தேவநேயப் பாவாணர் அவர்கள் ஒரு புகழ்பெற்ற தமிழறிஞர், மொழியியல் ஆய்வாளர் மற்றும் திராவிட மொழிக்குடும்பத்தின் ஒப்பிலக்கண ஆய்வில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவர் 1902ஆம் ஆண்டு சங்கரன்கோவிலில் பிறந்தார்.
இவர் 40-இற்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்காக உழைத்தார்.