Image-Description

கி. ஆ. பெ. விசுவநாதம்

முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர்.

இவர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் எனப் பன்முகத் திறமை பெற்றிருந்தார். குறிப்பாக, அவரது நகைச்சுவை ததும்பும் சொற்பொழிவுகளும், எழுத்துக்களும் அவரை மக்களிடையே மிகவும் பிரபலமாக்கின.