Image-Description

கவிஞர் கருணானந்தம்

கருணானந்தம் அவர்கள் 15.10.1925 இல் பிறந்தார். இவர் இருபதாம் நூற்றாண்டின் காவியக் கவிஞர் என்ற தகுதியைப் பெற்றார். மேலும் இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி அதை வெளியிட்டுள்ளார் அதனால் இவர் பெரியாரின் வரலாற்றாளர் (periyar’s biographer) என்ற பெயரையும் பெற்றார். தஞ்சை மாவட்டம் சுங்கம் தவிர்த்த சோழன் திடல் என்னும் ஊரைச் சார்ந்தவர்.
 
கருணானந்தம் அவர்கள் கவிதைகளைத் தாண்டி கட்டுரைகள் மற்றும் பிற இலக்கிய வடிவங்களிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரது படைப்புகள் சமூக மாற்றத்திற்கான ஒரு அறைகூவலாகவும், மனிதர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் முயற்சியாகவும் அமைந்திருக்கின்றன.