபால் அவர்கள் பேசியதற்குப் பதில் சொன்னார்கள். கோபால் அவர்கள் இன்னும் ஒரு கருத்தைச் சொன்னார்கள். விளம்பரத்திற்கு ஏராளமான பணம் செலவு செய்கிறார்கள்; அது எதற்காக என்று சொன்னார்கள். அதற்குப் பதில் என்ன ?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : திரு. ஹண்டே அவர்களுக்கு இவ்வளவு அவசரம் கூடாது. அடுத்த பாயின்ட் கோபால் அவர்கள் சொன்னார்கள் ; குறித்து வைத்திருக்கிறேன். அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது-இரண்டாண்டுக் காலத்திலே பத்திரிகை விளம்பரச் செலவுகளுக்காக ரூபாய் 218 இலட்சம் என்றும், அது இப்போது அதிகமா கமாகிவிட்டது என்றும் திரு கோபால் அவர்கள் குறிப்பிட்டார்கள். முதலிலே ஒரு விளக்கத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது சிட்கோ, சிப்காட், சுற்றுலா வாரியம், குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவை இல்லை. இப்போது இந்த நிறுவனங்களின் சார்பாகவும் விளம்பரங்கள் தரப்படுகின்றன. அது மட்டுமல்ல. 1969-க்குப் பிறகு பத்திரிகைகளின் விளம்பரக் கட்டணங்களை உயர்த்தியிருக்கிறார்கள். திரு. கோபால் அவர்கள் பேச்சைக் கட்டம் கட்டிப் போட்ட பத்திரிகைகளுக்கே கூட இது நன்றாகத் தெரியும்: பத்திரிகை விளம்பரக் கட்டணங்களை உயர்த்தியிருக்கிறார்கள். அப்படியே இருந்தாலுங்கூட திரு. கோபால் அவர்கள் சொன்னது தவறான கணக்காகும். அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்து ஆட்சிபுரிந்த இரண்டாண்டுக்காலத்தில் 2.18 லட்சம் ரூபாய்தான் விளம்பரங்களுக்குச் செலவிட்டார்கள் என்பது தவறு, முற்றிலும் தவறு. 1967-68-ல் மாத்திரம் -அண்ணா அவர்கள் ஆட்சிபுரிந்தபோது – 5,20,945 ரூபாய், 1968-69-ல் 8,09,151 ரூபாய். ஆக 13 லட்சத்திற்கு விளம்பரத்திற் அந்த இரண்டாண்டுக் காலத்தில் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தரப்பட்டிருக்கிறது. 1969-70-ஆம் ஆண்டிலே 12 லட்சம் ரூபாய், 1970-71-ஆம் ஆண்டில் 20,43,000 ரூபாய், 1971- 72-ல் 24,83,000 ரூபாய். இந்த மூன்று, நான்கு ஆண்டுக் காலத்தில் விளம்பரத்திற்காக மொத்தம் செலவிட்ட தாகை 57 லட்சம் ரூபாய். இதிலே அவர்கள் குறிப்பிட்டார்கள்-11 லட்சம் ரூபாய்க்கோ, 2 லட்சம் ரூபாய்க்கோ விளம்பரம் தந்து விட்டார்கள் முரசொலிக்கு என்று. உண்மை. 57 லட்சம் ரூபாயில் 11 அல்லது 2 லட்சம் ரூபாய் முரசொலிக்கு விளம்பரம் தந்தது போக மிச்சம் உள்ள 55 லட்சம் ரூபாய் மற்றப் பத்திரிகைகளுக்கு விளம்பரத்திற்காகத் தரப்பட்டிருக்கிறது. ஆகவே, ஒரு பெரிய தவறு விட்டதாக யாரும் சொல்லமுடியாது.

DR. H. V. HANDE: முரசொலிக்கு விளம்பரம் கொடுத்ததற்காக நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், சர்க்குலேஷன் எந்த அளவுக்கு இருக்கிறதோ அளவுக்குக் கொடுக்க வேண்டும் என்று கோபால் இங்கே சொன்னார்கள். நானும் அதுதான் சொல்லுகிறேன்.

What is the basis on which the advertisement is What is the circulation of Murasoli and whether the advertise- circulation. That is the only inent is proportionate to its question I want to ask and if the Hon. Chief Minister gives the figures, it would be more useful to the House and also we would be having no objective assessment of the problem.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : நான் சொல்கிறேன் அதைப்பற்றி. விளம்பரச் செலவு இங்கே மாத்திரம் உயர்ந்திருக்கவில்லை. மத்திய அரசிலே பார்த்தால்கூட 1963- 64-ல் 55 இலட்சம் ரூபாயாக இருந்தது 1971-72 – ல் 115 இலட்சம் ரூபாயாக அங்கே உயர்ந்திருக்கிறது. எந்த அடிப்படையிலே தரப்பட வேண்டுமென்று சொன்னார்கள். அன்க்றைக்குச் செய்தித்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் எந்த அடிப்படையில் தரவேண்டு மென்ற கருத்தைச் சொன்னார்கள் என்றால், அதைப் படிக்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்.

டிசம்பர் மாதம் 8-ஆந்தேதி புதுடில்லியில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர்கள் மாநாட்டை ஆரம்பித்து வைத்துப் பேசும்போது, அரசாங்க விளம்பரச் சாதனங்கள் அரசாங்கத்தினுடைய கொள்கைகளைப் பரப்புவதற்குத்தான் பயன்படுத்த முடியுமே தவிர, அரசாங்கத்தின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சிக்கின்றவர்களுக்காக அல்ல என்பதை இந்தியப் பிரதமர் தெரிவித்தார். இன்னும் சொன்னார்: “மக்கள் ஒரு அரசாங்கத்தை – அவர்களுடைய கொள்கைகளை அமல் நடத்துவதற்காகத் தேர்ந்தெடுத்து இருக்கும்போது, அந்த மக்களுடைய வரிப்பணத்திலிருந்து செலவு செய்யக் கூடிய இந்த விளம்பரம், அந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்கின்ற முறையில் இருக்க வேண்டும்” என்றும் பிரதமர் அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனாலும் கூட, இந்தியப் பிரதமர் அவர்கள் தெரிவித்த அதே கொள்கையிலேதான் இங்கே விளம்பரங்கள் தரவேண்டுமென்று நான் வைதீகமுறையில் இல்லாமல், கொள்கை வேறுபாடு இருந்தாலும், அவ தூறாக- பொய்யாக- இந்த அரசாங்கத்தை இழித்தும். பழித்தும் வேண்டுமென்றே செய்திகளை வெளியிடுகிற பத்திரிகைகளை ஒதுக்கிவிட்டு, மற்றப் பத்திரிகைகளுக்கு விளம்பரம் தருகிறோம். இந்திராகாந்தி அவர்கள் சொன்ன அந்தக் கொள்கை வேறுபாடு என்கிற அந்த அடிப்படையில்கூட இல்லாமல் எல்லாப் பத்திரிகைகளுக்கும் இந்த அரசாங்கம் விளம்பரம் தந்துகொண்டிருக்கிறது.

திருமதி த.ந. அனந்தநாயகி: அப்படியென்றால் நியூட்ரல் பேப்பர்ஸ் எத்தனையோ இருக்கின்றன. அவைகளுக்கு கொடுத்திருக்கலாம். தனிப்பட்ட பத்திரிகைகளுக்கு மட்டும் என்றில்லாமல் மக்கள் மத்தியிலே ‘நியூஸ் வால்யூ’ இருக்க்கின்ற பத்திரிகைகளும் இருக்கின்றன. அவைகளுக் கொடுக்கலாம். உங்கள் கட்சிப் பத்திரிகைகளுக்கு மட்டும் கொடுக்கிறீர்கள் என்றால் இது நியாயமா ?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : நான் ஏற்கெனவே சொன்னேன். 57 இலட்சம் ரூபாயில் 55 இலட்சம் ரூபாய் மற்றப்பத்திரிகைகளுக்குக் கொடுக்கப்படுகின்றது. 12 அல்லது 2 இலட்சம் ரூபாய் முரசொலிக்குத் தரப்படுகிறது என்று திரு கோபால் அவர்கள் சொன்னார்கள். அது முரசொலிக்குத் தரப்பட்டிருக்கிறது. அதிலே தவறு ஏதுமில்லை. தொடர்ந்து நடத்தப்படும் என்பதை நான் இங்கே ரிவித்துக்கொள்கிறேன்.

DR. H. V. HANDE: What is the circulation of ‘ Murasoli and what is the amount given towards advertisement charges and whether it is proportionate to its circulation. Of course, the Hon. Chief Minister says that he is not going to give advertisement to newspapers which criticise him harshly. That is a different matter which I do not want to go into now. Also what is the circulation of newspapers like Dinamani’, The Flindu ‘ and ‘The Indian Express ‘ which the Govern- ment consider as neutral papers and what is the amount given to them towards advertisement charges. I am asking a specific question and I want a specific answer. In this connection, I want to point out that so far as the circulation of Murasoli is concerned, it is about 15,000. If it is more than 15,000 it has to pay 2 paise extra as tax to the Central Government and that is a different matter. So, I request the Hon. Chief Minister to clarify whether the amount of advertisement charges is commensurate with its circulation.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி ; இந்தக் கேள்விக்கு இந்த அவையிலே அமைச்சராக இருந்த திரு சி. சுப்பிரமணியம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விளம்பரம் பத்திரிகைகளின் எண்ணிக்கையைப் பொறுத்துக் கொடுப்பது இல்லை என்றும் பத்திரிகையின் -டோன் அண்டு கன்டென்ட் (Tone and content) ஆ. கியவைகளைப் பொறுத்துத்தான் கொடுக்கப்படும் என்றும் செய்தித் துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த அவையில் அன்றையச் சர்க்குலேஷன் பற்றி ஏற்கெனவே டில்லிக்குக் கொடுக்கப்பட்ட பதிலில் – டில்லியிலே கொண்டுபோய்க் கொடுத்த புகார்ப்பட்டியலுக்கு அளிக்கப்பட்ட பதில் புத்தகத்தில் – இருக்கிறது. திரு. ஹண்டே அவர்கள் அதை ஓய்வாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

விலைவாசி உயர்வு

அடுத்து, மிகமுக்கியமான விலைவாசி உயர்வு குறித்து இந்த மாமன்றத்திலே எல்லா உறுப்பினர்களும் எடுத்துக்காட்டினார்கள். இதற்கு இந்த அரசு கவலையேபடவில்லை; கொஞ்சம்கூடச் சிந்தித்துப்பார்க்கவேயில்லை என்று திரு. என் பொன்னப்ப நாடார் அவர்களும், திரு. ஹண்டே அவர்களும் வேறு உறுப்பினர்களும் சுட்டிக் காட்டினார்கள். நம்முடைய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பெரியவர் மணலி அவர்களும் நேற்றைய தினம் சொன்னார்கள். ‘இதற்கெல்லாம் நீங்கள் யாரும் கவலைப்படவில்லை என்று சொன்னார்கள். கவலை எடுத்துக் கொள்ளவில்லை என்று ஹண்டே அவர்கள் சொன்னதை அவர்களே மறந்திருமாட்டார்கள் என்று கருதுகிறேன். மத்திய அரசும் மாநில அரசும் மட்டுமே இந்தப் பிரச்சினையில் கவலைப்படவேண்டுமே அல்லாது பாமர மக்கள் கவலைப்பட வேண்டியதல்ல என்று குறிப்பிட்டார்கள். அதோடு வாக்கியத்தை நிறுத்திவிடக் கூடாது. பாமரமக்கள் கவலைப்படமாட்டார்கள். ஆனால் தாமே இந்த மன்றத்திலே விவாதித்து இதற்கு யார் பொறுப்பு. என்பதில் அக்கறை செலுத்தியாக வேண்டும். அதை மக்கள் இடத்தில் எடுத்துச் சொல்லியாக வேண்டும். திரு. மணலி அவர்கள் கூடச் சொன்னார்கள், பழைய கால மித்திரன் பத்திரிகையில் இரு ஒரு பாட்டை எடுத்துக்காட்டி, இந்தப் பாட்டை ஆளும்கட்சி உறுப்பினர்கள் எல்லாரும் பாடுங்கள் என்றுகூடச் சொன்னார்கள். தமிழிலும் பாடலாம். மலையாளத்திலும் அதை மொழி பெயர்த்துக் கேரளத்திலும் போய்ப் பாடலாம். அகில இந்தியாவில் எல்லா மாநிலங்களிலுமே பாடவேண்டிய பாட்டாகத்தான் அந்தப் பாட்டு இருக்கிறது. இதைக் கேலியாகச்சொல்லவில்லை. அவர்கள் சொன்ன இலக்கிய நயத்தோடு பதிலளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இது ஒரு மாநிதின் பிரச்சினையாக இல்லாமல் இந்தியாவிலே இருக்கிற எல்லா மாநிலங்கள் பிரச்சினையாகவும் இருக்கிறது. அந்த முறையிலே இந்தப் பயங்கரமான பிரச்சினையை அணுகி ஆகவேண்டும். இதற்கு நாம் மத்திய அரசு பொறுப்பு என்று சொல்கிற நேரத்தில் மக்களிடத்திலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்குச் சொல்லவில்லை. ஒரு உண்மையைச் சொல்கிறோம்.
உண்மை என்ன ?

அதற்கு விளக்கம் அளிக்கிறோம். இந்த விளக்கம் ஏற்கனவே இருந்த பழைய அரசுகளால் அளிக்கப்படவில்லை. அப்போது எப்படி விளக்கம் அளிக்கப்பட்டதென்றால், விலைவாசி உயர்ந்து விட்டால், அப்போது தரப்பட்ட பதிலெல்லாம், அப்படித்தான் விலைவாசி உயரும் என்பதுதான். விலைவாசி உயர்ந்து விட்டது என்று நாங்கள் கிளர்ச்சியில் ஈடுபடுகிறோம் என்றால், அது கேலிபுரியப்பட்டது. அரிசிக்காக கியூ நிற்கிறார்களே என்று சொன்னால், சினிமாவிற்கு கியூ நிற்கவில்லையா என்கின்ற கேள்வியின் மூலம் பதிலளிக்கப் பட்டது. இன்று இங்கே மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்களும், மாண்புமிகு உறுப்பினர்களும் எதிரொலித்த அதே கருத்துக்களை இந்த அரசும் எதிரொலிக்கக் கடமைப்பட்டிருக்கின்றது. நாங்கள் பொறுப்பிலேயிருந்து தட்டிக் கழித்துவிட என்றைக்கும் நினைத்ததில்லை; நினைக்க விரும்பியதுமில்லை. ஆனால் உண்மை நிலைமைகளை மக்களுக்கு உணர்த்த நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிலும் (1) தேசிய வருமானம் (2) நாணயப்‘ புழக்கம் மணி சப்ளை’ இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தாக வேண்டும். அப்படிப் பார்த்தால், இங்கே கவர்ன்மென்ட் ஆப் இண்டியா வெளியிட்டிருக்கின்ற எகனாமிக் சர்வே 1972-73 என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். 1968-ஆம் ஆண்டை விட 1968-69-ல் தேசிய வருமான வளர்ச்சி 7 சதவிகிதம்தான் உயர்கிறது.

அதே நேரத்தில் நாணயப் புழக்கம் 8-1 சதவிகிதம் என்று 1970-71-ல் உயர்கிறது. 1969-79-ல் 1968-69-ஐ விட தேசிய வருமானவளர்ச்சி 7.3 சதவீதம் என்று உயர்கிறது. நாணயப் புழக்கம் 10.8 சதவீதம் என்று உயர்கிறது. தேசிய வருமான வளர்ச்சி முன் ஆண்டை விட 4.6 சதவீதம் அதிகமாகிறது. அதே சமயத்தில் நாணயப் புழக்கம் முன் ஆண்டைவிட 11.1 சதவீதம் அதிகமாகிறது. ஆனால், 1971-72-ல் திடீரென்று பயங்கரமாக தேசிய வருமான வளர்ச்சி 1.5 என்ற வீதத்திலிருந்து இரண்டு புள்ளி இழுபறி நிலைக்குப் போய் நிற்கிறது. அதற்கு மாறாக, நாணயப் புழக்கம் 12.9 சதவீதம் என்று உயர்கிறது. இதே நிலைமைதான் 1972-73-லேயும் ஏறத்தாழ நீடிக்கிறது.

ஆகவே, தேசிய வருமான வளர்ச்சிக்கு மேலாக நாணயப் புழக்கத்தை அனுமதித்துவிட்டால், அதன் விளைவாக, விலைவாசி பாதிக்கப்படுகிறது. ஆகவே, நாணயப் புழக்கத்தைக் கட்டுப் படுத்துகின்ற உரிமை- அதிகாரம்-மாநிலஅரசுக்கு இருக்கிறதா அல்லது ரிசர்வ் பாங்கிக்கு மற்றப் பாங்குகளைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் இருக்கிறதா ? அந்தக் கேள்விக்குப் பதில் காண்கின்ற நேரத்திலே தான் நாணயப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் மாநில அரசின் பொறுப்பு அல்ல, மத்திய அரசின் பொறுப்பு என்று சொல்கின்றோம். அப்படிப் பொறுப்போடு சொல்கின்ற நேரத்தில், ஒரு விரலைக் காட்டி, குற்றவாளி என்று சொல்லவில்லை. அந்தப் பொறுப்பு இருக்கிற காரணத்தால், நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று சொல்கிறோம். அப்படி எடுத்துக்கொள்கின்ற நேரத்தில் இடைஞ்சல்கள் இருக்கின்றன. திட்டங்கள் போட வேண்டுமானால் அதற்குப் பணப்புழக்கம் தேவை. ஆகவே, இப்படி இது ஒரு பெரிய சர்க்கிளாகச் சுழன்று கொண்டிருகிறது. அந்தச் சங்கடம் அவர்களுக்கு இருக்கிறது. ஆகவே, பொறுப்பு மாநில அரசுக்கு அல்ல, மத்திய அரசுக்குத் தான் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேனே அல்லாமல் வேறல்ல.

திருமதி த. ந. அனந்தநாயகி: தலைவரவர்களே இவ்வளவு விவரமாக, பொறுப்பு மாநில அரசுக்கா, மத்தி அரசுக்கா என்று கனம் முதலமைச்சரவர்கள் பேசிக்கொடிருந்தார்கள். தேர்தலிலே அன்றைக்கு நின்றபோது மத்திய அரசுக்குத்தான் அந்தப் பொறுப்பு என்ற உணர்ச்சியோடு பேசாது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைத்து விடுவோம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரியையெல்லாம் குறைப்போம் என்று சொன்னார்களே, இன்றைக்கு அவர்களுடைய பங்கு என்ன என்பதைத் தெரிந்துகொண்டால் நல்லது. இன்றைக்குத் தப்பித்துக்கொள்கிற வகையில் பழியை மத்திய அரசிடம் போடுகிறார்கள். இது எப்படிச் சரியாகும்?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநி: என்ன செய்வது உங்களை நம்பித்தான் சொன்னோம். மத்திய அரசு பொறுப்போடு நடைபெறும் என்று நம்பித்தான் சொன்னோம் நம்பிக்கை மோசம் செய்துவிட்டீர்கள். எங்களுக்கு மாத்திரமா செய்தீர்கள்? அவர்களுக்கும் சேர்த்துத்தானே செய்தீர்கள்.

டாக்டர் எச். வி ஹண்டே: தலைவரவர்களே, மதிப்புக்குரிய முதலமைச்சரவர்கள் பேசுகின்ற நேரத்தில், இந்த பண வீக்கத்தைப் பற்றி எல்லாம் சொன்னார்கள். நானு அதைத்தான் என்னுடைய பேச்சின்போது, எகனாமிக் சர்வே ஆப் இண்டியா-வைப் பற்றி சொல்ல ஆரம்பித்தேன். உடனே மாண்புமிகு ப.உ. சண்முகம் அவர்கள் இது பாராளுமன்றத்தில் பேசவேண்டிய பேச்சு என்று என்னைத் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால், அதையே நான் உங்களுக்கு சொல்லவில்லை. இது நீங்கள் இங்கே பேசவேண்டிய பேச்சு தான். இதற்குப் பரிகாரம் என்ன வென்றால், இன்கிரீஸ் புரொடக்ஷன்.’ பொருள்கள் உற்பத்தி செய்தால்தால் இதற்குப் பரிகாரம் என்று சொல்ல வந்தேன். அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துக்கொண்டீர்கள் என்று கேட்டேன்

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: தலைவரவர்களே திரு ஹண்டே அவர்கள் இதே விஷயத்தைத்தான் சொல்ல வேண்டுமென்று கருதியிருந்ததாகச் சொன்னார்கள். அவர் சொன்னால் என்ன, நான் சொன்னால் என்ன ? அவர்கள் கடைசியாகச் சொல்ல வந்ததாக ஒரு கருத்தைக் குறிப்பிட்டார்கள்; அது உண்மைதான். உற்பத்தி பெருகினால் தான் இப்படிப்பட்ட பணப்புழக்கம் ஏற்படுகிறது. இப்படி ஏற்படுகிற நேரத்தில் பொருளாதார வளர்ச்சியும் பெருகியாக வேண்டும். அந்தப் பெரிய இடைவெளியைத் இங்கே சுட்டிக்காட்டினேன்.

அது மாத்திரமல்ல, இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன. விலைவாசி உயர்வுக்கு மேலும் ஒரு பெரிய காரணமா இருப்பவர்கள் வரி ஏய்ப்பவர்கள். நாட்டில் இந்த வரி ஏய்ப்பவர்களிடமிருக்கிற கறுப்புப்பணம். அன் அகௌண்டட் மணி புழக்கத்திற்கு வராமலேயே அடிபட்டுவிடுகிற காரணத்தால் விலைவாசி உயர்கிறது. நாட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்தக் கறுப்புப் பணக்காரர்களை-அன் அகௌண்டட் மணி வைத்திருப்பவர்களை – வெளியே கொண்டு வருகின்ற அந்தப் பொறுப்பும் நமக்கில்லை என்பதும், அது மத்திய அரசிடம்தான் இருக்கிறது என்பதும், அதன் காரணமாக நாட்டில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன என் என்பதும் யாரும் அறியாதவை அல்ல.

திரு. ஆர். பொன்னப்ப நாடார்: தலைவரவர்களே, கறுப்புப் பணம் எப்படி விளையாடுகிறது என்பதை முதலமைச்சரவர்கள் விளக்குவார்களா ?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: அதைப் போலவே உற்பத்தியைப் பற்றிச் சொன்னார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், அரிசியை உற்பத்தி செய்கிறோம். அதே நேரத்தில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தக்கூடிய அந்தச் சூழ்நிலை நமக்கு இருக்கிறது. வேறு மாநிலங்களுக்குச் செல்லாமல் அப்படிக் கட்டுப் படுத்துகிறோம். மற்ற உணவுப் பண்டங்களில் பெரும்பாலானவை அப்படி அல்ல. நமது மாநிலத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிற காரணத்தால் உணவுப் பண்டங்களிலே மிக முக்கியமான அரிசி விலையை கட்டுப்படுத்தி வைக்க முடிகிறது. அப்படி இல்லாத காரணத்தால் பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களுக்கெல்லாம் நாம் வேறு மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய காரணத்தால்- இந்தச் சூழ்நிலை இந்தியா முழுமைக்குமாகப் பரவிக்கிடக்கின்ற காரணத்தால்- இப்பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துகின்ற சூழ்நிலை இல்லாத காரணத்தால் தீர்க்க முடியாத சங்கடத்திற்கு நாம் ஆளாகி இருக்கிறோம். இந்தக் காரணங்களால் தான் பருப்பு போன்ற தானிய வகைகளை எல்லாம் தமிழ்நாட்டில் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டுமென்ற முனைப்போடு, முயற்சியோடு இருகிறோம் என்று நிதிநிலை அறிக்கையிலும், கவர்னருடைய பேருரைலும் இந்த அரசின் சார்பாக எடுத்துக் காட்டியிருக்கிறோம் மத்திய அரசே பொறுப்பு என்று கூறிவிட்டு மாநில அரசு எந்தப் பொறுப்பும் எடுத்துக்கொள்ளாமலிருந்து விடுமென்று யாரும் கருதத் தேவையில்லை. இயன்ற அளவிற்கு எல்லாப் பொறுப்புக்களையும் எடுத்து விலைவாசியைக் கட்டுப் படுத்துகின்ற வகையில் என்னென்ன வழிவகைகளைக் கையாள முடியுமோ அத்தனை வழிகளையும் இந்த அரசு மென்ற உறுதி மொழியை மிக மிக முக்கியமான இந்தப் பிரச்சினையில், இந்த மாமன்றத்திற்கு மிகுந்த பணிவன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மின்வெட்டு

அடுத்து, இன்று நமது தமிழ்நாட்டில் பரபரப்பிற்கு உள்ளாகியிருப்பது மின்வெட்டு. அதைப்பற்றியும் அனைவரும் இங்குப் பேசியிருக்கிறார்கள். தமிழகமே இருளில் மூழ்கிக்கிடக்கிறது என்றெல்லாம் மிகைப்படுத்தப்பட்டுப் பேசப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அவரவர் கட்சிகளின் இயல்புக்கேற்ப இந்தப் பிரச்சினையை அணுகுகின்றன. நான் எல்லா அரசியல் கட்சிகளையும் மிகுந்த பணிவன்போடு கேட்டுக்கொள்வது, இது ஒரு பொதுப் பிரச்சினை, ஒரு தனிப் பிரச்சினை அல்ல, கொள்கைப் பிரச்சினை அல்ல. குறிப்பாக மாணவர்களுக்குப் பயிற்றுமொழி ஆங்கிலமா தமிழா என்ற கேள்வி வருகிற நேரத்தில் மாணவர்கள் தங்களுக்குப் பயிற்று மொழி. ஆங்கிலம்தான் வேண்டும்; தமிழ் தேவையில்லை என்று சொல்கிற நேரத்தில், இதைத் தமிழ் மக்கள், தமிழ்நாடு என்று பார்க்கிற நேரத்தில் இது பொதுப் பிரச்சினையாக வருகிறது என்றாலும் கூட அதை விட்டுக்கொடுத்து, அதிலே கூட அரசியல் காரணம் ஏற்பட்ட நேரத்தில்-அதை அரசியலுக்காகச் சிலர் பயன்படுத்திக்கொண்ட நேரத்தில் அதை நாம் அணுகியிருக்கிறோம்.

அப்படியில்லாமல் இது அனைவரையும் பாதிக்கக்கூடியது என்று திரு. ஹண்டே அவர்கள் குறிப்பிட்டதைப்போல, திரு. மணலி அவர்கள் எடுத்துக் காட்டியதைப் போல, இதை ஓர் போர்க்காலச் சூழ்நிலையைப் போலக் கருதி, நாம் ஈடுபட வேண்டிய பெரிய காரியமாகும். அதே நேரத்தில் ஒரு அரசு தன்மீது சுமத்தப்படுகிற பழி, சொல்லப்படுகிற குற்றச்சாட்டு ஆகியவற்றிற்குப் பதில் அளிக்க வேண்டியிருக்கிறது என்றாலும், எப்படி இது ஒரு பொதுப் பிரச்சினை என்று சொல்லி அரசை ஒரு மூலையில் கொண்டுபோய்த் தள்ளி, மற்றவர்கள் குற்றம் சாட்டுவதற்கு விரும்புகிறார்களோ அதைப் போலத்தான், தான் அந்தக் குற்றச்சாட்டிற்கு ஆளாக்கப்படும் நிலைமையில் இல்லை; தான் அதற்குப் பொறுப்பு இல்லை என்பதை எடுத்துச் சொல்கிற உரிமையை அரசும் பெற்றிருக்கிறது.

இந்த அரசு வந்தபிறகு மின்சார உற்பத்தியே நடைபெறவில்லை. ஆகவேதான் சங்கடங்கள் ஏற்பட்டன என்று திரு. மணலி அவர்களே சொன்னார்கள். நாம் உஷாராக இருக்கவில்லை என்றும் சொன்னார்கள்.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நமது மாநிலத்திற்கு 110 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 315 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 510 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. ஆக 51 முதல் 67 வரை ஏறத்தாழப் பதினைந்து வருடத்தில் நமது மாநிலத்தில் 935 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 67 முதல் 72 வரை. இந்த ஐந்தாண்டுக் காலத்தில் மட்டும் 625 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. பதினைந்து ஆண்டுக் காலத்தில் 935 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது என்றால் இந்த ஐந்தாண்டுக் காலத்தில் மட்டும் 625 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே நாம் உற்பத்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இந்த அரசை ஆளாக்குவது முறை அல்ல என்பதற்கான விளக்கத்தை இதன் மூலம் நான் தரவிரும்புகிறேன்.

இன்னொன்றையும் மறந்துவிடக்கூடாது. கேரளாவை எடுத்துக்கொண்டால் அங்கே ஒருநாளைக்குத் தேவையான மின்சாரம் 60 இலட்சம் யூனிட் தான். மைசூருக்கு ஒரு நாளைக்குத் தேவையான மின்சாரம் 130 இலட்சம் யூனிட். ஆந்திரத்திற்கு ஒரு நாளைக்குத் தேவையான மின்சாரம் 90 ட்சம் யூனிட் ஆகவே இந்த மூன்று மாநிலங்களையும் இலட்சம் சேர்த்துக் கொண்டாலும்- கேரளா, மைசூர், ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களையும் சேர்த்துக் கொண்டாலும் ஒரு நாளைக்குத் தேவையான மின்சாரம் 280 இலட்சம் யூனிட் தான். ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் தேவையான மின்சாரம் ஒரு நாளைக்கு 225 இலட்சம் யூனிட். இங்கே தொழில் வளர்ந்திருக்கிற காரணத்தினால் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 6 இலட்சம் பம்பு செட்டுக்கு மின்சார இணைப்புக் கொடுத்திருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்ற காரணத்தினால் – கேரளா, மைசூர், ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு ஆகிற மின்சார அளவைக் கிட்டத்தட்டப் போய்த் தொடுகின்ற அளவுக்கு 225 இலட்சம் யூனிட் இந்த மாநிலத்திற்குத் தேவைப்படுகிறது.

இப்போது ஏற்பட்டிருக்கிற பிரச்சினைகள், நீர் மீன்சார நிலையங்களுக்கு இயற்கையினால் ஏற்பட்டுவிட்ட ஆபத்தே தவிர வேறு அல்ல. இயற்கை திடீரென்று, எதிர்பாராத வகையில் ஏமாற்றிவிட்ட காரணத்தினால் நமக்கு நீர் மின் நிலையங்களில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்கவில்லை.

திட்டங்களே கேட்கவில்லையா?

மத்திய அரசிடமிருந்து நாம் திட்டங்களே கேட்கவில்லையா என்று பார்த்தால் 71. 72. 73 இந்த மூன்று ஆண்டுகளில் பத்துத் திட்டங்களைக் கேட்டிருக்கிறோம். 1) சேர்வலாறு திட்டம், (2) நெல்லித்துறைத் திட்டம், 3) சொலாட்டிப்புழா திட்டம் (4) அமராவதித் திட்டம், (5) பரலியாறு திட்டம். (6) சண்முகா நதித் திட்டம். (7) கூனூர் கல்லாறு திட்டம், (8) (9) தூத்துக்குடி அனல் மின் நிலையம். கீம் மோயாறு கீழ் மோயாறு திட்டம், (10)மேட்டூர் அனல் மின்நிலையம். ஆக இந்தப் பத்துத் திட்டங்களின் மூலம் 1,035 மொவாட் கிடைக்கக்கூடிய திட்டங்களை மத்திய கமிஷனின் ஒப்புதலுக்காக அனுப்பியிருக்கிறோம்.

ТикСМАТИ T. N. ANANDANAYAKI: All these 10 schemes have been seat to the Centre to be included in Fifth Plan which Why did you not send thet arts from 1974 and ends in 1979.
ame for inclusion in Fourth Plan. That is the point.

திரு ஆர். பொன்னப்ப நாடார் : சண்முகா நதித் திட்டமானது, நான்காவது திட்டத்தில் உட்படுத்தப்பட்டிருக்கிறதா? அல்லது ஐந்தாவது திட்டத்தில் உட்படுத்தப்பட்டிருக்கிறதா ?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : இந்தத் திட்டங்கள் எல்லாம் அனுமதிக்கப்பட்ட பிறகுதான் அது எந்தத் திட்டத்திற்கு உட்படும் என்பது தெரியும்.

இவைகள் அன்னியில் கல்பாக்கம் விரிவுத்திட்டம், நெய்வேலி இரண்டாவது அனல்மின் நிலையம், தூத்துக்குடி இரண்டாவது அணுமின் நிலையம் ஆகிய மத்திய அரசின் திட்டங்களையும் நாம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம் இந்த மன்றத்தில் தீர்மானங்கள் போட்டதை எல்லாம் முன்பொரு தடவை விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.

ஆளும் காங்கிரசைச் சேர்ந்த திரு. குமாரசாமி அவர்கள் பேசும்போது ஒன்றைச் சொன்னார்கள். நான்காவது ஐதாண்டுத் திட்டத்தில் அம்மையார் அவர்களும் சொன்னார்கள். அதை ஒட்டி வருகிறது- நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒரு மின் நிலையத்தை ஏற்படுத்த மதத்திய அரசினர் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் – குமாரசாமி சொன்னார்- பிறகு ஏன் அதில் அவர்கள் குறுக்கிட்ட போகிறார்கள் -இது அவர்கள் கேள்வி. நமக்குத் தேனையான திட்டத்தை நாம் போட்டுக்கொண்டு மத்திய அமைச்சரிடம் சொல்லிவிட்டு, நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டியது தானே, அப்படிச் செய்யத் தவறியதால்தான் இந்த நிலைமை என்று திரு. குமாரசாமி சொன்னார். எனக்கு இருக்கிற பயம் எல்லாம், ஏதோ சொன்னதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்பது அல்ல. இதே கருத்தைப் பொதுமக்களிடம் சொல்கிற நேரத்தில் பாதிக்கப்பட்டிருக்கிற மக்கள் என்ன கருதிக்கொள்வார்கள் ? நான்காவது திட்டத்தில் ஒரு மின் நிலையத்தை ஏற்படுத்த மத்திய அரசினர் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள், மத்திய அரசின் அனுமதியைக்கூடப் பெறாமல் அதனை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று திரு. குமாரசாமி சொல்லிவிட்டார். அமைச்சர்கள் ஏன் இதைச் செய்யாமல் வீணே பொழுதைக் கழித்தார்கள் என்றுதான் பொதுமக்கள் எண்ணத் தோன்றும்.

ஆனால் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஏற்று கொள்ளப்பட்டாலும், அந்த மின் நிலையத்தை உடனடியா ஏற்படுத்தி விடுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பதை ஏற்கெனவே ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர்கள் நன்கு உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

முதலில் திட்டத்திற்கு விரிவான அறிக்கையைத் தயாரித்து அனுப்புகிறோம்.
அந்த அறிக்கையை மத்திய நீர்மின் குழு ஆராய்ந்து மத்திய மின்சாரத்துறை அமைச்சரின் ஒப்புதலைப் பெற்ற பின், திட்டக் குழுவிற்கு அதை அனுப்பும்.

திட்டக் குழுவில் தொழில் நுட்ப ஆலோசனைக் குழு மறுபடியும் அதை ஆராய்ந்து. அதற்குப் பிறகு ஒப்புதல் அளிக்கிறது. இந்தச் சம்பிரதாயங்களின்படி இந்த வழி முறைகளில் ஒரு திட்டத்தை ஏற்றுக்கொள்ளக் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. உதாரணமாக நெல்லித்துறை. சேர்வலாறு, பரலியாறு ஆகிய திட்டங்கள் 1970-71-ல் அனுப்பப்பட்டன. இன்னும் அந்தத் திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

திட்டக் குழுவின் அனுமதி இல்லாமல் நாம் ஏன் ஏற்படுத்திவிடக்கூடாது என்று திரு. குமாரசாமி குறிப்பிட்டார்- கடற்கரையில் அம்மையாரும் பேசியதாக நான் கேள்விப்பட்டேன். அப்படி மத்திய அரசின் அனுமதியைப் பெறாமல் நாம் செயல் பட முற்பட்டால் அந்த நிலையத்திற்கான சாதனங்களை – பாய்லர், ஜெனரேட்டர் ஆகிய கருவிகளை-மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எந்தத் தொழிற்சாலையும் உற்பத்தி சய்து தர முன்வராது. அதுமாத்திரம் அல்ல. அந்தக் கருவிகளை இந்தத் தொழிற்சாலைகளில் இருந்து பெற முடியாமல் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டுமென்றால் மத்திய அரசின் ஒப்புதலைத்தான் நாம் பெற்றாக வண்டும். ஆக அவர்களைக் கேட்காமல் பிறகு Ratification வாங்கிக் கொள்ளலாமென்று திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுக்கு எந்த வழியும் இல்லை என்பதை நான் விளக்க விரும்புகிறேன்.

நாம் மின்சாரத்தைச் செம்மையாகவும், சிக்கனமாகவும் செலவழிக்கிறோமா ? ஏதோ ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். உடனேயே அதற்கு ஊழல் விசாரணைக் குழு போடவேண்டும், நீதி விசாரணைக் குழு போடவேண்டும் என்கிறார்கள்.

மத்தியில் இருந்து …….

இப்படி எதற்கெடுத்தாலும் மத்திய சர்க்காரில் இருந்து வர வேண்டும். தேர்தல் நடக்கிறதா, மத்திய சர்க்காரில் இருந்து தேர்தல் அதிகாரி வரவேண்டும்; ஏஜெண்டு போடுகிறார்களா மத்தியில் இருந்து வரவேண்டும்: போலிங் பூத்தில் உட்காருகிறார்களா மத்தியில் இருந்து வரவேண்டும். இன்னும் கொஞ்ச நாட்களில் இங்கே சட்டமன்றம் நடக்கும்போது, திருமதி. இந்திராகாந்தி அங்கே பாராளுமன்றத்தை நடத்தாமல் விட்டு இங்கே வந்து முதலமைச்சர் பொறுப்பைப் பத்து நாள் பார்த்துவிட்டு மறுபடியும் டெல்லிக்குப் போக வேண்டுமென்று சொன்னாலும் சொல்வார்கள் என்று கருதுகிறேன். அப்படிச் சொல்லி மத்தியில் இருந்து அமைச்சர்களை வரவழைத்தால் அவர்கள் நிற்கமாட்டார்கள் என்பதை இந்திய வரலாறு சொல்லிக்கொண்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படுகிற அமைச்சர்கள்தான் வரவேண்டும். நியமிக்கப்படுகிற அமைச்சர்கள் வந்தால் அவர்களின் ஆட்சி நிற்பதாக இந்தியாவின் சரித்திரம் சொல்லவில்லை.

திருமதி அனந்தநாயகி: அப்படி நியமனம் செய்யப்படுகிறவர்கள் அடுத்த 6 மாதத்திற்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டே வந்தாக வேண்டும் என்பதை நினைவு கொள்ளவேண்டும்.

மாண்புமிகு டாக்டர் மு.கருணாநிதி: நான் ஆறுமாதக் கதையைச் சொல்லவில்லை. அதற்குப் பின் நடந்த கதையைச் சொல்கிறேன்.

திரு ஆர். பொன்னப்ப நாடார் : ஒரிசாவில் எப்படி மந்திரிசபை கவிழ்ந்ததோ அதுபோல நடக்காதிருக்க ஆயாராம் கயாராம் நம்மிடையே இருக்கக்கூடாது என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணநிதி : ஆயாராம் கயா ராம்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்பது திரு பொன்னப்பநாடார் அவர்களுக்கும் தெரியும். இப்படி எல்லாம் மின்சார வாரியத்தில் ஊழல்; ஊழல் விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். மத்திய அமைச்சராக இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிற மதிப்பிற்குரிய திரு கே.எல். ராவ் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்கள். அது ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையில் வந்திருக்கிறது. நல்லவேளையாக அவர்கள் போட்டார்கள், போனால் போகட்டும் என்று ! திரு. கே.எல். ராவ் அவர்களது பேச்சின் ஒரு பகுதி இது:-

He complimented Tamil Nadu for making the best use of power without wastage.

என்று திரு கே.எல். ராவ் அவர்கள் தமிழ்நாட்டைப் பாராட்டி நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்கள். திட்டங்கள் மத்திய அரசு அளவில் அது மாத்திரம் சரியாகச் செயல்படவில்லை என்பதை அவரே குறிப்பிட்டிருக்கிறார். திட்டங்கள் எப்படி நிறைவேற்றப்படவேண்டும். மின்சாரத் திட்டங்கள் எப்படி நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்தை ஒரு கருத்தரங்கில் அவர் சொல்கிறார்

The power planning so far had been totally wrong. It should never have been linked to the general Five Year Plan. Power planning should be a continuous process.

என்று திரு கே.எல்.ராவ் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் 23-2-1972-ல் குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் இன்னொன்றையும் சொல்வேன், உங்கள் தகவலுக்காக. 26-7-1972- ஐதராபாத்திலே நடைபெற்ற Zonal Council, மண்டலக் குழுவிற்கு நானும் கல்வி அமைச்சரும், தொழில் அமைச்சரும் சென்றிருந்தபொழுது அங்கே திரு கே.எல். ராவ் பேசும்பொழுது ஒன்றைச் சொன்னார்கள். அதாவது ஒரு மாநிலத்திலே இருக்கிற ஆட்சியினுடைய அக்கறையற்ற தன்மையினால் இந்தச் சங்கடங்களெல்லாம் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்களே, அதற்காக நான் சொல்கிறேன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கவனமாகக் கேட்கவேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன்:-

The power supply position in the States of Southern Zone was going to be extremely bad because of delay in the construc- tion of a 390 MW Idikki project due to labour trouble and delay in the commissioning of the 80 MW Unit at Sharavathi on account of delay in supply of equipment, etc., for the project.

என்று சொன்னார்கள். அப்பொழுது இடிக்கியிலே ஒரு பெரிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. வேலை நிறுத்தத்தை நடத்தியவர்கள் வேறு கம்யூனிஸ்டுகள். ஆனால் வேலை நிறுத்தம் விரைவிலே முடிவடைந்திருக்குமானால், 390 மெகாவாட் உற்பத்தி அங்கு வந்திருக்குமேயானால்’சதர்ன் ஸோன்’. தென்மண்டலத்திலே இருக்கிற தமிழ்நாட்டிற்கு நாம் கேரளாவிலிருந்து கொஞ்சம் அதிகமான மின்சாரத்தைப் பெற்றிருக்க முடியும். இப்படிப் பல்வேறு நிலைமைகள் பல இடங்களிலே நடைபெற்றுவிட்ட காரணத்தினாலேதான் இந்த மின்சார வெட்டினால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இதையே சொல்லிக்கொண்டிராமல் ஆகவேண்டிய காரியங்களையும் நாம் பார்க்க வேண்டும்.

டாக்டர் எச். வி. ஹண்டே : கே.எல். ராவ் சொன்ன கருத்தைத் தான் நான் காலையிலே சொன்னேன். இப்பொழுது இருக்கிற குறையெல்லாம் பேசின் பிரிட்ஜ் பவர் ஹவுசிலே 70 மெகாவாட் இருந்த காலத்தில் இன்ஸ்டால்ட் கப்பாசிட்டி 60 மெகாவாட் உற்பத்தியாகிக்கொண்டிருந்தது. இப்பொழுது 97.5 இருக்கிற நேரத்தில் 35 மெகாவாட் தான் உற்பத்தியாகிக்கொண்டிருக்கிறது. ஆக, நம்முடைய உற்பத்தியிலும் கொஞ்சம் கோளாறு இருக்கிறது என்றுதான் நான் காலையிலே சொன்னேன்.

மாண்புமிகு திரு ஓ. பி. இராமன் : தலைவர் அவர்களே, பேசின் பிரிட்ஜ் பவர் ஹவுசில், கட் இல்லாத நேரத்தில், சென்ற ஆண்டு 24 இலட்சம் யூனிட் தயார் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு 30 இலட்சம் யூனிட் தயார் செய்யப்படுகிறது. குறைந்துவிட்டது என்று சொல்லுவதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது. அது மட்டுமல்ல, எண்ணூரிலே கூட அப்படித்தான் என்று சொன்னார்கள். பவர் கட் இல்லாதபொழுது முழுமையாக இருந்தது என்று சொல்கிறார்கள். இப்பொழுது நாங்கள் உற்பத்தியைப் பெருக்கவில்லை. எங்களுடைய கவனக்குறைவு என்று சொல்கிறார்கள். அதற்காகச் சொல்கிறேன். எண்ணூரிலே கூட சென்ற ஆண்டு பவர் கட் இல்லாத நேரத்தில் 40 இலட்சம் யூனிட்தான் தயார் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 73 இலட்சம் யூனிட் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள்.

திருமதி த. ந. அனந்தநாயகி : ஒரே ஒரு இன்ஃபர்மேஷன்! பவர் கட் இல்லாத பொழுது நாங்கள் இவ்வளவு உற்பத்தி செய்தோம். இன்றைக்கு எவ்வளவு உற்பத்தி செய்கிறோம் என்பதல்ல. பவர் கட் இல்லாதபொழுது நீர் நிலையத்திலிருந்து உங்களுக்குத் தேவையான மின்சாரம் வந்துகொண்டிருந்ததால் அதிலே, சற்று அக்கறை இல்லாமல் இருந்தது. இப்பொழுது பவர் கட் இருக்கிறது, இப்பொழுது அனல் மின்சார உற்பத்தியை ஃபுல்லஸ்டு கப்பாசிடிக்கு யுடிலைஸ் செய்கிறீர்களா என்பதுதான் என்னுடைய கேள்வி.

மாண்புமிகு திரு ஓ. பி. இராமன் : அது முழுமையாக ஓடிக்கொண்டிருக்கிறது. மத்திய சர்க்காருடைய அமைச்சர் டாக்டர் கே.எல். ராவ் கூறும் பொழுது கூட. அது ஓடவில்லையென்று சொல்லவில்லை. தண்ணீர் வராததற்குத் தட்டுப்பாடு இல்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர, குறை இருப்பதாகச் சொல்லவில்லை. குறையில்லாமல் தமிழ்நாட்டிலே ஜெனரேட்டர்களைத் திருப்திகரமாக ஓட்டியிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : மின்சார வெட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களைப் பற்றிக் கவலையே கொள்ளாமல், இந்த அரசு அலட்சியமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டைச் சொன்னார்கள். கடந்த பல தினங்களாக வேறு எந்த வேலையையும் கூடக் கவனிக்காமல், இந்த வேலையை நானும், அமைச்சரவையிலே இருப்பவர்களும், அதிகாரிகளும் கவனித்து வருகிறோம். குறிப்பாகக் கைத்தறியாளர்களுக்காக ஆலை அதிபர்களோடு நேற்றையதினம் பேச்சு வார்த்தை நடத்திக், கணிசமான நூலைப் பெறுவதற்கு முயற்சிகள் முடிவுற்று இருக்கின்றன என்பதை இன்று பத்திரிகைகளிலே மாண்புமிகு உறுப்பினர்கள் பார்த்திருக்கலாம்.

ஆலைகளிலே வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்குக் கூடுமான வரையில் அவர்களுடைய சங்கடங்களைத் தவிர்க்க, அரசு, தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள் அடங்கிய முத்தரப்புக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதனுடைய பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

விவசாயிகளுக்குச் சலுகைகள்

விவசாயிகளைப் பொறுத்தவரையில், என்னையும் வேறு சில அமைச்சர்களையும் இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயிகளுடைய பிரதிநிதிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து சந்தித்தார்கள். நீண்ட நேரம் 10 மணியிலிருந்து கிட்டத்தட்ட 2 அல்லது 2 ½ மணி நேரம் எங்களோடு விவாதித்தார்கள். நல்ல பயனுள்ள விவாதமாக இருந்தது. பல சங்கடங்களையெல்லாம் எடுத்துத் தெரிவித்தார்கள். அவர் களுடைய கருத்து, இப்பொழுது 4 மணி நேரம் கொடுக்கப்படுவது சரியாகக் கொடுக்கப்பட வேண்டுமென்றும், சில இடங்களிலே கோளாறு ஏற்படுகிறது என்றும், 4 மணி நேரத்தினை 6 மணி நேரமாக ஆக்கித்தர வேண்டுமென்றும் சொன்னார்கள்.

அதை ஆராய்ந்து பார்த்ததில் தற்பொழுது 4 மணி நேரம் தரப்படுகிற மின்சாரத்தை 5 மணி நேரமாக ஆக்குவதற்கு இப்பொழுது நாம் முடிவு செய்திருக்கிறோம்.

அதற்குப் பரீட்சார்த்தமாக, முதல் கட்டமாக நேற்றைய தினம் வேலூர் மின் திட்டத்தில் முதல் பிரிவு, காலை 4 மணி முதல் 9 மணி வரை என்றும், இரண்டாவது பிரிவு, காலை 8-30 மணி முதல் பகல் 1-30 மணி வரை என்றும், மூன்றாவது பிரிவு, பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை என்றும், பிரித்து மின்சாரம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற இடங்களில் வெகு விரைவிலே இதைப் பார்த்துக் கொண்டு அமலாக்கப்பட இருக்கிறது.

டிரான்ஸ்பார்மர்களில் மின்பளு ‘லோட்’ அதிகமாகி, பழுது ஏற்படுவதைத் தடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கவேண்டுமென்று கூறினார்கள். அதற்குப் பல புதிய டிரான்ஸ்பார்மர்களுக்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. முதலில் ஆயிரம் டிரான்ஸ்பார்மர்களை அங்கங்கே நிறுவுவதற்கு முடிவெடுக்கப்பட்டு அந்தப் பணிகளும் ஆரம்பிக்கப் பட்டுவிட்டன என்று நான் சொல்ல விரும்புகிறேன்.
மின் வெட்டு நிலைமை சீர்படும் வரையில் மின்சாரத்திற்கான குறைந்தபட்சக் கட்டணம் விவசாயிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மின்சார வெட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பருவ மழை தவறும் நேரங்களில் எந்த அடிப்படையில் விவசாயிகளுக்குச் சலுகைகள் அளிக்கப்படுகிறதோ, அதேசலுகைகள் இப்போதும் மின் வெட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலமாக விரைந்து அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாரியம் வழங்கும் மின்சாரத்திற்கு மாற்றாகத் தனியார் ஜெனரேட்டர்கள் வாயிலாக உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு விதிக்கப்படும் வரி, இந்த நெருக்கடி தீரும்வரை ரத்துச்செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துக்கொள்கிறேன் .

நகரங்களில் தெருவிளக்குகள் இரவு 7 மணி முதல் 10 மணி வரையில் மட்டுமே எரியலாம். அலங்கார விளக்குகளுக்கு ஜெனரேட்டர்தான் பயன்படுத்தப்பட வேண்டும்.

திரைப்பட அரங்குகளில் மின்சாரத்தை உபயோகித்து ஒரு காட்சி மட்டுமே நடத்தப்பட வேண்டும். இது நம்முடைய திருப்பூர் மொய்தீன் அவர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சி தரும் என்று கருதுகிறேன். திரைப்பட அரங்குகளில் மின் சாரத்தை உபயோகித்து ஒரு காட்சி மட்டுமே நடத்தவேண்டும். பிற காட்சிகளை ஜெனரேட்டர் மூலம் நடத்த எந்தத்தடையும் இல்லை என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையிலுள்ள தெர்மல் நிலையங்களின் நிலக்கரித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஆறு மாதத்திற்கு அயல்நாட்டுக கப்பலைப் பயன்படுத்துவதற்கு ஷிப்பிங் டைரக்டர் ஜெனரவின் அனுமதி கிடைத்துவிட்டது. தென்னிந்திய ஷிப்பின் மேனேஜிங் டைரக்டர் திரு. தஸ்தாருடன் தொடர்புகொண்டு ஏற்பாடுகளை முடிவுசெய்யுமாறு மின்வாரியத் தலைவருக்கு கூறப்பட்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு 21,000 டன் நிலக்களி கொண்டுவருவதற்கான இத் திட்டம் நம் தேவையைக் திருப்திகரமாகப் பூர்த்திசெய்யும் என்பதையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமதி த. ந. அனந்தநாயகி : கலைக் கண்காட்சிகள் எங்கு பார்த்தாலும் நடத்தப்படுகின்றனவே, அதற்கு மின்சாரம் கொடுக்கப்படுமா. நிறுத்தப்படுமா என்று அரசாங்கம் அறிவிக்குமா?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தயவு செய்து எங்கே
நடக்கிறது என்று சொன்னால் சரியாக இருக்கும். எங்கே நடக்கிறது?

திருமதி த. ந. அனந்தநாயகி: பல இடங்களில் பார்க்கிறோமே அந்தப் போர்டை! 36-வது டிவிஷனிலே நடக்கிறதே!

டாக்டர் எச்.வி.ஹண்டே : 36-வது டிவிஷன் என்று சொன்னார்கள். அதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : அவர்களுக்கு ஜெனரேட்டர் கூட அல்ல, லைசென்ஸே வழங்கப்படவில்லை. அவர்கள் கொட்டகைகளை எல்லாம் போட்டுவிட்டு வந்து ‘நாங்கள்போட்டுவிட்டோம், இருந்தாலும் முதல்அமைச்சரான நீங்கள் இப்படி அறிவித்தீர்கள். எப்படியாவது, நாங்கள் செலவு செய்துவிட்ட காரணத்தினாலே கொடுக்க வேண்டு’ மென்று கேட்டார்கள். முடியவே முடியாது என்று சொல்லி யாகிவிட்டது. கொடுக்கப்படவில்லை.

டாக்டர் எச். வி. ஹண்டே : ஒரு அமைச்சர் போய்த் துவக்கி வைத்தார்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : அமைச்சர்களே போய்த் திறந்துவைத்தாலும் அதற்கு லைசென்சுகள் வழங்கப்பட மாட்டாது என்பது கண்டிப்பான உத்தரவு.
குடியிருப்பு மனைப்பட்டா

பிறகு நம்முடைய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சுப்பையா அவர்கள் தஞ்சை மாவட்டத்திலே வழங்கப்பட்ட குடியிருப்பு மனைப்பட்டாக்களில் சில புகார்களைச் சொன்னார். ஏதோ முதலமைச்சர் வந்து ஒரு இலட்சத்து 57 ஆயிரம் பேருக்கு வழங்கினார். பல பேருக்குக் கிடைக்கவே இல்லை; சில பேருக்குத்தான் கிடைத்தது என்று சொன்னார்கள். அவர்கள் எந்த அடிப்படையிலே சொன்னார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உடனடியாக அதைப் பற்றி விளக்கங்கள் எல்லாம் சேகரித்தேன்.

27-2-1972-ல் திருவையாற்றிலே வழங்கப்பட்ட குடியிருப்பு மனைப் பட்டா 6,764. 15-6-1972-ல் திருத்துறைப் பூண்டியில் 26,150. அதிலே திரு. மணலி அவர்களும் திரு சுப்பையா அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார்கள். 14-9-1972 அன்றும், 28-2-1973 அன்றும் கும்பகோணத்தில் 1,15,227. ஆக, பிப்ரவரி 1973 முடிய வழங்கப்பட்ட பட்டாக்களின் எண்ணிக்கை 1,48,000. இதிலே, இந்த 1,48,000 குடியிருப்பு மனைப்பட்டா பெற்றவர்களில் 41,000 பேர் அதைப் பெற்றுக்கொண்டதற்கான அக்னாலெட்ஜ்மென்டுகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவை அதிகாரிகளிடத்தில் இருக்கின்றன. இன்னும் ஏழு ஆயிரம் பேர்களிடமிருந்து அக்னாலெட்ஜ்மென்ட் வந்தாக வேண்டும். பட்டா வழங்கப்பட்ட பிறகு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டும், உரிமை மறுப்புத் தெரிவிக்கப்பட்டும் விசாரணையில் இருப்பவை 8,700 ஆகும். ஆக இதையும் சேர்த்து மொத்ம் ஒரு இலட்சத்து 57 ஆயிரத்தில் ஒரு இலட்சத்து 41 ஆயிரம் பட்டாக்களுக்கு அதைப் பெற்றுக்கொண்டதற்கு ரசீது கிடைத்துவிட்டது. எட்டு ஆயிரம் பட்டாக்களிலே வழக்கு இருக்கிறது. ஏழாயிரம் பட்டாக்களுக்கு ரசீதுகள் வரவில்லை. ஒரு இலட்சத்து 57 ஆயிரம் பட்டாக்களுக்கான அந்த விவரத்தை நான் இகே தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒன்பது அறிவிப்புகள்

குத்தகைதாரர் சட்டம் போன்ற 9 அறிவிப்புகள் இந்த மாமன்றத்தில் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, ஏழை எளியவருக்கு இந்த அரசு எந்த எந்தவகையிலே தன்னுடைய பணிகளை ஆற்றிக்கொண்டிக்கிறது என்பதற்கு அடையாளமாக-பொதுவுடைமைக் கொள்கையில், சோஷலிஸக் கொள்கையில், இந்த அரசு கொண்டிருக்கிற அழுத்தமான நம்பிக்கைக்கு அடையாளமாக -9 அறிவிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. நீ 9 அறிவிப்புகள் தந்தாய், நான் 10 அறிவிப்புகள் தருகிறேன் என்று நண்பர் ஹண்டே அவர்கள் காலையிலே பேசும் பொழுது பத்துப் பாயிண்டுகளை வைத்துக்கொண்டு இவைகளுக்கு எல்லாம் என்ன பதில் என்று கேட்டார்கள். நான் அந்தப் பத்துப் பாயிண்டுகளுக்கும் என்னால் முடிந்தவரையில் பதில் அளித்திருப்பதாகக் கருதுகிறேன். இந்த 9 அறி விப்புகள் மாத்திரம் போதாது’ தமிழ்நாட்டை முன்னேற்றி விடுவதற்கு என்பதை நான் உணராமல் இல்லை.

குத்தகைதாரர்கள் சட்டம் பற்றியெல்லாம் இங்கே எடுத்துச்சொல்லப்பட்டது. அதிலே அடிக்கடி மாண்புமிகு மணலி அவர்களும், சும்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், மற்ற உறுப்பினர்களும் கேரளா நிலச் சீர்திருத்தச் சட்டத்தைப் பாருங்கள், பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

கேரளத்தைப் பார்ப்போம்

கேரள நில உச்சவரம்புச் சட்டத்தைப் பொறுத்தவரையிலும் – விதிவிலக்குகள் தமிழ்நாட்டிலே எவை எவைக்கு அளித்திருக்கின்றோம் – கேரளத்திலே எவை எவைக்க்கு விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தேன்.

தமிழ்நாட்டிலே மாநில மத்திய அரசின் நிலங்கள், உள்ளாட்சி நிறுவனங்களின் நிலங்கள் விதிவிலக்கு. கேரளத்திலே மாநில மத்திய அரசின் நிலத்திற்கு விதிவிலக்கு.

தமிழ்நாட்டிலே அரசின் உத்தரவு பெற்ற தொழிற்சாலை, வாணிப நிலை நிறுவனங்கள் – விதிவிலக்கு. கேரளத்திலே தொழிற்சாலைகளும் வாணிப நிறுவனங்களும் – விதி விலக்கு.

தமிழகத்திலே மலைத் தோட்டம் விதிவிலக்கு. கேரளத்திலே மலைத்தோட்டம் விதிவிலக்கு.

தமிழகத்திலே கோயில், மசூதி, மாதாகோவில், அறநிலையங்களின் நிலங்கள் விதிவிலக்கு. கேரளத்திலே கோயில், மசூதி, மாதாகோவில் நிலங்கள் விதிவிலக்கு.

தமிழ்நாட்டில் நிலங்கள் வைத்திருக்கும் ஆலயங்கள் கோயில்கள் 1-3-72- க்குப் பிறகு மேலும் நிலம் வாங்க முடியாது என்று இருக்கிறது. கேரளத்திலே இருப்பதாகத் தெரியவில்லை.

பழத் தோட்டங்கள், தோப்புகள் 1-7-59-ல் இருந்த நிலம் மட்டும் தமிழ்நாட்டிலே விதிவிலக்கு. கேரளத்திலே தனியார் காடுகள் விதிவிலக்கு.
பூதான நிலங்களுக்குத் தமிழ்நாட்டில் விதிவிலக்கு, கேரளத்திலும் விதிவிலக்கு.
தமிழ்நாட்டில் பல்கலைக் கழக நிலங்கள் விதிவிலக்கு. கேரளத்தில் பல்கலைக் கழக நிலங்கள் விதிவிலக்கு.

தமிழ்நாட்டில் கல்லூரிக்கு 40 ஸ்டாண்டர்டு ஏக்கர் வைத்துக் கொள்ளலாம். உயர்நிலைப் பள்ளிக்கு 20 ஸ்டாண்டர்டு ஏக்கர் வைத்துக் கொள்ளலாம். ஆரம்ப அல்லது உயர்தர ஆரம்பப் பள்ளிக்கு 10 ஸ்டாண்டர்டு ஏக்கர் வைத்துக் கொள்ளலாம். மாணவர் விடுதிக்கு 25 ஸ்டாண் டர்டு ஏக்கர், தொழிற் பள்ளிக்கு 25 ஸ்டாண்டர்டு ஏக்கர், விவசாயப் பள்ளிக்கு 25 ஸ்டாண்டர்டு ஏக்கர். அனாதை இல்லத்திற்கு 25 ஸ்டாண்டர்டு ஏக்கர். பிற டிரஸ்டுகளுக்கு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று இன்றைக்கு இருக்கிறது. கல்வி நிலையங்கள், டிரஸ்டுகள் கேரளத்தில் விதிவிலக்கு.

ஆகவே உச்சவரம்பைப் பொறுத்தவரையில் கேரளாவிலிருந்து நாம் மிகவும் பின்தங்கிவிடவில்லை யென்பதையும், சில விஷயங்களில் நாம் கொஞ்சம் முற்போக்காக இருக்கிறோம் என்பதையும் நான் நம்முடைய மணலி அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. சுப்பு : துணைத் தலைவர் அவர்களே, நாங்கள் சொல்வது எல்லாம் உச்சவரம்புச் சட்டத்தைப்பற்றி அல்ல. அந்தச் சட்டத்திற்குப் பின்னால் கொண்டுவரப்பட்ட லேண்ட் ரிஃபார்ம் ஆக்ட்ஸ் 1969-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 1970-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அமலுக்கு வந்து இருக்கிறது. அந்தச் சட்டத்தின்படி நிலத்தை உழுபவன் அந்த நிலத்திற்கு உரிமையாளனாகிவிடுகிறான். இடைத் தரகர் வர்க்கமே எடுக்கப்பட்டிருக்கிறது. கோயில் நிலமாக இருந்தாலும் அவனுக்குச் சொந்தம் உண்டு. ஆனால் அதில் அந்த விதிவிலக்குகளில் எல்லாம் விடப்பட்டுப்போகின்றன. அந்தச் சட்டத்தைப்பற்றித்தான் நாங்கள்ங்கள் சொல்கிறோம். நீங்கள் அதைச் சொல்லவில்லை.

மாண்புமிகு டாக்டர் மு. கருணநிதி: எல்லாம் சேர்ந்த சட்டத்தைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். இணைப்புச் சட்டம் பற்றித்தான் நான் சொல்கிறேன். குத்தகைதாரர் சட்டம்பற்றி விரிவாக விவாதிக்க இருக்கிறோம்.

திரு சுப்பு அவர்கள் கூடச் சொன்னார்கள். குத்தகைதாரர்கள் அங்கே சட்டத்திலே உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கவில்லை என்று சொன்னார்கள். நஷ்ட ஈடு அங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. முறைகள், வகைகள் எல்லாம் வேறுபாடாக இருக்கின்றன. குத்தகைதாரர்கள் சட்டம்பற்றி நாம் அதிகமாக விவாதிக்க இருக்கிறோம். அப்பொழுது பேசிக்கொள்ளலாம் என்பதால் இத்தோடு விட்டுவிட விரும்புகிறேன்.

நம்முடைய மணலி அவர்களுடைய பேச்சில் பெரும்பாலும், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கு நிறைந்த அறிவுரைகளையெல்லாம் வழங்கினார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய குன்றின் மேலிட்ட விளக்கு என்ற புத்தகத்தை நீங்கள் எல்லாரும் படிக்க வேண்டுமென்று திரு. மணலி அவர்கள் சிபாரிசு செய்தார்கள். திரு. மணலி அவர்கள் எப்பொழுது இப்படி மாறினார் என்று எனக்குப் புரியவில்லை. எந்தப் புத்தகமானாலும், ஒரு கட்டுரையானாலும், கடைசியிலே என்ன கருத்தைச் சொல்லி முடிக் கிறார்களோ அதுதான் அந்தப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர், அல்லது தலைவர், அல்லது எழுத்தாளர், அல்லது கட்டுரையாளரின் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.

குன்றின் மேலிட்ட விளக்கு

குன்றின் மேலிட்ட விளக்கு’ என்ற புத்தகத்தில் கடைசிப் பக்கத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் திருப்பரங்குன்றம் மாநாடு கண்டவர்கள், அங்ஙனம் கூறத் துணியார். திராவிட நாட்டைத் திராவிடர்காக்கும் தீரப்படையொன்று உண்டு என்பதைத் திருப்பரங்குன்றம் மாநாடு காட்டிற்று! எங்கிருந்து கிடைத்தது இந்த எழுச்சி நிலை? தம்பி எல்லாம் உன் வீரத்தின் விளைவு. எழுச்சியின் பயன். உழைப்பினில் விளைந்த உயர்வு.’ வாழ்த்துகிறேன் உன்னை, வளர்க நின் ஆர்வம்! வெல்க திராவிடம்! அண்ணன் அண்ணாதுரை’என்று எழுதி முடிக்கிறார். இதை இப்பொழுது திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று திரு. மணலி அவர்கள் சொல்வது எனக்குப் புதிராக இருக்கிறது. இதை மீண்டும் படியுங்கள். இதன்படி நடவுங்கள் என்று திரு மணலி அவர்கள் ஏன் சொன்னார்கள் என்று எனக்குப் புரிய வில்லை.

திரு மணலி கந்தசாமி : மாண்புமிகு கலைஞர் அவர்கள் ரொம்ப லாவகமாக எனக்கு ஒரு கேள்வி போட்டிருக்கிறார்கள். நான் குறிப்பிட்டது எல்லாம் அந்தப் புத்தகத்திலே பொதுவாழ்வில் எப்படியிருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிற நியதிகளையெல்லாம் தி.மு.க. உறுப்பினர்கள் படித்துப் பார்க்க வேண்டும் என்பதுதானே தவிர, அந்தப் புத்தகம் பூராவையும் ஒப்புக்கொண்டதாகக் கூறவில்லை. இன்றைக்கு உங்களுடைய நிலைமையும் மாறி யிருக்கிறது. நீங்கள் திராவிட நாடு திராவிடர்க்கே என்று சொன்ன நிலையிலே எல்லாம் இன்றைக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பொதுவாழ்விலே அதிலே குறிப்பிட்ட நியதிகள், ஒழுக்கம் இவைகளையெல்லாம் நீங்கள் மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள் என்றுதான் சொனனேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : பொது வாழ்விலே இருக்கிறவர் அந்தக் கட்சியிலிருந்து பிரிந்து அந்தக் கட்சியையே அழிப்பதற்கு உனையக் கூடாது என்ற கருத்தையும் “குன்றின் மேலிட்ட விளக்கு” என்ற புத்தகத்திலே அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்றைக்கு உங்களோடு உறவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அ.தி.மு.க. உறுப்பினர் திரு கே. எம். சுப்பிரமணியம் அவர்கள் நான் ஏ. ஏ.டி.எம்.கே.யில் சேர்ந்தபிறகு அண்ணா அவர்களின் கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்தேன் என்று சொன்னார்கள். நான் உள்ளபடியே ரொம்ப வருத்தப்படுகிறேன். படித்துப் பார்த்துவிட்டு அதனால் கவரப்பட்டு ஒரு சுட்சிக்குச் செல்வதுதான் முறையே தவிர, ஒரு கட்சியிலே சேர்ந்துவிட்டுப்பிறகு அந்தக்கட்சியினுடைய கொள்கை புனிதமானது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. அவர் எல்லாப் புத்தகத்தையும் படித்து இருப்பார் என்று கருதுகிறேன். அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தில் – அவர் அதைப் படித்திருப்பாரோ என்னவோ எனக்குத் தெரியாது -அதிலே.

பேராசைப் பெருந்தகையே போற்றி !
பேச நா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி !
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி !
வன்கண நாதா போற்றி !
கொடுமைக் குணாளா போற்றி!
கோழையே போற்றி, போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி !
படுமோசம் புரிவாய் போற்றி!
சிண்டு முடிந்திடுவாய் போற்றி !
சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி !
உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தோய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி !
இறைவா, போற்றி, போற்றி!
ஏத்தினேன் போற்றி ! போற்றி!

என்று எழுதியிருக்கிறார்கள் ஆரிய மாயை என்ற புத்தகத்தில். அதை அவர்கள் படிக்கவில்லை என்று கருதுகிறேன். நல்ல பொருத்தமான அட்டையெல்லாம் போடப்பட்டு இருக்கிறது இந்தப் புத்தகம்.

முடிப்புரை

இந்த நிதிநிலை அறிக்கையில் நம்முடைய மாண்புமிகு எதிர்க்கட்சியின் தலைவர்களும். அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் எடுத்து வைத்த பல அரிய கருத்துக்களைப் பற்றியெல்லாம் நான் இங்கே நீண்ட நேரம் என்னுடைய விளக்கங்களை அளித்திருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழக அரசு, தமிழ்நாட்டில் எவ்வளவு பெரிய நெருக்கடிகள் வந்தாலும் அந்த நெருக்கடிகளையெல்லாம் சமாளிக்கின்ற அளவிற்கும், தமிழ்நாட்டுப் பெருமக்களுடைய ஒத்துழைப்பைப் பெறுகின்ற அளவிற்கும், நெருக்கடிகளை அலட்சியப்படுத்தாமல், அவைகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை என்று உணர்ந்து செயல்படும் அளவிற்கும் எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்திருக்கிறது என்பதையும் இந்தப் பதிலுரையில் நான் தேவையான அளவிற்குச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அந்த வகையிலே தங்களுடைய கருத்துக்களைச் சொன்னதன் மூலமாக இந்த நிதிநிலை அறிக்கையை நிறைவுசெய்த எல்லாக் கட்சியின் தலைவர்களுக்கும், மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் நான் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித் துக்கொண்டு இந்த அளவில் அமைகின்றேன்.
சட்டமன்ற மேலவையில்

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: மாண்புமிகு மேலவைத் தலைவரவர்களே, இந்த மன்றத்தில் வைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையின் மீது மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் உட்பட 42 உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை வழங்கியிருக்கின்றார்கள். இந்த அவையிலே மொத்தமுள்ள 62 உறுப்பினர்களில் 42 உறுப்பினர்கள் கருத்துக்களை வழங்கி, இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் நல்ல பல யோசனைகளையும், நாட்டிலே இருக்கிற நிலைமைகளையும் இங்கே எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.

எதிர்க்கட்சித் தலைவரவர்கள் அவர்களுடைய உரையைத் தொடங்கும்போது இந்த நிதிநிலை அறிக்கை வைக்கப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை இருந்தது என்று குறிப்பிட்டு, ஆனால் இடையிலே இரண்டொரு நாட்களாக ஆசிரியர்களுடைய கிளர்ச்சியின் காரணமாக அமைதியிழந்த ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். அவர்களுக்கு இந்த ஆசிரியர்கள் கிளர்ச்சி பற்றிய எல்லா உண்மைகளும் நிச்சயமாகத்தெரியும், நேற்று நம்முடைய நண்பர் ஆறுமுகசாமி அவர்கள் பேசும்போது ஒன்றைச் சொன்னார்கள். எதிர்க்கட்சிகளானாலும், ஆளும்கட்சிகளானாலும் மக்களைப் பயிற்சியளிக்கின்ற முறையிலே, மக்களுக்கு நல்ல விஷயங்களை விளக்குகின்ற முறையிலே பாடுபட வேண்டுமென்று சொன்னார்கள். அவருடைய பேச்சைப் பொறுத்தவரையில், நேற்றையத் தினம் அவர்கள் இந்தியாவை ஆளுகின்ற கட்சியின் சார்பிலும் இல்லாமல் அல்லது இங்கே எதிர்க்கட்சியினுடைய சார்பிலும் இல்லாமல், கிட்டத்தட்ட திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் நிலைமையில் இருந்து, சில பிரச்சினைகளை ஆராய்ந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. நம்முடைய எதிர்க்கட்சித் தலைவரவர்கள், ஆசிரியர்கள் கிளர்ச்சியினுடைய உண்மை விவரங்கள் அனைத்தும் தெரிந்து கொண்டிருந்தும் கூட, ஆசிரியர்களுடைய உண்மையான பிரதிநிதிகளோடு முதலமைச்சரும், கல்வியமைச்சரும் பேச வேண்டுமென்று சொன்னது கிளர்ச்சி செய்கின்ற ……..

திரு கே.ராஜாராம் நாயுடு: தவறான அர்த்தத்திற்குப் போய் விடக்கூடாது முதல்வர் அவர்கள். அவர்களுடைய பிரதிநிதி என்று ஒப்புக் கொள்கிறவர்களை அவர்கள் அனுப்ப வேண்டுமென்று சொன்னேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : அவர்கள் சொன்னது, ஒரு வேளை நாங்கள் – நானும். கல்வியமைச்சரும் உண்மையான பிரதிநிதிகளோடு பேசவில்லையோ என்கின்ற ஒரு தவறான பொருளைக் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் குறிப்பிடுகின்றேன். 5-ந் தேதியன்று என்னையும், சுல்வியமைச்சரையும் சந்தித்தவர்கள் பட்டதாரி ஆசிரி யர்களுடைய சங்கத்தின் தலைவரும், பொதுச்செயலாளரும், அவர்களோடு கூடிய ஒரு சில நிர்வாகிகளும்நான் சந்தித்திருக்கிறார்கள். இதைவிட உண்மையான பிரதிநிதிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது ஏற்பட்டிருக்கின்ற வேடிக்கை; கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் கிளர்ச்சிகள் நடைபெறுவது என்பது ஒரு முறை. ஆனால் நம்முடைய தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இருக்கின்ற துர்ப்பாக்கியமான சூழ்நிலை – கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பிறகும். நம் பெருமைக்குரிய இதுபோன்ற மாமன்றத்தில் அறிவித்துவிட்ட பிறகும். அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்படும் என்று இந்த மாமன்றத்தில் உள்ள மிகத் தகுதிவாய்ந்த பெரியவர்களை எதிரில் வைத்துக்கொண்டு உறுதியாகச் சொன்ன பிறகும். எங்கள் ஆறு கோரிக்கைகள் தீர்க்கப்படவில்லை, தீர்க்கப்படவில்லை என்று ஆசிரியர்களுடைய சங்கத்தினர் செய்திகளை வெளியிடுவதும், அவைகளைப் பற்றி நாட்டிலே இருக்கின்ற நல்லவர்கள் எந்தவிதமான கருத்தையும் அறிவிக்காமல். ஒருவேளை இந்தக் கிளர்ச்சி நடந்தால் இது ஒரு வகையில் அரசியல் இலாபமாக இருக்கட்டும் என்கின்ற எண் எண்ணத்தில் மௌனமாக இருப்பதும், நம் எதிர்க்கட்சித் தலைவரவர்கள் சொன்ன நாட்டின் எதிர்கால நன்மைக்கு உகந்ததல்ல என்பதை நான் மிகுந்த பணிவன்போடு தெரிவித்துக்கொள்வேன்.

சில நல்ல காரியங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும். கிளர்ச்சி நடத்துகிறார்கள் என்றால் அந்த ஆசிரியர்களைத் தூண்டிவிடுகின்றவர்கள் அல்லது ஆசிரியர்கள்
சங்கத்திலே எப்படியோ வந்து புகுந்துவிட்டவர்கள். அதன் மூலமாக விளம்பரம் தேட விரும்புகிறார்கள் அல்லது மேற்படி ஆசிரியர்களை அவர்கள் பால் கவர்ந்து கொள்ள. இழுத்துக்கொள்ள நினைக்கிறார்கள்.


நடனமாடிய எமன்
இது எப்படி இருக்கிறது என்றால் நேற்றையத் தினம், நம்முடைய அவையிலே இருந்து மறைந்த கலைஞர் டி.கே. சண்முகம் எழுதிய எனது நாடக வாழ்க்கை ” என்ற புத்தகத்தை நான் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு இடத்தில் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். சுமார் 40 ஆண்டுக் காலத்திற்கு முன்பு விருதுநகர் அருகிலுள்ள மல்லாங்கிணறு என்ற இடத்திற்கு அவர் மிகச் சிறுவனாக இருந்தபோது நாடகம் ஆடுவதற்கு அந்த நாடகக் குழுவோடு சென்றாராம். அவர் மிகச் சிறியவனாக இருந்து நாரதர் வேடம்ம் போடக்கூடிய நிலைமை அப்போது. அந்த ஊரிலே மின்சார விளக்குகள் கிடையாது. அரிக்கேன் விளக்குகள், பெட்ரோமாக்ஸ் விளக்குகள், இவைகளை வைத்துக்கொண்டு, நாடகம் நடத்தியிருக்கிறார்கள் ஏராளமான கூட்டம். எப்படி வந்தது என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள். சுவரொட்டிகள் அச்சிட்டோ, துண்டு விளம்பரங்கள் செய்தோ அல்லாமல், இரவு 8 மணிக்கு அந்த ஊரில் பொது இடத்திலே ஒரு வெடிகுண்டு வைத்து வெடிப்பார்களாம். பக்கத்து ஊரில் உள்ளவர்களெல்லாம் அங்கே நாடகம் நடப்பதாக அறிந்து குழுமி விடுவார்க்ளாம்.

ஒருநாள் நாடகம் ஆரம்பமாகி நீண்ட நேரம் ஆகியும் மக்களிடமிருந்து எந்த ரசனையும் வரவில்லையாம். கைதட்டலும் இல்லையாம். நாடகத்தினுடைய அதிபர், டி.கே. சண்முகம் அவர்களை அழைத்து நீ சீனுக்குப்போனால் வழக்கமாகக் கைதட்டு வரும். அதைப் போல நீ சீனுக்குப் போ” என்று சொல்லி நாரதரை வேடிக்கைக் காட்சிக்கு அனுப்பினாராம். இது கைதட்டலை எதிர்பார்த்துத்தான். நல்ல பாட்டுப் பாடிக்கொண்டு வந்தார். கைதட்டல் எதுவும் இல்லை. அயர்ந்து கொஞ்ச நேரத்துக்கெல்லாம் திரும்பி விட்டார்.

அடுத்த காட்சி எமதர்மன் காட்சி. எமதர்மன் வழக்கத்திற்கு மாறாக நடனம் ஆடிக்கொண்டு காட்சியிலே பிரவேசித்தாராம். உடனே நாடகரசிகர்கள் எல்லாம் கைதட்டி, ஆரவாரத்தோடு வரவேற்றார்களாம். அது ஏன். என்பதை டி. கே. சண்முகம் விளக்கியிருக்கிறார்கள்.” என்றைக்கும் நடனம் ஆடாத எமதர்மன் திடீரென நடனம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் ரசித்தார்கள்” என்று அந்த வாழ்க்கைக் குறிப்பிலே அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதைப்போல நல்ல பாட்டுப் பாடுகிற நாரதர் வந்தால் ரசிக்கின்ற காலமாக இல்லாமல். ஆட்டம் ஆடுகிற எமதர்மன் வந்தால் சிலபேர் ரசிப்பார்கள் என்ற நிலைமையை எண்ணி, இன்றைக்கு, ஆசிரியப் பெருமக்கள் இது போன்று கிளர்ச்சிகளிலே ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நான் எதிர்க்கட்சித் தலைவரவர்களுக்கும். ஆசிரியர்கள் கிளர்ச்சியைப் பற்றித் தவறான கருத்துக்களை யாராவது கொண்டிருப்பார்களானால் அவர்களுக்கும் சொல்ல மெத்தவும் கடமைப்பட்டிருச் கின்றேன்.

வரிக்கு வாய்ப்பில்லையா?

இந்த நிதிநிலை அறிக்கையில் நம்முடைய நண்பர் சாமிநாதன் அவர்கள் பேசும்போது வரியில்லா பட்ஜெட் தயாரித்திருப்பதற்காக மகிழ்ச்சி அடையமுடியாது என்று குறிபிட்டார்கள். எதிர்க் கட்சித் தலைவர்களும் அதேதான் சொன்னார்கள். ஆளும்கட்சியின் சார்பிலோ, அல்லது தோழமைக் கட்சிகளின் சார்பிலோ வரியில்லாமல் இந்த வரவுசெலவுத் திட்டம் அளிக்கப்பட்டிருப்பதை வரவேற்பது தவறல்ல. அதே நேரத்தில் இந்த ஆண்டு வரியில்லாத நிதிநிலை அறிக்கை ஒன்று கொடுத்துவிட்ட காரணத்தினாலேயே என்றைக்குமே வரி போடாமல் விடுவோம் என்பதும் சரியல்ல. வரி இருந்து போடு வதற்கே இடம் இல்லை என்று சாமிநாதன் அவர்கள் சொன்னார்கள். கொஞ்சம் நிதி இலாகாவும் மற்ற இலாக்காகளும் ஆழ்ந்து கவனித்தால், தேட ஆரம்பித்தால், இடம் கிடைக்காமல் போய்விடாது. ஆனால் அப்படிக் கிடைக்கின்ற இடங்கள் தாங்கக் கூடிய இடங்களாக இருக்கிறதா என்று பார்த்துத்தான் இந்த அரசு வரியைப் போடும் என்பதையும், நான் தெரிவித்துக்கொள்வேன்.

தனிநபர் வருமானம்

அவர்கள் ஒரு கணக்கைச் சொன்னார்கள். தனிநபர் வருமானம் 397 ரூபாய் முன்பு ரூ.370-ஆக இருந்தது. அப்போது தனிநபர் வரி செலுத்த வேண்டியது ரூ. 39 – ஆக இருந்தது. இப்போது ரூ 70 அல்லது 75 – ஆக ஆகிவிட்டது என்று சொன்னார்கள். இதெல்லாம் ஒரு பெருக்கல், வகுத்தல் கணக்கேயல்லாமல், தனி நபர் வருமானம் ரூ.397 என்று சொல்லுகின்ற நேரத்தில் தமிழ்நாட்டிலேயிருக்கின்ற 4 கோடி மக்களும், ஒவ்வொருவரும் 397 ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது. நானோ. திரு. சாமிநாதனோ அல்லது இன்னொரு சாதாரணமாக இருக்கக்கூடியவரையோ எடுத்துக்கொண்டு, என்னுடைய வருமானம் 20 ரூபாய், சாமிநாதன் வருமானம் 10 ரூபாய். இன்னொருவருடைய வருமானம் 3 ரூபாய் என்று கணக்கிட்டு. 20+10+3=33 ஆக மூன்று பேருக்குமாக 11 ரூபாய் என்றால் எனக்கு 9 ரூபாய் குறையலாம். சாமிநாதனுக்கு ஒரு ரூபாய் குறையலாம்; ஆனால் அந்த 3 ரூபாய் சம்பாதிப்பவருக்கு 8 ரூபாய் அதிகமாகிவிட்டது என்று பொருளல்ல. அதைப் போலவேதான் 75 ரூபாய் தலைக்கு இப்போது வரி ஏறிவிட்டது என்று சொன்னாலும். எப்படித் தனிநபர் வருமானத்தில் 397 ஒரு அளவாக 4 கோடி மக்களிலே ஒவ்வொருவருக்கும் இல்லையோ, அதைப் போல வரி 4 கோடி மக்களில் ஒவ்வொருவருக்கும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்று இந்த நேரத்திலே எடுத்துக் காட்ட விரும்புகிறேன். வரியில்லாத வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்த நீங்கள் ஏன் பங்களாதேஷ் வரியை நீக்கியிருக்கக் கூடாது என்று நம்முடைய நண்பர் தாமோதரன் அவர்களும். பெரியவர் கிருஷ்ணசாமி நாயுடு அவர்களும் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவரவர்களும் கேட்டார்கள். பங்களாதேஷ் வரியைப் பொறுத்தவரையில், போடுகிற நேரத்தில் கூட, இதை பங்களாதேஷ் வரி என்று குறிப்பிட்டுச் சொல்லாமல் இப்படி ஒரு நேரம் வருமென்று முன்கூட்டியே தெரிந்து, பாதுகாப்புக்கும், வளர்ச்சிப்பணிகளுக்கும் என்று பொதுவாகத்தான் இந்த வரியை நாம் போட்டோம்.

ஆகவே. இப்போது பாதுகாப்பும் தேவை: வளர்ச்சிப் பணிகளும் தேவை. இந்த மாநிலத்திலும். மைசூர் மாநிலத்திலும், பஞ்சாப் மாநிலத்திலும், இந்த வரி தொடர்ந்து இருந்து வருகிறது. பஞ்சாபில் இதை எஜு கேஷனல் செஸ், கல்வி வரி என்று மாற்றியமைத்திருக்கிறர்கள். இராஜஸ்தானத்தில் வறட்சி வரி என்று மாற்றியமைத்திருக்கிறார்கள். பங்களாதேஷ் வரியை மத்திய அரசில் எடுத்துவிட்டார்களே. இங்கே என் எடுக்கவில்லை என்று சிலபேர் கேட்டார்கள். மத்திய அரசிலே எடுத்த முறைப்படி எடுப்பதானால், இங்கேயும் எடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். அங்கே ரூ. 290 கோடிக்கு மேல் வரியைப் போட்டுவிட்டு பங்களாதேஷ் வரியை எடுத்தார்கள். இங்கேயும் இந்த அவை அனுமதிக்குமேயானால் அப்படி வேறொரு வரியை அறிமுகப்படுத்திவிட்டு, பங்களாதேஷ் வரியை எடுக்க இயலும். இப்போதைக்கு மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரவர்கள் சொன்னார்கள். அதிலே மத்திய அரசுக்கு ஒரு பங்கைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அகர்கள் கேட்டுக்கொள்வதற்காக மத்திய அரசுக்கு இத்த பங்கைக் கொடுத்காமல், நாமே அதைச் சேர்த்து, அடுத்த ஆண்டிலிருந்து எடுத்துக்கொள்வது என்கின்ற முடிவுக்கு இந்த அரசு வந்திருக்கிறது என்பதை மாத்திரம் நான் எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தொலைதூரப் பேருந்தில் வருவாய்

எதிர்க்கட்சித் தலைவரவர்கள் இரண்டொரு வேறுபாடுகள் பட்ஜெட் மெமோராண்டத்திலே இருப்பதாக எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் அதைச் சரியாகக் கூர்ந்து கவனித் திருப்பார்களேயானால் அந்த சந்தேசும் அவர்களுக்கு வந்திருக்காது. ‘லாங் டிஸ்டன்ஸ் பஸ்ஸஸ்’ ‘டிஸ்ட்ரிக்ட் செர்விஸஸ்’ ஆக இரண்டுக்கும் 1972-73 வரவுசெலவு திட்ட மதிப்பீட்டில் ரூ. 680 லட்சம் வருவாய் வருமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருத்த மதிப்பீட்டில் இவற்றை இரண்டாகப் பிரித்து இப்போது நாம் போட்டிருக்கிறோம். அவர்கள் அதிலே பார்க்கத்தவறியதாக நான் எண்ணுகிறேன். லாங் டிஸ்டன்ஸ் சர்விசில் ரூ. 620 இலட்சம் போட்டிருக்கிறது. பட்ஜெட் எஸ்டிமேட்டில் ரிவைஸ்ட் எஸ்டிமேட்டில் அதைப் பிரித்து லாங் டிஸ்டன்ஸ் சர்விஸஸ் 462 இலட்சம், டிஸ்ட்ரிக்ட் சர்விசஸ் ரூ. 362 இலட்சம் போட்டு ரூ. 825 இலட்சமாக அதிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பக்கம் 71- குறிப்பிடப்பட்டிருக்க்கின்றது. ஆகவே, 1973-74 பட்ஜெட் எஸ்டிமேட்டில் அது ரூ. 10 கோடியாக உயருமேயல்லாமல் குறையாது என்பதையும் நான் அவருக்குத் தெரிவித்துக்கொள்வேன். 1972-73 எஸ்டிமேட்டில் ரூ. 680-ஐ எடுக்காமல் அப்படியே போட்டிருப்பதால் அதற்கு நேராக இருக்கிற 462 குறைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவரவர்கள் எண்ணிவிட்டார்களென்று நான் கருதுகின்றேன்.

இன்னொன்றைச் சொன்னார்கள். பஞ்சாயத்து யூனியன்களுக்கும் – ஊராட்சி ஒன்றியங்களுக்கும். நான் சென்ற ஆண்டு அவ்வளவு எடுத்துச் சொன்ன பிறகும் ரூ. 117 லட்சம் தான் ஒதுக்கியிருக்கிறீர்கள். பல கோடி ரூபாய் செலவு செய்யும் இந்த இலாகாவில் ரூ. 117 இலட்சம் ஒதுக்கியிருக்கிறீர்களே, இது நியாயமா” என்று அவர்கள் கேட்டார்கள். அதுவும் ஒருதவறான அடிப்படையிலே தான் அவர்கள் கேட்டதாக நான் விளக்க விரும்புகிறேன். ஊராட்சி ஒன்றியங்களுக்கு இந்த ரூ. 117 இலட்சம் கொடுத்திருப்பது புதிய பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கு மாத்திரம் தான். ஊராட்சி ஒன்றியங்கள் பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கு இணை மானியங்கள் தருவதற்காகத்தான் இந்த ரூ. 117 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் ஊதியங்களுக்குத் தரப்படும் தொகை பக்கம் 101-ல் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ரூ.35 கோடிக்கு மேல் கல்வி மானியத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களுக்குத் தரப்படுகிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்வேன். ஆகவே, எதிர்க் கட்சித் தலைவரவர்கள் அந்தத் தவறான கருத்துக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்பதற்காக இந்த விளக்கங்களை நான் அளித்தேன்.

இங்கே மாண்புமிகு உறுப்பினர் சுந்தரேசத் தேவர் அவர்கள் பேசும்போது ஒன்றைச் சொன்னார்கள். 1962 ல் ரூ. 5.84 கோடி போலீஸ் துறைக்குச் செலவழிக்கப்பட்டது. 1966-67- ரூ. 8.45 கோடி ரூபாயாகச் செலவழித்து, இன்றைக்கு ரூ.22.75 கோடி செலவழிக்கப்படுகிறது. போலீஸ்காரர்களுக்கு இந்த நாட்டில் ஏன் இவ்வளவு ஏற்றமென்று அவர்கள் கேட்டார்கள். இந்த ஏற்றம் படிப்படியாக வந்த ஏற்றமே தவிர வேறு அல்ல என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1959-60- ரூ. 5 கோடி அளவில் ஒதுக்கப்பட்டது. அவர்கள் தவறாகச் சொன்னார்கள் ரூ.8 கோடி என்று. அல்ல, 1966-67-ல் ரூ.10 கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறது. ஆக 7 ஆண்டுகளில் ரூ. 5 கோடி என்பது ரூ.10 கோடியாக இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. அடுத்த 7 ஆண்டுகளில் அந்த ரூ.10 கோடி -அவர்கள் சொன்ன ரூ.22 கோடியாக அல்ல-ரூ.20 கோடியாக. மீண்டும் இரண்டு மடங்குதான் உயர்ந்திருக்கிறதே அல்லாமல் அதிகமல்ல. அவர்கள் ரூ. 22 கோடி என்று சொன்னது தீயணைப்புப் படைகளுக்குச் செலவழிக்கப்படு கின்ற ரூ. 2 கோடியைச் சேர்த்து அவர்கள் தவறாகச் சொன்னார்கள். இன்னும் தீயணைப்புப் படைகள் தேவை என்று நாட்டிலேயிருந்து முறையீடு வந்துகொண்டிருக்கிற நேரத்தில் அவைகளை நாம் நிச்சயமாகக் குறைப்பதற்கில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

குழப்புவது யார்?

இந்த நேரத்தில் மக்களை நம்பிக்கைக்கும். பீதிக்கும் ஆளாக்காமல் வழி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கும் இருக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே, ஆளும் கட்சிகளுக்கே இருக்கிறதாவென்று நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் – பழைய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் கேட்கக்கூடும்; சுதந்திரக் கட்சியின் தலைவர் கேட்கக்கூடும்: முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கேட்கக்கூடும்; திரு ஏ. ஆர். தாமோதரன் அவர்களும், ராஜா அய்யர் அவர்களும் கேட்கக்கூடும். ஆனால் நான் மிகுந்த வேதனையோடு தெரிவித்துக்கொள்வேன். மத்தியிலுள்ள அமைச்சர்கள் திடீர் திடீரென்று இங்கு நிலைமைகள் சீர்பட்டு வருகிற நேரத்தில் மக்களுடைய உள்ளத்தைக் குழப்புவதைப் போல் ஏதாவதொன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

திரு மோகன் குமாரமங்கலம் அவர்கள் இங்கே வந்தார்கள். வந்தவர், நிலக்கரி கேட்டார்கள். அனுப்பி வைத்திருக்கிறேன் என்று சொன்னால்,-கேட்டார்கள்; அனுப்பி வைத்தேன் என்பது அவருக்குப் பெருமைதான். அத்தோடு முடித்திருக்கலாம். ‘தமிழ்நாட்டில் நிலக்கரி தேவை என்று பத்திரிகையில் பார்த்தேன். உடனே அனுப்பச்சொன்னேன்’ என்று அவர் செய்தி தந்துவிட்டுப் போகிறார்.

மக்கள் என்ன கருதுகிறார்கள்? “இந்த அரசாங்கம் எந்த விதமான பொறுப்பையும் எடுத்துக்கொள்ளவில்லை, பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்துவிட்டு நம்முடைய திரு. மோகன் குமாரமங்கலம் எவ்வளவு தாராள மனத்தோடு இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார் “என்று மக்கள் எண்ணுகிறார்கள். திரு. மோகன் குமாரமங்கலத்திற்குப் பெருமை வருகிறது. நமக்குச் சிறுமை வருகிறதென்றுகூட நான் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு பெரிய பிரச்சினையைப் பற்றி இந்த அரசு எந்தவிதமான சுவனமும் செலுத்தாமல். பத்திரிகையைப் பார்த்து ஒரு மத்திய அமைச்சர் தெரிந்து கொள்கிற அளவுக்கு நிலைமை வளர்ந்துவிட்டதே என்கிற அளவுக்கு ஒரு தவறான எண்ணம் மக்களிடத்தில் வந்தால், அதைக் கொண்டு அரசியல் இலாபம் தேட முனைவோர் அவர்களைக் கிளப்பிவிட்டால், நாட்டில் சட்டம், ஒழுங்கு, அமைதி கெடுவதற்கான சூழ்நிலைகள் தன்னால் பிறந்து விடுகின்றன.

நான் சட்டமன்றத்திலும், பேரவையிலும் அதுபற்றி மறுத்து அறிக்கை வெளியிட்டபிறகும் கூட, எந்தத்திருத்தமோ அல்லது விளக்கமோ இதுவரை மத்தியிலிருந்து வரவில்லை. திடீரென்று ஒரு நாள் மத்திய அமைச்சர் திரு. சட்டோபாத்தியாயா அவர்கள். தமிழ்நாட்டிற்காக ஒதுக்கிய கைத்தறி நூலை இன்னும் அவர்கள் எடுத்துக் கொள்ள வில்லையென்று சொல்லிவிட்டார்கள். நம்முடைய தொழில் அமைச்சர் திரு. மாதவன் அவர்கள், அப்படி . எதுவுமில்லை. அவர்கள் ஒதுக்கவுமில்லை. நாம் எடுத்துக்கொள்ள மறுக்கவுமில்லை என்று பேரவையில் பதில் அளித்தார்கள். நான் இங்கேயும் அதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறேன். அதற்குப் பிறகும் அவர்கள் அதற்கு ஒரு திருத்தம் சொன்னார்களா. விளக்கம் அளித்தார்களா என்றால் கிடையாது.

ஆரூடம் பார்க்க முடியுமா?

இன்று காலையில் பத்திரிகையில் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவரவர்கள் கூடக் குறிப்பிட்டார்கள்; முழுமையாகக் குறிப்பிடவில்லையென்று நினைக்கிறேன்; அவர்கள் கூடச் சொன்னார்கள்; நம்முடைய மதிப்பிற்குரிய திரு சி. சுப்பிரமணியம் அவர்கள் நாடாளு மன்றத்தில் என்ன பேசுகிறார்கள்? சமயநல்லூர் அனல்மின் நிலையத்தை எடுக்காமல் இருந்திருந்தால் இந்த நிலைமைகள் ஏற்பட்டிருக்காதென்று சொல்கிறார். எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு விவரங்கள் தெரியாமல் இருக்கக்கூடிய நிலைமைகள் உண்டு. ஆளும்கட்சியில் இருப்பவர்: அதுவும் அமைச்சராக இருப்பவர்; தமிழ்நாட்டில் அமைச்சராக இருந்தவர்; நாடாளுமன்றத்தில் ஒன்றைச் சொல்கிறார் என்றால் வேண்டுமென்றே சொல்கிறாரோ, இங்கே தன் சுட்சிக்கு அரசியல் இலாபத்தோடு ஆதரவு தேடச் சொல்கிறாரோ என்று நான் சந்தேகப் பட்டால் அது என்னுடைய குற்றமல்ல : அவருடைய குற்றமே தவிர வேறு யாருடைய குற்றமுமல்ல. சமயநல்லூர் அனல்மின் நிலையத்தை விற்றுவிட்டார்கள். இந்த நிலையை எதிர்பார்த்திருக்க வேண்டுமென்று சொல்கிறார். சமயநல்லூரில் அந்த அனல்மின் நிலையத்திற்குக் கடைசியாக டெண்டர்களை முடிவுக்கு விடப்பட்டது 1972 பிப்ரவரி மாதம். இப்பொழுது 1973 மார்ச் மாதத்திலே நாம் இருக்கிறோம். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்காலம் பரிபூர்ணமாக முடிந்துவிட்டது. 1972 பிப்ரவரியில், இப்படி மழைத் தட்டுப்பாடு வரும்; தென்மேற்குப் பருவக் காற்று மோசம் செய்யும்; ஆகவே குந்தா போன்ற நீர் மின் நிலையங்களில் நமக்குத் தண்ணீர் கிடைக்காது; பல்லாயிரக் கணக்கான இலட்சம் கன அடி தண்ணீர் இருக்க வேண்டிய குந்தாவில் 1,000, 1,500 இலட்சம் கன அடி தண்ணீர்தான் கிடைக்கும் என்றெல்லாம் ஆரூடம் தெரியுமா? ஜோஸ்யம் பார்க்க முடியுமா? அப்படியானால் சொல்வதெல்லாம் உண்மையா? அப்படி ஆரூடத்தில் சொன்னாலும் நம்பிக்கை கொண்டிருக்க முடியுமா?

30 மெகாவாட் அல்ல: 14 மெகாவாட்

எதிர்பாராத வகையில் ஒன்று ஏற்பட்டது. 55 இலட்சம் ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு சமயநல்லூர் அனல் மின் நிலையத்தில் நஷ்டம் ஏற்பட்டது. 1968-ஆம் ஆண்டு அதை என்ன செய்யலாமென்று ஆராய ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. அந்த நிபுணர் குழு அதை மூடிவிடலாமென்று யோசனை கூறியது. 55 இலட்சம் ரூபாய் அனாவசியமாகச் செலவாகிறது : 14 மெகாவாட் அதிகபட்சம் அங்கே கிடைக்கிறது; அந்த 14 மெகாவாட் மின்சாரம் என்பது ஒரு நாளைக்கு 1 இலட்சம் யூனிட்தான். 225 இலட்சம் யூனிட் தேவைப்படுகிற தமிழகத்திற்கு ஒரு நாளைக்கு அந்த ஒரு இலட்சம் யூனிட்டைப் பற்றிக் கருதிப்பார்க்க முடியாது. ஒரு ஆண்டுக்கு முன் நடைபெற்றகாரியம் அது. வேறு எந்தத் தவறும் நடைபெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் தனியாருக்குக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை கூட அல்ல. 1970-ஆம் ஆண்டில் கூடப் பஞ்சாப் மாநிலத்தினுடைய மின் வாரியத்திற்கு அதை நாம் தந்துவிடச் சம்மதித்தோம். அவர்களும் பெற்றுக்கொள்ளச் சம்மதித்தார்கள். முதலில் 40 இலட்சம் ரூபாய் என்று பேசி முடித்து, 42 இலட்சம் ரூபாய்க்கு எடுத்துக் கொள்ளுங்களென்று கேட்டோம். பஞ்சாப் மின் வாரியத்திலிருந்து 9-7-1970-ல் சொன்னார்கள்.

The offer of Rs. 45 lakhs was bad on behalf of the Board. However as a matter of compromise, an agreed figure of Rs. 42 lakhs has been adopted subject to confirmation by the Boards on either side’

என்று 9-9-70- யது. பஞ்சாப் மின் வாரியம் கடிதம் கடிதம் எழுதி பிறகு அவர்களே, 6-8-71 ல் இன்னொரு சுடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதத்தில்,

I regret to say that the Board gave a second look to your offer and decided not to proceed with it further’

என்பதாக அவர்கள் எழுதிவிட்டார்கள். தனியாருக் தரவேண்டுமென்ற எண்ணம் நமக்குக் கிடையாது. அதற்குப் பிறகு டெண்டர்கள் விடப்பட்டது. டெண்டர்கள் விட்டதில் நாம் அதற்குப் போட்ட புக் வேல்யூ இருக்கிறதே. அதை எட்டுகின்ற அளவுக்கு டெண்டர்கள் வரவில்லை. மறுபடியும் டெண்டர்கள் விடப்பட்டு, 59 இலட்சம் ரூபாய் டெண்டர் – அதுதான் உயர்ந்த டெண்டர்- அவருக்குத் தரப்பட்டது. திரு சி. சுப்பிரமணியம் என்ன சொல்கிறார்? 14 மெகாவாட் அதிகப் பட்சம் தரக்கூடிய அந்த அனல் மின் நிலையம் 30 மெகாவாட் தரக்கூடியது; பல லட்சம் யூனிட்டுகளை தரக்கூடியதென்று அவர் சொல்லியிருக்கிறார். இப்படிச் சொல்வதன் மூலமாகப் பிரச்சினையை அணுகுவதற்கு அக்கறை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, மக்களைத் திசைதிருப்பி விடுவதற்கு அக்கறை எடுத்துக் கொள்கிறாரோ என்பதற்காகத்தான் நான் வருத்தப்படுகிறேன். மத்தியிலிருந்து இப்படி, அமைச்சர்கள் இங்கு வந்தாலும், வர நேரம் இல்லாவிட்டால் அங்கேயே உட்கார்ந்துகொண்டும் தமிழ்நாட்டில் தங்கள் பேச்சின் மூலமாக ஒரு கலவரச் சூழ்நிலையை, மக்களுக்கு இந்த அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்த வேண்டுமென்று முனைவது உள்ளபடியே வருந்தத் தக்கதென்று இதுவரை சொன்னேன்;

இப்போது சொல்கிறேன்; அவைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கதென்று நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

விசாரணைக் குழு

இந்த அவையில் கடைசியாகப் பேசிய நம்முடைய எதிர்க்கட்சித் தலைவரவர்களும், நேற்றைய தினம் பேசிய சிலம்புச் செல்வர். தமிழரசுக் கழகத்தின் தலைவர், இந்த மேலவையினுடைய துணைத்தலைவர், திரு ம. பொ. சி. அவர்களும், நண்பர் திரு ஈஸ்வரமூர்த்தி அவர்களும், திரு சுவாமி நாதன் அவர்களும் விசாரணைக் குழு பற்றி இங்கே பேசினார்கள். விசாரணைக்குழு பற்றி. எதிர்கட்சித் தலைவரவர்கள் பல கருத்துக்களைச் சொன்னார்கள் : திரு சுவாமிநாதன் அவர்களும் சொன்னார்கள். நான் முதலில் அவர்களைக் கேட்க விரும்புவதெல்லாம். இந்தக் கருத்துக்களையெல்லாம் திரு மாதவன் அவர்களுடைய தலைமையில் அமைந்திருக்கிற அந்தப் பொறுக்குக் குழுவில் போய்ச் சொன்னாலென்ன? அது என்னுடைய முதல் கேள்வி. இப்போது பதில் சொல்ல வேண்டாம். நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள் என்பதற்காகச் சொல்கிறேன். அந்த மசோதா வேண்டாமென்று சொல்லவில்லை. குற்றம் நீரூபிக்கப்படா விட்டால் 3 ஆண்டுக் காலம் தண்டனையென்று இருக்கிறதே. அதற்காகத்தான் அந்த மசோதா வேண்டாமென்று அவர்கள் சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள். பொதுக்குக் குழுவிலே அமர்ந்து, எதை எதை வைத்துக் கொள்ளலாம், எதை எதை விலக்கிவிடலாமென்று அங்கே சொல்கிற உரிமை அனைவருக்கும் இருக்கிறது. பொதுக்குக் குழுவில் வெளிநடப்புச் செய்வதைவிட, அவர்கள் சொன்னவைகள் அதில் எடுபடா விட்டால், பிறகு மறுப்பு உரைக்கின்ற உரிமையும் எதிர்க்கட்சித் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இருக்கிறது. அதை நிறைவேற்றாமல்; இதுவே கறுப்பு மசோதா, ரௌலட் சட்டம் என்றெல்லாம் சொன்னால் ஓகோ. ரௌலட் சட்டம் என்றால் இதுதான் போலும், என்று மக்கள் எண்ணிக்கொள்வர். மாண்புமிகு அங்கத்தினர் ஆறுமுகசாமி அவர்கள் சொல்வதைப் போல, நாம் மக்களைப் பயிற்றுவிக்க வேண்டும். இந்த மசோதாவை ரௌலட் சட்டம் என்று சொல்லிவிட்டால், ரௌலட் சட்டம் என்றால் என்ன என்று மக்கள் எண்ணும்போது. இதுவரையில் ரௌலட் சட்டத்தைப் பற்றிப் படிக்காத மக்கள், ‘இப்படி ஒரு நீதி விசாரணைக் குழு போடுவது தான் ரௌலட் சட்டம் போலும் ‘என்றுதான் நினைப்பார்கள். அந்தக் காலத்திலே அப்படித்தான் ஒரு சட்டம் போட்டான் போலும் என்று மக்கள் தவறாகப் புரிந்துகொள்வார்கள். ஆகவே மக்களைச் சரியாகப் பயிற்றுவிக்க வேண்டும்.

அந்தச் சட்டம் தெரியுமா?

நான் ஏன் இதைச் சொல்லிக் கொள்கிறேன் என்றால் இந்த மசோதாவை மறுத்து ஆளும் காங்கிரசைச் வெளியேறியவர்களில் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆளும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தான் – ராஜஸ்தானத்திலும் இருக்கின்றார்கள் – மராட்டியத்திலும் இருக்கின்றார்கள். இங்கே நம்முடைய தமிழ் நாட்டிலே போடப்பட்டிருக்கின்ற மசோதாவில் அவர்கள் சொல்வது போலக் குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டால்’ என்றெல்லாம் இல்லை. Punishment for false, frivolous, fictitious complaint என்ற தலைப்பில்,

‘notwithstanding anything contained in this Act, every person who makes a false, frivolous or fictitious complaint against publie men under this Act shall on conviction be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine. No Court shall take cognisance of the offence, except with the previous sanction of the Commissioner’

என்று நம்முடைய இந்த செலக்ட் கமிட்டியிலே இருக்கின்ற இந்தச் சட்ட வரைவில் நாம் குறிப்பிட்டிருக்கின்றோம். ராஜஸ்தானத்தில் ஆளும் காங்கிரஸ். அவர்களுடைய அவசரச் சட்டம் “First Published in Rajpatra” என்கின்ற தலைப்பில் -ஃபர்ஸ்ட் பப்ளிஷட் இன் ‘ராஜபத்ரா’-ராஜ பத்ரா- என்றால் கெஜட் என்று சொல்லப்படுகிறது – எக்ஸ்ட்ரா ஆர்டினரி பார்ட் 4. டேட்டட் 25-1-1973-ல் அதிலேயும் இதுதான் இருக்கின்றது, 13-வது பிரிவில்

Prosecution for false complaint. Notwithstanding anything contained in Section 10 or any other provision of this Ordinance, every person who wilfully or maliciously, makes any false complaint under this Ordinance shall on conviction be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine’

இப்படி இருக்கின்றது ராஜஸ்தானத்தில் உள்ள சட்டத்தில். மராட்டியத்தில் உள்ள சட்டத்திலும் இதே பிரிவு இடம் பெற்று இருக்கின்றது. இதிலே வேடிக்கை என்னவென்றால், மராட்டியத்திலும் ராஜஸ்தானத்திலும் உள்ள சட்டத்தில் அமைச்சர்களும், இது போன்ற புகார்களுக்கு ஆட்படுத்தப்படுவார்கள் என்று இருக்கின்றது. அவர்கள் மீது விசாரணை நடந்தாலும் அவர்கள் மீது குற்றம் சுமத்தலாம் என்று. ஆனால்,

Minister means, A member (other than the Chief Minister) of the Council of Ministers by whatever name called for State of Maharashtra; that is to say a Minister of State or Deputy Minister’

அமைச்சர் என்றால் முதல்வரைத் தவிர என்று இருக்கிறது ராஜஸ்தானத்தில் மராட்டியத்திலும் அப்படித்தான் இருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டிலே முதலமைச்சரையும் சேர்த்துக் குற்றம் சாட்டலாம் என்று சட்டம் கொண்டு வந்திருக்கின்றோம். ஆனால் இதைக் கறுப்பு மசோதா என்று பழைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆளும் காங்கிரசைச் சேர்ந்தவர்களும், அவர்களோடு இணைந்திருக்கின்ற – ராஜஸ்தானத்திலே இணைந்திருக்கின்ற, மராட்டியத்திலே இணைந்திருக்கின்ற இந்திய கம்யூனிஸ்ட் நண்பர்களும் சொல்வது எனக்குப் புரியவில்லை. பழைய காங்கிரஸ்காரர்கள் நாங்கள் அங்கெல்லாம் ஆளவில்லை. ஆகவே நாங்கள் இந்தக் குற்றம் சாட்டுகிறோம் என்று தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இதற்கு என்ன சொல் லுகின்றார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

நான் இன்னொன்றும் சொல்வேன். அங்கத்தினர் திரு சாமிநாதன் அவர்கள் சொன்னார்கள். விசாரணைக்குழு ஏன்? அவர்கள் வைத்த குழுவிற்குள்ளே நீங்கள் புகுந்து கொள்ளக்கூடாதா? என்று இது ஒரு வாதம். இதிலே நம்முடைய பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் கொஞ்சம் பரவாயில்லை. அவர்கள் அமைக்கின்ற குழு என்ன? ஒரு குழுவைப் போட்டு நீங்களே அதற்குள்ளே புகுந்துகொள்ளுங்களேன் என்று அவர்கள் சொல்லுகின்றார்கள்.

அண்ணாவின் பதில்
ஆனால் மற்றவர்கள். மத்தியிலே வைக்கின்ற விசாரணைக் குழுவிலே ஏன் நுழைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்கிறார்கள். இந்த விவாதம் இன்று நேற்று அல்ல, 1968-ஆம் ஆண்டிலேயே, உள்துறை அமைச்சராக இருந்த திரு சவான் அவர்கள் இருந்த காலத்திலேயே, அவர்கள் அண்ணா அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதத்தில் அவர்கள் ஒரு லோக் பால்’ என்கின்ற அமைப்பை அங்கே நிறுவ வேண்டுமென்றும், அந்த அமைப்புக்கு எல்லா மாநிலங்களும் ஆதரவு தரவேண்டுமென்றும் மாநிலங்களில் உள்ள அமைச்சர்கள்மீது புகார் கூறப்பட்டால் அந்த மத்திய அமைப்பு விசாரிக்க உரிமை பெற்றதாக இருக்கும் என்றும் சொல்லி நம்முடைய முதலமைச்சர் அண்ணா அவர்களுக்கும் மற்ற மாநில முதல் அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதினார்கள். அந்த நேரத்தில் அண்ணா அவர்கள் சொன்ன கருத்து.

Constitutionally, the Central Ministers are under the control of the Prime Minister and the State Ministers are under the control of the Chief Minister. The Chief Minister is independent of the Prime Minister and the Union whole Ministers. So, the Chief Minister will be the authority of the State Ministers’

என்று அழுத்தம் திருத்தமாகப் பேரறிஞர் அண்ணா அவர்கள் அப்போது திரு சவான் அவர்களுக்குத் தெரிவித்தார்கள். அது மாத்திரமும் அல்லது இன்றைக்குச் சுதந்திரா கட்சிக் காரர்கள் எல்லாம் கூடச்சேர்ந்து கொண்டு மத்திய சர்க்கார் வைக்கின்ற விசாரணைக் குழுவிலே நீங்கள் உங்களை நுழைத்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லுகின்றார்கள். அப்படிச் சொன்னால் கூடப் பரவாயில்லை. மத்திய சர்க்காரே இவர்கள் மீது விசாரணைக் குழு போடு என்று சொல்கின்றார்களே, அவர்களுக்குச் சொல்வேன், சுதந்திரக் கட்சியினுடைய முதலமைச்சராக ஓரிசாவிலே இருந்த திரு சிங்தேவ் அவர்கள் இந்த ‘லோக் பால்’ பற்றிச் சவானுக்கு என்ன எழுதினார்கள் தெரியுமா?

It may not be keeping with the demands of the Constitu- tional propriety that the observance of the Code of conduct by the Chief Minister should be, entrusted the Prime Minister and to the Union Home Minister. In order to develop proper democratic practices, the State Legislature should be the authority for enforcing their observance of the code of conduct by the Chief Minister in the same way as the Parliament is the authority for ensuring the observance of the Code of conduct by the Prime Minister’

அதாவது ஒரு அரசினுடைய முதலமைச்சர் நெறி முறைகளைப் பின்பற்றுவதை மேற்பார்வை செய்யும் பொறுப்பை, நாட்டின் பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ ஏற்றுக்கொள்வதென்பது அரசியல் அமைப்பின் அடிப்படைக்கு உகந்தது ஆகாது. நெறிவழுவாமல் நாட்டின் பிரதமர் செயல்படுகின்றாரா இல்லையா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு நாடாளுமன்றத்திற்கு எப்படி இருக்கின்றதோ – அது போலவே ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நெறிமுறை வழுவாமல் நடக்கிறாரா இல்லையா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பும் அந்த அதிகாரமும் படைத்தது அந்த மாநிலச் சட்டமன்றம் தான். இது தான் சிறந்த ஜனநாயகப் பண்புகளை வளர்க்க ஏதுவாக இருக்குமென்று ஒரிசாவின் முன்னாள் முதலமைச்சர் திரு சிங்தேவ் அவர்கள் சவானுக்குக் கடிதம் எழுதினார்கள்.

அதற்குப் பிறகு அண்ணா அவர்கள் மாநில அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அதிலே ஒருமுடிவினை எடுத்து அதையும் சவானுக்கு அறிவித்தார்கள்.

The Council have examined the suggestion in detail and have decided not to agree to it on various grounds including the ground that the institution of the Lok Pal have contemplated the infringe on the State autonomy guaranteed by the Constitution.’

அதாவது, உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது மாநில சுயாட்சித் தன்மைக்குப் பொருத்தமற்றது. ஆகவே இதை நான் ஏற்றுக் கொள்வதற்கில்லையென்று 2-6-1968-ல் திரு சவான் அவர்களுக்கு அண்ணா அவர்கள் கடிதம் எழு தினார்கள். அதிலே அவர்கள் சொன்னார்கள்:-

We feel that the setting up of a Lok Pal have contemplated by the A.R.C. would infringe on State autonomy as envisaged under the Constitution and as such we would advice against it’

என்று கடிதம் எழுதினார்கள். அதே நிலைதான் 1968-லிருந்து இதுவரையில் இந்த அரசு பின்பற்றிவருகிறதே அல்லாமல் ஏதோ விசாரணைக்குப் பயந்து நடக்கிறோம் என்று எண்ணி, என் மீதோ அல்லது மற்ற அமைச்சர்கள் மீதோ புகார்களை அங்கே எடுத்துச் சொல்லி, உடனேயே வைப்பது என்றால், மத்திய சர்க்கார் உள்ளபடியே வேதனைப்படுகின்றேன். இன்றைக்கு இங்கே உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் ஆண்டு கொண்டிருக்கின்றது. நாளை இங்கே திராவிட முன்னேற்றக் கழகம் இல்லாமல், வேறு ஒரு கட்சி ஆண்டு, அதே போல் மத்தியிலே வேறு ஒரு கட்சி ஆளுகின்ற அந்தப்பொறுப்பு ஏற்றிருக்கின்ற நேரத்தில், மத்தியிலே இருக்கின்ற கட்சிக்கு மாநிலத்திலே ஆளுகின்ற கட்சியை வீழ்த்த வேண்டுமென்றால், மிகச் சுலபமான ஆயுதம் ஒன்று கிடைத்துவிடுகின்றது. அவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒரு நாலு பேரைப் பிடிக்க வேண்டும். யாராவது கட்சியிலே காழ்ப்புணர்ச்சியால் வெளியேறியவர்கள் இருக்கின்றார்களா என்று பார்த்து, அல்லது அப்படி இல்லா விட்டால்கூட நாலு பேரைத் தேடிப் பிடித்து அவரிடத்திலே ஒரு புகார் ஒன்று தயாரித்துக் கொடுத்து அதைக்கொண்டு வந்து என்னிடத்திலே கொடு. நான் விசாரணைக் குழு வைக்கிறேன். வைத்தவுடனே மந்திரிகள் ராஜினாமாச் செய்வார். மந்திரிகள் ராஜினாமா செய்துவிட்டால், அங்கு இருக்கின்ற எம்.எல்.ஏ.க்கள் சிதறிப்போவார்கள். பிறகு ஒரிசாவினைப்போல ஆகும். அல்லது வேறு மாநிலம்போல ஆகும். பிறகு அங்கு ஜனாதிபதி ஆட்சி வரும் என்பார்கள்.

ஆகவே தனக்குப் பிடிக்காத ஆட்சி எந்த மாநிலத்திலே இருந்தாலும், அதைக் கவிழ்த்துவிட, குலைத்துவிட, சீரழித்துவிட மத்திய சர்க்கார் கையிலே இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் சொல்லுகின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அல்ல: நாளைக்குக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் – நல்ல காலமாக வராது – வந்தாலும், வேறு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மத்திய சர்க்காருக்கு விரோதமான ஒரு கட்சியினுடைய ஆட்சி மாநிலத்திலே இருக்கின்ற நேரத்தில் அதைக் கவிழ்க்க வேண்டுமென்று மத்தியிலே இருக்கின்றவர்கள் சர்வாதிகார எண்ணம் கொண்டு, ஜனநாயகப் போர்வையில் இருக்கின்ற பிரதமரும் மற்றவர்களும் எண்ணுவார்களானால், அந்த மாநிலத்திலே 4 பேரைப் பிடித்துப் புகார் கொடுக்கச் சொல்லி அதிலே விசாரணை வைத்து அதன் காரணமாக அந்த அமைச்சர்கள் பதவி விலகச் செய்து. அங்கே ஒரு கிளர்ச்சி ஏற்படுத்தி, அந்த அரசைக் கவிழ்த்துவிட முடியும்.

நம்முடைய சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்கள் இங்கே ஒருமுறை பேசுகிற நேரத்தில் எடுத்துக் காட்டினார்கள். அதைத்தான் அப்போது சிங்தேவ் அவர்கள், சுதந்திரக் கட்சியினுடைய அமைச்சர், ஒரிசாவினுடைய முதல்வர், அப்போதே சுட்டிக்காட்டினார்கள். அண்ணா அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். என்மீது விசாரணை என்றால் சட்டமன்றம் இருக்கிறது. பிரதமர்மீது விசாரணை என்றால் நாடாளுமன்றம் இருக்கிறது. பிரதமர் மீது விசாரிக்கத் தனியாக ஒருவிசாரணை குழு போட முடியாது என்பது எப்படிச் சரியோ, அதேபோல மத்திய சர்க்கார் ஒரு விசாரணைக் குழுவை இங்கே அமைக்க முடியாது என்பதும் சரியானதாகும். ஆகவே தான் இன்னும் மெத்த வேதனையோடு ம. பொ. சி. அவர்கள் இங்கே சொன்னார்கள். இப்படி ஒரு விசாரணைக் குழு போடவேண்டிய நிலைமையை பொது வாழ்வில் சில பேர் ஏற்படுத்தி விட்டார்களே! இப்படிப்பட்ட புகார்ப் புழுதி கிளப்பப்பட்டுவிட்டதே! இருந்தாலும் இந்த அரசு துணிச்சலோடும். நேர்மையோடும், நிதானத்தோடும் இப்படிப்பட்ட விசாரணைக்குழு போட முன் வந்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொன்னார்கள்.

இப்படித்தான் இன்றைக்கு அந்த விசாரணைக்குழு போடுவதற்கான சட்டத்தை, அந்த வரைவினை நாம் கொண்டு வந்திருக்கிறோம். நான் இன்னும்கூடச் சொல்வேன் எதிர்க்கட்சித் தலைவர் சொன்னது போலத் திருத்தங்கள் இன்னின்னவை தேவை என்பதை எடுத்துச் சொல்லி அவைகளைக் கலந்து ஆலோசிப்பதற்கு நல்ல வாய்ப்பினை அளித்த சட்ட அமைச்சருக்கு உதவியாக இருப்பது தான் இங்கே இருக்கிற ஸ்தாபன காங்கிரசானாலும், சுதந்திரக் கட்சியானாலும், நம்முடைய ஆளுங் காங்கிரசானாலும், கம்யூனிஸ்ட் கட்சியானாலும், மற்றக்கட்சிகளுடைய பொறுப்பாக இருக்க வேண்டுமென்று இங்கே எடுத்துக் காட்டிட விரும்புகிறேன்.

நமது எதிர்ப்பு

விவசாய வருமான வரியைப் பற்றி இங்கே சர்ச்சை எழுந்தது. திரு சாமிநாதன் அவர்களும், திரு நாராயணசாமி அவர்களும் இப்போது பேசிய நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் எடுத்துச்சொன்னார்கள். இந்த விவசாய வருமான வரி தமிழ்நாட்டில் இருக்கிற விவசாயிகளைப் பாதிக்கக்கூடும் என்கிற ஒரு கருத்தை நான் ஏற்கெனவே எடுத்துச் சொல்லியிருக்கிறேன், டில்லியில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டிலும் கூட விவசாய வருமான வரியை அவர்கள் சேர்த்துக்கொள்தற்கு மாநிலச் சார்பாக நான் மறுப்புத் தெரிவித்திருக்கின்றேன்.

அதற்குப் பிறகும் விவசாய வருமான வரி இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை நாம் காண்கிறோம். ஆகவே விவசாயிகளுடைய ஊக்கத்தை இது இங்கே பாதித்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிற காரணத்தினால், ஒருவேளை மத்திய அரசு இதைக் கைவிடக்கூடும். அப்படிக் கைவிடாவிட்டால் நாம் மத்திய அரசிடத்திலே உரிமையோடு கேட்பதெல்லாம், இங்கே இருக்கிற விவசாய வருமான வரியை வைத்துத் தான் நீங்கள் உங்களுடைய வரியைப் பெருக்கிக் கொள்கிறீர்கள்; வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறீர்கள்! உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால் இப்போது போடப்பட்டிருக்கிற இந்த விவசாய வருமான வரியில் இப்போதுள்ள நிலை – விவசாயம் அல்லாத வருமானம் 5 ஆயிரம் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு விவசாயத்தில் எவ்வளவு வருமானம் வந்தாலும் வரிகிடையாது. மத்திய சர்க்காருக்கு வரி கிடையாது. விவசாயிகளுக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும் மாநில சர்க்காருக்கு வரி இருக்கிறது. ஆனால் 5 ஆயிரம் ரூபாய் தான் விவசாயம் அல்லாத வருமானம் என்றால் அவர்களுக்கு விவசாயத் துறையில் இருந்து வரி கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் 6 ஆயிரம் ரூபாய் என்றால் மத்திய அரசிற்கு வரி தர வேண்டும். விவசாயம் இல்லாத வருமானம் 6 ஆயிரம் என்றால் வரி தரவேண்டும். 6 ஆயிரம் ரூபாய்க்கு 110 ரூபாய் வரி தரவேண்டும். அந்த 6 ஆயிரம் ரூபாயோடு விவசாய வருமானம் 5 ஆயிரம் சேர்ந்தால் 11 ஆயிரம் ரூபாயானால் அதிலே சிலாப் சிஸ்டம் அமைந்து 187 ரூபாய் வரி தரவேண்டும். 6 ஆயிரம் ரூபாய் விவசாய அல்லாத வருமானம் உள்ளவர்கள் 110 ரூபாய் வரி கொடுத்தார்கள். இப்பொழுது விவசாயத்திலே அவர்களுக்கு 5 ஆயிரம் வருமானம் வருமானால் 110 கொடுத் தவர்கள் 187 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆக 77 ரூபாய் அதிகமாக வரி கொடுக்க வேண்டும். இது இங்கே இருக்கிற விவசாயத்தினுடைய அடிப்படையில் போடப்படுகிற வரி என்ற காரணத்தினால் இதைக் கணக்கிலே எடுத்து அந்த 77 ரூபாயைத் தமிழ்நாட்டிற்குக் கொடுத்து விடுங்கள் என்று நாம் தமிழ்நாடு அரசு சார்பாக மத்திய அரசை வற்புறுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். மத்திய அரசும் இது வருகிற காரணத்தினால் தானே 110, 187 ஆக ஆகிறது என்பதை மனத்திலே வைத்து ஆவன செய்யுமென்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

தியாசாபிகல் சொசைட்டி விவகாரம்

திரு வசந்தபாய் அவர்கள் பேசுகிற நேரத்தில் தியாசாபிகல் சொஸைட்டியைப் பற்றிச் சொன்னார்கள். அந்தச் சொசைட்டி ஏற்கெனவே வைத்துக் கொண்டு இருக்கிற நிலம் 296 ஏக்கரா. அந்த 296 ஏக்கராவில் 106 ஏக்கரா நிலத்தை வீட்டு வசதி வாரியம் எடுத்துத் தென் சென்னை வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடுகள் கட்டலாம் என்று 71-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில அரசை அணுகியது. அந்த நிலத்தைத் தியாசாபிகல் சொசைட்டியில் சங்கத்தினர்: கொடுக்க மறுப்புத் தெரிவித்தார்கள். மறுப்புத் தெரிவித்ததும் அதைப் பற்றி மாநில அரசு பரிசீலனை தொடங்கியவுடன் என்ன செய்தார்கள் என்றால், அப்போது நடந்த வேலைதான் மிகுந்த சங்கடமானது. வீட்டு வசதி வாரியத்திற்கு அதைக் கொடுக்கக் கூடாது என்று மறுப்புத் தெரிவித்து விட்டு இடையிலே என்ன செய்தார்கள் என்றால் 56-1 : 56-2 என்கிற சர்வேயில் 14 கிரவுண்டில் இருந்து 3 கிரவுண்டு வரை 191 கிரவுண்டுகளாக மனை ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் வீதம் சென்னையிலே உள்ள தனிப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு, சென்னை ரியல் எஸ்டேட் என்ற நிறுவனத்திற்கு விற்றுப் பத்திரம் ஒன்றினை எழுதிக் கொடுத்து விட்டார்கள். வீட்டுவசதி வாரியம் அதைக் கையகப்படுத்துகிற நடவடிக்கையிலிருந்து தப்பித்துக்கொள்ள 4-6-1971முதல் 8-6-1971-க்குள் தனிப்பட்ட நிறுவனமான ரியல் எஸ்டேட்டுக்கு அவசர அவசரமாகப் பத்திரம் ஒன்றினை எழுதிக் கொடுத்தது கலெக்டர் மூலம் நமக்குத் தெரியவந்தது. இது உண்மையா அல்லவா என்பதற்கு அத்தாட்சி சொல்ல வேண்டுமானால், அந்த ரியல் எஸ்டேட் என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அரசுக்கு ஒரு முறையீடு செய்து கொண்டார்கள் ஜூலை 1972-ல். என்ன முறையீடு என்றால், வீட்டு வசதி வாரியம் அந்த சொசைட்டியினுடைய நிலத்தைக் கையகப்படுத்த உத்தேசித்து இருக்கிறதாம்; அதிலே நாங்கள் 191 கிரவுண்ட் நிலத்தை வாங்கி இருக்கிறோம். அதை விட்டு விட்டுக் கையகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவர்கள் அரசுக்கு ஒரு முறையீட்டைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே தான் இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு இருக்கிற சங்கடத்தை, தயக்கத்தை, மறுப்பைத் தெரிவிக்கிற நேரத்தில்-அரசு அதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிற நேரத்தில்-இடையில் 191 கிரவுண்டுகளை விற்று விட்டிருப்பது என்பது சரியானதல்ல. ஒரு பெரிய புனிதமான சொசைட்டி என்று சொல்கிற இந்த சொசைட்டி சார்பாக இந்தத் தவறு நடைபெற்று இருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

திரு கே. ராஜாராம்: வாங்கினதா இந்த நிலம்? அல்லது சர்க்கார் அவசைன் பண்ணங்கினதா?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : -அது பழைய நிலம். அந்த விவரங்கள் அவ்வளவாக எனக்குத் தெரியாது.

திண்டுக்கல் தேர்தல்

கடைசியாகத் திண்டுக்கல்லைப் பற்றிச் சொன்னார்கள். திண்டுக்கல் தேர்தலுக்குத் தேதி வைக்கவில்லை. முதலிலேயே திண்டுக்கல்லில் திராவிட முன்னேற்றக் கழகம் அழிந்துவிடும், தோற்றுவிடும், கவிழ்ந்துவிடும் என்று எல்லாக் கட்சிகளும் சொன்னார்கள். ஆளும் காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி, எல்லாக் கட்சிக்காரர்களும் சொன்னார்கள். சுதந்திரக் கட்சி யைச்சேர்ந்த திரு சாமிநாதன் தன்னைச் சொல்லவில்லை என்று வருத்தப்பபடுகிறார். தோற்றுவிடும், தோற்றுவிடுமெனறார்கள். பிறகு கொஞ்ச நாளைக்குப் பிறகு, 10 நாள் பரபரப்பு அடங்கிய பிறகு, திண்டுக்கல்லிலே தவறான வாக்குகள் பதிவாகி விட்டன என்று சொன்னார்கள்.

நான் சட்டப்பேரவையிலே சொன்னேன். ஒரு இலட்சம் வாக்குகள் தவறான வாக்குகள் என்று சொன்னார்கள். ஒரு இலட்சம் வாக்குகள் இல்லை. மொத்தம் 11 ஆயிரம் வாக்குகள். அந்த வாக்குகள் பரிசீலிக்கப்படுகின்றன. நாகர்கோவில் தேர்தலிலே கிட்டத்தட்ட 50 ஆயிரம் சேர்க்கப்பட்ட வாக்குகள், உப தேர்தலுக்காகச் சேர்க்கப்பட்டன. அதைப் பற்றியெல்லாம் பிரச்சினை எழவில்லை. யாரும் எழுப்பவில்லை. ஆனால் இங்கே 11 ஆயிரம் வாக்குகள் சேர்க்கப்பட்ட நேரத்தில் இவ்வளவு பெரிய பிரச்சினையாக்கி இருக்கிறார்களே என்று நான் சட்டசபையிலே கூட எடுத்துச் சொன்னேன். இதற்காக அங்கிருந்து ஒரு அதிகாரிகூட வந்தார். யாரும் எதிர்க்கவில்லை வந்ததை. தாராளமாக வரட்டும். வந்து பரிசீலிக்கட்டும் என்று விட்டுவிட்டோம். அவர்களும் வந்தார்கள். நிருபர்கள் கேட்டார்கள். ஒரு இலட்சம் வாக்குகள் தவறுதலாகச் சேர்க்கப்பட்டிருப்பதாக நிருபர்கள் கேட்டார்கள். கேட்டதற்கு அந்த அதிகாரி சொல்லியிருக்கிறார்:- ஒரு இலட்சம் வாக்குகள் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்களுடைய பெயர்கள், முகவரிகள் இருக்க வேண்டுமே; அவைகளெல்லாம் எதுவும் இல்லையே என்று அவர்கள் சொன்னார்கள்.

அதற்கு மேல் அவர் சொன்னால் அரசியலாகிவிடும் என்பதற்காக -ஒரு அதிகாரி எந்த முறையிலே சொல்ல வேண்டுமோ அந்த முறையிலே அதிகாரி சொன்னார்; ஒரு இலட்சம் வாக்குகளுக்கு முகவரி கிடையாது, பெயர் கிடையாது என்று சொன்னார். அதற்குப் பிறகும் எனக்கு உள்ள படியே வருத்தம்; நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர், திண்டுக் கல்லில் ஒரு கூட்டத்தில் பேசுகிற நேரத்தில், அவர்களுடைய கட்சித் தலைவர்களோடு சேர்ந்துகொண்டு பேசுகிற நேரத்தில், ஏதோ வாக்காளர் பட்டியலில் தவறு நடந்து விட்டதாகச் சொல்கிறார்கள் என்றால் – உள்ளபடியே நான் வேதனைப்படுகிறேன். கேட்டால் திரு சாமிநாதன் அவர்கள் சொன்னது போல சொல்லக்கூடும் – என்னுடைய சூழ்நிலை அப்படி நான் சொன்னேன் என்று அவர்கள் சொல்லக் கூடும். 11 ஆயிரம் பேரில் 4 பேர், 5 பேர், 10 பேர் ஏதோ தவறு செய்திருப்பார்களானால் அதற்காக அவர்களுடைய நாளை நீட்டித்துக் கொடுத்திருக்கிறார்கள். நாளும் நீட்டிக்கட்பட்டு அதுவும் அறிவிக்கப்பட்டது. தவறு இருந்தால் திருத்திக் கொள்ளக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்த பிறகும் இப்படித் தேவையில்லாத ஒரு பிரசாரம் செய்வது முறைதானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் இதைச் சொல்லுகிறோம். ஆட்சேபனை மனுக்கள் வந்திருப்பது சட்ட அமைச்சர் சொல்வது 300 மனுக்கள் தான். இப்படி 11 ஆயிரம் என்பதில் 30 மனுக்கள்தான் வந்திருக்கின்றன. ஆட்சேபனை மனுக்கள் இருந்தால் கொடுங்கள் என்று நாள் நீட்டிக்கப்பட்டது.

திரு கே. ராஜாராம் :- ஆட்சேபனை மனுக்கள் கொடுத்தவர்கள் நேரில் வந்து சொன்னதைத் தான் நான் சொல்கிறேனே தவிர நானாக இட்டுக் சுட்டிக் சொன்னதில்லை. நேரில் வந்து அவர்கள் பொறுப்போடு சொன்னதைத் தான் நான் எடுத்துச் சொன்னேனே தவிர சொல்லாததை நாங்களாகச் சொல்வதில் அர்த்தமில்லை. சட்ட அமைச்சர் சொல்கிறார்கள் 300 ஆட்சேபனை மனுக்கள் வந்திருக்கின்றன என்கிறார்கள். என்னிடம் நேரில் வந்து 4, 5 பேர் சொன்னார்கள். இன்னின்ன குறைகள் ஏற்பட்டிருப்பதாக அதைத்தான் நான் அடுத்துச் சொன்னேனே ஒழிய வேறு இல்லை.

மாற்றம்!

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி:- பிறகு அதிகாரிகளை யெல்லாம் மாற்றிவிட்டார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். திருச்சியிலே கூட அதிகாரி மாற்றப்பட்டிருக்கிறார் ஒரு வாரத்திற்கு முன்பு. சென்னையிலே போலிஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள் ஒரு வாரத்திற்குள்ளாக. ஆகவே அதிகாரிகளை மாற்றுவது இயல்பாக எப்போதும் நடைபெறுகிற காரியமேயல்லாமல் வேறல்ல! இன்னும் தேர்தலுக்குத் தேதியே வைக்கவில்லை. எந்த விதமானகாரியமும் நடைபெறவில்லை. அதற்குள்ளாகத் திண்டுக்கல், கள்ளவாக்கு, இலட்சம் வாக்கு, தவறான வாக்கு என்றெல்லாம் சொல்லுவதால் பொறுப்பான அரசியல் கட்சிகளை நடத்த முடியாது.

இதில் எனக்கு இன்னொரு வேடிக்கை. நம்முடைய திரு பொன்னப்பநாடார் பேரவையிலே சொன்னார்கள். காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்களெல்லாம் சொல்லுகிறார்கள். அவர்களுடைய ஏடுகளெல்லாம் எழுதுகின்றன. சர்க்காரிலிருந்து போலீஸ் வர வேண்டும் தேர்தலை நடத்திய சர்க்கார் அதிகாரிகள் வந்து தேர்தல் நடத்த வேண்டும் என்று, திடீரென்று இவர்களுக்கு மத்திய சர்க்கார்மீது பற்று எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அதே மத்திய சர்க்கார் நடத்திய தேர்தல் தான் 71-ஆம் ஆண்டிற்கான தேர்தல். இப்போதிருக்கின்ற ஸ்தாபன காங்கிரஸ்காரர்களெல்லாம் சேர்ந்து கொண்டு (அதிலே ஒரு ரசாயன மையை ரஷ்யாவிலிருந்து அந்த மை வந்தது. ஆகவே தான் ஜெயித்துவிட்டார்கள் என்று சொன்னார்கள். இப்போது அவர்களை அழைப்பதற்கு என்ன காரணம், அவர்கள் வந்தால் அந்த மையோடு வரமாட்டார்களா? என்ன காரணம்? எனக்குப் புரியவில்லை.

இப்படி எதற்கெடுத்தாலும் மாநிலத்தினுடைய உரிமைகளைக் கொண்டு போய் நாமே வலுவினிலே மத்திய சர்க்காருடைய கையிலே கொடுப்பது முறையானது அல்ல. மத்திய சர்க்காருக்குச் சில பொறுப்புகள் இருக்கின்றன. சில பொறுப்புக்களை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் கேட்கின்ற மாநில சுயாட்சியில் இந்தியாவினுடைய ஒற்றுமைக்கு, இந்தியாவினுடைய பாதுகாப்பிற்கு, இந்தியாவினுடைய பலத்திற்கு, ஊறுதேடாத வகையில் பொறுப்புக்கள், அதிகாரங்கள், உரிமைகள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டுமென்று சொல்லுகிறோம். அதே நேரத்தில், இன்றைக்கு இருக்கின்ற நிலைமைகளை நாம் உணர்ந்து கொள்ளவும், அந்த நிலைமைகளுக்கேற்ப நடக்கவும் தயாராக இருக்கின்றோம். வேண்டுமென்றே, எதற்கெடுத்தாலும் மத்திய சர்க்கார் வரவேண்டும், மத்திய சர்க்கார் அதிகாரி வர வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தால், அது மாநில உரிமைகளைத் தாமே குழிதோண்டி புதைப்பதற்குச் சமமாகிவிடும்.

திராவிட முன்னேற்றக்கழகமே இந்த உலகம் உள்ளளவும் ஆண்டு கொண்டு இருக்கப்போகிறது. வேறு சுட்சி, இங்கே வரவே வரமுடியாது என்ற எண்ணத்திலே, தவறாகக் கருதிக் கொண்டு, மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று நான் மாண்புமிகு எதிர்க் கட்சியினுடைய தலைவரையும் கேட்டுக் கொள்வேன். காங்கிரஸ் கட்சியினுடைய தலைவரவர்களையும் நான் கேட்டுக் கொள்வேன். ஆகவே மாநிலத்தினுடைய உரிமைகள் முக்கியமாக இருக்க வேண்டுமென்ற காரணத்திற்காகத்தான் நான் இங்கு இந்த நிதிநிலை அறிக்கையிலே நம் உரிமைகள் எந்தெந்த அளவுக்கு பாதிக்கப்பட்ருக்கின்றன என்பதை விவரமாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

இந்த அறிக்கையின் மீது. இந்த மன்றத்தினுடைய நல்லறிவு வாய்ந்த பெரியவர்கள், சான்றோர்கள், தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி, இந்த அரசினுடைய காரியத்திற்காக ஊக்க உணர்ச்சி தருகின்ற வகையிலே உதவியதற்காக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளவில் முடிப்பதற்கு முன்பு நம்முடைய அடிகளார் அவர்கள் ஆலயப் பணியாளர்களைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். நம்முடைய பராங்குசம் அவர்கள் காங்கி மஸ்தூர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று எடுத்துச்சொன்னார்கள், தொடர்புடைய அமைச்சர்கள் இருவரும் விரைவிலேயே கலந்து யோசித்து முடிவெடுத்து, பேரவையிலும், மேலவையிலும் நல்ல முடிவுகளை அறிவிப்பார்கள் என்று அவர்கள் இருவருக்கும் சொல்லி, இந்த அளவிலே முடிக்கின்றேன். வணக்கம்.