தமிழர் தோற்றமும் பரவலும்

இந்நூல், புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் (Prof. V. R. Ramachandra Dikshitar) அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. இந்த நூலை புலவர் கா. கோவிந்தன் எம்.ஏ. (Pulavar K. Govindan M.A.) அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்.

DOWNLOAD :

(Available Formats)

இந்த நூல் 1947 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில், தமிழர்களின் தோற்றம், பண்பாடு, மற்றும் உலகம் முழுவதும் அவர்களின் பரவல் குறித்து ஆழமாக ஆராய்ந்துள்ளார். திராவிடர்களின் தோற்றம் குறித்த பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களை ஆய்வு செய்து, தமிழர்கள் இந்திய நிலப்பரப்பின் பூர்வீகக் குடிகள் என்றும், அவர்களின் தனித்துவமான பண்பாடு இங்கேயே உருவானது என்றும் வாதிடுகிறார். குறிப்பாக, தென்னிந்தியாவிற்கும் மத்தியதரைக் கடல் நாடுகளுக்கும் இடையிலான பண்பாட்டு மற்றும் மொழி ஒற்றுமைகளை ஆராய்ந்து, தமிழர்களின் இடம்பெயர்வுகளால் இந்த ஒற்றுமைகள் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்.

 

தமிழர் தோற்றமும் பரவலும்

 

ORIGIN AND SPREAD OF THE TAMILS

மூலம்

பேராசிரியர் வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர்

தமிழாக்கம்

புலவர் கா. கோவிந்தன் எம்.ஏ.

 

பதிப்புரை

மாந்தனின் பிறப்பிடம் தொல் பழந்தமிழகமே என்ற கருத்தை அண்மைக் காலத்தில் பெரிதும் வலியுறுத்தி வந்தவர் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் ஆவர். அவர் பெரிதும் போற்றியவர்களுள் ஒருவர் பேராசிரியர் வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர். அதிலும் குறிப்பாக, தமிழரின் தோற்றமும் பரவலும் என்ற இந்த நூலை எழுதியமைக்காகவே பாவாணர் அவரைப் பெரிதும் போற்றினார்.

தமிழர் எங்குத் தோன்றினர் என்பது பல்லாண்டுகளாக விடை காண முடியாத வினாவாகவே உள்ளது. தமிழகத்தின் தென் பகுதியில் ஆழ்ந்து போன குமரிக் கண்டத்தில் தோன்றினர் என்பர் சிலர். அவ்வாறன்றி மைய ஆசியக் கண்டத்தில் தோன்றித் தமிழகத்தில் குடிபோனவர் என்பாரும் உளர். இந்த ஆய்வுக்கு இன்னும் சரியான விடை காண இயலவில்லை. குமரிக் கண்டம் என்ற ஒன்று இருந்ததேயில்லை என்பர் சிலர். ஆனால் அண்மையில் கடலில் ஆழ்வகழ்வாய்வு செய்த சோவியத் நிலவியலறிஞர்கள் குமரிமுனையில் நிலப்பரப்பு நீரில் ஆழ்ந்ததற்குச் சான்றுகள் உள்ளன என்று கண்டறிந்துள்ளனர். தொல் ஊழிக் காலத்தில் ஆஸ்திரேலியா, இந்தியாவின் தென்பகுதி, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் ஒன்றாக இணைந்திருந்தன என்ற கருத்து அண்மையில் ஆய்வுவழி வலுப்பெற்று வருகிறது.

எது எவ்வாறிருப்பினும் இத்தகைய ஆய்வுகளுக்குத் துண்டுகோலாகப் பேராசிரியர் இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய  இந்நூல் அமைந்துள்ளது. எனவே இதனைத் தமிழாக்கம் செய்து வெளியிட எண்ணினோம்.

மூல நூலின் உரிமையாளரான திருமதி, ராஜம் சீனிவாசன் அவர்களை அணுகினோம். அன்புடன் இசைவளித்தார்கள். இதனைத் தமிழாக்க வல்லார் யாரென்று எண்ணிப் பார்த்ததில் ஆங்கிலமும் தமிழும் கற்று வல்லாராகிய சட்டமன்ற முன்னாள் தலைவர் புலவர் கா.கோவிந்தன் எம்.ஏ. அவர்களே தக்கார் என்பதைக் கண்டுணர்ந்து அவரையணுகி இதனை உருவாக்கினோம், இடையில் சில ஆண்டுகள் நூலெதுவும் இயற்றாமலிருந்த புலவர் அவர்கள் பி.டி. சீனிவாச அய்யங்காரின் தமிழர் வரலாற்று நூலை மொழிபெயர்த்துத் தரக் கழகம் மகிழ்வுடன் வெளியிட்டது. அதன் தொடர் பணியாகவே இந்நூல் பணியும் தொடங்கியது. இடையில் பி.டி. சீனிவாச அய்யங்காரின் ‘ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு’ என்ற நூலையும் (Pre-Aryan Tamil Culture) தமிழாக்கம் செய்து தந்துள்ளார்கள். அந்நூலும் விரைவில் வெளிவரும். நற்பணியைத் தொடர்ந்தாற்றி வரும் புலவர் அவர்களைக் காலனின் கொடுங்கரங்கள் நம்மிடமிருந்து பறித்துச் சென்றுவிட்டன. 75-வயது கடந்த நிலையிலும் தமிழ்ப் பணியாற்றி வந்த புலவர் அவர்கள் இந்நூல் அச்சிட்டு முடியும் நிலையில் நம்மிடமிருந்து பிரிந்து விட்டார்கள். அவர்கள் நினைவை என்றென்றும் போற்றிப் புகழும் நிலையில் இந்நூல் அமையும். இதனைத் தமிழன்பர்கள் படித்துப் பயன் பெறுவார்களாக.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்

 

ஆசிரியர் முன்னுரை

 

தொடர்ந்து வரும் பக்கங்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தின், சங்கர பார்வதி அறக்கட்டளை சார்பில், 1940-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 29, 30 நாட்களில் ஆற்றிய தொடர் சொற்பொழிவுகளை எடுத்துரைக்கின்றன.

இச்சொற்பொழிவுகளில், திராவிடர்களின் தோற்றம், அவர்களின் பண்பாடு ஆகியன குறித்து மேனாடு மற்றும் இந்திய நாட்டு அறிஞர்களிடையே உறுதிபட நிலவும் கருத்துக்களை ஆய்வதற்கும், திராவிடப் பண்பாடு எனப் பொதுவாக உணரப்படுவதும், தமக்குத்தாமே, தம்மளவிலான, அப்பண்பாட்டை உருவாக்கிய தமிழர், அம்மண்ணுக்கே உரிய தொல் பழங்குடியினர் என்பதை உணர்த்துவதற்கும், ஒரு பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தமிழர்கள் தங்கள் பண்பாட்டை மேற்கைப் போலவே, கிழக்கிலும் உள்ள தங்களின் பின்வரும் கால்வழியினர் கையில் கொடுத்தனர். இவ்வகையில், தொல் பழங்காலத்தில், இக்காலத்திலும், அவர்கள் பங்கு, தமக்கே உரிய தனித்தன்மை வாய்ந்தது; கருத்தைக் கவரத்தக்கது. உள்ளத்தில் ஆழ்ந்து பதியத் தக்கது சொற்பொழிவுகளின் பின் இணைத்திருக்கும் குறிப்புகள், ஆசிரியர் கூறுவன பற்றிய தீர்ப்பைப் படிப்பவர்கள் அளிக்கத் துணை செய்யவல்லன.

இச்சொற்பொழிவுகளை ஆற்ற என்னை அழைத்தமைக்கும், அவற்றை அச்சிட்டுக்கொள்ள அனுமதித்தமைக்கும், சென்னைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவினர்க்கு நான் நன்றி செலுத்த வேண்டும்.

இந்நூலை அடையாறு நூல்நிலைய வரிசையில் இணைத்துக் கொண்டமைக்குத் திருவாளர் டாக்டர். ஜி. சீனிவாச மூர்த்தி அவர்களுக்கும், அந்நூல்நிலைய ஊதியம் பெறா இயக்குநர் காப்டன் வைப்யரத்தினம் அவர்களுக்கும் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். இச்சொற்பொழிவுகளின் தட்டச்சுப் படியைக் கூர்ந்து படித்தமைக்குத் திருவாளர் ராவ்பகதூர் கே. வி. அரங்கசாமி அய்யங்கார் அவர்களுக்கும் குறிப்புகளைத் தொகுத்தளித்து உதவியமைக்குத் திருவாளர் திவான்பகதுர் சி.எஸ். சீனிவாஸாச்சாரி அவர்களுக்கும் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். அச்சாகும் நிலையில் பிழைதிருத்தியும் பொருள் அடக்க அட்டவணையைக் கொடுத்தும் நூலை விரைந்து அச்சிடச் செய்த அடையாறு நூல் நிலையத்தைச் சேர்ந்த திரு. ஏ. எஸ். கிருஷ்ண அய்யங்கார் அவர்களுக்கும் என் நன்றியைப் பதிவு செய்கின்றேன். வசந்தா அச்சகத்தாரால் அழகாகவும், விரைந்தும் இந்நூல் அச்சிடப்பட்டமை அதன் மேலாளர் திரு. சி. சுப்பராயுடு அவர்களுக்குப் பெரிய நன்றிக் கடனாற்ற என்னை வைத்துவிட்டது.

 

வீ.ஆர். ராமச்சந்திர தீக்ஷிதர்

சென்னை

1-5-1947

 

 

 

 

முன்னுரை

திருவாளர் டாக்டர். கே.ஆர்.அனுமந்தன் அவர்கள்

 

சென்னைப் பல்கலைக்கழக முதுபெரும் ஆராய்ச்சிப் பேரறிஞர் உயர்திரு. டாக்டர் வி.ஆர். இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்களின் சொற்பொழிவுகளின் மொழிபெயர்ப்பிற்கு ஒரு முன்னுரை எழுத நான் கேட்டுக் கொள்ளப்பட்டதை மிகப்பெரிய பெரும் பேறாக மதிக்கின்றேன். “தமிழ் இலக்கியம், மற்றும் வரலாறு பற்றிய ஆய்வு” (Studies in Tamil Literature and History), “சிலப்பதிகாரம்”, “மத்சயபுராணம்” போலும் பொருள் செறிந்த நூல்கள் மூலம், தமிழ்நாட்டு மக்கள், மற்றும் தென்னிந்திய வரலாற்றுப் பேராசிரியர்கள் உள்ளத்தில் மதிக்கத்தக்க இடத்தைப் பெற்றிருக்கும், திருவாளர் தீக்ஷிதர் அவர்களுக்குத் தனியே அறிமுகம் எதுவும் தேவை இல்லை. தமிழ்மொழி பற்றிய ஆய்வினை, அது, இன்னமும் குழந்தைப் பருவ நிலையில் இருக்கும் போதே, அன்போடு பேணி வளர்த்த முன்னோடிகளில், இவரும் ஒருவர் என்பது நன்கு தெரிந்த உண்மை.
இப்புத்தக வடிவில், மறுவலும் வெளியிடப்படும் இவ்விரு சொற்பொழிவுகளில், வரலாற்றுப் பேராசிரியர்களை, இன்று வரையும் குழப்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருப்பதான, திராவிடர் தோற்றம் குறித்த புரியா புதிரைப் புரிய வைக்க முயன்றுள்ளார். இச்சொற்பொழிவுகள் நெடுகிலும், திராவிடர் அல்லது அவர் முதலிடம் தரும் இருபெயராம் பழந்தமிழர் என்பார். இம்மண்ணுக்குரியவராவர் என்ற கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்துள்ளார். தம் கருத்தை உறுதிசெய்ய, அவர் தொல்பொருள் ஆய்வு, மற்றும் மொழி இயல் துறைகளில் தமக்குள்ள ஆழ்ந்த பெரும்புலமையை ஒன்று திரட்டிக்கொண்டு வந்துள்ளார். திராவிடர் வெளிநாட்டவராவர் என்ற கொள்கை பற்றியும், ஆய்வும், புத்தாய்வும் செய்துள்ளார். அவ்வாறு செய்யும் நிலையில் திருவாளர்கள் பி.டி. சீனிவாச அய்யங்கார், மற்றும் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை போலும் சிறந்த அறிஞர்களோடு கைகோத்தும் சென்றுள்ளார்.

“திராவிடம்”, தொல்பழந்தமிழரின் தாயகம்: ஐரோப்பிய-ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையில் உள்ளதான நடுநிலக்கடல் பகுதி மக்கள் எனப்படுபவர். சிந்து கங்கை நிலப்பகுதி முழுமையாக உருவாகாத காலத்திலேயே, தென்னிந்தியாவையும், ஆப்பிரிக்காவையும் இணைத்திருந்து, கடலுள் ஆழ்ந்து போன ஒரு பெருநிலப்பரப்பின் ஒரு பிரிவாக இருந்ததும், திராவிடர்களின் தாயகமானதுமான, இந்திய தீபகற்பத்தையே தாயகமாகக் கொண்டிருந்தனர் என வாதிட்டு நிலை நாட்டுகிறார். உண்மையில், இது ஒரு துணிவான முடிவுதான். தென் ஆப்பிரிக்கா, தென்இந்தியா, தென்அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அனைத்தும் லெமூரியா என்ற பெயருடைய பெரிய நிலப்பரப்பின் பகுதிகளாம்; உலகின் நனிமிகப் பழமை வாய்ந்தன; நிலஇயல் விளைவாக, வேறு வேறாக ஒதுக்கப்பட்டன என்ற கருத்தைச் சில நிலநூல் ஆய்வாளர் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், மண்ணில் மனித இனம் இருந்தமைக்கான அறிகுறி எதுவும் காணக் கூடாத ஐம்பது நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அத்தகைய நிலமாற்றம் நிகழ்ந்தது என உறுதிப்படுத்துகின்றனர். மாய்ந்து போன தமிழர்களின் பழைய எலும்புக்கூடுகளைக் காட்டிலும், நனிமிகப் பழமை வாய்ந்த மனித எலும்புக்கூடுகள், கிழங்(க்)கு ஆப்பிரிக்காவிலும், பெர்டிலெ க்ரெசென்ட், (Fertile Crescent) நிலப் பகுதியிலும் காணப்படுகின்றன என்பதைத் திருவாளர் “லீக்கெயய்” (Leakyey) மற்றும் வேறு சிலரின் தொல்பழங்கால ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. சீன நாட்டு பீகிங் நகரத்து மனிதன் மற்றும் ஜாவா நாட்டு மனிதன் ஆகியோர், தமிழர்களைக் காட்டிலும் தொல்பழங்காலத்தவர் என மனித இன நூல் ஆய்வாளர், ஆய்ந்து நிலை நாட்டியுள்ளனர். நிலைமைகள் இதுவாக, இந்தியாவில் கி.மு. 3250க்கு முற்பட்ட முதிர்ந்த பண்பாடு இருந்தமைக்கான அகச்சான்று எதுவும் இல்லை. ஆனால், “பெர்டிலெக்ரெசென்ட்” நிலப்பகுதி கலைகளும், அறிவியல்களும், ஒப்புக் காண மாட்டா உயர்வினைக் கி.மு. 3000 ஆண்டளவிலேயே அடைந்துள்ளன. பின்லாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் சிலர் மட்டுமே, சிந்து வெளிப்பண்பாட்டினைத் தமிழர் பண்பாட்டினோடு ஒருமை காண முயன்றுள்ளனர். தமிழரின் தொல் பழமையை நிலைநாட்டவல்ல, மனித இன ஆய்வுகள் மேலும் மேலும் நடைபெற வேண்டியுளது. உண்மையில், திருவாளர் தீக்ஷிதர் அவர்கள் அதுபோலும் அகவாழ்வு ஆய்வுகள் நடைபெற வேண்டும் என வாதாடியுள்ளார். அதற்கிடையில், கிடைத்துள்ள அகவாழ்வு ஆராய்ச்சிகளும் மொழியியல் உண்மைகளும் அளிக்கும் சான்றுகளிலிருந்து, துணிவான சில முடிவுகளைச் செய்துள்ளார்.

நடுநிலக்கடல் நாடுகள், மற்றும் தென்னிந்தியா இவற்றைச் சேர்ந்த மொழிகள், நாகவழிபாடு, இலிங்க வழிபாடு, தாய்வழி உறவு, மற்றும் தேவதாசி முறைபோலும் சமுதாய அமைப்புகள் இவற்றிற்கிடையேயான ஒருமைப்பாடு, திராவிடர்கள், அந்நாடுகளிலிருந்து இங்குக் குடிவந்தனர் என்பதைக் காட்டிலும், தமிழர்கள் அந்நாடுகளுக்குக் குடிபெயர்ந்தனர் என்பதன் விளைவே என ஆய்ந்து முடிவு செய்துள்ளார். திருவாளர்கள், டாக்டர் லஹோவரி, பேராசிரியர் டி.பி. பாலகிருஷ்ண நாயர், டாக்டர் ஐ.டி. கார்னெலியஸ் மற்றும் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் போன்ற வரலாற்றுப் பேராசிரியர்களால், இதே வாதம் நடுநிலக்கடல் நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர் திராவிடர் என்பதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏர் கொண்டு உழுதலும், வரப்பு கட்டிப் பயிரிடுதலும் முதன் முதலில், மெசபடோமியாவிலும், பாலஸ்தீனத்திலும்தான், மேற்கொள்ளப்பட்டு பின்னர், அவர்களால் தென்னிந்தியாவில் புகுத்தப்பட்டது என்பது அவ் வரலாற்று ஆசிரியர்கள் கருத்து. திருவாளர் டாக்டர் ஸ்பீச் அவர்கள் கூற்று, திராவிடர்கள் மேற்கு ஆசியாவிலிருந்து அலை அலையாக வந்து, தென்னிந்தியாவில் இறந்தார் உடலை அடக்கம் செய்யும் பாரக்கல் நினைவுச்சின்னப் பண்பாட்டினை உருவாக்கினர் என்பது, திருவாளர் “ஹைமென்தார்ப்” (Huimendarf) அவர்கள் கூற்று, திராவிடர்தாம், தொல்பழங்கால பாரக்கல் நினைவுச் சின்னங்களை எழுப்பியவர், தென்னிந்தியாவிலேயே வாழ்ந்தவர் என்பது லெமூரியாக் கண்டம் என்ற கொள்கையும், திராவிடர்தாம் இம்மண்ணுக்குரிய மக்களாவர் என்ற கொள்கையும், இயற்கைக்கும் பகுத்தறிவுக்கும் பொருந்தாதன அறிவொடு படாதன எனக் கருதுகின்றனர். திருவாளர்கள், டாக்டர் ஐ.டி. கார்னெலியஸ், மற்றும் பேராசிரியர் நீலகண்டசாஸ்திரியார் ஆகியோர். ஆனால், பின்லாந்து நாட்டு வரலாற்றுப் பேராசிரியர்களின் அண்மைக்கால ஆய்வுகள் தந்த விளக்கத்தில், திராவிடரின் தோற்றம் பற்றிய ஆய்வு புதிய நிலையை அடைந்துளது. திருவாளர் தீக்ஷிதர் அவர்களின் இக்கருத்து, இத்துறையில், புதிய ஆய்வுகளைத் தாண்டி விளக்க முடியாத இப்புதிர் மீது மேலும் விளக்க வொளியினை உறுதியாக வீசும். ஆரியர் திராவிடர் என்பன போலும் இனம் எதுவும் இல்லை; இந்தியா மீது ஆரியப்படையெடுப்போ, திராவிடர் படையெடுப்போ இல்லை; பழங்கற்காலப் பண்பாட்டிலிருந்து புதிய கற்காலப் பண்பாட்டிற்கும், புதிய கற்காலப் பண்பாட்டிலிருந்து, பாரக்கல் நினைவுச்சின்னப் பண்பாட்டிற்கும் பாரக்கல் நினைவுச்சின்னப் பண்பாட்டிலிருந்து இரும்பு காலப் பண்பாட்டிற்குமாக, தொடர்ந்த இந்தியப் பண்பாட்டு வளர்ச்சி நிலை இருந்தது என்ற அவர் கொள்கை, ஆய்வறிவுக்குப் புத்துணர்வு ஊட்டவல்லது; இந்திய ஒருமைப்பாட்டை வளர்க்கக் கூடியது.

தமிழகத்தில், தமிழ்ப் பண்பாட்டு நிலையில், கலை, இலக்கிய மறுமலர்ச்சி ஒன்று இப்போது எழுந்துளது. தமிழ் ஆராய்ச்சிக்குப் புதிய புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வெளியீடு தொடர்ந்து மேற்கொள்ள இருக்கும் ஆராய்ச்சி உணர்வை, ஐயத்திற்கு இடனின்றிக்(த்) தூண்டும். தமிழக அரசு, ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கும், தமிழக வரலாறு எழுதும் பணிக்குத் துணைசெய்யும். இந்நூலை வெளியிட முன்வந்த புகழ்மிகு முயற்சிக்குச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தவர், நன்றிப் பெருக்கோடு பாராட்டத்தக்கவர். வரலாற்றுத் துறை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறவேண்டிய ஊக்கத்தைப் பெறத் தகுதி வாய்ந்தது இந்நூல்.

 

 

 

 

 

தமிழர் தோற்றமும் பரவலும்

முதல் சொற்பொழிவு

பழந்தமிழ் நாகரீகத்தின் வரலாற்று ஆசிரியர்கள்

 

வரலாற்றினும், நில இயல் அறிவு நூல், நனிமிக முந்தியது எனச் சொல்லப்படுகிறது. நிலநூல் ஆசிரியர்களின் கருத்துப்படி, தென்னிந்தியா, மற்றும் இலங்கையின் பழமை, நிலஇயல் அறிவின் தொடக்க காலத்துக்கே கொண்டு செல்கிறது. ஏழ(ற)த்தாழ 4500 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி, 500 கோடி ஆண்டுகளுக்கு முன் வரையான ‘முந்தைக் கேம்பிரியன்’ என்ற நிலஇயல் ஊழிக்காலத்திற்கும் (Pre cambrain Era), 240 கோடி முதல் 65 கோடி ஆண்டு வரையான ‘மெலோ ஸோயிக்’ என்ற இடைப்பேருழி ஊழிக்காலத்திற்கும் (Mesozoic Era) இடைப்பட்ட காலமாம் பலேயோஸோயிக் (Palaeozoic) தொல்பேரூழி என்ற ஊழிக் காலத்திலிருந்தபடி மூன்றுபக்கங்களிலும் கடலால் சூழப்பெற்ற இந்தியத் தீபகற்பம் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் நடுவிடமான ஆஸ்திரேலியா முதல், தென் அமெரிக்கா வரையான கோண்டவனம் என்ற பெருநிலப் பரப்பு இருந்தது. மெலோஸோயிக் ஊழியின் இறுதிக் காலத்தே, கோண்டவனம் என்ற இப்பெருநிலப்பரப்பு உடைந்துவிட்டது. பெரும்பகுதி கடலுக்குள் சென்றுவிட்டது. ஆஸ்திரேலியா இந்தியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா முதலாயின தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. ஆனால், இந்தியாவும்,  ஆப்பிரிக்காவும் மட்டும் அக்காலகட்டத்திலும் பிரிவுறாமல், பெருங்கற் பாறையாம் பாலத்தால் இணைந்திருந்தன. அவ்வாறு இணைந்திருந்த அப்பகுதிக்கு “லெமூரியா” என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. மெஸோஸோயிக் ஊழிப்பருவத்தைச் சேர்ந்த 200 முதல் 150 கோடி ஆண்டுகள் வரையான “ஜுராஸிக் (Jurassic) என்ற வரலாற்றுக் கால கட்டத்தில், தென் அமெரிக்காவில் வடகிழக்கில் உள்ள பிரேஸின் நாட்டில் உள்ள ஜலுரா என்ற மலையில் பாறை தோன்றிய காலம் இந்தியத் தீபகற்பத்தின் கீழ்ப்பால் பகுதி கடலுள் மூழ்கிவிட, வங்காள விரிகுடாவின் தோற்றத்திற்கு வழிவகுத்து விட்டது. (சொற்பொழிவின் ஈற்றில் உள்ள குறிப்பு:1 காண்க). பனிக்கட்டி காலமாம் ‘கிலேசியல்’ (Glacial) ஊழியின் இறுதியில் தாழ் நிலையில் இருந்த கடல்மட்டம் பனிப்பாறைகள் உருகியதால் மீண்டும் உயர்ந்து நனிமிகப் பரந்த கடல் நீரடிப்பாறை உருவாகும் நிலைக்கு வழிவகுத்தது. இக்காலகட்டத்தில்தான் சுமத்திரா, ஜாவா மற்றும் போர்னியோ போலும் கிழக்கிந்திய நாடுகள் பிரிவுண்டு தனித்தனி நாடுகள் ஆயின. இந்நிலஇயல் நிகழ்ச்சி. வேதம், இதிகாசம், புராணங்களில் பெரும்பிரளயங்களாக, அதாவது கடல்கோள்களாக விளக்கப்பட்டுள்ளன. இப்பேரழிவு நடைபெற்ற காலத்தில் வாழ்ந்திருந்த மனுவே, மனித இனத்தின் தந்தை ஆனார்.

பாகவத புராணக் கணக்குப்படி, மலய மலையை நடுவிடமாகக் கொண்ட திராவிட தேசத்தின் நடுப்பகுதி, இப்பேரழிவிலிருந்து பிழைத்து நிலை கொண்டு விட்டது. திருமாலின் (சமஸ்கிருத விஷ்ணுவின்) முதல் அவதாரம் எனக் கருதப்படுவதாய ஒரு மீன், கடல்நீரில் மூழ்கிவிடுவதினின்றும் தன்னைக் காப்பாற்றிவிடுமாறு மனுவுக்கு, அருகில் ஒரு படகைக் காண்பித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், தென்னிந்திய அரசர்களாகிய பாண்டியரின் அரசச் சின்னம் மீன் என்பது, ஈண்டுக்  குறிப்பிடத்தக்கது. கடல் கோள்களைச் சார்ந்த கற்பனைக் கவிதைகள் இந்நாட்டிற்குப் புதியன அல்ல. (அடிக்குறிப்பு-2 காண்க) பண்டை உலகத்தின் மற்ற நாடுகளைப் பற்றிக் கூறத் தேவையில்லா நிலையில், ஈப்ரு பாபிலோனியா மற்றும் சுமேரியா நாடுகளில், இதுபோலும் கற்பனைக் கூற்றுக்கள் உள்ளன. நிலஇயல் நூல் அறிவு ஐயத்திற்கு இடம் இன்றி ஆராயப்பட வேண்டியவை ஆதலின், இதுபோலும் கற்பனைகளை ஒட்டு மொத்தமாகத் தள்ளிவிடாமல், அவையும் சில வரலாற்று மரபின் அடிப்படையில் எழுந்தன என்றே கொள்ளுதல் வேண்டும். வேறோர் இடத்தில் பாபிலோனியக் கற்பனைகளுக்கும், இந்தியக் கற்பனைகளுக்கும் இடையில் பொருந்தத்தக்க ஒற்றுமை இருப்பதைக் குறிப்பிட்டுள்ளேன். கடல்கோள் குறித்து மெசபடோமியக் கற்பனைக் கதை ‘மீன்’, ‘நீர்’ ஆகிய இரு சொற்களை அழிவுறாமல் பெற்றுள்ளது என்பது வியப்பிற்கு உரியது (Census of India 1931 page 366) (அடிக்குறிப்பு 3 காண்க.)

நிலநூல் சான்றுப்படி, நனிமிகப் பழங்காலப்பாறைகள், அவை தக்கிண மலைச் சரிவுகளாயினும், அல்லது, தென்னாட்டுப் படிக்கல் பாறைகளாயினும், உலக அரங்கில், நனிமிகப் பழங்காலத்தே தோன்றிய நிலப்பரப்பாகிய இந்தியத் தீபகற்பத்தில் காணப்படுகின்றன. நீலகிரி, பழநி, ஆனைமலை ஆகிய மலைகள் தொல்லூழிக் காலத்தைச் சேர்ந்தனவாகக் கருதப்படுகின்றன. தென் இந்தியப் பழங்கற்கால (Paleolithic) மனிதன், காடுகளில் வாழவில்லை; மாறாக மலைநாட்டுச் சமவெளிகளிலேயே வாழ்ந்தான் என்பது வல்லுநர்கள் கருத்து (குறிப்பு 4 காண்க.) அவன் மற்ற நாட்டுப் பழங்கற்கால மனிதனைப்போல, அறவே காட்டுமிராண்டி அல்லன். ஆகவே, தென் இந்தியர், பழங்கால மனிதனுக்கும் முற்பட்ட நனிமிகப் பழங்கால அம்மண்ணுக்கே உரிய மக்களைக் கொண்டதாதல் வேண்டும். பின்வரும்  பகுதிகளில் நான் காட்ட இருக்குமாறு, இவர்கள் மண்ணோடு பிறந்த தொல்முது குடிமக்களின் வேறு வகையாகக் காட்டவல்ல, ஐயத்தொடுபட்ட சிறு மரபுச்சான்றுதானும் இல்லா மூதாதையர் ஆவர்.

வடஇந்தியா மற்றும் மத்தியதரைக்கடற்பகுதி மூதாதையர்கள், இன்று நிலைத்த குடியினராய் வாழும் உலகின் பல்வேறு பகுதிகளுக்குக் கடந்து செல்லும் இடைவழியாகத் தென்இந்தியா அமைந்திருந்தமையே, தென் இந்தியாவுக்கும், மத்திய தரைக்கடற்பகுதிக்கும் இடையில் நிலவும், மனித இனம் மற்றும் பிறவகையான ஒருமைப்பாடுகள் உண்மைக்குக் காரணமாம். (டாக்டர் இ. மக்லியன். Dr. B. Maclean) வட அமெரிக்க இந்தியர்களும், எகிப்தியப் பழங்குடியினரும் தாங்கள் நாடு விட்டு நாடு வந்தவர். அதாவது வந்தேறியவர்கள் என்ற மரபினைக் கொண்டுள்ளனர் என்பதும், திருவாளர் ஈரென் (Heeren) அவர்கள், எகிப்திய நாகரீகத்துக்கு இந்திய மூலத்தை அடிப்படையாகக் கொள்வதற்கு, எகிப்திய மண்டை ஓட்டினை அடிப்படைச் சான்றாகக் கொள்வதும் வியப்பிற்கு உரியவாம். எகிப்தியரின் தொடக்ககால வாழிடமும், ஆப்பிரிக்காவின் வடகிழக்குக் கடற்பகுதியும் ஆகிய “புன்ட்” (Punt) என்ற பகுதி மலபார் கடற்கரையோடு கூடிய, பாண்டியர் நாடாம் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. ஆனால், இதை உறுதி செய்ய, நல்ல வலுவான அகச்சான்றுகள் மேலும் தேவை (அடிக்குறிப்பு : 5: காண்க.)

பண்டைத் தமிழரின் தோற்றம் குறித்த ஆய்வுக் களத்தில், போதுமான எண்ணிக்கை உள்ள கொள்கைகள் இருக்கின்றன. அவற்றுள் நனிமிக இன்றி அமையாதன சில பற்றி ஆய்வு செய்ய நான் முன்வருகின்றேன். திராவிடர்கள், தென்னிந்தியாவுக்கு வந்து குடியேறியவர்கள் என்ற கொள்கை வலுவான  அடிப்படையைக் கொண்டிருப்பதாகவும், அதுவே முடிந்த முடிவாகி விட்டதாகவும் தோன்றுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் மராட்டி மொழி பேசும், தென்னிந்தியப் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும், பண்டைத்திராவிடரின் வழிவந்தவர் என்ற கோட்பாடு மேற்கொள்ளப்பட்டது. இனம் பற்றிய கண்ணோட்டத்தில், பொதுவாகப் “பஞ்சமர்” (இப்போது அரிசனங்கள், என்ற பெயரால் அழைக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்கள்) ஆதிதிராவிடர்களாகப் பெயர் சூட்டப்படும்போது, பிராமணர்கள், ஆரிய இனத்தவராகக் கருதப்பட்டனர். அவ்வாறு கொள்வதால் ஆம் உய்த்துணர்வு, திராவிடர்கள், தென்னிந்தியாவுள் நுழைந்து பெருமளவில் நிலைத்த குடியினராய் வாழத் தொடங்குவதன் முன்னர், காடுகளில் வாழ்ந்தவரும், நாகரிகம் அற்றவரும், படையெடுத்து வந்தவர்களால் வென்று அடிமை கொள்ளப்பட்டவரும் ஆன அந்நாட்டுப் பழங்குடியினர், ஆதித்திராவிடர்கள் என அழைக்கப் பெற்றனர். திராவிடர்களைப் போலவே, ஆரியர்களும், இந்தியப் பெருநாட்டிற்குப் படையெடுத்து வந்தவர்கள் என்ற கொள்கை, பொதுவாக இன்று நிலவுகிறது. இந்த நாட்டிற்கு ஆரியர்கள் படையெடுத்து வந்ததற்கு நனிமிக நீண்ட காலத்துக்கு முன்னரே, திராவிடர் படையெடுத்து வந்தனர் என்ற கொள்கையும் மேற்கொள்ளப்பட்டுளது. இக்கோட்பாட்டிற்கு ஆதரவாக வேத இலக்கியங்களில், குறிப்பாக, ரிக்வேத சமிதாக்களில் குறிப்பிடப்படும் தஸ்யூக்கள் மற்றும் தாஸர்கள், படையெடுத்து வந்த ஆரியப் பெருங்கூட்டத்தால், வெற்றி கொள்ளப்பட்டு, அடிமைகளாக மாற்றப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. இது பற்றி, நாம் பின்னர் ஆராய்வாம். இதற்கு ஆதரவாகக் கூறப்படும் சான்றுகள் போதுமானவை அல்ல; முடிந்த முடிவாக ஏற்றுக்கொள்ளத்தக்கன அல்ல எனக் கூறுவது, இப்போது போதும்.  இது, திராவிடர்கள் யார் என்ற வினாவிற்கு விடைகாண நம்மைத் தூண்டுகிறது. இதிலும், வரலாற்றுப் பேரறிஞர்களிடையே ஒத்த கருத்து இல்லை. ஆரியப் படையெடுப்பின்போது இந்தியாவில், நனிமிக வளர்ச்சி பெற்ற, ஒழுக்கம் நிறை திராவிட நாகரீகம், நிலை கொண்டு இருந்தது; திராவிடர் என்பார், மத்திய தரைக்கடல் இனத்தவரின் ஒரு பிரிவினர்; என்பனவே நடைமுறையில் இருந்த கொள்கைகளாம். இவற்றின் விளைவாகத் திராவிட நாகரீகம் வெளியிலிருந்து பெறப்பட்டதாக உரிமை கொண்டாடப்பட்டது. எகிப்து மற்றும் மெசபடோமிய நாகரீகத்தோடு தொடர்புபடுத்தப்பட்டது (குறிப்பு: 7 காண்க.).

இனம் சார்ந்த அடிப்படை உறுதி செய்யப்படும் போது, உடல் சார்ந்த தனிச்சிறப்பு கணக்கிடப்படுகிறது. ஆதிச்சநல்லூர், பலுஜிஸ்தானத்தில் உள்ள “நல்” என்ற ஊர், மற்றும் மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் அகழ்ந்து எடுக்கப்பட்டவையிலிருந்து வரலாற்றுக்கு முந்தைய மண்டை ஓட்டு அறிவு, ஆராயப்படலாம். ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மண்டை ஓட்டுத் தன்மையவான, மொகஞ்சதாரோ மண்டை ஓடுகள், பாபிலோனுக்கு அணித்தாக உள்ள “கிஷ்” (ஓடிண்ட) என்ற நகரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டனவும், ஆதிச்ச நல்லூரியிலிருந்து எடுக்கப்பட்டனவும், இன்றைய வெட்டர் (Veddahs)களுடையவுமான, மண்டை ஓடுகளின் இனமாம் என்பது, முடிவு செய்யப்பட்ட ஒன்று. திருவாளர் எல்லியோட் சிமித் (Elliot Smith) அவர்கள் முடிவுப்படி, ஆதிச்சநல்லூர் மண்டை ஓடுகள், பண்டைய எகிப்திய இன மண்டை ஓடுகளிலிருந்து வேறு பிரித்துக் காணக்கூடாதனவாம். இந்தியத் தீபகற்பத்தின் தொல்லூழிகாலப் பழங்குடியினர், இனவகையில், நீக்கிரோ இனத்தவர். தென்னிந்தியக் காடுகளில் வாழும் காடவர், மற்றும் இருளர் இன இரத்தத் தொடர்புடையவர். மக்கள் நாகரீக  வளர்ச்சியில் அவர்கள் பங்கு, பெரும்பாலும் வில்லும், அம்பும். அவர்கள் வழிபாட்டு நெறி, முதிர்ந்த வழிபாட்டு நெறியாம் மரவழிபாடாம். அவர்கள் ஆஸ்திரேலிய ஆதிமுன்னோரால் இடமாற்றம் செய்யப்பெற்றனர் (குறிப்பு: 8 காண்க). களிமண் கலங்களை வாழ்க்கையில் மேற்கோடல், நாகரீக வளர்ச்சியில் அவர்கள் பங்காகக் கருதப்படுகிறது. நாகரீக வளர்ச்சியில் அவர்கள் பங்காகக் கருதப்படுகிறது. தாக்கிவிட்டுத் திரும்பும் வளைதடி, கணை, குண்டு ஆகியவைகளை விசைத்து எறியும் ஊதுகுழல், இனமரபுச்சின்னம் அணிதல், ஆகியவை அவர்கள் உடையவாகக் கருதப்படுகின்றன. அடுத்து வந்தது, மத்தியதரைக்கடல் மனித இனம். இந்தியமக்களின், குறிப்பாகத் தென் இந்திய மக்களின் உடல் அமைப்பிற்கும், தென்னிந்திய நாகரீக முதிர்ச்சிக்கும் பெரும் பொறுப்பு, இவ்வருகையே. உழவுக் கலையும், கடல் கடக்கும் கலையும் அவர்களோடு வந்தன. இது மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதியிலிருந்தது. அவர்களோடு, அர்மீனிய இனத்தவர் கலந்துவிட்டனர். திருவாளர் தர்ஸ்டன் (Thurstorn) அவர்கள் கருத்துப்படி, அர்மீனியர்க்கே உரிய மண்டை ஓடு, தென்இந்திய இந்தியரின் மண்டை ஓடு போல் உளது (Castes and Tribes of South India Vol. 1) மத்தியதரைக்கடல் இன இயல்பும், அர்மீனிய நாட்டு இன இயல்பும் கலந்த இக்கலவை, தமிழர்களிடை, குறிப்பிடத்தக்க அளவில் காணக்கூடியதாம். கடைசியாக எழுதிய திரு. டாக்டர் குகா அவர்கள் (Dr. Guha) தெலுங்கு மொழியை, மத்தியதரைக்கடல் மொழியோடு இனம்கண்டு, குறுகிய தலையுடைமை கலப்பு, தமிழ்நாடு வரையே பரவியுளது. ஆந்திரதேசம் வரை அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

சற்றும் சோர்வுற்றுப் போகாத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால், சிந்துவெளிப் பள்ளத்தாக்கின்  கண்டுபிடிப்புக்கள், வெளிக்கொணரப்படாதிருந்திருந்தால், மேலே கூறிய கொள்கை மற்றும் அதற்கு இனமான கொள்கை, தெளிவற்ற நிலையிலேயே தொங்கிக்கொண்டிருந்திருக்கும். ஆங்குக் கண்டெடுத்தவற்றை அவற்றிற்குத் தகுதியுடையவாய, மிக்க விழிப்போடும் கருத்தோடும் ஆராய்ந்து பார்த்த, திருவாளர். சர். ஜான் மார்ஷல் (Sir. John Marshal) அவர்கள், சிந்துவெளிக் கண்டு பிடிப்புக்கள், உய்த்துணர வைக்கும் நாகரீகம், திராவிட நாகரீகத்தின் முத்திரையைப் பெற்றுள்ளதாகக் கருதியுள்ளார். இந்நாகரீகத்தின் இயல்பு பற்றி மூவகைக் கருத்துக்கள் உள்ளன. முதலாவது இந்நாகரீகத்தைத் திராவிட நாகரீகமாகக் கொள்ளும் திருவாளர் சர். ஜான் மார்ஷல் அவர்கள் கருத்து. இரண்டாவதாக இதை, இயல்பாலும் கால நீட்சியாலும், ஆரிய நாகரீகமாகக் கொள்ளும் வரலாற்று ஆசிரியர்களும் உள்ளனர். மூன்றாவதாக இந்நாகரிகம் திராவிட நாகரீகமோ, ஆரிய நாகரீகமோ அன்று: ஆனால் இன்றைய ஆய்வு அறிவுப்படி எந்த ஓர் இனம் அல்லது பழங்குடியினராக உறுதிப்படக் கூற இயலாது எனக்கூறும் மூன்றாவது கருத்தாம். இந்நாகரீகம் பெரும்பாலும் வேத காலத்துக்குப் பிற்பட்டது அல்லது சிறப்பு இயல்பால், கிட்டத்தட்ட தமிழர்களுடையது என்ற ஆய்வினை, மொழியியல் வழி உறுதி செய்வதில் உள்ள இயலாமையினை எல்லோரும் உணர்வர். இத்துறையில் அருள் திரு. தந்தையார் ஈராஸ் (Rel. F. Heras) அவர்களின் முயற்சி குறிப்பிடத்தக்கது. சுமேரிய, பாபிலோனியா, மற்றும் எகிப்து ஆகிய மேற்கிற்குச் சென்று பரவிய, பண்டைய நாகரீகத்தின் முதல் பிறப்பிடம். பஞ்சாப் முதல் பர்ஷிய வளைகுடா வரை பிரிந்து கிடக்கும் இடமாகும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதுபற்றிய மொத்தக்கேள்வி, ஐயத்திற்குஇடம் இன்றி, பெரும் குழப்பத்திற்கு உரியது. இன்று நாம் பொருத்தமுற மேற்கொள்ளவேண்டிய ஆய்விலும், பெரிய அளவிலான மறுக்க இயலாத, நுண்ணிய ஆய்வினைத் தேவைப்படுத்துகிறது.

கி.மு. நாலாயிரத்தாண்டில், பழம்பெரும் நாகரீகத்தின் பிறப்பிடமாம், தென் மெசபடோமியாவில் உள்ள சுமர் (Sumer) என்ற பகுதியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட உருவச்சிலைகள், வெட்டு ஓவியங்களின் ஆய்வு, மனித உடல் கூற்று ஆய்வின்படி அவை, தென்னிந்திய மாதிரிகளாம் எனக் காட்டுகிறது. சிந்துவெளிக் கண்டுபிடிப்புகளுக்கு முன்பே, டாக்டர் ஆல் (Dr. Hall) அவர்கள், எந்த ஒரு புதுக்கருத்தை அள்ளி வீசினாரோ, அது பல்வகையாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக ஆகிவிட்டது. சுமேரியர்கள் சிந்துவெளிமக்களே என்பது ஒட்டுமொத்த முடிபாம். அவர்கள், நிலவழியாகவும், கடல்வழியாகவும் பர்ஷ்யாவைக் கடந்து, துருக்கியில் தோன்றிப் பர்ஷிய வளைகுடாவில் சென்று கலக்கும் யூபிரடஸ் (Euphrates) டைகிரிஸ் (Tigris) ஆறுகளின் சமவெளிப் பள்ளத்தாக்கிற்குச் சென்றார்கள். செல்லும் வழியில் தென்மேற்கு ஈரான் நாட்டின் ஒரு பகுதியாகிய ஏலம் (உடூச்ட்) என்ற பழம்பெரும் நாட்டில், நாகரீக விதைகளை விதைத்துச் சென்றனர். சுமேரியர்கள், மற்றும் சிந்துவெளிப் பள்ளத்தாக்கு மக்களின் உடற்கூற்று மாதிரிகள் தென்னிந்திய மாதிரிகளாம் என்றால்-இது மறுக்க முடியாத, முரண்பாடற்ற ஒன்று-சிந்துவெளி மக்கள் சிந்துவெளிப்பள்ளத்தாக்கிலிருந்து திராவிடத்திற்கும், திராவிடர், திராவிட நாட்டிலிருந்து சிந்துவெளிக்கும், மக்கள் குடிபெயர்ச்சி இருத்தமைக்கு எல்லாச் சான்றுகளும் உள்ளன. இந்தக் கருத்து எதிர்பாரா இடத்திலிருந்து உறுதிப்படுத்தும் சான்றினையும் பெற்றுளது. ஒனெஸ் (Oannes) என்னும் மனித மீன், நாகரீகக்கலைகளையும் உடன் கொண்டு பர்ஷீய வளைகுடாவைக் கடந்து, எரிடு (Eridu) போலும் சுமேரிய நகரங்களை அடைந்தது என்ற கற்பனைக் கதை, மேலே கூறிய முடிவுக்கு, மேலும் வலுவூட்டுகிறது. பின்னர்ப் பஞ்சாபி நோக்கிய அலை வீசியிருக்குமாயின், திராவிட-மத்திய தரை இனக்கொள்கை, தோல்வியுற்றுப்போகிறது.

இரண்டாவதாக, திராவிடரின் தோற்றம் அல்லது மூலம் குறித்த மனித இன் ஆய்வியல் கருத்தும் நமக்குக் கிடைத்துளது. திருவாளர் எச்.ரிஸ்சிலி (H. Risley) அவர்கள் கருத்துப்படி திராவிடர்கள் குள்ள வடிவம், கறுத்த தோல், நீண்ட தலை, பரந்த மூக்கு, நீண்ட முன்கைகளை உடையவர். அவர்கள், தொடக்கத்தில் பழங்கால மூல மக்களாக இருந்து, பின்னர், ஆரியர், சாகர், அல்லது சித்தியன், மற்றும் மங்கோலிய இனத்தோடு கலந்துவிட்டனர் (The people of India page :46) திராவிட மக்கள் தொகைக்கு வேறு வேறு பட்ட நால்வகை இனமூலங்கள் அடிப்படைக் கூறுகளைத் தத்தம் பங்காக அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. திராவிட ஆஸ்திரேலியர் இன உறவு, இன்றைய துருக்கி நாட்டில் பண்டு வாழ்ந்திருந்த, சிந்திய மக்கள் திராவிட மக்களுக்கிடையிலான உறவு, திராவிடர் மங்கோலிய மக்களுக்கு இடையிலான உறவு, மற்றும்-திராவிடர் இந்தியப் பெருமலைக்கு அப்பால் உள்ள நாட்டு மக்களுக்கு இடையிலான உறவு, ஆகிய இக்கோட்பாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடாதன; அடிப்படைச் சான்றுகள் அற்றன என்பது, தகுதி வாய்ந்த அத்துறை வல்லுநர்களால் சான்று காட்டி நிலைநாட்டப்பட்டு விட்டன. திருவாளர் குரூக் (W. Crook) அவர்கள் எடுத்துவைத்த, ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர் திராவிடர் என்ற கொள்கையும், மேலே-சொல்லப்பட்டவை போல ஏற்க முடியாத ஒன்று. தமிழர்களை, இன்றைய கிரேக்க நாட்டில் பண்டு வாழ்ந்திருந்த கிரீட்டன் (Cretan) என்ற மக்களில் ஒரு பிரிவினரும், தங்களின் பிணம்புதை நடுகல்லின் கல்வெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு, தங்களை ‘டிரெம்மிலி’ (Tremmili) என்ற அழைத்துக் கொள்பவரும் ஆகிய, சிற்றாசியா (Asia-Minor) வைச் சேர்ந்த “லிசியன்” (Lycian) மக்களோடு இனம் காணும் முயற்சி ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. (குறிப்பு 10 : காண்க). வலுவற்ற எதிர்பாராச் சொல் வழங்கலாம். “டிரெமிலே” என்பதை அடிப்படையாகக் கொண்டு பண்டைத் திராவிடர், கிரேக்கத்திற்கும், சிற்றாசியாவுக்கும் இடைப்பட்ட நாடாம் ஏஜியன் (Aegean) மக்களின் ஒரு பிரிவாம்-என வாதிடப்படுகிறது. தமிழர் நாகரீகம், அகழ் ஆய்வுச் சான்றுகளின் அடிப்படையில், கி.மு. 2500 ஆண்டுக்குப் பல ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்துக்குத் தள்ளப்படும் நிலையில், ஏஜியன் நாகரீகம், வரலாற்று அடிப்படையில் கி.மு. 2500 ஆண்டளவில்தான் தொடங்குகிறது. லிசியன் மக்கள், கிரேக்கர் அல்லர் என்பதும், அதுபோலவே கிரேக்க மொழி வழங்கும். ஆனால் கிரேக்கர் அல்லாதாராகிய எல்லெனிஸ்டிக் (Hellenistic) இனத்தவரோடு இரத்தத் தொடர்பு உடையவர் என்பதும், எல்லாத் திறத்தவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டனவாம். ஒருவேளை அவர்கள் பண்டைய கிரேக்கர் வீரகாவியக் களமாகிய “திராய்” (Troy) நகர மக்களாகிய “த்ரோஜன்” (Trojans) இனத்தவரோடு இரத்தக்கலப்புடைய வராகலாம். இம்முடிவு ஏற்றுக்கொள்ளப்படுமாயின், தமிழ் மக்களின் ஒரு பிரிவினர், புதியன காணும் முயற்சியாக, சிற்றாசியாவில் குடியேறினார்; “டிரெம்மிலி” (Tremmili) என அறியப்பட்டனர் என்ற முடிவை மேற்கொள்வது முறையாக இருக்கக்கூடும். இந்தக் குடியேற்றம், இக்காலத் தமிழர்கள் தென் ஆப்பிரிக்கா, பர்மா, மற்றும் மலேயா நாடுகள் மற்றும் பிறநாடுகளில் குடியேறியதற்கு ஒப்பாகும்.

மனித இன உடற்கூறு வேறுபாடு உணரவல்லார்களின் கற்பனைகளுக்கு முடிவே இல்லை. (குறிப்பு : 11 காண்க) தொல்பொருள் ஆய்வு மற்றும் வரலாறுகள் வெளிப்படுத்தும், தென்இந்தியாவில் மக்கள் வாழ்க்கை, பழங்கற்காலம் முதல் இன்றுவரை தொடர்ந்து வந்துளது என்ற உண்மையிலிருந்து எதுவும் தப்பமுடியாது. திராவிடர்க்கு முந்தியவர்கள், பழங்காலக் கர்த்தாக்களாகத் திராவிடர், கற்கால முடிவின் இறுதிக்காலத்தில்தான் வெளிஉலகிற்கு அறிய வந்தனர் என்பது ஒருகருத்து. காடுகளிலும், மலைகளிலும் வாழும் இனத்தவர் பிரதிநிதிகளாக விளங்கும். குறும்பர், இருளர், தோடர், இலங்கைவாழ் வெட்டர் ஆகியோர்தாம் திராவிடர்க்கு முந்திய இனத்தவரில் எஞ்சி உள்ள சிலர் ஆவர். தென் இந்தியப் பழங்குடியினரிடையே ஆப்பிரிக்க நீக்ரோ, அல்லது மலேசியா-பாலனீசிய நீகிரிட்டோ (Negrito) மக்களின் இனமூலம் காணப்படுகிறது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்பாடான முடிவாம். இந்த நீகிரிட்டோ இனமூலம், ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியச் செல்வாக்கின் விளைவு அன்று. மாறாக, அது, மலேசியாவிலிருந்து வந்தது என நம்பப்படுகிறது. திருவாளர் தர்ஸ்டன் (Thurston), மலேயத் தீபகற்பத்தைச் சேர்ந்த சகை (Sakai) இனத்தவரோடு ஒருமைப்பாடு காண முயல்கிறார். தென்இந்தியாவுக்கும், மலேசியா மற்றும் பொலனிசியாக்களோடு, வாணிகப் போக்குவரத்து, வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே நடைபெற்றிருக்க வேண்டும். இந்நாடுகளின் மக்கள், தென்னிந்தியாவில் குடியேறினர். தென்னிந்திய மக்கள் சமூகத்தவரோடு, இரண்டறக் கலந்தனர் என்பன உறுதியாக நிகழக்கூடியனவே. மலேசிய மொழிகளை ஆராய்ந்து பார்க்கின், திராவிடமொழிகளில், மலேசியச்சொற்கள் சிலவாக மிகவும் அரிதாக இடம்பெற்றிருக்கும் போது, மலேசிய மொழிகளில், பெரும் எண்ணிக்கையிலான இந்தியச் சொற்கள், குறிப்பாகத் தென்இந்தியச் சொற்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இது, பெரும் எண்ணிக்கையிலான பழந்தமிழர்கள் மலேசியாவில் வாழ்ந்தனர்; அதற்கு நிகராகச் சிறு அளவிலான மலேசியர்கள், தென்இந்தியாவில் வாழ்ந்தனர் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறது.  மற்றுமொரு கருத்து, திராவிட மொழியும், மற்றும், வடகிழக்கு இந்திய மலையிலும் காடுகளிலும் வாழ்ந்த பழங்குடி மக்களின் மொழியாம் முண்டா மொழியும் இரண்டறக் கலந்திருப்பதையும், அதன் விளைவாம் பழங்குடியினரிடையே இனக்கலவையையும் சுட்டிக் காட்டுகிறது. முண்டா மொழிகள் உண்மையான தமிழகத்துள் ஊடுருவியுளவா என்பது வெளிப்படக் கேட்கும் கேள்வியாகும் (குறிப்பு :13 காண்க) இம்முண்டா மொழிகளின் ஆதிக்க அடையாளத்தைக் கோதாவரி எல்லைவரை, ஒருவர் காணும்போது அதற்கு அப்பாலான தெற்கில், அதன் ஆதிக்க உண்மையைக் காட்டவல்ல, ஏற்கக்கூடிய சான்று எதுவும் இல்லை. இது, முறையான மொழி இயல் ஆய்வினால் மட்டுமே முடிவு செய்யப்படும். திராவிட மொழிக் குழுவைச் சேர்ந்ததாக மதிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைமொழியைக் கொண்ட பிராகுயி மொழி, இடம் பெற்றிருப்பது திராவிடர் வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்தனர் என்ற கூற்றிற்கு ஆதரவாகக் காட்டும் வாதம் ஆகும். தெற்கு பலுஜிஸ் தானத்தைச் சேர்ந்த “காலட்” (Kalat) நாட்டின் ஒரு பகுதியாகிய “கானட்டே” (Khanate) என்ற இடமே பிராகுயி மொழியின், பிறப்பிடமாக மதிக்கப்படும் என்றாலும், அம்மொழிச்சொற்கள் பலுஜிஸ்தானத்தின் எல்லாப் பகுதிகளிலும் இன்றும் காணப்படுகின்றன. அவர்கள் மத்தியதரைக்கடற்பகுதி நாடுகளில் ஒன்றான சிரியா நாட்டு அலெப்போ (Aleppo) நகரத்திலிருந்து வந்து குடியேறிவர் என்பது, அவர்கள் மரபு வழி வரலாறு. மனித இனப்பிரிவுப்படி பார்த்தால், அவர்கள், வடபாகிஸ்தான், மற்றும் தென்கிழக்கு ஆப்கனிஸ்தான்களின் பழங்குடியினராகிய பதான்கள் (Pathans), அல்லது உண்மையான பலுஜிஸ்தானத்து மக்களின் வேறுபடக் காணப்படுகின்றனர். முடிந்த முடிபாக, அவர்கள் ஆடு மாடு மேய்ப்பவர். முறையாக ஆய்வு செய்யப்பட்டால், பிராகுயி மொழி, தன் சொற்களை வளப்படுத்தியது ஆரிய மொழியே ஆயினும், அவ்வாரிய மொழியோடு எவ்வித உறவும் கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும். அதில் தென்னிந்தியத் திராவிடமொழிகளின் சாயலை ஒருவர் காணக்கூடும். அதுவே முதலாவதும், மிகச்சிறந்ததுமான நேரடி மொழி ஒட்டு ஆகும். அதில் இடம் பெற்றிருக்கும் பெயர்ச்சொற்கள், சுட்டுப் பெயர்ச்சொற்கள், திரிபுப் பெயர்ச்சொற்கள், இவை போலும் பிற சொற்கள் அனைத்தும், திராவிடமொழிக் குறியீடுகளாகக் கொள்ளப்படுகின்றன. (குறிப்பு :14 காண்க) இது, பலுஜிஸ்தான் வழியாகத் திராவிடர்கள் அடுத்தடுத்துப் படையெடுத்து வந்தனர் என்ற உண்மையைக் காட்டவலியுறுத்தும் சான்றாகக் கொள்ளப்பட்டது. இன்றைய மனித இன ஆய்வாளர்கள், அம்மொழியில் திராவிட மொழி இனக்கூறுகள் இடம் பெற்றிருப்பதை ஒப்புக்கொள்ளும் அதே நிலையில், பிராகுயி மக்கள், திராவிடர்கள் என்பதினும், அவர்கள் துருக்கிய இனத்து இரானிய இனத்தவராவர் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். அது, திராவிடர்களின் பழங்குடியேற்றத்தைக் குறிக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு. தென்னாட்டிலிருந்து திராவிடர்களின் ஒரு பிரிவினர் வடக்கிற்கும், வடமேற்கிற்கும் சென்று அங்கேயே நிலைத்த குடியினர் ஆயினர் எனக் கூறினால், அதை மறுக்க என்ன ஆதாரம் இருக்கிறது என நான் கேட்கின்றேன். வரலாற்றுக்கு முந்திய காலத்தில், இராஜபுதனத்திலும், மத்திய இந்தியாவிலும் திராவிடர்களின் பரவல் இருந்தது என்பது, திராவிட மொழிகளோடு நெருங்கிய ஒருமைப்பாடு உடைய மொழிகளோடு நெருங்கிய ஒருமைப்பாடு உடைய மொழிகளாகிய, “வில்லி” (Villi) மற்றும் “சந்தால்” (Santal) மொழிகளில் இன்றும் பரவலாக இருப்பதிலிருந்து காணப்படுகிறது. பெரும்பாலும் திராவிட இனத்தைச் சேர்ந்தனவாகிய மோகன்லாதாரோ எழுத்துப் படிவங்களை இச்சான்றுகளோடு இணைத்துக் கொள்க. (குறிப்பு: 15 காண்க) மேலும், மெசபடோமிய நாட்டின் வடக்குப் பகுதியில், யூபிரெட்டஸ் ஆற்றின் வளைவில் உள்ள நாடாகிய மிடன்னியில் (Mitanni) வழங்கும் “கரியன்” (Kharian) மற்றும் “ஹூரியன்” அல்லது “ஹரியன்” (Hurrian) மொழிகள், திராவிட மொழிபோலும் மொழிகளில் சில ஆகும். ஒலிஇயல், இலக்கணம், மற்றும் சொல் அமைப்புகளில் காணப்படும் ஒருமைப்பாடு கருத்தில் இருக்கத்தக்கதாம். மிட்டானிய மக்கள், கி.மு. 15 ஆம் நூற்றாண்டில் எகிப்தியரோடு தொடர்ந்து போரிட்டனர். அவர்களின் சிற்றரசியர்களை மணந்துகொண்டனர். அதேவழியில் ஈரான் நாட்டுத் தென்மேற்கு நாடாகிய “எலாம்” (Elam) நாட்டில் பண்டு வழங்கிய “எலாமிடே” (Elamite) என்ற மொழிக்கும், “பிராகுயி” மொழிக்கும் இடையிலும் ஒருமைப்பாடு கண்டறியப்பட்டது. மேற்கு ஆசியாதான் “மிட்டானி” மற்றும் “எலாமிடே” மக்களின் தாயகமாம். சுமேரியன் மொழிகள் இயல்பால், தனிச்சொற்களை, வடிவமைப்பிலோ, பொருளிலோ திரிபு ஏதும் இல்லாமலே தொகைச் சொற்கள் ஆக்குவனவாம். திருவாளர் ஸ்கானர் (Schoener) அவர்கள், திராவிட ஊர்ப்பெயர்கள் சிலவற்றை, மெசபடோமியாவிலும், ஈரானிலும் தேடிக் கண்டுள்ளார். Brown JAOS 1930. P.273. காண்க.)

அமெரிக்காவில், மீஸிஸிப்பி ஆறு கடலோடு (குறிப்பு: 16 காண்க) கலக்கும் இடத்து நகராம் மெம்பிஸ் (Memphis) என்ற கடற்கரை நகரில், ஓர் இந்தியக் குடியிருப்பு இருப்பதற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கு வழங்கும் ‘ஊர்’ என்ற சொல், தூய தமிழ்ப்பெயர் போலவே ஒலிக்கப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில், “ஊர்” என்ற சொல், தென்னிந்தியாவில் உள்ள சிற்றூர் அல்லது நகரத்தைக் குறிக்கும். இந்த இடத்தில், பேரூழிவெள்ளப் பெருக்கிற்கு முற்பட்ட நிலப்படிவத்தில், சூரர

மகளிர் அணியும் நீலகிரிக்கு உரியதான ஜெபமாலை கண்டுபிடிக்கப்பட்டது. (O.G.S. Crawford Antiquity: Vol VI.p. 259) திராவிடரின் பிறப்பில் இவை அனைத்தும் ஏற்கும் பொறுப்பு என்ன? இவை அனைத்தும் ஒரு மொழி, அம்மொழி பேசும் மக்களோடு, குடி பெயர்ந்ததைத் தெளிவாகக் காட்டுகிறது. இதிலிருந்து திராவிடர்கள், மேற்கு ஆசியாவிலிருந்து வந்தவர் என முடிவு செய்யலாமா? உண்மையில் அது வேறு வழியாதலே உறுதி ஆதல் வேண்டும்.

“அனாஸர்” என்ற பெயரால் அறிமுகப்படுத்தப்படும் “தாஸர்” அல்லது “தஸ்யூர்”களை (குறிப்பு:17 காண்க)த் திராவிடர்களோடு இனம் காண்பது மற்றுமொரு மனித இயல் தொடர்பான, விளங்காப் புதிர். “அனாஸா” எனும் சொல் பல்வேறு வகையாகப் பொருள் கொள்ளப்படுகிறது. சிலர், “அனாஸா”, மூக்கற்றவர் (குறிப்பு : 18 காண்க) எனப் பொருள் கொண்டு, தட்டையான மூக்குடைய திராவிடப் பழங்குடியினரோடு தொடர்புபடுத்துகின்றனர். திரு. சாயனா (Sayana) அவர்கள், பேச்சு அற்றவர் எனும் பொருள் உடையதான “ஆஸ்யரஹித்” எனப் பொருள் கொண்டுள்ளார். அவ்வாறு கூறுவதால், அவர்கள் ஊமைகள் என்பது பொருள் அன்று. இலக்கிய அளவில் செம்மையுறப் பெற்ற சமஸ்கிருதம் போல் அல்லாமல். பொருள் விளங்கா மொழி பேசுபவர் என்பதே அதன் பொருளாம். இத்தஸ்யூக்களை, யாதேனும் ஓர் இனமூலம் அல்லது வேறோர் இனமூலத்தோடு இனம் காணும் முயற்சியில் அவர்களை, இரானியர்களோடு இனம் காண்பது போலும் கற்பனைத்திறம் வாய்ந்த பலப் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. நாகரீகம் அற்ற, காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்து, தங்களுக்கு எனத் திருந்திய மொழி இல்லாத, சமயக்கட்டுப்பாடு அற்ற மக்களாக அவர்களை மதிப்பதே, மிகவும் ஏற்புடைய விளக்கமாகும். இருக்குவேத சமிதாவின் மூன்றாவது மண்டலம், தம் பெயர் இடம் பெறும் விஸ்வாமித்திர முனிவர்க்குப் பிறந்த மக்களாவர் தஸ்யூக்கள், எனக்குறிப்பிடுகிறது. “அய்த்திரேய பிராமணர்”. சில வரலாற்று ஆசிரியர்கள் சார்த்த விரும்புவதுபோல் தஸ்யூக்கள், திராவிடர்களாகக் கருதப்பட்டால், விசுவாமித்திர முனிவர் தாமும், திராவிடர் ஆதல் வேண்டும். ஆனால், தஸ்யூக்கள், ஆரியர் அல்லர் என்பது முடிந்த முடிவு. ஆரியப் படையெடுப்பு எனக்கூறப்படும் ஒன்று நடைபெற்ற காலத்தில், தஸ்யூ திராவிடர்கள், பஞ்சாபிலும், கங்கைச் சமவெளியிலும் வாழ்ந்தனர்; அவ்வாரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டனர்; தெற்கு நோக்கி ஓடினர்; அத்தென்னாட்டையே, தங்கள் தாயகமாகக் கொண்டு விட்டனர் என்ற கருத்துநிலைத்து நிற்காது. இந்தியா முழுதும், ஒரு காலத்தில் காட்டுப் பகுதியாகவே இருந்தது; அது முதலில் படையெடுத்து வந்த திராவிடர்களால் முதன்முதலிலும், அடுத்துப் படையெடுத்துவந்த ஆரியர்களால் அடுத்தும் நாகரீகம் உடையதாக ஆக்கப்பட்டது எனக்கூறுவது, மரபு நெறிக்கு ஏற்புடையதாகாது. இக்கருத்து தொல்பொருள் ஆய்வு அளிக்கும். விலைமதிக்க வொண்ணா வரலாற்று உண்மைகளைப் புறக்கணிப்புதாகிவிடும். தென் இந்தியாவில் நிலம் தோன்றிய காலம்முதல் (Paleolithic), புதிய கற்காலம் வரையும் (Neolithic), புதிய கற்காலம் முதல் பெருங்கற்காலம் வரையும் (Neoalithic), பெருங்கற்காலம் முதல் இரும்புக் காலம் வரையும் (Iron Age) நாகரீகத்தின் இடையற்றுப் போகாத் தொடர்ச்சி (குறிப்பு: 19 காண்க) நமக்கு இருந்து வந்துளது. மண்ணுக்கே உரிய தொல்பழங் காலத்ததாய இந்நாகரீகம், படையெடுத்து வந்த திராவிடர்களால் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்க இயலாது. முடிவு காணமாட்டா இச்சிக்கலில் இருந்து தப்பித்துக்கொள்ளத் திராவிடர்களின் ஆதிமுன்னோர் (Proto Dravidian) என்ற கற்பனைக் கருத்து எடுத்து முன்வைக்கப்பட்டுளது. திராவிடர் படையெடுப்பு என்பது எவ்வாறு வலுவற்றதோ, அதுபோலவே, திராவிட ஆதி முன்னோர் என்ற கற்பனையும் வலுவற்றது தான். (குறிப்பு : 20 காண்க.) பண்டைத் தமிழர்கள், தென்னிந்தியாவின், கற்கால நாகரீகத்தின் சொந்தக்காரர்; உரிமையாளர் என்பதே. என் மாற்ற முடியாத, தீர்ப்பு ஆகும். (குறிப்பு : 21 காண்க)

மேலும், பன்மொழி ஆய்வாளர்கள், மற்றும், மொழி வளர்ச்சி ஆய்வாளர்களின் சான்றும் நமக்கு உளது. ஓர் இனத்தின் மூலம் பற்றிய ஆய்வுக்கு அவ்வினத்தின் மொழியைவிட, அவர்கள் நாகரீகம் ஓர் அளவுகோல் ஆகாது. சமஸ்கிருத தர்மா என்ற சொல்லைப் போலவே இனம் என்ற சொல்லையும், மொழிபெயர்த்தல் அருமை உடையது; எளிதில் இயலாதது; இரண்டு சொற்களும் பொருள் தெளிவில்லாமல் சொற்செறிவு இல்லாமல் ஆளப்படுகின்றன. மேலும் கூற விரும்புகின்றேன். அப்பொருள் பற்றிய ஆய்வாளர்களால், அவை வரன் முறையில்லாமல் ஆளப்படுகின்றன. இனம் பற்றிய பொருள் குறித்த, அண்மைக் கால ஆராய்ச்சியாளர்கள், நம் கருத்துப் படியே, இனம் என்பது ஒரு கற்பனை தொல்லை மிகத் தரும் கற்பனை என்ற முடிவுக்குச் சரியாக வந்துள்ளனர். (See Julian Huxley:-Race in Europe Oxford pamphlets. No.5-1939)

நாகரீக அடிப்படைக்கு நனிமிகு மதிப்பும், இன அடிப்படைக்கு நனிமிகக் குறைந்த மதிப்பும் கொடுப்பதே, மக்கள் இனம் பற்றிய அண்மைக்கால ஆய்வாளர்களின் முறையான ஆய்வின் குறிப்பிடத் தக்க விளைவாம். ஐரோப்பாவைத் திரும்பிப் பார்க்கும்போது, ஆங்கு இலத்தீன் நாகரீகம், மற்றும் ஆங்கில ஜெர்மானியர் நாகரீகம் என்பனவற்றைத்தான் அறிகிறோமே ஒழிய, இலத்தீன் இனத்தை ஆங்கில ஜெர்மானிய இனத்தை அறிய முடிவதில்லை. அதே வழியில்தான், இந்தியாவின் ஆரிய திராவிட நாகரீகங்களை மதிப்பிடல் வேண்டும். ஏறத்தாழ 1858 ஆண்டு அளவில், ஆரியன் என்ற நலங்கெட்ட இச்சொல், மதிப்புமிகு கீழ்த்திசை மொழி ஆய்வாளர், திருவாளர் மாக்ஸ் முல்லர் (Max Muller) அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மேதகு வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones) அவர்களைப் போலத் திருவாளர் மாக்ஸ் முல்லர் அவர்களும், ஆரியன் என்ற சொல், ஆரியமொழி பேசும் ஒரு மக்கள் கூட்டத்தைக் குறிக்கும், என்ற அளவோடு நின்றிருந்தால், உலக அமைதிக்குப் பாராட்டக்கூடிய பெருந்தொண்டு புரிந்தவராய் இருந்திருப்பார். ஆனால், போகூழ் செய்து விடுவதுபோல், திருவாளர் மாக்ஸ் முல்லர் அவர்கள், இணையான ஆரிய இனம் பற்றியும் பேசிவிட்டார். இத்தவறான கருத்து, ஏனைய தவறான கருத்துக்களைப் போலவே, மிகக் குறுகிய காலத்தில் செல்வாக்குப் பெற்று விட்டது. இக்கருத்தின் பின்விளைவு திருவாளர் மாக்ஸ் முல்லர் அவர்கள் “நான், ஆரியன் என்று சொன்னால் நான் இரத்தத்தையோ, எலும்பையோ, அல்லது மயிரையோ மண்டை ஓட்டையோ பொருள் கொள்ளவில்லை; ஆரியமொழி பேசும் மக்கள் என்பதே நான் கொள்ளும் பொருள். என்னைப் பொறுத்தவரை, நீண்ட சொற்பொருள் தொகுதி, அல்லது குறுகிய இலக்கணம் பற்றிப் பேசும், மொழி இயல் ஆய்வாளர் எத்துணைப் பாவியோ, அத்துணைப்பாவி ஆரிய இனம், ஆரிய இரத்தம், ஆரியக் கண், ஆரியமயிர் பற்றிப் பேசும், மனித இன ஆய்வாளனும்” என மறுவலும் மறுவலும், விளக்கம் அளிக்கும் அளவு அத்துணைப் பெரிதாம். (Biographies of words and the Home of the Aryans. London 1888. P 120) ஆனால் அவர் அறிவுரை காலங் கடந்தது. அக்கருத்து ஆழ வேர் விட்டு, உள்ளத்தை அழுந்தப் பற்றிக் கொண்டுவிட்டது. ஹெர் ஹிட்டலர் கையில் யூதர் அனுபவித்த அடக்குமுறைக் கொடுமை அதன் கொடிய விளைவுகளில் ஒன்று. எது எப்படி ஆயினும், உண்மை காண்பிகளும் அறிவியல் அறிவாளர்களும், ஆரிய இனக்கொள்கை முற்றிலும் தவறானது எனக் கொண்டுள்ளனர்.

அதே வழியில், திராவிட இனம் பற்றிய கொள்கையை நாமும் நோக்குதல் வேண்டும். ஆரிய இனம் என்பது ஒரு கற்பனையாயின், திராவிட இனம் என்பது அதனினும் பெரிய கற்பனை ஆகும். திராவிடர் என்ற சொல், (குறிப்பு : 22 காண்க) தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளைப் பேசும், ஒரு மக்கள் கூட்டத்தினைக் குறிக்கும் ஒரு பெயர். அம்மொழிகளில், நனிமிகப் பழைய மொழி தமிழ். என் கருத்தில், அவற்றின் தாய்மொழி என்பதை நம்ப, நீண்ட பெரும் கற்பனை ஏதும் தேவை இல்லை. கன்னட மொழியின் தொன்மைக்கான உரிமை, அண்மையில் எழுப்பப்பட்டது என்றாலும், தென்னிந்தியாவில், சமஸ்கிருத மொழி தன் ஆதிக்க முத்திரையை அழுத்தமாகப் பதித்துவிட்ட, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த்தான், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் வளம் பெற்ற மொழிகள் ஆயின என உறுதியாகக் கொள்வதே நலமாம். ஆகவே திராவிடன் என்ற சொல்லுருவம், நாம் உறுதியாகக் கூறலாம், தொடக்கத்தில், தமிழ் மொழி, மற்றும் அதனின்றும் பிறந்த மொழிகளைக் குறிக்கவே வழங்கப்பட்டது என்று. நாகரீக வளர்ச்சியின் ஏற்ற இழிவுகள் மெதுவாக இருந்த, நாகரீகமுதிர்ச்சி அற்ற தொல்லுழிக் காலத்தில், மக்கள் நாகரீகம் அற்றவர்களாய்க் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே வாழ்ந்தனர். இப்பல்வேறு பழங்குடிகளைச் சார்ந்த மக்கள் வாழ்ந்த சூழ்நிலை, தமக்கே உரிய தனிச் சிறப்பு வாய்ந்த சூழ்நிலை, அவர்களின் ஒழுக்கம், உள்ளுணர்வு, உடல் வளர்ச்சிகளில் அளந்தறிய மாட்டாத அளவு செல்வாக்குப் பெற்றுவிட்டது. அவர்கள் வாழ்ந்த இடத்தின் சூழ்நிலைகளின் வற்புறுத்தலால், அவர்கள் சில ஒழுக்கம், சில வகையான உணவு உண்ணு நீர் உடைகளை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் தங்களுக்குள்ளாகவே மணந்து கொண்டனர். இவ்வகையில் வாழ்க்கையில் ஒரு பொதுநோக்கு, மற்றும் மனவளர்ச்சி ஆகியவை, அவர்களிடையே, தங்களுக்கு உள்ளாகவே ஒருவனைத் தலைவனாகக் கொண்ட, ஒரு வலுவான கூட்டமைப்புக்குக் கொண்டு சென்றன. இந்தியாவின், அதிலும், சிறப்பாகத் தென் இந்தியாவின் தொல் பெரும் வரலாற்றின் பிரதிபலிப்பு, மற்றும் அறிவு, பழங்குடியினரிடையேயான, இந்த இரத்த உறவு ஒன்று கூடி வாழ்தல், ஒரு குழுவுக்கே உரிய உள்ளுணர்வு, ஒரு குழுவுக்கே உரிய தூண்டுதல், ஆகியவற்றிற்கு வழிகாட்டிற்கு என்பதைக் காட்டும். அது பழங்குடியினர் கூட்டமாகவோ, சாதிக் கூட்டமாகவோ தொழில்முறைக் கூட்டமாகவோ இருக்கலாம். ஆனால், குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கூட்டமாகக் கூடி வாழும் அமைப்பு அங்கு இருந்தது; அது நாட்டையும், சமுதாயத்தையும் குடியாட்சி நெறிக்குக் கொண்டுசெல்லத் துணை நின்றது. ஆகவே, திராவிட மொழி வழங்கும் நாட்டில் வாழ்ந்த மக்கள், தென்னிந்திய நாகரீகம் என்றும், மேலும் வரையறுத்த நிலையில் தமிழ் நாகரீகம் என்றும் இன்று நாம், பரவலாகப் பெயரிட்டு அழைக்கும், பல்வேறுபட்டவர் ஒன்று கூடி வாழும் ஒரு வாழ்க்கையை ஆனால் ஒரே மூலத்தில் தோன்றி, ஒரே சாடில் உடைய வாழ்க்கையைக் கண்டு வளர்த்தனர். (குறிப்பு: 23 காண்க).

சில மக்களால், பல நூற்றாண்டுக் காலம் குறிப்பிட்ட சூழ் நிலையில் வாழ்ந்துவிட்ட வாழ்க்கையின், குறிப்பிட்ட சில பாணிகள், மனித மாதிரிகளில், தமக்கே, உரிய தனித்தன்மை வாய்ந்த, சில வடிவங்களைத் தோற்றுவித்துவிட்டன. தோல், உடல் நிறம், மூக்கமைப்பு ஆகியவற்றின் இனம் சார்ந்த வேறுபடுத்திக் காட்டும் தனி இயல்புகளெல்லாம், வாழும் இடத்தின் வெப்ப, தட்பங்கள், நில இயல்களின் ஈர்ப்பாற்றலின் விளைவாம். இப்போது, மங்களூரைச் சார்ந்த மக்கள், மலையாளர்களைக் காட்டிலும் அழகாக இருக்கும் அதே நிலையில், மலையாளிகள், பொதுவாகத் தமிழர்களைக் காட்டிலும் அழகானவர். ஆரியன் என்ற சொல் எங்கெல்லாம் ஆளப்படுகிறதோ, அது ஆரிய மொழி பேசும் ஆரிய வர்த்தத்தில் வாழ்பவனைக் குறிக்கும்: அல்லது சிறந்தவன், மதிக்கத்தக்கவனைக் குறிக்கும். பண்டை இந்திய நில இயல் கூற்றுப்படி, இந்தியா முழுவதும் ஆரியவர்த்தம், மத்தியதேசம். தஷினபாதம் அல்லது திராவிடம் என்ற மூன்று பெரும் ஆட்சிப் பரப்புச் சார்ந்த பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பதிற்றுப்பத்தின்படி ஆரியவர்த்தம் அல்லது ஆரிய நாடு, தண்டகாரண்யம் என்ற பெருங்காட்டைத் தன்னகத்தே கொண்டிருந்தது. திராவிட மொழி பேசும் திராவிட நாட்டில் வாழ்பவன், திராவிடன் ஆவன். இந்தியாவின் இலக்கியங்களில், ஆரியன் என்றோ, திராவிடன் என்றோ, இனம் சார்ந்த வேறுபாடு எதுவும் இல்லை. திராவிடம், பழந்தமிழர்களின் தாயகம், திராவிடம் என்பது, அங்கம், வங்கம் மகதம் என்பனபோல் ஒரு இடத்தின் பெயர். திராவிடம் அல்லது திரமிடம் என்ற சொல் வடிவம், பொதுவாகத் தமிழ் அல்லது “தமிள்” என்ற சொல்லின் திரிபாக, அடையாளம் காணப்படும் “தமிள” என்ற பழைய சொல்வடிவின் வளர்ச்சிநிலை ஆகும்.

திராவிடர் என்றால், தமிழ் மற்றும் மலையாளம் பேசும் மக்கள் மட்டுமே ஆவர் என நாம் கருதத் தக்கவரான திராவிடர்களின், தோற்றம் அல்லது மூலம் பற்றிய ஆய்வின்போது, தமிழ் மற்றும் சமஸ்கிருதங்களாகிய இருமொழி இலக்கியங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். தமிழ் இலக்கியங்களில் விளக்கியபடி தமிழகம் என்பது வடக்கில் திருப்பதி மலையாலும் ஏனைய மூன்று பக்கங்களில் கடலாலும் சூழப்பட்ட ஒரு நாடு ஆகும். அப்படி என்றால், ஆந்திர தேசம் அல்லது மைசூர் மற்றும் கன்னடங்களின் ஒரு பகுதி, தமிழ் நாட்டோடு சேர்க்கப்படவில்லை என்பது பொருள். தமிழகம் முழுவதையும் தனக்கே உரிய இயல்பில், ஐந்து இயற்கைப் பிரிவுகளாக அதாவது திணைகளாகப் பிரித்திருப்பது: (குறிப்பு 24) வாடைக்குளிரைப் புகழ்ந்து, பாலை வெப்பத்தை வெறுத்தல், ஆசியாவில் உள்ளதுபோலும் மேட்டுச் சமவெளிகள் இல்லாமை, பண்டை பாபிலோனிய நாடாகிய “சால்டியன்” (Chaldean) நாட்டுக் கொடிமுந்திரியும் அத்தியும் இல்லாமை, சங்க இலக்கியங்களில் தன் நாட்டுக்கே உரிய மாவடை, மாவடைகள் குறிப்பிட்டுள்ளமை ஆகிய இவை அனைத்தும், தென்னிந்திய நாகரீகத்திற்கே உரிய, தனிப்பண்புகளைச் சுட்டுவனவாம்.

தொல்பொருள் ஆய்வுத்துறை அளிக்கும் சான்று

முறையாக அகழ்ந்து ஆராய்ந்தால், மிகச் சிறந்த நல்ல பலன் அளிக்கவல்ல, நனிமிகப் பழைய இடங்கள் தென் இந்தியாவில் இருக்கவும், தொல்பொருள் ஆய்வுத் துறை, அதில் சிந்தனை செலுத்தாமல் மாற்றாந்தாய் மனப்போக்கில் நடந்துகொள்வது வருந்தத்தக்கது. இவ்வழியில் நல்ல பல பணிகள் ஆற்றிய முன்னோடி, புதியன காணும் முயற்சியாளர். திரு. புரூஸ் புட்டே (Bruce Foote) (குறிப்பு: 25) அவர்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். நீலகரியின் வரலாற்றுக்கு முந்திய நிலைகுறித்த, தம்தம் ஆய்வில், திருவாளர் பிரிக் (Breeks) (குறிப்பு: 26) அவர்கள் ஆற்றிய பணியும், மற்றும் திரு. அ. ரே. (A. Rea) அவர்கள் ஈண்டுக் குறிப்பிடத்தக்கவராம். தொல்பொருள் சிறப்பு வாய்ந்த இடங்களை ஆய்ந்து அறிய உளமார்ந்த உண்மையான முயற்சி மேற்கொண்ட இவர்கள் போலும் தொடக்ககாலத் தொல்பொருள் ஆய்வாளர்கள் அளித்திருக்கும் சான்றுகளின் வலிமையே, என் ஆய்வுக் கட்டுரைக்கு நான் அடிப்படையாகக் கொண்ட மெய்யான பயன்மிகு அகச் சான்றுகளாம். திருவாளர் புரூஸ்புட்டே அவர்கள், ஏனையவற்றிற்கு இடையே, திருநெல்வேலி மாவட்டத்தில் தாம்பிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ள ஆதிச்ச நல்லூரில், நூற்றுப் பதினான்கு ஏக்கர்களுக்கும் மேலான, மிகப்பரந்த இடத்தில் உள்ள, மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுக் காலத்துக்கு முந்திய, பிணம் புதை குழிகளை ஆராய்ந்தார். ஆதிச்ச நல்லூரில் உள்ள இப்புதை குழிகள், புதிய கற்காலத்தை அடுத்துவந்த இரும்புக் காலத்தனவாகக் கொள்ளப்பட வேண்டும்; இவற்றிற்குக் குறிப்பிடத்தக்க இணையான புதைகுழிகள், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் சிற்றூர்க்கு அடுத்த இடங்களிலும், பழநி மற்றும் ஆனை மலைச் சரிவுகளிலும், நீலகிரியிலும், கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு, தென் ஆற்காடு, அனந்தப்பூர், பெல்லாரி மற்றும் கர்னூல் மாவட்டங்களிலும் காணப்படுகின்றன.

பழங்கற்கால மனிதன் வாழ்ந்த இடங்கள் எவையும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் கல்லில் செய்யப்பட்ட கலைத்தொழில் வேலைப்பாடு அமைந்த, அவர்களின் கருவிகள், நான் முன்பே கூறியது போல், தென் இந்தியப் பழங்கற்கால மனிதன், ஏனைய நாட்டுப் பழங்கற்கால மனிதனைப்போல், அறவே நாகரீகம் அற்றவன் அல்லன் என்பதை உய்த்துணரக்கூடிய அளவு, எண்ணிக்கையாலும் அளவிறந்தன! வகையாலும் அளவிறந்தனவாம். பழைய கற்கால மனிதனின் கருவிகள் பெரும்பாலும் தென் இந்தியாவில் எளிதில் கிடைக்கும் கனிமமாம், படிகக்கல்லில் செய்யப்பட்டன. (குறிப்பு : 28). பெல்லாரிக்கு அணித்தாக உள்ள, தஷிண பீடபூமியிலும், மற்றும் மைசூர் மாநிலத்தின் ஒரு பகுதியிலும், பெருமளவில்

கண்டெடுக்கப்படும் பழங்கற்கால மனிதனின் கருவிகள், சிவப்பு மஞ்சள் அல்லது பழுப்புநிற மணிக்கல், சிவந்த அல்லது ஒருவாறு கறுத்த இரும்பு உயிரக் கனிமப் படிகக்கல் ஆகியவற்றில் செய்யப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்ட பழங்கற்காலக் கருவிகளில் பத்துக் கருவிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவை, பல்வேறு வடிவுடையவாயினும், முன் வரிசையில் வைக்கப்படுவன கூரிய நீண்ட உருளை வடிவங்களாம். அந்தப் பத்தாவன: கோடரி, ஈட்டி, மண் அல்லது மரம் தோண்டு கருவி, வட்டவடிவான கருவி, கைக்கோடரி, கத்தி, தோல்மெருகிடும் கருவி, சலாகை, மற்றும் சம்மட்டி, தென்கடல் தீவுகளில் வாழ்பவர்கள் செய்வதுபோல், முதியவர்கள் தீயின் உதவியால், அடிமரத்துண்டங்களைக் குடைந்து வள்ளம் எனப்படும் சிறுபடகுகளைச் செய்யும்போது, நீண்ட முட்டை வடிவினதான வெட்டுக் கருவியின் முனை, கரிந்து போன மரப்பட்டைகளின் மிகை நீக்கிச் செப்பம் செய்யவல்ல கைக்கு அடங்கிய நல்ல கருவி ஆகும். புதிய கற்கால மக்களின் தனிச்சிறப்பு வாய்ந்த கருவிகளில் ஒன்றான, தோல் மெருகிடும் கருவி, பழைய கற்கால மக்கள் வேட்டை ஆடிக் கொன்ற விலங்குகளின் தோல்களைப் பயன்படுத்தினர் என்பதைக் காட்டுகிறது. தீயைப் பயன் கொள்ளுதல் தெரிந்திருக்கவேண்டும் என்பது ஊகித்து அறியப்படுகிறது. என்றாலும், நெருப்பு அல்லது மட்பாண்டத் தொழில் இருந்தமைக்கான அறிகுறி எதையும் நாம் காணவில்லை. ஆனால், அவர்தம் கருவிகள் வடிக்கப்பட்டிருக்கும் திறன், மற்றும் வேலைப்பாடுகளிலிருந்து அவர்கள் மதிக்கத்தக்க அளவு கலைத் திறம் வாய்ந்த மக்களே என்ற முடிவுக்கு வந்துள்ளார், திருவாளர் பூருஸ் புட்டோ (Bruce Foote) அவர்கள். பற்பல இடங்கள் பழங்கற்காலப் பொருள்களைத் தந்துள்ளன என்றாலும், அலிகூர் (Alicoor) மலைக் குன்றுகளே சிறந்த மைய இடமாம்.

 

புதிய கற்கால மனிதர் என்பார் தக்கிணத்திற்குப் புகழ் சேர்க்கும் கருப்புக் கல்லைப் பயன்படுத்தியவர் ஆவர். வெளிறிய நிறம் வாய்ந்த படிகக்கல் அவர்களை ஈர்க்கவில்லை. மேலும், அப்படிகக்கல், கரடுமுரடானதும் எளிதில் பிளக்க முடியாததும் ஆகும். திருவாளர் புட் அவர்கள் திரட்டி வைத்திருக்கும் புதிய கற்காலக் கருவிகள் ஓர் ஆயிரம் மாதிரிகளாம். அவற்றை வகைப்படுத்தியதில் தனிச் சிறப்பு வாய்ந்த, கலைத்தொழில் வேலைப்பாடு அமைந்த 78 இனங்களை அவர் கண்டுள்ளார். அவற்றுள் 41 பண்படுத்தப்பட்ட மெருகேற்றப்பட்டவை. ஏனைய 37 மெருகேற்றப்படாதவை. பச்சைநிற மரகதக்கல், படிகக் கூட்டமைப்பு வாய்க்கப் பெறாத செறிவான களிமக்கல் போலும் வண்ணக்கற்களையும் போலவே வண்ணம் தீட்டப்பெற்ற மட்பாண்டங்களும், வழக்கத்தில் வந்துவிட்டன. கிரீட் கிரீஸ் மற்றும் பிற மேலை நாடுகளைப் போலவே தென் இந்தியாவிலும், புதிய கற்காலம், இரும்புக் காலத்தால் தொடரப்பட்டது. புதிய கற்காலத்து மூதாதையர், இரும்புக் காலத்தையும் கடந்து வந்தனர். படிக்கல் பாறையிலும், இரும்பு, நீண்டகாலம் இருக்கக்கூடியது. அதனினும் கடினமானது என அறிந்தனர். ஆகவேதான், புதிய கற்காலத்தைச் சேர்ந்த பழைய சிற்றூர்ப் புறங்களில், இரும்பு காலத்து மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தங்களை ஒத்த ஒரே நாட்டவராகிய சிந்து சமவெளிப்பகுதியில் வாழ்பவர், பித்தளை மற்றும் செம்பினை அறிந்தவராய் இருக்கும்போது, தென் இந்தியா, பித்தளையையோ, செம்பையோ, மேற்கொள்ளவில்லை. பித்தளை மற்றும் செப்பு நாகரீகங்களோடு கொண்ட தொடர்பின் விளைவாக, உலோகக் கலவையை உருவாக்கும் கலை, பெரும்பாலும் இரும்பு காலத்தின் பிற்பகுதியில் கற்கப்பட்டது. அப்படி என்றால், இரும்புக் காலத்தின் தொடக்ககாலம், கி.மு. நான்காவது ஆயிரத்தாண்டுக்கும் முன்னர்க் கொண்டு

 

செல்லப்படவேண்டும். இந்தத் தொடக்க நிலை இரும்புக் காலத்துக்கு உரியது. சிப்பி வளையல்கள், உலோகத் தொழிற்கலையில் வல்லவரும், ஜப்பானியத் தீவுகளை ஆய்வு செய்தவரும், நன்கு தெரிந்தவரும் ஆகிய பேராசிரியர் “கெளலாண்ட்” (Professor Gowland) அவர்கள், பெரும் எண்ணிக்கையிலான இரும்புப் படைக்கலங்கள், கருவிகள், மற்றும் இரும்பை உருக்கும் ஆழ்ந்த அறிவு ஆகியவை இருப்பதிலிருந்து, “இரும்பை உருக்குதல், எதிர்பாரா நிகழ்ச்சியாகத் திடுதிப்பென அறியப்பட்டது; இந்த எதிர்பாரா நிகழ்ச்சி, இரும்புத்தொழில், ஐரோப்பாவைக் காட்டிலும், பழைய இரும்புக் காலத்தில் இடம் பெற்றிருந்த நம் தீபகற்பத்தில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்” எனக் கருத்தறிவித்துள்ளார். இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படுவதாயின், நான் கேட்கின்றேன், மேற்கு ஆசியாவைச் சேர்ந்த கிரிட் (Crete) நாடு. தன் புதிய கற்காலத்திலிருந்து, இரும்புக் காலத்திற்குச் செல்ல இரும்பை எவ்வாறு பெற்றது? கற்கால மக்கள் எல்லாம் காட்டு மக்கள் அல்லர், அவர்களின் வாழிடம் எப்போதும் மலைகள் மேலான சமநிலங்கள்தாம். இரும்பு உருக்கும் உலை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்த்தான், மனிதன் காட்டு வாழ்க்கையை மேற்கொண்டிருக்க வேண்டும்; இல்லை என்றால் வேறு எவ்வகையில் அவன் மரங்களை வெட்டிக் காட்டை அகற்றினான்?

இரும்புக் காலத்தின் பிற்பகுதியில், நாகரீகம் அகலப் பெருகிவிட்டது. மக்கள், உலோகக் கலவைகளைக் செய்யும் கலையைக் கற்றுக்கொண்டனர். இரும்பை அடுத்தடுத்து, பொன், பித்தளை, செப்புப் போலும் உலோகங்களால் செய்யப்பெற்ற, கருவிகள் மற்றும் உண்கலம் போலும் கலங்களை, நாம் கண்டோம். மட்பாண்டத் தொழில் வளர்ச்சியில் பெரிய முன்னேற்றம், பெரிய பாரக்கல் காலத்துக் (Megalithic) கல்லறை முதல் பல்வேறு

 

இடங்களில் காணப்பட்ட மட்பாண்டங்களில் மீதுள்ள பெரிய எழுத்துக்களாம். இந்தக் காலகட்டம், திராவிடர் தெற்கு நோக்கிக் குடிபெயரத் தொடங்கி, அங்கேயே நிலைத்த குடியினராகி விட்ட காலமாகக் கருதப்பட்டது. இம்முடிவு, தொடக்க நிலை இரும்புக்காலத்துச் செழிப்பான பின்னணிகளைக் கூறத் தேவையில்லை. பழங்கற்கால, புதிய கற்காலத்து மனிதனின் மரபு வழி வாழ்வில் வேரூன்றி நிற்கும், தென்னிந்திய நாகரீகத்தின் அடிப்படையையே புறக்கணித்து விடுவதாகும் சில முடிவுகள், துரதிர்ஷ்டவசமாகக் கருத்தாழம் மிக்க நுண்ணிய சிந்தனை ஏதும் செலுத்தப்படாமலே, வழிவழி வந்த ஆராய்ச்சிப் பேராசிரியர்களாலும் அதையே ஒப்பிக்கும் மாணவர்களாலும், உறுதிப்படுத்தப்படுகின்றன. இதற்குப் பொருந்தும் எடுத்துக்காட்டு புத்தமதம். ஒரு மதமாம் நிலையை முழுமையாக அடைந்துவிட்டது என்பதை நாம் புத்தன் எனக் கூறுவதாகும். இது போகிற போக்கில் கூறியதுதான். நான் காட்ட விரும்பியது என்னவென்றால், மரபினைக் காலம் தோற்றுவிக்கிறது; திராவிட இனம் மத்தியதரைக் கடல் நாகரீகத்தைச் சேர்ந்தது என்ற கொள்கை இன்றுவரை, மறுக்கப்படாமலே, இருப்பதால், அது பெரும்பாலும் ஒப்புக்கொண்ட உண்மை ஆகிவிட்டது என்பனவே. அக்கருத்தை மறுக்க வேண்டிய கடும் பொறுப்பு என்மேல் வீழ்ந்துள்ளது.

திராவிடர்களின் தென்னிந்தியக் குடிபெயர்ச்சியை ஒப்புக்கொள்பவர்களும் கூட, இந்நாகரீகத்தின் அடிப்படையில் ஓர் ஒருமைப்பாடு இடங்கொண்டிருக்கும் உண்மையிலிருந்து தப்பிக்க முடியாது. ஏனைய பிறவற்றினும் மேலாக, மட்பாண்டம். பிணம் புதைக்கும் முறை என்ற இரண்டு பொருள்களில் ஒருமைப்பாடு நன்கு பிரதிபலிக்கிறது. இவ்வுண்மைகளை எவ்வளவு சுருக்கமாக முடியுமோ, அவ்வளவு சுருக்கமாக உங்கள் முன் வைக்குமாறு உங்கள் தனிச்சிறப்பு வாய்ந்த உரிமையை

 

இரந்து கேட்டுக்கொள்கிறேன். முதற்கண் மட்பாண்டத் தொழிலை எடுத்துக் கொள்வோம். தென் இந்திய நாகரீகத்தைக் கற்காலம் தொடங்கி வளப்படுத்திய, தொழில் சார்ந்த கலைகளில் தொடங்குவதற்கு அடித்தளம் இட்டவை, பீங்கான், மட்பாண்டங்களாம். நான்கு வகைக்காலப் பிரிவுகளை, வேறு பிரித்துக் காணலாம். 1) புதிய கற்காலம், 2) கற்கால இரும்புக் காலங்களின் இணைந்த காலம் 3) முழுமையான இரும்புக் காலம் 4) பொதுவாக வரலாற்றுக் காலத்திற்கு முந்திய காலம் என அழைக்கப்படும், இரும்புக் காலத்துக்குப் பிற்பட்ட காலம் புதிய கற்காலத்துக்கே உரிய, மட்பாண்டங்கள், மங்கலான் வண்ணமும், கரடுமுரடான மேல்புறமும் உடையவை. இரும்புக்கால மட்பாண்டங்கள், பளிச்சிடும் வண்ணமும், மெருகேற்றப்பட்ட மேல்புறமும் கலைக்கண்ணோடு கூடிய வடிவமைப்பும் கொண்டவை. குவளை மற்றும் பாண்டங்களின் மீது மனித உயிரினங்களின் உருவங்கள் வரையப்படாமை, தென் இந்தியாவின் தொடக்ககால மட்பாண்டங்கள் ஒரு சிறப்பு இயல்பு. ஆனால் நீலகிரியில் உயிரினங்களின் வடிவங்களோடு கூடிய, கணக்கிலா மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை விலங்கு உருவங்களைப் போலவே மக்கள் உருவங்களையும் கொண்டுள்ளன. நீலகிரியில் உள்ள புதைமேடுகள், விட்டம் அல்லது கூம்பிய வடிவுடைய அடித்தளங்கள்மீது ஒடவிடப்பட்ட சக்கரங்கள், புறத்தே அழுத்தப்படாத குறியீடுகளைக் கொண்ட பாண்டங்கள், மாதிரி அச்சில் வார்க்கப்பட்ட கட்டுக்கம்பிணைப்புத் தகடு ஆகியவை இருந்தமைக்கான சான்றுகளைக் கொண்டுள்ளன. தக்ஷிண பீடபூமியில், இலைமாதிரி ஒப்பனைகள், முலாம்பழ வடிவிலான கிண்ணங்கள், மலர்வடிவிலான கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டன. அழகு செய்யப் பெறாதன, மற்றும் அழகு செய்யப்பெற்றன ஆகிய இருவகைகளும் கிடைக்கப்பட்டுள்ளன. கைகளால் செய்யப்பட்டனவும்

 

பெரும்பாலும் அருகிச் சக்கரங்களால் செய்யப்பட்டனவும், கிடைத்தன. சமஸ்கிருதப் பண்பாட்டின், தாக்குதலுக்கு முன்பே, மட்பாண்டத் தொழில், அழகிலும் வடிவமைப்பிலும் உயர்ந்த, முழு வளர்ச்சி நிலையை அடைந்துவிட்டது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. எகிப்திய, கிரேக்க, இத்தாலிய நாட்டு எட்ருஸ்கன் (Etruscan) ஆகிய இடங்களைச் சார்ந்த வெள்ளைக் களிமண்ணால் ஆன குவளைகளுக்கு இணையான குவளைகளுக்கு நனிமிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சிற்றாசியாவின் (Asia Minor) வடமேற்கில் உள்ள பழைய டிராய் (Troy) நகரில் உள்ள இடிபாடுகளில் காணப்பட்ட பாண்டங்களோடு முழுவதும் உருவு ஒத்த புதிய கற்காலத்துப் பாண்டங்கள் கணக்கில நமக்குக் கிடைக்கின்றன. மேலும், பல்லாவரத்தில் கண்டெடுக்கப்பட்ட செம்பழுப்பு நிறக்கல் சவப்பெட்டி, இராக் நாட்டுப் பாக்நாத், இத்தாலிய நாட்டு எட்ருஸ்கன் (Etruscan) ஆகிய இடங்களில் காணப்பட்ட செம்பழுப்புச் சவப்பெட்டிகள் போன்றுள்ளன.

மண்பாண்டத் தொழிலோடு நெருக்கமான தொடர்புடையது. தென் இந்தியப் பண்பாட்டின் ஒருமைப்பாட்டிற்கு மற்றுமொரு அசைக்க ஒண்ணாச் சான்றாகிய, பிணம் புதை பல்வேறு வகைகளாம். ஐவகைப் பிணம் புதைக்கும் முறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

1) பெரிய தாழிகளில் புதைக்கும் புதைகுழிகள் வயநாட்டிலும், ஆதிச்சநல்லூரிலும் காணக்கிடக்கின்றன. இங்கு, மண்பாண்டத் தொழில், பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தாழிகளில் சில, முழு உடலையும் அடைக்குமளவு பெரியன. எரியூட்டல் இருந்தமைக்கான சான்று எதுவும் இல்லை. திருநெல்வேலித்தாழிகள், மட்கலம் மற்றும் பிற பொருள்களால் நிறைந்தும், சுற்றிலும் பல்வேறு பொருட்களால் சூழப்பட்டும் இருக்கும்போது, இங்குள்ள மண்டைஓடு, தொடக்கக் காலத்திய நீண்ட தலையை உடைய பழங்குடியினர் இருந்தமைக்குச் சான்று பகர்கிறது. வயநாட்டுப் பகுதிகளில் உள்ள தாழிகள், இரண்டு அல்லது மூன்று மட்பாண்டங்களைக் கொண்டுளது. ஆனால் பொருள்கள் எதுவும் சுற்றி இருக்கவில்லை. அப்பாண்டங்களின் வடிவமைப்பு, அகத்தே சிவப்புப் புறத்தே மெருகேற்றப் பட்டதுமாம். மிகவும் குறிப்பிடத்தக்கது என்ன வென்றால், சங்க இலக்கியங்களில் ஒன்றான மதிப்புமிகு புறநானூறு, தாழியில் புதைப்பதை நால்வேறு இடங்களில் குறிப்பிட்டுளது.

1 கலம்செய் கோவே! கலம் செய் கோவே!

 

இருள்திணிந்தன்ன குரூஉத்திரள் பரூஉப்புகை
அகலிரு விசும்பின் ஊன்றும் சூளை
நளந்தலை மூதூர்க் கலம் செய் கோவே!
……………….
தாழி, வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம்
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே” -புறம்:228
“கவி செந்தாழி”  புறம்:238
“வயன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி
அகலிதாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே. -புறம்:256
“கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங்காடு” -புறம்:264

 

  1. கால்கள் உடைய தாழி: இவை பல்வேறு அளவு உள்ளவாகியவும், கற்பலகைகளால் மூடப்பட்டனவுமான கல்லறைகள், சென்னையில், கீழ்ப்பாக்கத்தில் டெயிலர் சாலையில் உள்ள “பவுன்டெனாய்” (Fontenoy) என்ற பெயருடைய வீட்டில், மேலே கூறியது போலும் கல்லறை தோண்டி எடுக்கப்பட்டது. சிறியவும், பெரியவுமான பல இருந்தன. பெரியவை, நீண்ட வடிவில், ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட இணையான கால்களைக் கொண்டவை. எல்லாவற்றிலும், சிறியன நாற்சதுர வடிவில் நான்கு கால்களை உடையன. மேலும், மூன்று கால்களையும், நான்கு கால்களையும் உடைய தாழிகளும் இருந்தன. அவற்றுள் மூன்று கால்களை உடைய தாழிகள், வட ஆர்க்காடு மாவட்டத்தில் தனிச்சிறப்புடையன.
  2. தோண்டி எடுக்கப்பட்ட குடவரைக் கல்லறைகள் குடக்கல்லு, அல்லது குடைவடிவிலான கல்லால் ஆன கல்லறைகள். வட்டவடிவான நான்கு அடி ஆழம், 6 முதல் 8 அடி சுற்றளவு உள்ளதாக, செங்குத்தாகத் தோண்டப்பட்ட கல்லறை இது. ஒரு கல் அதை மூடி இருக்கும். செங்குத்தான இருகல்லும், அவற்றின் மீது தட்டையான கல்லும் கொண்ட, வரலாற்றுக் காலத்துக்கு முந்திய கல்லறை எனும் பொருளில் “டால்மென்” (Dolmen) என்றும் அழைக்கப்படும். இக்குடவரைக் கல்லறைகளுக்கும், பெரிய தாழிகளுக்கும் இடையில், ஒரு தொடர்பு இருப்பதை உணரலாம்.

4 மலபார் “தொளி” என்பதனோடு தொடர்புடைய, தோண்டிய அறையினவாய புதை குழிகள் பாறைகளில் நேர்மூலையினவாக வெட்டப்பட்டு, குடை வடிவான கூரையின், மையத்தே திறந்திருக்கும். ஒரு பெரிய கல் மூடியாக இருக்கும். இவ்வகையில் வியப்பிற்கு உரியது என்னவென்றால், “தொளி” என்ற இந்தப் பெயர். இத்தாலிநாட்டுக் கிரீட்டில் உள்ள சல்லறைக் குழிகளுக்கும் இட்டு வழங்கப்பெறுகிறது என்பது. கிரீட்டில் அது. கருங்கல் கடகால் மீது செங்கல்லால் கட்டப்பெற்ற தேன் கூடு வடிவமுள்ள கல்லறை. கிரீட் மன்னன் மினோயன் (Minoan) பெயரால் வழங்கும், கி.மு. 3000க்கு 1500க்கும் இடைப்பட்ட காலமாம் தொல்பழங்காலத்தைச் சேர்ந்தனவாகிய முத்திரைகள், பன்னிறப் பூவேலை செதுக்கு வேலை அமைந்த குவளைகள், குத்துவாள் முதலியன, திருவாளர் குலோட்ஸ் (Glotz) அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘தொளை’ என்பது, துளை எனும் பொருள் உடையதான தமிழ்ச் சொல். இவையெல்லாம் கிரீட் நாட்டில், குடும்பக் கல்லறைகளாம். அதே குலமரபு, அவர்கள் விரும்பும் பொருள்கள் மீதும் கைவைத்துள்ளன. அதாவது, அக்கல்லறைகளுள் வைக்கப்பட்டுள்ளன. (The: Aegean Civilzation. P. 133-37)

  1. தென் இந்தியாவைக் காட்டிலும், தஷிண பீடபூமியில் மிகுதியாகக் காணப்படும், வட்டக்கல் மூடி அறை கல்லறைகள் ஐதராபாத்தில் மெளலா அலி என்னும் இடத்தில் உள்ள, இத்தகைய கல்லறை ஒன்று, ஒரே காலத்தில் இருபதுபேர், நிமிர்ந்து நிற்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இறந்தார் உடலைக் கொளுத்தும் வழக்கம் இருந்தமைக்கான அகச்சான்று எதையும் காட்ட இயலாமை கூறிய புதை முறைகளில் காணலாம் பொது இயல்பாகும். கி.பி.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியமான மணிமேகலையில், இறந்தார் உடலை அப்புறப்படுத்தும் முறைகள், ஐந்து கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் ஒன்று சுடுதல், அடுத்த ஒன்று. சுடுதலோ, புதைத்தலோ அல்லாமல், வெற்றிடங்களில் வீசிவிடுதல். இது இடுதல், இவ்விரண்டும், ஆரியப் பண்பாட்டின் செல்வாக்கைக் காட்டிக் கொடுப்பதாக நான் கருதுகின்றேன். ஏனைய மூன்றும், தென் இந்தியாவுக்கே உரியனவாம். ஆழ்ந்த குழிகளில் புதைக்கும் (தொடுகுழிப்படுவோர்), மண் தாழிகளுள் அடைத்துப் புதைத்தல் (தாழ்வயின் அடைப்போர்), தாழியில் இட்டுக் கவித்தல் (தாழியின் கவிப்போர்). “சுடுவோர், இடுவோர், தொடுகுழிப்படுப்போர், தாழ்வயின் அடைப்போர், தாழியிற் கவிப்போர்” (மணி 6: 66-67). இது பண்டை முறையிலான பிணம்புதை முறைகள், தொடர்ந்து இருக்கும் நிலையில், கிறித்துவ  ஆண்டின் தொடக்கத்தில், புதுமுறைகளும், மேற்கொள்ளப்பட்டன என்பதைக் காட்டுகிறது.

நீலகிரிப் புதைமேடுகள் பற்றி முன்னரே குறிப்பிடப்பட்டது. இவையல்லாமல், வேறுவகைக் கல்லறைகள், பாண்டுகுழிகளாம். அவை, படுகுழி அளவுக் கல்லறைகளோடு ஒப்பிடத்தக்கதாம். இவற்றோடு, குறும்பர் மற்றும், இருளர்க்கு உரியன. வீரக்கல் எனப்படும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துப் பெருங்கல் வட்டக் கல்லறை (Cromlech) இவை போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த வீரர்கள் நினைவாக நாட்டப்படும். கல்லறை சார்ந்த கல் அன்று. இக்கற்கள் எல்லாம், வீரக்கல் மாசக்கல் மகாசதிக்கல் என அழைக்கப்படும். (உதாரணம் நீலகிரி காண்க.) இக்கல்லறைகளில், பல்வேறு காலங்களைச் சேர்ந்த பலபொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றுள், வேல், சிறிய ஈட்டி, அம்பு, கத்தி,வெட்டுவாள், அரிவாள்களும் அவற்றுள் அடங்கும். இவை, கல் மற்றும் இரும்புகளால் செய்யப்பட்டன. அவற்றுள் சிலவற்றிற்கு, மரக் கைப்பிடிகளும் பொருத்தப்பட்டிருந்தன. மட்பாண்டப் பொருள்களும், மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மண்டை ஓடுகளும் வெளிக்கொணரப்பட்டன. பித்தளையால் செய்யப்பட்ட அணிகள், கருவிகள் ஜெபமாலைமணிகள், அபிரகத்துண்டுகள், நெல்உமி, தினை உள்ள பானைகள், ஆதிச்ச நல்லூரில் கண்டதுபோலும் மணிமுடிபோலும் அணிகள் ஆகியன, பல்வேறு கல்லறைகளில் காணப்பட்டன. (A.R.S. Of India. 19023 P. 111-140)நீலகிரி மண்பாண்டங்களில், விலங்குகளின் உருவம் காணப்பட்டபோது, ஆதிச்ச நல்லூரில் பித்தளையால் வார்க்கப்பட்ட விலங்கு உருவங்கள் காணப்பட்டன. இவ்வாறு காட்டப்பட்ட, வீட்டில் வளர்க்கப்பட்ட விலங்குகள், எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, சேவல் கோழி, முதலியன, கொடு விலங்குகள், புலி, யானை, மற்றும், மறிமான் முதலியன. இரும்பு மண்வாரி, அரிவாள், நெல் மற்றும் தினைகளின் உமி, சிறிய ஆடைகளை நெய்யும் அறிவு, நல்ல பருவத்துக் களிமண்ணால் செய்து சுடப்பட்ட மட்பாண்டங்கள், விரிவான உலோகத் தொழில்கள் ஆகியவற்றிலிருந்து அறியப்பட்டவாறு ஆதிச்சநல்லூர் நாகரீகம், உழவுத் தொழில் அறிவோடு கூடிய, கால மாற்றத்திற்குரிய நாகரீகமாம். இரும்பு மிக அதிகமாகப் பயன்பட்டிருந்த நிலையில், பித்தளையும் செப்பும் அருகியே இருந்தன.

பெரும்பாலும் பிற்காலத்தனவாய குகைக்கல்லறைகளில் உள்ள பொருட்களை ஆராய்ந்து பார்க்கச் சென்றால், காணக்கூடிய கால முரண்பாட்டினை, காலவழு அதாவது பிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும், முற்காலப்பண்புகளைப் பிற்காலத்திற்கும் கொண்டு செல்வதைக் காணலாம். தொல் பழங்காலத்தைச் சேர்ந்தனவாய நீண்ட உருளை வடிவிலான ஜெபமாலை மணிக்கற்கள், கி.பி. 100க்கும் 200க்கும் இடைப்பட்டனவாய, நாணயங்களோடு கலந்துள்ளன. இவை ஆந்திரநாட்டுக் கிருஷ்ணா மாவட்டத்தில் காணப்படுபவை. கோவை மாவட்டத்துச் சூலூரில் உள்ள பாரக்கல் காலத்துக் கல்லறைகளில், கி.மு. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த, எரான் வகை (Eran) நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. செங்கற்பட்டு மாவட்டதைச் சேர்ந்த தங்கல் எனும் இடத்தில் உள்ள ஒரு கல்லறையில், கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்தனவாய, இரும்பாலான மீன் பிடிமுள், அழகுற வடிவமைக்கப்பட்ட மண்பாண்டங்கள், மூக்கு, காது அணிகள் கண்ணாடி வளையல்கள், துளையிடு கருவியால் முத்திரை இடப்பட்ட நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்துக் கழுகுமலைச் சவக்குழியில், மண்குழாய்கள் இரும்பால் செய்யப்பட்ட கருவிகள். சோழர் காலத்தன போலும் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இக்கல்லறைகளெல்லாம், தொல்பெருங் காலத்து அழியா அமைப்பு நிலைகள் எல்லாம் சோழர் காலம் வரையும் எவ்வாறு அழியாது இருந்து வந்துள்ளன என்பதொன்றையே காட்டுகின்றன. இவையெல்லாம், இத்தாலி நாட்டின் ஒரு பகுதியாகிய கீரிட் நாட்டில் உள்ளனவாக நாம் கண்ட, குடும்பக் கல்லறைகளாம். இத்தாலி நாட்டவர், காலாகாலமாக இறந்தவர்களை அவர்கள் விரும்பிய பொருள்களோடு, ஒரே பிணக் குழியில் புதைத்து வந்தனர். மலபாரில் இன்றும் கூட ஒவ்வொரு வீட்டின் தென்பகுதியில், வழிவழியாக, தலைமுறை தலைமுறையாக இறந்து வருபவர்களைச் சுட்டு எரிக்கும் சுடுகாடு உளது. தென்இந்திய நாகரீகம், புதிய கற்காலம் முதல், சோழர் காலம் வரை, இழையோடிக்கிடக்கும் நாகரீக ஒருமைப்பாட்டிற்கு இது மற்றுமொரு அகச்சான்று.

ஒப்பிட்டுப் பேசுவதாயின், கி.மு. 4000 ஆண்டைச் சார்ந்த, புதிய கற்காலத்து எகிப்து நாகரீகத்தில் கல் அறிவுதான் இருந்தது; இரும்பு அறியப்படவில்லை. தென் இந்தியாவைச் சார்ந்த, புதிய கற்காலத்து மண்பாண்டங்கள் அரச இன ஆட்சிமுறைக்கு முற்பட்ட எகிப்தில் காணப்பட்டு, தென் இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையில், கற்காலத்திலேயே இருந்த உறவினை, உறுதிப்படுத்தத் துணைபுரிகின்றன. திரு. டாக்டர். ஹால் (Dr.Hall) அவர்கள், ஆய்வின்படி, கிரேக்க நாட்டிற்கும், சிற்றாசியாவுக்கும் இடைப்பட்ட ‘‘ஏகியன்’’ (Aegean) நாட்டுப்பள்ளத்தாக்கைச் சார்ந்த புதிய கற்காலத்து நாகரீகத்தின் மீதுதான் ஆதிக்கத்தைச் செலுத்தியது, எகிப்து நாட்டுப்புதுக்கற்கால நாகரீகம்தான். இத்தாலி நாட்டின் ஒரு பகுதியாகிய கிரீட் நாட்டின், கி.மு. 2500க்குப் பிற்பட்டதான ‘‘மினோயன்’’ (Minoan) எனப்படும். பித்தளை நாகரீகம், ‘‘ஏகியன்’’ நாகரீகத்தின் வளர்ச்சியே.  இவ்வகையில், தொல்பழம் நாகரீகங்கள் எல்லாம், தமக்குள்ளாகவே, ஒன்றிடமிருந்து ஒன்று கடன் வாங்கப்பட்ட நாகரீகம்தான் என்பதைக் காண்கிறோம்; ஆனால், திருவாளர் ஹெரோடோடஸ் (Herodotus) அவர்கள் விட்டுச்சென்ற அனைத்து அகழ் ஆய்வுகளும் அவற்றின் முடிவுகளும், கிரேக்க, மற்றும் எகிப்திய நாட்டுத் தொல்பழம் நாகரீகத்தின் வடிவமைப்பாளர்கள் யாவர்? காரணகர்த்தர் யாவர்? என்பதை அறிய, நல்ல வழிகாட்டியினை நமக்கு அளிக்கவில்லை; அவை இரண்டுமே, வெளியிலிருந்து வந்து குடியேறியவை என்ற அழுத்தமான மரபுவழிக்கொள்கையை உடையன. அவை ஆரியமொழி எதையும். அதாவது ஆரிய அடிப்படை எதையும், பேசவில்லை. அங்ங்னமாகவே, அவை தொல்பழங்காலத் திராவிட நாகரீக மரத்தின் கிளைகளே என்பதுதான் கொள்ளக்கிடப்பதாம். கிரீட், பித்தளை மற்றும் செப்பு நாகரீகத்திலிருந்து, எத்தகைய இடையறவும் இல்லாமல், இரும்பு நாகரீகத்துக்குச் சென்று விட்டது. இந்தியாவிலும், நடந்தது சரியாக இதுவே. பித்தளை நாகரீகம் என்பது போலும் ஒரு நாகரீகம், இந்தியாவில் இருந்திருக்கவில்லை. இச்சூழ்நிலைகளையெல்லாம் கணக்கில் கொண்டு கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால், மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியைச் சார்ந்த, தொல்பழம் நாகரீகம், திராவிட மொழிகள் பேசும் தென்னிந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவை என்பதை எவனொருவனும் உய்த்துணரலாம். மொழி இடம் பெயர்ந்தது. அம்மொழியோடு, அம்மொழி பேசும் மக்களும் குடிபெயர்ந்தனர். ஆகவே, எதிர்கால நாகரீகம், மத்தியதரைக் கடல் கடற்கரையில் பிறக்கவில்லை; மாறாக, இந்தியத் தீபகற்பத்தின் கடற்கரைகளில், காவேரி, தாம்பிரபரணி, பெரியாறு, அமராவதி மற்றும் கிருஷ்ணா, கோதாவரி, நர்மதா போலும் பேராற்றங்கரைகளிலேயே பிறந்தன என்பதே என் ஆய்வுக் கட்டுரையின் முடிவாம்.

 

முடிவுரை

இக்கட்டுரையை முடிக்குமுன், இன்றும் நம்மிடையே உள்ள மலைகளிலும், காடுகளிலும் வாழும் பழங்குடியினராம், தென்னிந்தியாவின் தொல்பெருங்கால மக்கள் வழியினரிடையே, நீகிரோ இனத்துப் பண்புக்கூறு இடங்கொண்டிருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்பதைக் கூறவிரும்புகின்றேன். கல்லையே தன் வாழ்வும், உயிருமாகக் கொண்ட பழங்கற்கால மனிதனின், இறவா முன்னோர்கள்.அவர்கள் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிற்றாசியா, மற்றும் ஏஷியன் பள்ளத்தாக்கு நாடுகளிலிருந்து மக்கள் குடிபெயர்ந்தனர் என்ற கொள்கையை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். தொல்பெருங்காலத்தில் இருந்தே, ஓரிடத்திலிருந்து ஓரிடத்திற்கு நாகரீகப் புடைபெயர்ச்சி உண்மையில், நம்பிக்கை உள்ளவன் நான். அவர்களில் சிலர் தென் இந்தியாவின் பல இடங்களில் இடங்கொண்டுவிட்டனர் என்பதும், காலப்போக்கில், அந்நாட்டுப் பழங்குடியினரோடு ஒன்றுகலந்துவிட்டனர் என்பதும் இயலக் கூடியதே. இவ்வாறு குடிபெயர்ந்து வந்தவர், திராவிடர், என்ற கொள்கையைச் சரியானதுதானா? என நான் கேள்வி எழுப்புகின்றேன். அதாவது மறுக்கின்றேன். திராவிட முன்னோர், திராவிடர்க்கு முந்திய பழங்குடியினர் என்பன எல்லாம். 20ஆம் நூற்றாண்டின் கற்பனைகள். தென்னிந்தியத் தொல்பொருள் ஆய்வாளர்களோ, வரலாற்றுப் பேராசிரியர்களோ கடல்கோள், எரிமலை, மற்றும் வேறு காரணங்களால் மக்களும், நாகரீகங்களும் இடம் பெயர்ந்தனர் என்பதற்கான பொருந்தும், ஏற்கக் கூடிய அகச்சான்று பழங்கற்கால நாகரீகம் புதிய கற்கால நாகரீகத்துக்கும், புதிய கற்கால நாகரீகம், இரும்பு நாகரீகத்துக்கும், அமைதியாக மாறித்தொடர்ந்து இடையறவு படாமல் இருந்தமைக்கான சான்று அனைத்தும் உள்ளன. தொல்பொருள் ஆய்வுகள் முறையான நாகரீக வளர்ச்சி உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. காடுகளிலும், மலைகளிலும் வாழும் தென்னாட்டுப் பழங்குடியினர், நாம் இன்று பெயரிட்டு அழைக்கும் தென்னிந்தியத் திராவிடர்களிடமிருந்து, மனித இயல்பால் வேறுபட்டனர் எனக் கூறுவது தவறு. தக்கின நாட்டு மனித இனத்தோற்றம் பற்றிய, மக்கள் இனம் உலகில் பரவிக் கிடக்கும் இயல்பு பற்றிய, நூல்களில் வல்ல மாணவர்கள், இந்நாட்டில், அதாவது தென் இந்தியாவில், ஐவ்வகை நாகரீகம், புதிய கற்காலம் தொடங்கி இருந்து வந்தன என்பதை அறிவர். அவர்களில், வேட்டை ஆடல், மீன் பிடித்தல் ஆகிய தொழில்களைத் தழுவிக்கொண்ட மக்கள், பழங்கற்காலத்து இறுதிக்காலத்துத் தொல்குடியினராம். காலம் காலமாக முறையே காடுகளிலும், கடற்கரைகளிலும் தொடர்ந்து வாழ்ந்துவந்த வாழ்க்கை, அவரவர்களுக்கே உரிய தனிச்சிறப்பு வாய்ந்த வாழ்க்கை முறைகளையும், மனப்போக்கையும், வளர்த்துக் கொள்ளும் நிலைக்கு வழிவகுத்துவிட்டது. அவர்கள் உடல் நிறத்திற்கு அவர்கள் வாழ்ந்த இடத்துத் தட்பவெப்ப நிலைகள் அவர்கள் மேற்கொண்ட தொழில்களே காரணமாம். ஆகவே, அவர்கள் உடல் நிறம் பற்றிய கேள்வி, அதாவது தடை, நம் கொள்கையைச் சீர்குலைக்காது. உழவுத் தொழில் இடம் கொண்டதும், அதன் விரிவும், தொல்பழங்காலத்துப் பொருள் தேடு முறையை, முயற்சியைக் கைவிடச்செய்தது எனக் கொள்ளுதல் கூடாது. சில இயற்கைச் சூழ்நிலைகளில் வைக்கப்பட்ட மக்கள். தங்களின் பண்டைய வாணிகத்தை ஊக்கமுடன் மேற்கொண்டனர்; தங்கள் வாழ்க்கையின் தரத்தையும், பழக்க வழக்கங்களையும் பேணிக்காத்தனர். வெள்ளாளர் மற்றும் காராளர் போலும் உழவர் குலத்தவர்களாலும், ஆடு மாடுகளைக் காக்கும் ஆயர் போலும், கால்நடை மேய்ப்பவர்களாலும், வேறு வகை நாகரீகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழகத்தில் பெருமணல் பரந்த பெருநிலம் இன்மையால், பாலை நிலத்து மக்கள் குறிஞ்சி, அதாவது மலைநாட்டுப் பழங்குடியினரோடு ஒன்று கலந்துவிட்டனர். வேடர் மீனவர். உழவர், ஆயர் என்பனபோலும் விலங்கினம் தொடர்பான நாகரீகம், இயல்பு மாறாச் சமுதாய நிலைகளில் இடங்கொண்டுவிட்டது. ஆகவே, கடலைச் சார்ந்த நாடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த பழங்குடியினர், திராவிடர்க்கு முந்தியவராவர் எனக் கொள்வது கூடாது. அதேபோல், மத்தியதரைக் கடற் பகுதியிலும், அர்மீனிய நாட்டிலும் வாழ்ந்தவர் திராவிடர்க்கு முந்திய மூதாதையர் எனக் கொள்வதும் கூடாது. ஆகவே சிந்து கங்கைச் சமவெளிகள், முறையாக உருவாகாத காலத்தில், தென் இந்தியாவையும், ஆப்பிரிக்காவையும் இணைத்து இருந்ததும், கடலுள் ஆழ்ந்து போனதும், திராவிடர்களின் தொடக்க கால வாழிடமும் ஆகிய, தென் இந்திய தீபகற்பத்தைத்தான் மத்திய தரைக்கடல் இனத்தவர் என அழைக்கப்படுவோர், தாங்கள் தோன்றிய இடமாகக் கொண்டிருந்தனர் என முடிவு செய்யலாம்; ஆகவே, திராவிட நாகரிகச் சாயலை இந்தியநாட்டு நாகரீகங்களில் மட்டுமே காணக்கூடியது அன்று. அதை கிரீட்டன் (Cretan), எஜியன் (Aegean) சுமேரியன் (Sumerian), பாபிலோனியன் (Babylonian) மற்றும் எகிப்தியன் (Egyptian) போலும் மேலை நாட்டு நாகரீகங்களிலும் இவை போலும் உலகின் பல்வேறு பழம்பெரும் நாகரீங்கங்களிலும் காணலாம். இம் முடிவில் மேலும் வலுவாக இருக்க, தென் இந்தியாவில் மேலும் பற்பல அகழ் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என நான் வாதிடுகின்றேன். திருவாளர் டாக்டர் சிசிலியேமன் (Dr. Schliemann) அவர்களின் வெற்றிக்களிப்புப் பேச்சுக்கடியில், கிரேக்கப் பேரறிஞன் மூளை வளைய வளைய வந்து கொண்டிருக்க மேற்கு ஆசிய நாட்டு டிராய் (Troy) மைசினியெ (Mycenae) டிரியன் (Triyan) நாகரீகங்கள் மறுபிறவி எடுத்தன. உலகை அதுபோலும் வியப்புக்குள் தென்இந்தியா, ஆழ்த்தாது என்பதை யார் அறிவார்!

 

 

 

 

 

முதல் சொற்பொழிவுக்கான
 விளக்கக் குறிப்புக்கள்

 

  1. மண்ணியல் ஆய்வு ஊழிக்காலத்தில் இந்தியா

நீண்ட நெடிய மண்ணியல் ஆய்வுக் காலவரம்பில் அளந்து கண்ட வழி. இந்தியாவின் தீபகற்பப் பகுதி, (தென்பால் மேட்டுச் சமவெளிப் பகுதி) நனிமிகப் பழமையானது இப்பகுதியின் வடமேற்கு எல்லையில், இராஜபுதானச் சமவெளியின் குறுக்கே நீண்டு கிடப்பது, ஆரவல்லி என அழைக்கப்படும், நனிமிகப் பழைய மலைத்தொடர்களின் எஞ்சிய பகுதியாம். இம்மலைகளின் தெற்கில், நாம் இப்போது அழைப்பது போல், இந்தியத் தீபகற்பம், தொல்லுழிக் காலத்து இறுதிக் காலம் தொட்டே நிலப்பகுதியாம் ஆரவல்லிக் குன்றுகளுக்கு வடமேற்கு நிலப்பரப்பில் மூன்றாம் கடல்கோளுக்கு முன்பிருந்தே, கடல் அடுத்தடுத்துப் பொங்கிக் கொண்டிருந்தது. ஆரவல்லி மலைத்தொடர்களால், இவ்வாறு பிரிக்கப்பட்ட இரு நிலப்பரப்புகளிலும் கட்டமைப்பு. வடிவமைப்புகளில், மனத்தில் நிறுத்தவல்ல வேறுபாடுகள் உள்ளன. நனிமிகப் பரந்துகிடந்த ஒருபெருநிலப்பரப்பின், கழித்து விடப்பட்ட ஒரு பகுதியாவதல்லது வேறு ஆகாத, அத்தீபகற்பத்தின் இன்றைய வடிவம், வண்டல் மண் படிந்த நிலப்பரப்பாம், சிந்து மற்றும் கங்கைச் சமவெளிப் பகுதிகளாம். தாழ்ந்த நிலபரப்பு தோன்றுவதில் கொண்டுபோய்விட்ட மிகப்பெரிய, தொடர்ந்த நிலநடுக்கம் தோன்றிய காலம் தொட்டே, நிலைகொள்ளப்பட்டது. பெரும்பாலும் ஆரவல்லி மலைகளின் சமகாலத்த-ஒரே ஊழிக்காலத்தைச் சேர்ந்தது. (பெரும்பாலும் ஒரு காலத்தில் அவற்றோடு இணைந்திருந்தது.) பெரிதும் பிளவுண்டதும், கரடுமுரடான தோற்றம் உடையதும் வங்காள விரிகுடாவை நோக்கி நிற்பதும் ஆகிய கிழக்குமலைத் தொடர்ச்சி, தொல் உயிர் ஊழிக்காலத்தின் முடிவுகாலம் தொட்டு, வளைகுடாவின் கடல் நீர், மேற்கு நோக்கிப் பாய்ந்து கரைகளை அரித்துவிடாமைக்கும், சென்னைக் கடற்கரைதான் மிகச்சிறிய பிரதிநிதியாக, இன்று இந்தியாவைக் கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவுக்கு முற்பட்ட பெருநிலப் பரப்பின் கிழக்குக் கரையாக அமையவும் காரணமாம். இந்தியத் தீபகற்பத்தின், கிழக்குத் தடுப்பு அணை, அதாவது கிழக்குக் கடற்கரை, அத்துணை நனிமிகப் பழமையானதாம். ஆனால், வரலாற்றுக்கு முந்திய இப்பெரு நிலப்பரப்பின் வடமேற்கு எல்லையாக ஆரவல்லி மலைகள் அமைந்திருந்தன என்பது தெளிவாகும்போது, உறுதி ஆகும்போது, வடகிழக்கு எல்லையாக எது அமைந்திருந்தது என்பது அத்துணைத் தெளிவாகத் தெரியவில்லை. அந்நாட்களில் கங்கைச்சமவெளி இல்லை. பெரும்பாலும் ராஜ்மகால் மலைகளும் அஸ்ஸாம் நாட்டு மலைகளும், சிக்கிம் நாட்டுக்குக் கிழக்கில், இமாலய நிலப்பகுதியாகத் தொடர்ந்திருந்தன. ஒப்பு நோக்க, பர்மா நாட்டு மலைகள் மிக இளையவாக இருக்க மேற்கு இமயத்தைக் காட்டிலும், கிழக்கு இமயம் நனிமிகப்பழமையானது என்பது உறுதி. அடுத்துத் தொடர்ந்தன, நிலநடுக்கமோ, கடல்கோளோ இல்லாத நீண்ட பெரும் அமைதியும் கோண்டவனம் என அழைக்கப்படும் பரந்து அகன்ற மத்திய நிலப்பகுதி தோன்றிய காலமாம் ஆறுகளின் போக்கால், வண்டல் படிவங்கள் அமைதியாகத் தோன்றலும் ஆம். பனிமூடிய மலைப்பாறைகள் இருப்பதும்.இராஜபுதானத்தில் பனிஉருகுநிலை இருப்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கன இப்பொருள் கோளில், ஆரவல்லி மற்றும் ராஜ்மகால் மலைப்பகுதிகள்,

ஆப்பிரிக்காவின் விரிவு, அல்லது வேறு அல்ல என்ற, பெரும்பாலும், மறுக்கமுடியாத உண்மையை நாம் எதிர் கொள்கிறோம். தொல்பழங்கால இத்தொடர்பினை உறுதி செய்யத் தேடிப் பெற்ற அகச் சான்றுகள் முடிவானவை. (“India” by: Col. Sir. T.H. Holdich, page.-7-8; “C.P. Traite de Geoloie”, by A. de Lapparent 4th Edn. “Lemuria” by Steiner (Anthrops) “Problem of Lemuira” by Stence (Rider). The drift of continents; by Wegner (Royal Geographical Journal. 1934-36) காண்க.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கெல்லிஸ் எனும், இடத்தில் காணப்படும் எச்சம்மிச்சங்களைக்கொண்டு அறியப்படும் பழங்கற்காலப் பகுதிக்கும் முந்திய நாகரீகக் காலத்தைச் சேர்ந்த (Pre-Chellan Eolithic Culture) சில கண்டுபிடிப்புகளும் உள்ளன. ஆந்திர நாட்டு, நரசிங்கப்பூர் மாவட்டத்தில், நர்மதை ஆற்றங்கரையில் உள்ள, பூத்ரா (Bhutra) எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட, வாழ்க்கை நடைமுறைகளைக் காட்டும், ஓவியம் தீட்டப்பெற்ற விந்திய மலையைச் சேர்ந்த அழுத்தமற்ற கல், அவற்றுள் ஒன்று. அதே இடத்தில், விலங்குகள் சிலவற்றின் எலும்புகளும் காணப்பட்டன. ஐதராபாத் வருவாய்க்கோட்டத்தில் பைதன் நகருக்கு அருகில் முங்கி எனும் இடத்தில், சில விலங்குகளின் எலும்புகளோடு காணப்பட்ட, காய் கனிகளின் உலர்ந்த நறுக்குத் துண்டுகள் இரண்டாவதாம். புத்ரா எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டவை. ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்டனவற்றோடு ஒருமைப்பாடு கொண்டுள்ளன. பர்மா, இலங்கை, அந்தமான், ஜாவாக்களில் கண்டெடுக்கப்பட்டனவோடு, தெளிவான உறுதியான ஒருமைப்பாடு கொண்டுள்ளன. இது, “இயோலிதிக்” (Eolithic) நாகரீகம், அதாவது பழங்கல் நாகரீகம். அன்றைய, அதாவது தொல்லுழிக் காலத்தில் உள்ள எல்லாநாடுகளுக்கும் பொதுவான நடைமுறையில் இருந்த நாகரீகம் என்பதைக் காட்டுகிறது” (“Prehistoric India”) by Panchanan mitra, p.138. History of Pre-Musalman India. Vol I by V. Rangacharya. p.29-32).

தகவாளர், திரு. ஜே. சி. பிரேஸர் (Sir. I.C. Frazer) அவர்கள், ஊழிப்பெருவெள்ளம் (Great Flood) குறித்த கற்பனைக் கதைகளைப் பொருள் கொள்வதில் கீழ்வரும் எச்சரிக்கையைக் கொடுத்துள்ளார். ஊழிப் பெருவெள்ளம் பற்றிய கற்பனைக்கதைகள் உலகின் நனிமிகத் தொலைவில் உள்ள நாடுகளில் வாழும் பல்வேறு வகைப்பட்ட மக்களிடையே பரப்பப்பட்டுள்ளன என்பது உண்மை. இவைபோலும் செய்திகளில், எவ்வளவு சான்று விளக்கங்கள் காட்ட முடியுமோ, அவ்ளவும் காட்டி, இவைபோலும் கட்டுக்கதைகளிடையே, ஐயத்திற்கு இடன்இன்றி ஒருமைப்பாடுகள் இடம் பெற்றிருப்பது, இக்கதைகள், ஒருசார் மக்களிடமிருந்து பிறிது ஒருசார் மக்களிடையே நேரடியாகக் கைமாறியது. ஒருபால் காரணம் ஆகலாம். மற்றொருபால், உலகின் பல்வேறு பகுதிகளில், ஒரே மாதிரியான- ஆனால், முற்றிலும் தன்னியலான ஊழிப்பெருவெள்ளம் அல்லது அதுபோலும் பெருவெள்ளம் ஏற்பட்டமையைக் குறிப்பிட்டுக் காட்டும் இயற்கை விளைவுகள் பற்றிய முன்அனுபவம் காரணமாகலாம். இவ்வாறு இவை போலும் மரபுவழிச் செய்திகள் பற்றிய ஆய்வு, அவற்றின் வரலாற்று, உறுதிப்பாடு பற்றிய எந்த முடிவுக்கும் நம்மைக் கொண்டு செல்வதற்கும் அப்பால், இதிலும், இதுபோலும்: மாறுபட்ட கருத்து உடையவற்றிலும், உண்மை, முழுமையாக, இப்பக்கமோ, அப்பக்கமோ சார்ந்துவிடுவதில்லை. மாறாக, அவ்விரண்டிற்கும் இடையில் எங்கே ஓரிடத்தில் தான் நிற்கும் என்ற உண்மை நிலையை எடுத்துக்கூறி, இருவேறுபட்ட கொள்கைகளுக்காக இருவேறு முனைகளில் நின்று வாதிடுவார்களை நம்ப வைப்பதன்மூலம், அம்மாறுபட்ட விவாதம் சிலநேரங்களில் உண்டாக்கிவிடும் விவாதச் சூட்டினைத் தணிய வைத்தால், பயன் உள்ள செயலைச் செய்யவும் செய்யும். (“Man God and Immortality” page:49-50).

  1. திருவாளர் வி.ஆர். ராமச்சந்திர தீக்ஷிதர் அவர்களின், “மக்ஷிய புராணம்-ஒரு ஆய்வு” என்ற நூலைக் காண்க. பக்கம்: 1-19.

உலகின் தோற்றம், ஊழிப்பெருவெள்ளம் விளைத்த பேரழிவு பற்றிய சுமேரிய நாட்டு வீரப்பெருங்காப்பியம், பூமிதேவியும், பூமிதேவனும், வானுலகக் கடவுளாம் “அணுவும்” (Anu) நீர்க்கடவுளாம் ‘என்கியும்’ (Enki) துணைசெய்ய சுமேரிய நாட்டிற்கே உரிய பழங்குடியினரையே தெளிவாக உணர்த்தும் கருந்தலை மனிதர்களைப் பெற்றனர் எனக் கூறுகிறது. இது தொடர்பாக வணங்கத்தகு தந்தை ஈராஸ் (Rev. Fr. H.Heras) அவர்களின் கருத்துக் குறிப்பு குறிப்பிடத்தக்கது. “எகிப்திய, அல்லது பழங்குடியினரின் மையக் கருமூலமாக, அதாவது. அவர்களின் மூதாதையர்களாக, நாம் இப்போது கருதும் இந்திய நாட்டுத் திராவிடர்கள், ஊழிப்பெருவெள்ளத்துக்குப் பின்னர், சிந்துசமவெளிக்கும், கங்கைப் பெருவெளிக்கும். இடைப்பட்ட, பரந்த நாட்டில் குடிவாழ்ந்த பின்னர், ஆங்குக் குறிப்பாகத் தென் கடல்கரைப் பகுதிகளில் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய, கருவிகளையும், மனித இனங்களிடை வேறுபாடு உணர்த்தும் தனிச்சிறப்புகளாம் அவர்களின் பழங்கால நினைவுச்சின்னங்கள் எண்ணிலாதனவற்றை விட்டுச் சென்ற, கறுப்பு இனத்தவரின், ஒரு கிளையினராகிய நீக்ரோ இயல்பு இனத்தவரைக் கண்டனர். (“Hamitic Indo-Mediter-ranean Race.” In the New Review. Vol. XIV p. 189-192). 4. சென்னை, மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்கள் பழங்கற்கால மனிதனின் எண்ணற்ற அடையாளங்களைக் கொண்டுள்ளன. தெற்கு, மத்திய மேற்கு இந்தியாவில், பழங்கற்கால மனிதன் வாழ்ந்திருந்தமைக்கான, அறிகுறி எதுவும் தெரிந்த வகையில், இன்றுவரை காணப்படவில்லை. தளபதி குக் (Captain-Cook) அவர்களும், அவர்காலத்துக் கடலோடிகளும் மற்றும் தொடக்க காலத்துப் பிரிட்டானியக் குடியேற்றவர்களும் முதன் முதலாக வருகை தந்தபோது பழங்கற்கால மனிதனின், கடினமானதும், மங்கலான வண்ணம் வாய்ந்ததும், பல்வேறு வடிவங்களில் வெட்டிப் பண்ணக்கூடியதுமான, ஒருவகைச் சந்தனக் கல்லால் செய்யப்பட்டு, இன்றும் கிடைக்கக்கூடிய, படைக்கருவிகள், மற்றும் தளவாடங்களிலிருந்து பெறப்பட்ட உண்மை. அப்பழங்கற்கால மக்கள் பண்பாடு அற்றவர்கள்; ஆனால் காட்டுமிராண்டிகள் அல்லர்; அவர்களின் கல்லால் ஆன. கலைத்தொழில் வேலைப்பாடு அமைந்த கைவினைப் பொருள்கள், ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கிற்கு அப்பால் உள்ள , தாஸ்மேனியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் காணப்பட்டவைகளைக் காட்டிலும், எண்ணிக்கையாலும் அதிகம்; வடிக்கப்பட்ட முறையிலும் வடிவமைப்பிலும் நனிமிகச் சிறந்தவை என்பனவே. Robert Brwoce Foote. The Foote collection of Indian prehistoric Antiquities Notes on their age and distribution p.8) கேரள நாட்டில், பழங்கற்காலக் காலத்துக் கண்டுபிடிப்புகள் இல்லாமை குறிப்பிடத்தக்கது.

  1. திருவாளர் சமன்லால் (Chamanial) அவர்களின் “இந்து அமெரிக்கா” (Hindu America) (Bombay 1940) என்ற நூலினைக் காண்க. அதில், டாக்டர் லுட்விக் ஸ்டெர்ன்பச் (Dr. Ludwrk Sternbach) அவர்களின், தொல்பழங்கால இந்தியாவிலும், அமெரிக்காவைச் சேர்ந்த, பண்டைய மெக்ஸிகோவிலும் இருந்த ஒரே மாதிரியான சமுதாய மற்றும் அறங்கூர் அவைகளும் (“Similar Social and legal Institutions in Ancient India and in Ancient Mexico’) என்ற தலைப்புள்ள கட்டுரை இருக்கிறது. (Poona Orienalist, vi P. 43-46). தென் அமெரிக்காவில் கடல் சார்ந்த நாடாம் பெருநாட்டிற்குக் (Peru) கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஸ்பெயின் நாட்டவர் வருகை தரும்வரை, பெருநாட்டு மக்கள், ஞாயிற்றை வழிபட்டு வந்தனர். அந்நாட்டு அரசன், தன்னை, ஞாயிற்றின் குடிவழி வந்தவனாக உரிமை கொண்டாடினான். அந்நாட்டின் தலைநகராகிய (Cuzco) குஸ்கோவில் கட்டப்பட்ட ஞாயிறு கோயிலே, ஏனைய எல்லாவற்றிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது.
  2. கடந்த சில ஆண்டுகள் வரை, மிகுதியாகவும் முழுமையாகவும் தெரிந்துகொள்ள, நாம் பெரிதும் விரும்ப வேண்டியதாகிய எகிப்தியரின், தொல்பெருங்கால, நிலைத்த வாழ்க்கைப் பற்றிய நைல்நதியின் கரைக்கு மேலே உள்ள பாலைவன மேட்டு நிலங்களிலும் அதைத் தொடர்ந்துள்ள அடுக்கடுக்கான ஆற்றுப் படுகைகளிலும், தங்கள் பழங்காலக் கருவிகளையும் தளவாடங்களையும் விட்டுச் சென்றிருக்கும் நாடோடிகளின் வாழ்க்கை, ஏறத்தாழப் பழகிவிட்ட கால்நடை மந்தைகளோடும் அவற்றின் நீடித்த வாழ்க்கைக்குக் கோதுமை, பார்லிகளை விளைவித்தலோடு, அப்போதும் பழகிவந்த வேட்டையாடலையும், மீன்பிடித் தொழிலையும் ஆதாரமாகக் கொண்ட நிலைத்த குடியினராய் எவ்வாறு மாறிவிட்டது என்பது பற்றி நம் அறிவு குறைபாடுடையதே. ஆயினும் 1924-25 ஆண்டில், இரண்டு கண்டுபிடிப்புக்கள் பெறப்பட்டன. ஒன்று திருவாளர்கள் ப்ருன்டன் (Brunton) பிலின்கெர்ஸ் பெட்ரியே (Sin Flinders Petrie) ஆகிய இருவரால் மத்திய எகிப்தில் உள்ள “அஸ்யூட்” (Assiut) நகருக்கு மேலே, “கௌ” (Qau) இடத்திற்கு அண்மையில் உள்ள “பதரி” (Badari) எனும் இடத்தில், மற்றொன்று, திருவாட்டி “காட்டன் தாம்ப்சன்” (Miss, Cation Thomson) அவர்களால் எகிப்து நாட்டு, வடக்கு மாநிலத்தில் உள்ள “பாயியும்” (Fayuam) எனும் இடத்தில், இது எகிப்தின், குடியாட்சி நாகரீகத்துக்கு முற்பட்டதான தொடக்கால நிலைகள் பற்றிய புரியாத மொத்தச் சிக்கல்களையும் தீர்க்கத் தக்க,

பெருமளவிலான விளக்கங்களைத் தருகிறது. திருவாளர்கள் ப்ருன்டன் அவர்களும், பெட்ரிக் அவர்களும், நையல் நதிப் படுகை நெடுக உள்ள பல்வேறு நகரங்களில் ஒன்றான, பதரி (Badari) எனும் இடத்தில், ஒரு குடியிருப்பு இருந்ததைக் கண்டுபிடித்தனர். படேரிய இனத்தவரின் குடிவழி வந்தவராகத் தெரியும் இன்றைய எகிப்தியர்கள், இன்றும் அழிந்துபடாமல் இருக்கும் இந்தியா மற்றும் இலங்கையின் தொல்குடியினர்களாகிய, திராவிடர் மற்றும் வெட்டர்களோடு, உடலமைப்பில் கருத்தில் கொள்ளத்தக்க தோற்றம் கொண்டுள்ளனர். (James Barike, “A History of Egypt” – From the earliest Times to the end of the XVIIIth Dynasty Page:24-25)

திருவாளர் வி. கனகசபைப்பிள்ளை அவர்கள் தம்முடைய “1800 ஆண்டுகளுக்குமுன் தமிழர்கள்” என்ற நூலில், தமிழர்களின் தோற்றம் குறித்த மிகமிகத் தீவிரமான கருத்து ஒன்றை முன் வைத்துள்ளார். அதில், மத்திய ஆசியாவைச் சேர்ந்த மங்கோலிய இனத்துப் பழங்குடியினர் பலர், இமாலயக் கணவாய் வழியாக, ஆரியர்கள் நிலைத்த குடியினராய் வாழ்ந்திருந்த பஞ்சாப் மாநிலத்திற்கு வந்தனர். அம்மங்கோலிய இனத்தவருள் பெரும்பான்மையினர், கங்கை நதியின் தொடக்க இடமும், பெரிய வாணிக மையமுமாகிய “தமிலிட்டி” (Tamalitte) எனும் இடத்திலிருந்து தென்னிந்தியாவில் குடியேறினர். இந்நிகழ்ச்சியே, தென்னாட்டுப் பழங்குடியினர். தமிழர் என்ற சொல்லின் தோற்றத்திற்குக் காரணமாகிறது. ஆகவே, “தமிழ்” என்ற பெயர், தமலிட்டி என்ற சொல்லின் சுருக்கமாகக் காணப்படுகிறது. வாயு மற்றும் விஷ்ணு புராணங்கள், கோசலர், மற்றும் ஒட்டர்களோடு தம்ரலிப்தரர் (Tamraliptas) களை, வங்காளம் மற்றும் அதை அடுத்த கடற்கரை நாடுகளில் வாழ்பவர்களாக, மறைமுகமாகக் குறிப்பிடுகின்றன.

7) “Historian’s History of the world” Vol. 1. P. 77, மற்றும் ஜி ஸ்லேட்டர் அவர்களின் “Dravidian Culture” Page : 22 ஆகிய நூல்களைக் காண்க. “பதரி” (Badari) என்பதுதானும் இந்திய நாட்டு, ஓர் இடத்தின் பெயராம்.

8) தென் இந்தியக் காடர்களும், உரலிகளும், இலங்கை வெட்டர்களோடும், செலெபெஸ் (Celebes) நாட்டு த்பலஸ் (Tfalas), மலேயத் தீபகற்பத்தைச் சேர்ந்த “ஸ்கைஸ்” (Sakais) ஆகிய மக்களோடும் குறிப்பிடத்தக்க ஒருமைப்பாடு கொண்டுள்ளனர். (Macctt Anthropology P. 120) ஆஸ்திரேலியா, அவர்களின் தாயகமாகக் கருதப்பட்டது. அண்மைக்கால எழுத்தாளர் ஒருவர், பாலஸ்தீனியத் தாயகத்தைக் கூறுகிறார். நிகழ்ச்சிகள், அவர்கள் தென் இந்தியாவைச் சேர்ந்த, புதுக்கற்காலத்தவராகிய திராவிடர்களாம் எனக் காட்டுகின்றன. அவர்களை, இந்தியத் தீபகற்பத்தின் தொடக்ககால வாழ்வின ராகிய காடர் போலும், தொல் பழங்காலக் காட்டு வாழ்வினரின் அறவே வேறுபட்ட ஒரு கூட்டமாகக் கொள்வது நனிமிகக் கடினம். (திருவாளர் எல்.ஏ. கிருஷ்ண அய்யர் அவர்களின், ‘திருவாங்கூர் நாட்டு பழங்குடியினரும் சாதிகளும்’ (Travancore Tribes and Castes Vol. P. 292-3) என்ற நூலினைக் காண்க. .

9) திருவாளர் எச்.ஆர். ஹால் (H.R. Hall) அவர்களின், “அண்மைக் கிழக்கு நாடுகளின் பண்டை வரலாறு” (The Ancient History of the Neảr East) என்ற நூலின் 173 மற்றும் 174-212 ஆகிய பக்கங்களைக் காண்க. 10) இளம் ஆசியா (Asia Minor) நாட்டின் தென்மாநில மக்களாகிய லிலியன் மக்களும், அவர்களின் இனத்தவர்களும், (The Lycian and thier Affinities) என்ற நூலினைக் காண்க. லிஸியா என்ற பெயர் பழமையானது. நம் போலும் பிற கடலோடும் இனத்தவர்களோடு கூடி, எகிப்தியர்களோடு போரிட்டுக் கைது செய்யப்பட்ட, லிசியன் பழங்குடியினரை, எகிப்து நாட்டு “ருக்கு” (Ruku) என்ற இடத்துப் புதைமேடுகளில் காணலாம் என, எகிப்திய ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர். ஆனால், அப்படியாகவும், வரலாற்றுத் துறைத்தந்தை என அழைக்கப்படும். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கிரேக்க நாட்டு வரலாற்று ஆசிரியர் திருவாளர் எரோடோட்டஸ் (Herodotus) அவர்கள் “மில்யாஸில்” (Milyas) அந்நாட்டின் நனிமிகப் பெயர் ஒன்றையும், “ஸொலியிமி” (Solymi) மற்றும் “டெர்மிலொய்” அல்லது “டெர்மிஸை” (Tremiloi or Termilai) களில், மேலும் பழங்காலக்குடி வாழ்நர்களையும் அடையாளம் கண்டுள்ளார். “த்ரேமிலை” (Tremiai) என்ற பெயர் லெஸியன் (Lycian) என மாறுவதற்குக், கிரேக்க நாட்டுக் கற்பனைப் பழங்கதையில் வரும், ‘பெல்லெரோபோன்’ (Bellerophon) என்பானைப் பொறுப்பாளி ஆக்குகிறார். அதே சமயத்தில், அவர் காலத்திலும்கூட, ‘த்ரெமிலை’ (Tremiai) என்ற பெயர், அந்நிலையிலும் வழக்காற்றில் இருந்தது. பிற்காலத்தில், மக்கள் இன ஆய்வாளர்கள், கிரேக்கப் பழங்கதையாகிய ஒடிஸ்லெய் (Odyssey)யின் பாடலாசிரியரும். அந்நூலில் இடைச்செருகல் செய்தாரும், கிரேக்கம் முதலாம் நாடுகளில் வாழ்ந்திருந்த பழங்குடியினராம், பெலஸ்கோயி (Pelasgol) மக்களோடு, வேறு பல்லின மக்கள் வாழ்ந்த, 90 நகரங்களை கொண்ட ஒரு நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வந்த ஓரினத்தவராகக் கொள்ளும், கிரீட் நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வந்தாருள் ஓரினத்தவராக அடையாளம் காண்கின்றனர். ஆசிய நாட்டில், நாகரீக வளர்ச்சி  பெறாப் பகுதியாக இப்பகுதி இருந்தும், மேலைக்கடற்கரை நாடாம் ஆசியா மைனர் போலப் பல மாவட்டங்களைக் காட்டிலும் நனிமிக அதிகமான கல்வெட்டுக்களைக்-கிரேக்க மொழி அல்லாத வேற்று மொழிக்-கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளது. அக்கல்வெட்டுக்கள் எண்ணற்றன என்றாலும், அவை, பெரிய ஆராய்ச்சிக்குப் பின்னர்ப், பல ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒன்றானவாகவும், அறிந்த மொழிக்குடும்பம் எதிலும் சேர்ந்ததாக உறுதியாகக் கொள்ள முடியாதவாகவும் உள்ள தம் மொழியின் தோற்றம் குறித்த விளக்கம் எதையும் தரவில்லை. பலநிலைகளில், லிஸிய இன மக்களின் பழக்க வழக்கங்கள், ஆசியா மைனர் நாட்டுக்குத் தென்மேற்கில் உள்ள கரிய நாட்டு மக்களின் (Carian) பழக்க வழக்கங்களோடு ஒத்துள்ளன. ஆனால், ஒருநிலையில், அவை தெளிவாக, உறுதியாக வேறுபட்டனவே. லிலிய நாட்டவர் மக்கள் இனஉறவைத் தாய்வழி மதிப்பிடுகின்றனர். குடியுரிமை உள்ள ஒரு பெண்ணுக்கும், ஓர் ஆண் அடிமைக்கும் பிறந்த மக்களைச்சட்ட உரிமை பெற்றவர்களாக ஆக்குகின்றனர். ஆனால் குடிஉரிமை பெற்ற ஓர் ஆணுக்கும், ஓர் அடிமைப் பெண்ணுக்கும் பிறந்த மக்களுக்கு உரிமையை மறுக்கின்றனர். (The Cambridge Ancient Histroy. Edited by J.B.Bury, S.A. Cook and F.E. Adcock Vol II. The Egyption and Hittite Empires to 1000 B.C. page 9.)

திருவாளர் கனகசபை அவர்கள், தென் இந்தியாமீது படையெடுத்து வந்து நாகர்களை வென்ற மங்கோலிய இனத்தவருள் நனிமிகப் பழமையானவர்கள் மாறர்கள் ஆவர்; அந்நிகழ்ச்சிக்குப் பின்னர், அவ்வினத்தின் தலைவன், தென்கோடி இந்தியாவில், நனிமிகப் பழங்காலத்தே குடிபெயர்ந்தவர் தமிழர் ஆதலின், ‘பழையன்’ என அழைக்கப்பட்டான் என்றெல்லாம் கூறியுள்ளார்.  அடுத்துப் படையெடுத்து வந்த தமிழ் இனத்தவர், கடல் அரசர் எனும் பொருள் தரும் திரையர் ஆவர். அவர்கள் பெரிய கடலோடி இனத்தவர். அவர்களின் தாயகம் வங்கத்தின் தாழ்பகுதி. அவர்கள் கடல் வழியாகப் பர்மா, தென்சீனக் கடலைச் சார்ந்த கொச்சின் சைனா, இலங்கை, தென் இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்றனர். இவ்வினத்தைச் சேர்ந்தவனும், இன்றைய காஞ்சீபுரமாம் கச்சியை ஆண்டவனும், கரிகால் சோழனின் சம காலத்தவனும் ஆகிய திரையன் என்பான். இந்துப் புராணங்களின்படி, கடலைப் படுக்கையாகக் கொண்ட விஷ்ணுவின் வழிவந்தவனாவன்.

தமிழர்களின் மற்றொரு பிரிவினர் கடவுட்டன்மை வாய்ந்தவர் எனும் பொருள் உடையதான ‘வானவர்’ என்பவராவர். அவர்கள் அகச்சான்றுகளின்படி வடக்கு வங்காளத்து மலைநாட்டு இனத்தவரே. இவ்வினத்தைச் சேர்ந்த சேர அரசர்கள். தங்களை வானவர் என்றே அழைத்துக்கொண்டனர். அவர்கள், இமாலயத்துக் குடிவாழும் இனத்தவரோடு உறவு கொண்டாடினர். தங்களின் அம்மூலத்தை வெளிப்படுத்த வானவரம்பன், இமயவரம்பன் எனும் பட்டங்களைச் சூட்டிக்கொண்டனர். சேர அரசர்கள் அல்லாமல், முதிரமலைத் தலைவனும் நன்னன் போலும் மலைநாட்டுத் தலைவர்களும், அழும்பில் வேள்முதலானோரும் தங்களை வானவர் தலைவர் எனும் பொருள்தரும் வானவிறல்வேள் என அழைத்துக்கொண்டனர்.

திருவாளர் கனகசபை அவர்களின் மேலே கூறியுள்ள கருத்துகள், அவர் இது எழுதிய பின்னர்ச் செய்த ஆராய்ச்சி முடிவுகளின்படி ஏற்றுக்கொள்ளக் கூடாதனவாம். இக்கருத்தோடு முற்றிலும் மாறுபட்ட முடிவினை மேற்கொண்ட திருவாளர் ஜூலெஸ் வின்சென் (Jules Vinsen) அவர்களின் கருத்து அறிய,  ‘தமிழரின் தொல்பழம்பொருள் திரட்டு’ Tamilian Antiquary (No 1 , P.12)யைக் காண்க.

12) திருவாளர் ராய் பகதூர் சரத் சந்தர ராய் (Rai Bahadur Sarat Chandra Roy) அவர்கள், மக்கள் இனக் கூட்டமைப்பில் அடையாளம் காண்கிறார். இயலக்கூடிய அனைத்து வகையிலும், தொடக்கநிலையில் முதன் முதலாகக் குடிவந்தவர் மலைநாட்டு ‘செமங்’ (Semangs), அந்தமான் தீவு மின்கோபிகள் (Mincopics) ஆகிய மக்களோடு இன உறவு உடைய, சிறிய, கரிய சுருண்ட தலைமயிர் கொண்ட நெகிரிடோ (Negrito) இனத்தவராவர். அடுத்து வந்தவர் திராவிடர்க்கு முந்தியவர் என்றும், சிலசமயம் ஆஸ்திரேலியரின் ஆதிமுன்னோர் என்றும் அழைக்கப்படும் நீண்ட தலையுடையவர்கள். அவர்கள், வடகிழக்கு அல்லது வடமேற்கு அல்லது கடலுள் ஆழ்ந்துபோன லெமூரியாப் பெருநாட்டிலிருந்து வந்தவர்களாதல் வேண்டும். ‘திராவிடர்க்கு முந்தியவர்கள் எங்கெல்லாம் தோன்றியிருந்தாலும், இந்திய நாட்டு ஆஸ்திரேலிய ஆதிமுன்னோர்களின் இன அமைப்பு. இந்திய நாட்டுத் தட்பவெப்ப நிலைகளின் ஆதிக்கத்தால் முடிந்த முடிவாக, இந்திய நாட்டவராகவே முடிவுசெய்யப்பட்டு, இந்திய நாட்டின் உண்மையான பழங்குடியினராகின்றனர். இந்தியாவுக்கு, அதன் பின்னர் வந்த, அலை அலையான குடிபெயர்ப்பாளர், தங்களோடு, உழவுத்தொழில் பற்றிய அடிப்படை அறிவு, தாழியில் புதைத்தல், இறந்தவர் நினைவாகச் செப்பனிடப்பெறாக் கற்களை நாட்டுதல், புதிய கற்காலக் கருவிகள், கப்பல் ஒட்டும் அறிவு மற்றும் புதிய மொழிகளைக் கொண்டுவந்த, மத்தியதரைக் கடல் இனத்தவருள் பழைய கிளையினராவர். அவ்வினத்தவரின் முக்கிய பிரிவினர், திராவிட முன்னோர்களாலும், நெகிரிடோ இனத்து மூதாதையர்களில் அழிவுறாது எஞ்சியவர்களாலும்  அங்குமிங்குமாக வாழ்ந்து வந்த தென்னிந்தியத் தீபகற்பத்தில் குடியேறினர்.

வட இந்தியாவில் வந்து தங்கிவிட்ட, மத்தியதரைக் கடல் பகுதியைச் சார்ந்த ஒரு சில வந்தேறிகள், காலப்போக்கில், வட இந்தியாவில் செல்வாக்குப் பெற்றிருந்த திராவிடர்களுக்கு முந்திய இன மக்களிடையே மக்களோடு மக்களாகக் கலந்துவிட்டனர். திராவிடர்களின் ஆதிமூதாதையர் என நம்மால் அழைக்கப்படுபவர்களும், அவர்களின் வழிவந்தவர்களும் ஆகிய தென்னிந்தியாவில் வந்து குடியேறியவர்களில் பெரும்பாலோர், ஆஸ்திரேலிய ஆதிமுன்னோர்களின் ரத்தத்தோடு கலந்த ரத்தக் கலப்பைப், பையப்பையப், பல்வேறு அளவில் பெற்று, மேலும் காலம் செல்லச்செல்ல, திராவிட நாகரீகம் என இன்று நாம் அழைக்கும் ஒரு நாகரீகத்தைத் தோற்றுவித்தனர். நிலைத்த சிற்றுர் வாழ்க்கை, சிற்றுர் அமைப்பு, சிற்றுர் அரசப்பணியாளர், சிற்றுர்க் கடவுள்கள், சிற்றுர் அறங்கூறு அவை ஆகியவற்றைப் பெற்றிருப்பதற்கு இந்தியா, அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளது. (Journal of the Bihar and Orissa research Society Vol.XXIV 1958, Page, 37.38.)

13) முண்டா மொழிகள், சந்தால்பர்கனா, மத்திய மாநிலம், வடசென்னை, அஸ்ஸாம் ஆகிய இடங்களில் பெருவழக்காம். முண்டா மொழிகளோடு இனத் தொடர்புடைய மொன்-கமெர் (Mon-Khmer) என்ற குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள், பர்மா, மலேயத் தீபகற்பம், அன்னம், கம்போடியா, மற்றும் நிக்கோபார் தீவுகளில் பேசப்படுகின்றன. திராவிடமொழிக்குடும்பம், தமக்கே உரிய பற்பல சிறப்பியல்புகளைக் கொண்ட மொழிகளின் கூட்டமாம் என்ற, திருவாளர் ஸ்டென் கொனெள (Sten Konow) அவர்களின் கூற்று சரியானதே (Encyclopaedia Brittanica, 14th Edition Vol. XV, P.957-58).

14) பலுசிஸ்தானத்தில் வழங்கும் ‘பிராகுவி’ என்ற மொழியில் காணலாம். திராவிட மொழிக்கே உரிய சிறப்பியல்புகளை அடிப்படையாகக் கொண்டு, திருவாளர் ‘டென்யஸ்பிரே’ (Denys Bray) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார் எது எப்படி ஆயினும், சில அறிஞர்கள் ஒரு மொழிக்கு, அதன் உரிய இடத்தைக் கொடுப்பதற்குச் சரியான முக்கியத்துவமாக, அம்மொழி எழுத்துக்களிடையே உள்ள ஒருமைப்பாட்டு உறவினைக் கொள்வதாகத் தெரிகிறது. அவர்தம் வாதத்தின் போக்கு, பின்பற்றுவதற்குச் சிறிது சிரமமானது.

தன்சொற்களில், இருமடங்கு இலத்தீன் மயமாக மாற்றப்பட்டுவிட்ட, வடஐரோப்பிய மொழியாகிய டியோடோனிக் (Teutonic) இல்லையேல், ஆங்கிலமொழி என எதுவும் இல்லை. யாதோ ஒர் இயற்கைப் பிறழ்ச்சியால், பிராகுவி மொழி, திராவிடத் தாய்மூலத்திலிருந்து, வழிவழியாகப் பெற்ற எல்லாச் சொல்லுருபுகளையும் அறவே களைந்து எறிந்துவிட்டு, அதற்கு ஈடாகப் பெயர்கள் மற்றும் சுட்டுப் பெயர்களோடு வேற்றுமை உருபுகளைச் சேர்க்கவும், வினைகளோடு சந்திப்பு, இடைச் சொற்களை இணைக்கவும், இரானியமொழி அல்லது இந்திய மொழி இலக்கண நெறிகளை மேற்கொண்டால், குறிப்பிடத்தக்க சிறப்பு இயல்பால், திராவிட மொழித் தன்மை வாய்ந்த, சொல்லுருபோடு இணைந்த எதிர்மறை வினைத்திரிபுச் சொற்களுக்குப் பதிலாக, இலக்கண மரபு அல்லாத, வலிந்து கொள்ளும் ஒருவழியில், சாதாரண எதிர்மறை வினையெச்சத்தை மேற்கொண்டு திராவிட மொழியின், அழியாது நிற்கும் எஞ்சிய பகுதியின் இலக்கணக் கட்டமைப்பை, அதன் தன்மை, முன்னிலை, படர்க்கைச் சுட்டுப் பெயர்கள், வினாச்சொற்கள், சுட்டுப் பெயர்ச்சொற்கள் ஆகியவற்றைச் செம்மை செய்ய முனைந்தால், இந்திய, இரானிய மொழிகளில் இருந்து கடன்வாங்கிய சொற்கள்,  இப்போதும் நனிமிக அதிகமாக இரண்டறக் கலந்திருப்பதுபோல், திராவிட மொழிச் சொற்கள் பெருமளவில் இரண்டறக் கலந்திருந்தாலும் அதைத் (பிராகுவி மொழியை) திராவிட மொழிக் குடும்பமொழியாக, இன்னமும் கொள்வதாக இயலாத ஒன்றாம். இக்கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டப்படும், இரண்டாந்தரச் சான்றாகிய, சொற்களிடையே உள்ள ஒருமைப்பாடும் போதுமானதும் அன்று: ஏற்கக் கூடியதும் அன்று. தூய திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பெறப்பட்ட சொற்கள், நனிமிகக் குறைவு என்பது உண்மை; ஆனால், அவை, வளம்மிக்க சொற்களின் சிறுபான்மையினவே. அது, நனிமிக அடிப்படையான மூலத்தோடு ஒட்டிய கருத்துக்களை வெளிப்படுத்தவல்ல சொற்களால், முழுமையாக ஆக்கப்பட்டுள்ளது. வாய்,காது, கண், மூளை, இரத்தம், உறக்கம், முடி, அடி போலும் அடிப்படைச்சொற்கள்; பெரிய, சிறிய, புதிய, பழைய, இனிய, கசக்கும், உலர்ந்த, வெய்ய, சிவந்த என்பன போலும் பெயரெச்சச் சொற்கள்; நான், நீ, அவன், நாம், நீ, அவர், யார், எது, எத்தனை, மற்றவைபோலும் சுட்டுப்பெயர்கள் இரு, ஆகு, வா, கொடு, தின், பேசு, கேள், பார், உணர், எடு, அடி, அஞ்சு, இற என்பன போலும் வினைச்சொற்கள்; முன்னர் பின்னர், இனியும் இன்று என்பன போலும் வினையெச்சங்கள் (The Brahuilanguage Part II, P. 16).

15) திருவாளர் ஜி.ஆர். ஹண்டர் (G.R Hunter) அவர்களின் அரப்பா மற்றும் மொகஞ்சொதாரோ எழுத்துக்களும், அவை, பிறமொழி எழுத்துக்களோடு கொண்டுள்ள உறவும் (Thescript of Harappan and Mohenjodaro and its connection with other script) என்ற நூலைக் காண்க. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் ஓவிய வடிவு எழுத்துக்களால் ஆன கல்வெட்டுக்கள் காணப்பட்டன. இவைபோலும் எழுத்துமுறை,  சுமேரிய, மொழியிலும், மற்றும் ஈரான் நாட்டு, எலாமிட் மக்களின் ஆதிமுன்னோர் (proto-Elamite) மொழியிலும் எதிர்ப்படுகின்றது. ஓவிய வடிவு எழுத்து முறையாகிய, பண்டைய இவ்வெழுத்து முறைக்கு, அவை, பொதுமூலம் ஒன்றைக் கருதுகின்றனர். இது, சிலப்பதிகாரத்தில், பண்டப் பொதிகள் மீது எழுதப்படுவதாகக் கூறும் கண்ணெழுத்து அல்லது வேறு அன்று. “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி.” (சிலம்பு :5: 1.12)

16) மூன்றாவது மற்றும் நான்காவது அரச இனத்துத் தலைநகராகிய மெம்பிஸ் (Memphis), மேலை எகிப்துக்கும் கீழை எகிப்துக்கும் இடைப்பட்ட எல்லைக்கண் எழுப்பப்பட்டது. (W.J. Perry: The Growth of Civilization p. 97-98. Pelican book)

17) வேத அட்டவணை காண்க. See the Veidc Index part I. p 346-9.

18) அருள் தந்தை ஈராஸ் (Rev. Father Heras) அவர்களின் கருத்து ஈண்டுக் குறிப்பிடல் தகும். எகிப்து மற்றும் ஆப்பிரிக்க நாட்டு, ஆம் (Ham) என்பான் வழிவந்த ஆமிடிக் (Hamic) இனத்து மூலக்கருவாக அடையாளம் காணும் திராவிடர், ஊழிப் பெருவெள்ளத்துக்குப் பின்னர், சிந்து நதிக்கும், கங்கை நதிக்கும் இடைப்பட்ட பெருநிலப் பரப்பில் குடிவாழ்ந்திருந்தபோது, ஆங்கு. அதிலும் குறிப்பாகத் தென்கரையில், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட தென்கரையில், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்துக் கருவிகள் வடிவில், தங்களின் பழைய, எண்ணற்ற அடிச்சுவடுகளை விட்டுச்சென்ற கறுப்பர் இனத்து ஒரு கிளையினரான, மலேய நாட்டுக்குள்ள உருவ “நெக்ரிட்டோர்”களை (Negritres) எதிர் கொண்டனர். அவர்களின் வழிவந்தவர்கள், வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுகளில் இன்றும் வாழ்கின்றனர். ஆமெடிக் இனத்தவரோடு  கலந்துவிட்ட திராவிடக் குடிவாழ்நர், நனிமிகத் தொடக்க காலத்தில் நெக்ரிட்டோ இனத்தவரோடு கலந்துவிட்டனர். இக்கலப்பால், தோன்றிய அவர் வழிவந்தவர்கள், இன்று தென்இந்திய மக்களிடையே காணலாகும், தமக்கே உரிய உடல் அமைப்பை இயல்பாகவே பெற்றுக்கொண்டனர். குள்ள உருவம், நனிமிகக் கறுத்தமேனி (ஆமெடியர்களின் மேனிக் கறுப்பு போன்றதன்று). தட்டையான மூக்கு, சுருண்ட தலைமயிர் கி.மு. 1500 ஆண்டளவில், ஆரியர்கள், இந்தியாவுக்குள் நுழைந்தபோது, இருக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்ட தாலர் அல்லது தஸ்யூக்களாம். தங்கள் பகைவர்களிடையே, மேலே கூறியன போலும், தாம் முன்பு கண்டறியாத இயல்புகளைக் கண்டனர். இருக்கு வேதப் பாடல்களில் அவர்களை மூக்கற்றவர்கள் எனக் கூறி, அவர்களின் இழிவான அருவருக்கத்தக்க நிலைகளைச் சுருக்கமாக, ஆனால் தெளிவாகக் கூறி வைத்தனர். (New Review September. 1941).

19) அமரர் பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள், தென்னிந்திய மக்களின் பண்பாடு, மற்றும் இன இயல்புகள், தொல்லூழி காலம் முதல் இடையறவு படாமல் தொடர்ந்து வருவது என்ற கொள்கையை நிலைநாட்டும் நல்ல ஆர்வமிக்க முனைவராவர். ‘தென் இந்தியாவில் பழங்கற்கால நாகரீகம், பையப்பைய முடிவுற்றுப், புலனால் அறியப்படாநிலையில், புதிய கற்காலத்தால் மறைந்து ஒளிகுன்றி விட்டது. பழங்கற்காலம் முடிவுற்று அடுத்த பாகம் தொடங்கும்போது, பேரழிவு விளைவிக்கும் இயற்கை நிகழ்ச்சியை உணர்த்தும் நிலஇயல் சார்ந்த அல்லது வேறுவகையான குறிப்பு எதுவும் இல்லை. பொன்கலந்த மென் பாறைகளுக்குப் பதிலாகக் கடினப் படிக்கல் பாறைகளை மேற்கொண்டது, படிக்கல் பாறையால் செய்யப்பட்ட, கருவிகள் தளவாடங்களைத் தொட்டால் நனிமிக மென்மை தரும்  வகையில் மெருகேற்றும்-கலையினைக் கற்றல், காட்டுக் கொடு, நாய்களை வீட்டு நாய்களாகப் பழக்குதல், மோட்டா வகை நெல்லை விளைவித்தல் ஆகியன பழைய கரடுமுரடான கருவிகள் இடத்தில் புதிய கற்காலக் கருவிகள் தோன்றுவதற்கான, அமைதியான வளர்ச்சிக்கும், பழங்கற்கால நாடோடி வாழ்க்கையிலிருந்து, புதிய கற்கால நிலைத்த வாழ்க்கை முகிழ்த்தற்கும் வழிவகுத்தனவற்றை விளக்க முனைந்துள்ளார்.

“புதிய கற்கால யுகத்தில், விந்திய மலைச்சாரல் சார்ந்த பகுதி நீங்கலாக உள்ள, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த கிளை மொழிகள் பேசப்பட்டன: வட இந்திய, புதிய கற்காலத்தவர், திராவிட மொழிக்குடும்ப மொழிகள் என அழைக்கப்படும்மொழிகளோ, கட்டமைப்பில் ஒருமைப்பாடு உடையதும், சமஸ்கிருதம் அல்லது பிராக்கிருத மொழியோடு ஒருமைப்பாடு அற்றதும், தொல் பழங்கால மக்கள் வழங்கிய, தனித்தனிச் சொற்றொடர்களைக் கொண்ட நிலைமொழிகளிலிருந்து படிப்படியாகத் தோன்றியதுமான ஒருவகை மொழிகளைப் பேசினர்’ என மேலும் கூறியுள்ளார். அப்பேரறிவு சான்ற அவ்வெழுத்தாளர் (Journal of the Biharand Orissa Research Society Vol. XXIV, p.39-40).

இந்தக் கொள்கையின்படி, திராவிட இனம், இந்நிலத்துக்கே உரிய தொல்பெரும் பழைய இளம் தமிழர் மற்றும் அவரோடு இனத்தொடர்பான மக்கள் இம்மண்ணின் மைந்தர்கள். அவர்கள் வழங்கும் மொழிகள், அவை இப்போது எங்கே பேசப்படுகின்றனவோ அங்கேயே படிப்படியாக வளர்ந்து முழுமை பெற்றவை. தென் இந்தியாவைச் சேர்ந்த வரலாற்றுக்கு முந்திய, அங்கேயே இருந்த பண்டைக்கால நினைவுச்சின்னங்கள் பற்றிய விழிப்போடு கூடிய ஆய்வு, தொல்பழங்காலத்தில் நாகரீகம், ஒருகட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து  வைத்தது. பண்டே வாழ்ந்திருந்த மக்களோடு, வேறு நாட்டவர் அல்லது இனத்தவர்களின் தேவையில்லாத் தலையீட்டால் நேர்ந்த போராட்டம் போலும் பேரழிவு தரும் மாற்றங்களால் அல்லாமல் அமைதியான மறுமலர்ச்சி நிலையிலேயே அடியெடுத்து வைத்தது: என்ற முடிவிற்கல்லது வேறு, முடிவிற்குக் கொண்டு செல்லாது. புதிய கற்காலத்து நிலப்படத்தின் ஓர் ஆய்வு, அந்நாடு அம்மண்ணுக்கே உரிய நாகரீகம் வாய்ந்த மக்களால் நெருங்க வாழப்பெற்றிருந்தது.தங்களின் பழங்கால இலக்கியங்களில் பதிய வைத்திருப்பதுபோல், அம்மண்ணுக்கே உரியவர்களாக உரிமை கொண்டாடும் தமிழர்களைப் போலவே, அந்நாட்டுப் பிறமக்களும் தொல் பழங்குடியைச் சேர்ந்தவர் அவர் என்ற உண்மைகளை உறுதிசெய்யப் போதுமானதாம். தமிழ் மொழியின் நனிமிகப் பழங்காலத்து வளர்ச்சி நிலைகளில், புதிய கற்காலத்து நாகரீகத்திற்கான தேவைக்கு மேலும் அடையாளங்களை மட்டும் அல்லாமல் அதை அடுத்து வந்த இரும்புக் காலத்து நாகரீகப் பிறப்பையும் கண்டுபிடிக்கலாம். (Jounal of Bihar and Orissa Research Society Vol. XXIV, p. 41-42).

20) தென்னிந்திய மக்களைத் தமிழர்கள் என்றும், தமிழர்களுக்கு முந்தியவர்கள் என்றும் வகைப்படுத்தும் நிலையில், திருவாளர் டாக்டர் மக்லியன் அவர்கள் பெரும்பாலும் சரியான முடிவையே கண்டுள்ளார். வேறுபாடு இனத்தைச் சார்ந்தது அன்று. மாறாகப் பண்பாட்டைச் சார்ந்தது. ஒவ்வோர் ஊழியும் கரடுமுரடான கல்லால் செய்யப்பட்ட கருவிகள் மற்றும், கற்குவியலால் ஆன சவக்குழிக் காலம் முதல், சங்ககாலம் மற்றும் சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலம் வரையான தமிழர் நாகரீகத்தின் வளர்ச்சி, மற்றும் பெருக்கங்களைச் சுட்டிக் காட்டுகிறது. எது எப்படியாயினும், அவர்கள் வரலாற்றின் நனிமிகப் பழங்காலத்தில், இந்தியத் தீபகற்பத்திற்கு வந்து  குடியேறிய வெளிநாட்டவர் என்பதற்கான மரபுவழிச் செய்தி எதுவும் தமிழர்க்கு இல்லை. அதற்கு மாறாக, அவர்கள் இம்மண்ணிலேயே பிறந்தவர் என்பதற்கு ஆதரவான அனைத்தும் உள்ளன. திசைகளைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் பற்றிய ஆய்வு, கீழ்த்திசையை உணர்த்தும் கிழக்கு என்ற சொல், கடலை நோக்கித் தாழ்ந்து செல்லும் சாரலையும், மேலைத் திசையை உணர்த்தும் மேற்கு என்றசொல் மேற்கு மலைத் தொடர்ச்சியாம் மேட்டு நிலத்தையும் குறிக்கும். இது இந்தியத் தீபகற்பத்தைச் சார்ந்த மக்களின் கருத்துக்களோடும் நனிமிகப் பொருந்தியுள்ளது. (See V. Rangacharya op. cit. p. 70-7l).

22) தென்னிந்திய மொழிகளின் குடும்பம் ஒரு காலத்தில், ஐரோப்பிய எழுத்தாளர்களால் “தமுலியன்” அல்லது “தமுலீக்” என்ற பெயரால் குறிக்கப்பட்டது. 1856ல் வெளிவந்த, திராவிட அல்லது தென்இந்தியக் குடும்ப மொழிகளின் “ஓப்பீட்டு இலக்கணம்”. (A Comparative Grammar of the Dravidian or South-lndian Family of Languages) என்ற நூலின் முதற்பதிப்பில் திருவாளர் டாக்டர் கால்டுவெல் அவர்கள், “திராவிடன்” என்ற சொல் சில காலம் வரை, பெரும்பாலும் தமிழை மட்டுமே குறிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டு வழங்கி வந்தது. ஆனால், அது சமஸ்கிருத மொழி வல்லுநர்களால், தென் இந்திய மக்களையும் அவர்களின் மொழிகளையும் குறிக்கும் பொதுப்பெயராகவே ஆளப்பட்டது எனக் கூறியுள்ளார். தம் கூற்றிற்குச் சான்றாக, “ஆந்திர-திராவிடபாஷா” என்ற சொல்லைக் குமாரில பட்டர். தமிழ்நாடு, மற்றும் தெலுங்கு நாடுகளில் வழங்கும் மொழிகளைக் குறிக்க ஆண்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார். டாக்டர் பர்னல் (Dr. Burnell) அவர்கள், குமாரில பட்டரின் தமிழ்மொழி குறித்த தெளிவான அறிமுகம், குறிப்பிடத்தக்க ஒன்றாம், “திராவிடம்” என்ற சொல், தமிழ் எனும் பொருள் உடையதாக அவர் கொள்வது  பயன் மிகுந்தது எனக் கூறியுள்ளார். (The Indian Antiquary for October 1872). திராவிடர் கூடித்திரியர்கள் ஆவர். அவர்கள் பெளண்டரிகர், ஒட்டர், காம்போஜர், யவனர், சாகர், பரதர், பஹலவர், சீனர், கிராடர், தாரதர் மற்றும் காசர்களைப் போல, “வீர்ஸ்லா” அதாவது இழி சாதியினர் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என மனு கூறுகிறார். (X. 43-44) ஈண்டுக் கூறிய பழங்குடியினர்களுள் தென்னிந்தியாவுக்கு உரியவராகக் கூறப்பட்டவர், திராவிடர் ஒருவரே. ஆகவே, இப்பெயர் தென்னிந்தியப் பழங்குடியினர் அனைவரையும் குறிக்க எண்ணியதாகத் தெரிகிறது. கூறிய இனங்களுள், ஏதாவது ஓர் இனம் இணைக்கப்படவில்லை என்றால், அது, பெரும்பாலும், ஐத்திரேய பிராமணாவில் குறிப்பிடப்பட்டு, விஸ்வாமித்திரரின், கீழ்ச் சாதியினராகத் தள்ளப்பட்ட புண்டரர், உபரர், புளிந்தர்களோடு வகை செய்யப்பட்ட, உள்நாட்டு, தெலுங்கு பேசும் ஆந்திரராவர். அதே கருத்து மகாபாரதத்திலும் கூறப்பட்டுளது. இனத்தால் இழிந்த கூத்திரியர்களாகக் கொடுக்கப்பட்ட அந்த இரு பட்டியல்களிலும், தென்இந்தியப் பழங்குடியினராகக் குறிக்கப்பட்டவர் திராவிடர் ஒருவரே. ஆகவே, பாண்டியர், சோழர் போலும் தனித்தனிக் குலங்களைக் குறிக்கும் சொற்கள் வடஇந்தியாவில், அந்தக் காலத்தில் நன்கு தெரிந்திருந்தன என்பதை நோக்க, அச்சொல் பொதுவாகவே ஆளப்பட்டுள்ளதாகவே கொள்ள வேண்டும். ஐயத்திற்கு இடம் இல்லாமல், அதே பொருள்நிலையில்தான், ஊழிவெள்ளத்திற்குப் பின்னரும் வாழ்ந்த மனித இன முன்னோர் ஆன நோவா (Noah) என்பவனைப் போலும் இந்திய நோவாவாம், சத்திய வரதனும், திராவிடர் தலைவன் எனப் பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளான். (Muir’s Sanskrit Text Vol. 1).  23) திருவாளர் வி. ஆர். ஆர். தீகூஷிதர் அவர்களின், “தமிழ் நாகரீகம் என்றால் என்ன” (What is Tamil Culture) என்ற ஆய்வுக் கட்டுரையினைக் காண்க. (New Review: Culcutta. June 1937 Page: 513-26).

25) திருவாளர் ஆர். புரூஸ் புட்டே(R.Bruce Foote) அவர்கள், இந்தியாவின் நிலஇயல் ஆய்வுத் துறையில், 1858ஆம் ஆண்டில் சேர்ந்து, 33 ஆண்டுகள் போலும் தம்முடைய நீண்ட பணிக்காலத்தை, நிலஇயல் மற்றும் புதைபடிவ ஆய்வில் செலவிட்டார். அவர் 1863ல், சென்னைக்கு அருகில் பழங்கற்காலத்துக் கருவிகள் சிலவற்றைக் கண்டுபிடித்து இந்தியாவில் இத்துறையின் முன்னோடியாக விளங்கினார். தம் முதல் கண்டுபிடிப்பு குறித்துப் பின்வருமாறு கூறுகிறார்:

ஆங்கில நாட்டுச் சிறந்த நிலநூல் ஆய்வாளர்களாகிய திருவாளர்கள் ஜோஸப் ப்ரெஸ்டவிச் (Josep Prestwich, John Evans) மற்றும் ஹக் பால்கானர் (Hug Falconer) ஆகியோர், வட பிரான்ஸ் நாட்டில் ஓடி, ஆங்கிலக் கால்வாய்க் கடலில் கலக்கும் ‘சோம்மே” (Somme) ஆற்றுப் படுகையில் கண்டெடுக்கப்பட்ட, கடின பாறைக் கல்லைச் செதுக்கிச் செய்யப்பட்ட கருவிகளைத் தொடக்ககால மனிதன் கையாண்ட, கலைத்தொழில் சிறப்பு வாய்ந்த கருவிகளாக, முழுமையாக உறுதிசெய்தது. கடந்த நூற்றாண்டின் தொடக்க அறுபது அளவில் மனித இனத்தோற்றம் பற்றிய ஆய்வில் ஆர்வம் மிக்க ஒவ்வொருவரையும் கிளர்ந்தெழச் செய்தது.

குறிப்பிடத்தக்க, வியத்தகு இக்கண்டுபிடிப்புப் பற்றிய செய்தி, என் எண்ணங்களை அப்போது என் பணி செயல்பட்ட தென் இந்தியாவில் அவைபோலும், தொடக்க கால மனிதனின் கலைக்கான அடையாளங்களைக் காணும்  இன்றியமையாமைக்குத் திருப்பிற்று. ஆகவே 1863, மே, 30ல் சென்னைக்குத் தெற்கில் உள்ள பல்லாவரத்தில், படை அணி வகுப்புத்திடலில், இருப்புப்பாதையில் பரப்பும் செந்நிறக் கருங்கல் ஜல்லி குவித்து வைத்திருக்கும் குழியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களிடையே, உண்மையான, வெட்டிச்செய்யப்பட்ட கருங்கல் கருவிகளைக் காணநேர்ந்தபோது, அது, எனக்கும் பெரிய வியப்பாக இருந்தது என்பதிலும், உண்மையான மனநிறைவையே தந்தது. பல்லாவரத்தில் கண்டெடுக்கப்பட்டவை, உண்மையான பழங்கற்காலத்தைச் சேர்ந்தனவாம் என்ற என் மதிப்பீட்டின் உண்மை, என் நண்பரும், என்னோடு பணிபுரிபவரும் ஆகிய இளநிலை எழுத்தாளர் திருவாளர் வில்லியம் கிங் (William King) அவர்களோடு, சென்னைக்கு 40 கல், வடமேற்கில் உள்ள அட்டரம் பாக்கத்து நீரோடையில் கண்டெடுத்த மிகப்பெரிய, இவைபோலும் கலைத்தொழில் சிறப்பு வாய்ந்த பொருள்களால் உறுதி செய்யப்பட்டது. இது 1863 செப்டம்பரில்.

26) திருவாளர் ஜே. டபள்யூ. பிரீக்ஸ் (j.W. Breeks) அவர்கள், நீலகிரி மலைநாட்டில், கற்குவியல் வடிவிலான சவக்குழிகள் பலவற்றைத் தோண்டி, அவைபற்றித், தம்முடைய, முக்கிய நூலாகிய நீலகிரிமலைப்பகுதி, நினைவுச்சின்னங்களும், பழங்குடி மக்களும் மதிப்பீடு (“Account of the Primitive Tribes and Monuments of the Nilgiris”) என்ற நூலில் விளக்கியுள்ளார். தொல்பொருள் ஆய்வுத்துறையைச் சேர்ந்த, திரு. “ரே” (Rea) அவர்கள். திருநெல்வேலியில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்திய பழங்காலப் பொருள்களைச் சென்னை அரும்பொருட்காட்சி அகத்தில் குவித்து வைத்துள்ளார். (தென்பால் இந்தியாவில் உள்ள, வரலாற்றுக் காலத்துக்கு முந்திய புதையிடங்கள் (Some pre Historic Burial Places in Southern  India) என்ற திருவாளர் ரே அவர்கள் நூலையும், பல்லாவரத்தில் உள்ள பாரக்கல் சார்ந்த பொருள்களும், மண்பாண்டங்களும் நிறை கல்லறைகள் (Megalithic and Earthenware tombs at Pallavaram) என்ற நூலையும் காண்க. (J.A.S.B. Vol. IVII part No. 2 of 1885).

27) புதுக்கோட்டை மாவட்டம், கொளத்தூர் வட்டம், அன்னவாசல், மனிதனின் தொடக்க காலவாழிடம். அமரர் திரு. பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள், இந்த மாவட்டந்தான், பழங்கற்கால மனிதனின் தாயகம்; புதுக்கற்கால மனிதனின், பிணம் புதை வழக்கங்களைக் கண்டறிவதற்கு ஆராயத்தக்க மாவட்டமும் இந்த மாவட்டந்தான், என்ற அழுத்தமான கொள்கையைக் கொண்டுள்ளார். இன்றைய புதுக்கோட்டை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில், மனிதன், பழங்கற்காலக் காலம் முதல், இன்று வரை தொடர்ந்து வளமான வாழ்வு பெற்றமையை உறுதி செய்யும் அகக்சான்றுகள் கிடைக்கின்றன. (புதுக்கோட்டை நாட்டுக் கையேட்டினை “A Manual of the Pudukottai State: Revised Edn. Vol. I Page: 516-518, Vol. II. Chap xxiii. Sec. I) காண்க. இப்புதைகுழிகள் அனைத்தையும், வரலாற்றுக் காலத்துக்கு முந்தியனவாகவோ, புதுக்கற் காலத்துக்கு உரியனவாகவோ, பதிப்பாசிரியர் அவர்களால் வகைப்படுத்தல் இயலாது.

28) திருவாளர் புரூஸ் புட்டே (Bruce Foote) அவர்கள், தென்னிந்தியாவில் பழங்கற்காலத்துக் குறைகள் ஒருசிலவே உள்ளன; அவற்றுள் ஒன்றில் மட்டுந்தான், பழங்கற்கால நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன; அவை பிரஞ்சு நாட்டில் லாமாடிலின் (Lamadeleine) என்னும் இடத்தில் காணப்படும் படிவங்கள் காட்டும் கற்காலத்தைச் சார்ந்த (Magaddlinian) செதுக்கப்பட்ட எலும்புகள், குறியீடு செய்யப்பட்ட பற்கள் போன்றனவாம். பழங்கற்காலத்தைச் சேர்ந்த மரத்தால் ஆன,  கலைத் தொழில் வேலைப்பாடு அமைந்த பொருட்களும் கூடக் காணப்படவில்லை.

29) பெல்லாரி மாவட்டத்தின், ஆறில் ஐந்து பங்குப் பகுதி, கரடுமுரடான கட்டமைப்பும், இயல்மாறுபடும் தன்மையும் வாய்ந்த, கனிமம், படிகம், வெள்ளை அபிரகம், திண்ணிய கருப்பு அல்லது கரும்பச்சைக் கனிமங்கள் கலந்த அடுக்குப் பாறைகளாம் ‘கிரானிடோய்ட் (granitoid) பாறைகளாகவும், படிகம் அபிரகம் கலந்த அடுக்குப் பாறைகளாம் ‘ஜெனிஸ்ஸிக்’ (Gemissic) பாறைகளாகவும் வகைப்படுத்தப் பெறும் முதல் ஊழிக் காலத்தைச் சேர்ந்த அர்ச்சேயன் (Archaean) பாறைகளால் மூடப்பட்டுளது. இவற்றுள் மூத்தது “கிரானிடோய்ட் பாறைகள்” ‘அர்ச்சேயன்’ பாறைகளில் பெரும்பகுதி, இளம் பழுப்பு நிறம் வாய்ந்த இரும்பு கலவாப் பாறைகளாம். தார்வார் பாறைகள், நனிமிகக் கடினம் வாய்ந்த, இரத்தம் போலும் சிவந்த அடுக்குப் பாறைகளாம். சந்தூர் குன்றுகளும் செப்பு மலைத்தொடர்ச்சியும், இரத்தச்சிவப்பு அடுக்குப் பாறைகளைப் பெருமளவில் கொண்டுள்ளன. அவை, இரும்பை அதிகமாகக் கொண்டுள்ளன. சேலத்துக் காந்தம் கலந்த இரும்புப் படிவங்களிலும், அதிகமாக இரும்பைக் கொண்டுள்ளன. இந்தியாவில் உள்ள இரும்புப் படிவங்கள் அனைத்தினும் அதிகமான இரும்பைக் கொண்டுள்ளன. இரும்புத்தொழில் இப்போது இறந்துவிட்டது என்றாலும். அண்மைக்காலம் வரை, மெல்லிரும்புச் சுரங்கங்கள் தோண்டப்பட்டுப் பழைய முறையில் உருக்கப்பட்டன. சாந்துர் மலைத்தொடர்ச்சி, பொன்தொழில் அடையாளங்களே அல்லாமல், கண்ணாடி செய்யப் பயன்படும் மாங்கனிஸ் சுரங்கங்களையும் கொண்டுளது. “அர்ச்சேயன்” மற்றும் “தார்வார்” பகுதிகளில், எண்ணற்ற, உறுதி வாய்ந்த பாறைகள் உள்ளன. பொன்கலந்த பாறைகள் நிறைந்த ஓடைகளும், படிகக்கல் கலந்த பாறைகளைக் கொண்ட சுரங்கங்களும் குறிப்பிடத் தக்கவை. இம்மலைகளில் காணப்படும் பொருள், கட்டிடங்கள் கட்டப்பயன்படும் பெரிய சோப்புக்கட்டிகள் போலும் வடிவுடைய் கற்களாம். இவை ஹடகல்லி (Hadagali) மற்றும் ஹர்ப்பனல்லி (Harbanalli) போலும் இடங்களில் உள்ள சாளுக்கிய மரபு சிறிய கோயில்களில், சீராகச் செதுக்கப்பட்டுள்ளன. (Bellary District gazetteer p. 13-21). பழங்கற்கால நாகரீகம், தென்னிந்தியாவுக்குப் புதிது அன்று என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. அவை, இராஜபுதனத்து நர்மதை ஆற்றங்கரை, ஜைபூர் மற்றும் ஒரிஸா போன்ற இடங்களில், பெரும் எண்ணிக்கையில் உள்ளன. என்றாலும், அவை, பஞ்சாப், இமாலயப்பகுதி, அஸ்ஸாம், மற்றும் பர்மா போன்ற இடங்களில் காணப்படவில்லை.

இரும்பைப் பயன்படுத்தும் முறை, வட இந்தியாவிலிருந்து தென் இந்தியாவுக்கு வந்ததா அல்லது, அதற்கு மாறான நிலையிலா என்பது பற்றி வரலாற்று ஆசிரியர்களிடையே, முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. (See. Dr. Guha. The Census of India 1931. Vol. I Part III and Prof. P.T.S. Aiyangar’s Stone Age in India p.48).

30) உண்மையான இரும்புக் காலத்து மண் பாண்டங்கள். நன்கு பளிச்சிடும் வண்ணங்களும், நன்கு மெருகூட்டப்பட்ட மேல் பக்கமும் கொண்டு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க, புதுக்கற்காலத்து மண்பாண்டங்கள் வெளிறிய வண்ணமும், கரடுமுரடான மேல் பக்கமும், சிறிதே ஒப்பனையும் உடையவாம். இரும்புக் காலத்தனவும், அதன், பிற்காலத்தனவுமான இவை போலும் மண்பாண்டங்கள், மைசூர் மாநிலத்து நரசிபுரச் சங்கம் மற்றும் பிரெஞ்சுப் பகுதி மலைக்குன்றுகளிலும், பெல்லாரி மாவட்டத்து மலையம், மற்றும் கர்னூல் மாவட்டத்து “பட்பட்” பகுதியிலும் காணப்படுகின்றன. இரும்புக்காலத்திற்குமுன், பித்தளை நாகரீகக்காலம் இடம் பெறாத நாடு. இந்தியா மட்டும் அன்று. திரு. ஜே.இ. ஓஸில் (J.E.Wocel) அவர்கள் கூற்றுப்படி பால்கன் கடற்கரையை சேர்ந்த யுகோஸ்லோவீகியா நாட்டிற்கு வடக்கே உள்ள ஸ்லாவோனிய (Slavonia) மக்களும், பித்தளை நாகரீகக் காலத்தை இழந்து விட்டுப் பழங்கற்காலத்திலிருந்து, நேரே, இரும்பு உருக்கும் காலத்திற்குச் சென்று விட்டனர். சீனநாடும், பித்தளை நாகரீகக் காலம் என்பதை அறியாது எனச் சொல்லப்படுகிறது.(Brue Foote Indian pre Historic and Proto Historic Antiquities. Page : 25.)

புதிய கற்காலக் கண்டுபிடிப்புகள், பழங்கற்காலத்துக் கண்டுபிடிப்புக்களை அடுத்தடுத்து, அனந்தபூர், கடப்பா, கர்னூல் மற்றும் சில மாவட்டங்களில் பெருமளவில் காணப்படுகின்றன. (அகச்சான்றுக்குக் கடப்பா மாவட்டத்து, கருப்பொருள் களஞ்சியம் (Cuddappa District gozetteer: p. 8-20) காண்க.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேர்வராய் மலைக்குன்றுகள், சீடெட் மாவட்டங்கள். ஐதராபாத், மற்றும் பரோடா ஆகிய இடங்களில் புதுக்கற்காலத்து மண்பாண்டங்கள் நனிமிக அதிகமானவற்றை நாம் எதிர் கொள்கின்றோம். திருவாளர் புரூஸ் புட்டே அவர்கள் வரலாற்றுக்காலத்துக்கு முற்பட்டனவாய மண்பாண்டங்களைத் தாம் கண்ட 127 இடங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் 56 இடங்கள், புதுக்கற்கால இனத்தைச் சேர்ந்தனவற்றைத் தந்துள்ளன. 2 இடங்கள், புதுக் கற்காலத்திலிருந்து இரும்புக் காலத்திற்கு மாறும் காலத்தைச் சேர்ந்தவை. 60, இரும்புக் காலத்தன. ஏனை இரும்புக் காலத்துக்குப்பிற்பட்ட காலத்தவை.

31) சுடுதல், முக்கியமாக வேதவழக்காம், ஆனால் தென்இந்தியாவில், அது, நுழைக்கப்பட்ட பின்னரும், ஏனைய முறைகளும் பின்பற்றப்பட்டன, என்ற கருத்தில் சிந்தனை ஒருமுகப்படுத்தப்படல் வேண்டும். மற்றொரு முறையாகிய இறந்தார் உடலைத் திறந்த வெளியில் எறிதல், பின்வருமாறு பொருள் கொள்ளப்படுகிறது. அதர்வனசம்ஹிதா (xviii-2-34) இறந்த முன்னோர்களுக்குச் சோற்று உருண்டைகளைப் படைத்து வழிபடு நெறியில் “பரோப்தா” (தொலை விடங்களில் எறிந்து விடுதல்) மற்றும், “உத்தஹைதம்” (மேட்டுப் பாங்கான இடங்களில் எறிந்து விடுதல்) போன்றனவற்றைக் குறிப்பிடுகிறது. இறந்தார் உடலைத் திறந்த வெளியில் எறிந்து விடும் வழக்கம். ஒருவகை மாறுபட்டநிலையில், திபேத்தியர் மற்றும் பாரசீக மக்களிடையே, இன்றும் இடம் பெற்றுளது. சீன யாத்திரீகள் யுவான்சுவாங், இந்தியாவில் இறந்தார் உடலை அப்புறப்படுத்தும் முறைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்றனுள், இது ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வுக்கு உட்பட்ட புதை குழிகளுள் ஒன்று எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பதை, அதனுடன் அகப்படும் கண்டுபிடிப்புக்களின் தன்மையினாலேயே உறுதி செய்யப்படும் எனக் கூறுகிறார். புதுக்கோட்டை மாவட்டக் குறிப்பேட்டின் (Pudukottai Manual) ஆசிரியர், எதில், இரும்பு அல்லது பித்தளையாலான பொருள் எதுவும் இல்லாமல், புதுக்கற்காலக் கருவிகள் மட்டுமே கிடைக்கின்றனவோ அது. வரலாற்றுக் காலத்துக்கு முந்தியதாம். எங்கெல்லாம், தாழி மற்றும் பாரக்கல் புதை குழிகள், புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை எதையும், கொண்டிராமல், இரும்பாலான கருவிகளையும் பாண்டங்களையும் பெருமளவில் கொண்டிருக்கின்றனவோ, அவை, புதுக்கற்காலத்தை அடுத்து வந்த இரும்புக் காலத்துத் தொடக்கக்காலத்தனவாகி, வரலாற்றுக் காலத்தில் அடி இடுவனவாம். அகில இந்தியக் கீழ்க்கலைப் பத்தாவது மாநாட்டு நடவடிக்கையில் உள்ள, தென்னிந்தியாவில் இறந்தார் உடலை அப்புறப்படுத்தும் முறை என்ற என் கட்டுரையினைக் காண்க (See my paper on the Disposal of the Dead in S. India, in the Proceedings of Tenth All India Oriental Conference page: 530-533.)

32) திருவாளர் பெர்ரி (Perry) அவர்கள் கூற்றுப்படி கி.மு.3வது ஆயிரத்து ஆண்டளவிலேயே, கடல் போக்குவரத்து இந்தியாவைப் பாதித்துவிட்டது. ஆனால், பாரக்கல் புதையல்களின் பரந்து கிடக்கை, கடல்வழிகளைப் போலவே நில வழிகளையும் கருத்தில் கொள்ளவேண்டும் எனக் கருத்து அறிவிக்கிறது. மெசபடோமியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு மேலும் முந்திய காலத்திலேயே இருந்திருக்க வேண்டும். மெசபடோமியா மற்றும் எகிப்திலிருந்து இந்தியாவுக்கு அதற்கும் முற்பட்ட காலத்திலேயே இருந்தது எனக்கூறும் திருவாளர் டாக்டர் எச்.ஜெ. ப்லெயரெ (Dr. H. Pleure) அவர்கள், அல்லது எந்த ஒரு தொல்பொருள் ஆய்வாளரோடும் நாம் ஒத்துப் போதல் இயலாது.

 

 

 

 

 

வெளிநாடுகளில்
 தமிழர்பண்பாட்டுப் பரவல்

 

இன்று இரவு, வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே, தென்னிந்தியாவிலிருந்தும், தென்னிந்தியாவுக்கும் இடையில் நிகழ்ந்த பண்பாட்டுப்புடைபெயர்ச்சிகளை எடுத்து விளக்க நான் பெருமுயற்சி மேற்கொள்வேன். அது செய்வதன் முன்னர்ப், பண்டைய உலகின் குறைந்தது, அப்பழந்தமிழர்கள் உணர்ந்திருந்த, அவர்கள் இடைவிடாப் போக்குவரத்து உணர்ந்திருந்த அந்த உலகின் நிலஇயல் பற்றிய நிலைகளை, உங்களுக்குக் கொடுத்தாக வேண்டும். மேற்கில், ஆப்பிரிக்கா, மற்றும் எகிப்து, தென்மேற்கு ஆசியாவில் டைகிரஸ், யூபிரடஸ் ஆறுகளின் கீழ்ப்பகுதிப் பள்ளத்தாக்கில் கி.மு. 2700 முதல் 350 வரையும் சிறப்புத்திருந்த பழம்பெரும் பேரரசின் தலைநகராகிய பாபிலோனியா, அதை அடுத்து இருந்த நகராகிய கமர், மற்றும், மேற்கு ஐரோப்பியாவின் இரான் நாட்டுப் பர்ஷியா ஆகியவற்றையும், கிழக்கே சீனர் மற்றும் பர்மாவையும் தெரிந்திருந்தனர். தென்கிழக்கே, உள்ள கடலிடைத் தீவுக் கூட்டங்கள், ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பெருங்கடலிடைத் தீவுக் கூட்டங்களாகிய பொலினிலியாக்களைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இருந்தது. வடஇந்தியா மற்றும் இலங்கையும் தெரிந்திருந்தன.

உங்களின் ஆய்வுக்காக, உங்கள் முன் நான் எடுத்து வைக்கும் இந்த ஆய்வுக்கட்டுரையின் முடிவு, அதாவது தென்னிந்தியாதான், இன்று நாம் அழைக்கும் மத்திய தரைக் கடற்பகுதி வாழ் இனத்தவரின் (Mediterranean Race) உண்மையான தாயகம் என்பது ஏற்றுக்கொள்ளப்படுமாயின், குறிப்பிடத்தக்க இயல்பான முடிவு, மேற்கு ஆசிய நாடுகளின் பண்பாட்டிற்கும், எகிப்தியப் பண்பாட்டிற்கும், கீழைநாட்டு மூலத்தைக் கொடுப்பதாக அமையும். (De Morgan, L’ Epgypte. Asieaux temps ante historiques, J.A. cc III 1923. p. 117-159. La Prehistoric Orientala vol I and II paris- 1925-6).

காலத்தால் முந்திய வரலாறுகள் பற்றிய ஆய்வில், பிழைபடாத் துல்லிய முடிவுகளை எப்போதும் எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் பின்வரும் விளக்கங்கள் குறிப்பிடத்தக்கவாம். தென் இந்தியாவுக்கும், மெசபடோமியாவுக்கும் இடையில், தென்கடல் மற்றும் இருவழிகளாலும் தொடர்பு இருந்தது. தொடக்ககாலக் கடல் வழிச்செலவு அனைத்தும் கடல் ஓரமாகவே நடைபெற்றன. தென்னிந்தியப் பண்டைத் திராவிடர்கள், வீரம், மற்றும் அறிவு நிலைகளில் புதியன காணும் ஆர்வம் உடையவர். அவர்கள், தக்ஷிணாபத செல்வழி மூலம், இந்தியா முழுவதும் பரவியிருந்தனர். இந்தியாவின் வடமேற்கில் உள்ள சிந்துவிற்கு அவர்கள். கடல் வழியாகவே சென்றிருக்க வேண்டும். புதியன, அதாவது புதிய இடங்களைக் காணும் அவர்கள் ஆர்வ நோக்கம், நாடு பிடிக்கும் வெற்றிகள் அல்ல. மாறாகப் புதிய வாணிக நிலையங்களைக் காண்பதே. அவர்களின் வாணிகப் பொருள்களும், அன்று வரை தெரிந்திருந்த உலகில் பெரியதேவை இருந்தது. அவை, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. மிக முக்கியமான நகரங்களில் இந்த மக்கள் நிலைத்த குடியினராகி, ஆங்குத் தம் மொழிகளையும் பண்பாடுகளையும் புகுத்தினர். சிற்றாசியாவுக்கும் (Asia Minor) மத்தியதரைக்கடலுக்கும் போகும் வழியில், எகிப்துக்குச்செல்லும் ஒருவழி, அரேபியன் கடலைக் கடந்து செல்வதாம், என்றாலும், பண்டைய சுமேரிய நாட்டிற்குச் செல்லும் மற்றொரு வழி, பர்ஷிய வளைகுடாவுக்கு மேலே, நம், திருவாளர் “பிரோசஸ்” (Berosus) அவர்கள் மேற்கோள் காட்டும் ஒரு மரபு வழிச் செய்தி, அதாவது “ஒனெய்” (Oanns) என்னும் மனிதமீன், தன்னோடு நனிமிக நாகரீகக் கலைகளையும் கொண்டு, பர்ஷிய வளைகுடாவரை நீந்தி வந்தது என்ற செய்தி, (குறிப்பு.1) நாகரீகங்களின் பிறப்பிடம் இந்தியா. ஆகவே, அவ்விந்தியாவிலிருந்து, பழைய “சுமர்” (Summar) நாட்க்குக் கடல் வழிப்பயணம் இருந்தது என்ற நம் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு, நல்லதொரு சான்றுத்திட்டமாம். அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருட்களையே அல்லாமல், ஆடம்பர வாழ்க்கைக்காம் பொருள்களையும் ஏற்றிக் கொண்டு பர்ஷியா வழியாக, சுமேரியாவுக்குச் செல்லும் வணிகப் பெருங்கூட்டம், இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்தும் அடுத்தடுத்துச் செல்வதை நாம் காணலாம்.

நமக்கென ஒரு வரலாறு இருக்கிறது என உரிமை கோரும் நாளுக்கு அணித்தானதான கி.மு. பத்தாவது நூற்றாண்டில், உலகப் பெருவாணிக நிலையமாக இருந்தது, அரேபியாவின் தென் மேற்கு மூலையில் உள்ள, கிறித்துவ விவிலிய நூலில் “ஷீபா” என அழைக்கப்படும் “சபா” எனும் நகராகும். (Saba) இந்த இடத்தில்தான் இந்திய வணிகப் பெருமக்களால் பண்டப் பொதிகள் இறக்கப்பட்டன; இங்குதான் எகிப்தியர்களும், இன்றைய சிரியாவும், பாலஸ்தீனமுமான பொய்னிலிய நாட்டவரும் (Phoenicians) (குறிப்பு 2) இந்திய வணிகர்களைச் சந்தித்துத் தங்கள் பண்டப் பொருள்களை இந்தியப் பொருள்களுக்கு மாற்றிக்கொண்டனர். சபாநகரத்து வணிகர்கள், இடைத் தரகர்களாகச் செயலாற்றி, நடைபெறும் பல்வகை வாணிகங்களில் கிடைக்கும் அங்கத்தின் பெரும்பகுதியைத் தமதாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. அப்போது செல்வாக்குக்கு வந்துவிட்ட சாலமன் கூடச் சிறந்த அறிவாளன். ஆகவே, இவ்விடைத் தாள்களை அறவே ஒழித்துவிட்டு, இந்தியா வாணிகத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுவிட்டான். இது நடைபெற்றது பொன் வளம்மிக்க “ஓய்ஹரி” (Ophir) மற்றும், பண்டைய பொய்னிசியாவும் இன்றைய லெபனானுமான நாட்டின் கடல் துறைமுகமாகிய டையர் (Tyre) ஆகிய நகரங்களில் ஆம், இது, இந்திய வாணிகப் பெருக்கத்தை இயல்பாகவே பெருக்கியிருக்கும். தென் இந்தியாவுக்கும் பாரசீகக் கடற்கரை மற்றும் ஏடனுக்கும் இடையிலான வாணிகப் பெரும் நடிவடிக்கை, மேற்கு ஈரான் நாடாகிய சுசா (Susa) நாட்டு நகராகிய “அச்செமெனிட்” (Achaemenid) நகரம், ஈரான் நாட்டுப் பழம்பெரும் பேரரசின் தலைநகராக இருந்தபோது நேர்ந்த அழிபாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பானம் பருகும் கிண்ணங்கள் மற்றும் இந்திய நாட்டுச் சங்கு வளையல்கள் ஆகியன, பொருள்மிக்க அகச்சான்றுகளாம். இந்தியத் தேக்கு மரம், பிரிட்டானிய “நிமி ரெளட்” (Nimroud) மற்றும் யூப்ரடஸ் ஆற்றங்கரையில் உள்ள “உர்” (Ur) ஆகிய இடங்களில் உள்ள அழிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய “லகாஷ்” நாட்டின் நகராகிய டெல்லோ (Tello) நகரத்தில் சங்காலான அணிகள் காணப்பட்டன. (குறிப்பு 3). பாரசீக மன்னன் டாரியஸ் (Darius), இஸ்ரேல் நாட்டின் கி.மு. 10வது நூற்றாண்டைச் சேர்ந்த காலத்து அரசன் சாலமனைக்காட்டிலும் (Soloman) துணிந்து வினையாற்றத் தயங்காதவன். நிலவழி வாணிகத்தில் உள்ள நடைமுறை இடர்ப்பாடுகளை அவன் உணர்ந்தான். இந்தியாவை மத்தியதரைக் கடற்பகுதிகளோடு இணைக்கும் ஒரு குறுகிய வழியைக் காண விரும்பினான். அதனால், வருங்கால வளர்ச்சியில் எகிப்தியப் பேரரசன். “பார்வோன் நெக்கே” (Pharoah Necho) தொடங்கி வைத்த, சூயஸ் கால்வாயை வெட்டி முடிக்கும் பணியில் வெற்றி கண்டான். கிரேக்க மக்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், மயில்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததும் குறிப்பிடத் தக்கது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் பாபிலோனியாப் போக்குவரத்தைப் “பவேறு ஜாதக்” கதையும் (Bavertialaka) உறுதி செய்கிறது. (குறிப்பு:4).

தென்னிந்திய வாணிக வரலாற்றைத் தொடர்ந்து காண்பதாயின், உரோம் நாட்டு வரலாற்று எழுத்தாளன் பிளைனி (Piny) அவர்கள் விளக்கும் உரோம் நாட்டோடான கடல் வாணிப அகச்சான்று நமக்கு உளது. உரோமர்கள் நறுமணப் பொருள்கள், நறுமண எண்ணெய்கள், மிளகு, முத்து மற்றும் நவமணிகளுக்காகச் சென்றனர். இவை அனைத்தும் தென்னிந்தியப் பொருள்களாம். இவற்றிற்கு விலையாக உரோமப் பொன் நாணயங்களையே தந்தனர். தென்னாட்டுப் பல மாவட்டங்களில் எண்ணற்ற உரோம நாணயங்களைக் காணலாம். உரோமப் பேரரசின் கருவூலத்தை ஆண்டு தோறும். ஐந்து லட்சம் எடையுள்ள பொற் காசுகளை, இந்தியா வற்றச் செய்துவிட்டது எனப்பிளைனி அவர்கள் கூறவில்லையோ? (குறிப்பு. 6) கிரேக்க நாட்டைச் சேர்ந்த நிலநூல் ஆய்வாளர் திருவாளர் ஸ்ட்ராபோ (Strabo) அவர்கள். கி.மு. 63க்கும், கி.பி. 64க்கும் இடையில் செங்கடல் வழியாக நடைபெற்ற எகிப்து நாட்டுடனான வாணிக வளர்ச்சியை விளக்கியுள்ளார். இவ்வாணிகம் தொடர்பாகப் பண்டைச் சேர நாட்டுத் தலைநகரம் முசிறி, மங்களுர், மற்றும் குஜராட் ஆகிய நகரங்களில் முக்கியத்துவம். திருவாளர்கள். “செங்கடற் செலவு” என்ற நூலின் ஆசிரியர். பெரிப்பிலஸ், பிளைனி மற்றும் கிரேக்க நிலநூல் ஆய்வாளர் தாலமி ஆகியோரால் குறிப்பிடப்பட்டுள்ளது. குஜராத்திலிருந்தும், எகிப்திலிருந்தும் வந்த கப்பல்கள் ஆங்குக் காணப்பட்டன. கி.பி. நான்காம் நூற்றாண்டில், உரோமப் பேரரசின் வீழ்ச்சியோடு வாணிக உறவிலும் சோர்வு ஏற்பட்டது. அந்நிலையில் தென்இந்திய வாணிகம், மீண்டும் அராபியர் கைக்கு மாறிவிட்டது. போர்த்துகல் நாட்டவரும், அந்நாட்டுக் கடலோடியுமாகிய மார்க்கபோலோ அவர்கள் காலம் வரை, இந்தியப் பெருங்கடல்களில் கப்பலோட்டத்தை அரேபியர்களே தொடர்ந்து மேற்கொண்டனர்.

இந்த வாணிபங்களெல்லாம் முக்கியமாக, மேற்குக் கரையைச் சேர்ந்ததாக, அதற்கு ஈடான, வாணிகம், அதனினும் அதிகமாகப் பெரும்பாலும் பண்டைக்காலத்தில், இலங்கை வழியாகவும், பிற்காலத்தே நேரிடையாகவும், பசிபிக்கடல் தீவுகளாகிய, ஆர்ச்சிபெலகோ (Archipelago) பொலனீஷியா (Polynesia) மற்றும் மலேசியா (Malaysia) ஆகிய நாடுகளோடு இருந்தது. இத்தொடர்புகள் எல்லாம், இயல்பாகவே, இந்தியத் தீபகற்பத்தின், அதாவது தென்னிந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்குக் கடற்ரைகளில் இருந்து ஆகும். இப்போக்குவரத்துக்கள், ஆசியாவின் மற்றப் பகுதிகள், ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பாவோடு கொண்டிருந்த போக்குவரத்துக்கள் போலவே பண்பாடு பற்றியதும், வாணிகம் பற்றியதும் ஆம். திருவாளர் பி.டி.எஸ் அவர்களின் “இந்தியாவில் கற்காலம்” (Stone Age in India), (பக்கம். 43) காண்க.

நம் ஆய்வைச் சிறிதுகாலம்வரை கிழக்குக் கடற்கரையை ஒட்டிய வாணிகத்திலேயே வரையறுத்துக் கொண்டு நோக்கின், வாணிகம் மற்றும் ஏனைய போக்குவரத்துக்கள், பழங்காலம் தொட்டே பெருமளவில் இருந்தன. இலங்கை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், மற்றும் பொதுவாகப் பசிப்பிக்கடல் தீவுகளில், தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒற்றைப் பாய்மரக்கப்பல்களைப்போல் அல்லாமல், இரட்டைப் பாய்மரக்கப்பல்களை உடைய பொலினீஷியாவோடு வாணிகத் தொடர்பு இருந்தது. ஆந்திரர் மற்றும் குறும்பர்களின் பழங்கால நாணயங்கள் இரண்டு பாய்மரக் கப்பல்கள் சின்னல்களையே கொண்டுள்ளன. ஒற்றைப் பாய்மரக்கப்பல் சின்னம் இல்லை என்பதையும் இடையில் குறிப்பிடுகின்றேன். அவை, கடல் வாணிபம் இருந்ததை அறிவுறுத்துகின்றன. அதே கால அளவில், தென்இந்தியா, மலேசியாவுடனும், வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. (குறிப்பு. 7) இந்நாடுகள் உடனான கடல் வாணிகத்தின் பயன், பசிபிக் நாட்டுத் தென்னை, கள் இறக்கல், வெற்றிலை தின்னல் ஆகியன நுழைதலாம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. எது எப்படி ஆயினும், கூறிய அனைத்தும், சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் பனைமரக்கள், அக்கால மக்கள், நனிமிக விரும்பிய ஒன்றாம். தென்னிந்தியத் தேவாங்க இனத்து நெசவாளர்கள், விஸ்வகர்மாக்கள், கோவை மாவட்டத்து ஒக்கியர்கள் (Okkyians) திருவாங்கூர் நாட்டுப் பிஷரோடிகள் (Bisharodis) மற்றும் நீலகிரியைச் சார்ந்த இருளர்கள் ஆகியோர்களிடையே இன்றும் வழக்காற்றில் உள்ள, இறந்தார் உடல்களை, உட்கார்ந்த நிலையிலேயே புதைக்கும் முறை பொலினீஷியாவில் உள்ளது: தென்னிந்தியாவில் உள்ள நீண்ட பிடியில் பொறுத்தப்பட்ட மரம் செதுக்கும் வாச்சிற்கு இணையான ஒன்று, பொலினீஷியா மற்றும் ஆர்ச்சிபிலகோத் தீவுகளில் உள்ளன. தொடக்க காலம் படைக்கலமாகிய, தானே தாக்கித் திரும்பும் ஆயுதமும் (Boomerang) அதே வழியில், தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் கண்டுபிடிப்பானதும் தென்னிந்தியப் பழைய கடல் மாலுமிகளால் கொண்டு வரப்பட்டதுமாம். (குறிப்பு. 8) மத்திய இந்தியாவில் உள்ள பஹில்லர் (Bhils) எனும் இனத்தவர், வளைந்த வடிவுடைய தானே தாக்கித்திரும்பும் படைக்கலங்களை ஆளும்போது, மதுரை மாவட்டத்து மறவர்கள், பிறைத்திங்கள் போலும் வடிவுடையதும், முனையில் குமிழ் போலும் கைப்பிடி உடையதுமான அப்படைக்கலத்தைக் கொண்டுள்ளனர். இதில் வியப்பிற்குரியது என்னவென்றால் அதே படைக்கலக் கருவி, ஆப்பிரிக்கா நாட்டு நைல் நதிப் பள்ளத்தாக்கிலும் உளது. தென்னிந்தியா மூலமாக அல்லது. இது எகிப்துக்கு எவ்வாறு சென்றிருக்க முடியும்? பெரும்பாலும் கற்காலத்திலிருந்தே, தென் இந்தியா எகிப்தோடு தொடர்பு கொண்டிருந்தமைக்கான, மறுக்க முடியாத அகச் சான்றுகளுள் இதுவும் ஒன்று. எகிப்தில் முடியாட்சி முறைக்கு முற்பட்ட காலத்தில், தென்இந்திய மட்பாண்டங்கள் இருந்தமையினை, முன்பே சுட்டிக்காட்டியுள்ளேன். ஈண்டு நாம் அறியக்கூடியது என்னவென்றால் எப்போதெல்லாம் தன் தேவைகளுக்குப் பொருந்துமோ, அப்போதெல்லாம் வேற்று நாட்டுப் பண்பாடுகளை மேற்கொண்டுள்ளது தென்னிந்தியா என்பதே. வெளி உலகிற்கு நிறையக் கொடுத்திருக்கும் அதே நிலையில், ஆங்குள்ள சிலவற்றைத் தானும் எடுத்துக் கொண்டுளது.

வரலாற்றுத்துறை மற்றும் வாணிகத்துறை தொடர்பாக முழுமையாக ஆராயப்பட்டிருக்கும், சுமத்தரா, பாலி, போர்னியோ, மலையா, சயாம், ஜாவா, சம்பா, கம்போடியா, மற்றும் கிழக்கிந்தியத் தீவுக் கூட்ட நாடுகள் ஆகிய கிழக்கிந்தியத் தீவுகள், இந்தியாவால் அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவால் செல்வாக்குப் பெற்றுவிட்டன. இந்நாடுகளில் பெரும்பாலனவற்றில் கிறித்து ஆண்டு பிறப்பதற்கு முன்பே, இந்துக்களின் முறையான குடியிருப்புகள் இருந்தன (குறிப்பு, 9) காண்க. அமெரிக்க நாகரீகம் அதாவது ஒரு அமெரிக்க நாட்டவராகிய மாயர் என்பாரின் பண்பாடு, கிழக்கிந்தியத் தீவு மக்களால் செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும். இம்முடிவை நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் அதே நிலையில் “இந்து அமெரிக்கா” (Hindu America) என்ற அண்மைக்கால ஆய்வு, நனிமிகப் பழங்காலம் தொட்டே, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரிடைத் தொடர்பு இருந்ததைக் காட்டுகிறது. வடஅமெரிக்காவில் ஐக்கிய நாடுகளுக்குத் தெற்கில் உள்ள மெக்ஸிகோ நாடு, இந்திய சமுதாய மற்றும் சமயங்கள் சார்ந்த நம்பிக்கைகைள் சிலவற்றை இன்னமும் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. (குறிப்பு. 10)

தொலைதூர இந்தியா எனப்படும், இந்தோசீனாவில் உள்ள சுவர்ண பூமியை, ஜாதகா கதைகள் குறிப்பிடுகின்றன. இந்தத் தீபகற்பத்தில், தென்னிந்தியர்களின் செயல்பாடுகளைப், பெரிபுலுஸ் குறிப்பிடுகிறது. புகார் அல்லது காவிரிப் பூம்பட்டினம், அதற்கு ஈடான பெருத்த வாணிக நிலையம் ஆகும். பட்டினப்பாலை குறிப்பிடும் “காழகம்” என்பது, தென்கிழக்கு சுமத்ரா நாடாகிய பூரீ விஜயப் பேரரசில் உள்ள ஒருநாடாம் “கட்ஹா” (Kataha) என்ற நகராக அடையாளம் காணக்கூடும். இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தொண்டி, மதிக்கத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஒரு பெருவாணிப நிலையமாம். ஜாகாவில், பல்லவர் காலத்து எழுத்துக்கள் ஆளப்பட்டிருந்தமைக்கான உறுதியான அகச்சான்று உளது. பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜாவாவைத் தலைநகராகக் கொண்ட சைலேந்திரப் பேரரசோடு, சோழர்கள், அரசியல் உறவுகளை மேற்கொண்டிருந்தனர். தாய்லாந்து என இப்போது அழைக்கப்படும், பண்டைய சையாம் நாட்டில் ஏழாவது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அது தென்னாட்டிலிருந்து சென்ற ஒரு வணிகக் குழுவைக் குறிப்பிடுகிறது. கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்தே இந்தோசீனாவில் உள்ள ப்யூனன் (Fufian) நகரம், தென்னிந்தியர்களால் குடிவாழப்பெற்றிருந்தது. மரபுவழிச் செய்தி ஒன்று, “கெளண்டின்ய” என்ற பெயர் உள்ள பார்ப்பனன் ஒருவனை, அந்நாட்டு முதல் அரசனாக அரியணையில் அமர்த்துகிறது. கம்போடியத் தலைநகர்க்கு அணித்தாக உள்ள “அங்கோர் வாட்” (Angkor Vat) எனும் இடத்தில் திராவிடக் கலைத்தொழில் அமைந்து விஷ்ணு கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சம்பா நாட்டு முதல் அரச இனம், கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னரே, தென்னிந்தியர்களால் நிறுவப்பட்டது என நம்பப்படுகிறது. வாணிபத் தொடர்பை அடுத்து, அரசியல் வெற்றிகள் தொடர்ந்தன. ஆகவே, இந்தச் செய்தி மறுக்க முடியாத ஒன்று.

 

சைனா

தென்னிந்திய வாணிபத்தின் ஒருபகுதி, பெரும்பாலும் தொடக்க காலத்திலிருந்தே சைனாவோடு நடைபெற்று வந்தது. தொடக்ககால இவ்வாணிபத்திற்கு ஆதரவான அகச்சான்றுகள் மிகக்குறைவாக இருக்கும் நிலையில், கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு வரும் போது, நாம் உண்மையான அடிப்படையில் நிற்கின்றோம். கி.பி. நான்கு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை, இந்தியாவுக்கும் சைனாவுக்கும் இடையில், முறையான கடல்வழி வாணிகம் இருந்து வந்துளது. (Yule Cathay and the way Thither) “சீன தேசமும் அதற்கு அப்பாலும்”, சீன நாட்டுத் தட்டையான அடிப்பகுதியுடைய மரக்கப்பல்கள் வந்து செல்லும் முக்கிய இடங்கள், காலிகட், கொய்லோன், நாகப்பட்டினம் மற்றும் மகாபலிபுரம் முதலாம் கடற்கரைப் பட்டினங்களாம். பல்லவ நரசிம்மவர்மன், சீன வர்த்தகர்கள், சைனமுனிவர்களுக்காக, நாகப்பட்டினத்தில், “சீன பகோடா” (China Pagoda) என்ற சீனக் கோயில் ஒன்றைக் கி.பி. ஏழாவது நூற்றாண்டில் கட்டினான். இது, தென்னிந்தியப் பேரரசர்களின் சமய ஒருமைப்பாட்டு நிலையைக் காட்டுகிறது. இதனினும், சிறப்பானது. கிறித்துவ ஆண்டு தொடக்கத்திலிருந்தே, புத்தமதக் கோட்பாடுகளை எடுத்து விளக்கவும், அம்மதத்தை நடைமுறையில் பரப்பவும், சீனாவுக்குச் சென்ற தென்னிந்திய பெளத்த முனிவர்களின் செல்வாக்குதான். “இயான் சியாங்” (Huien Tsiang) வருகை தந்தான். இட்சிங் (ltsing) அவர்காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த பல பயணிகளைக் குறிப்பிடுகிறான். கி.பி. ஆறாவது நூற்றாண்டு போலும் தொடக்க காலத்தில் இந்தியாவிலிருந்து சென்றவர்களுள், போதிதர்மர் எனும் சமயப் பெயர் பூண்டு, சீனாவுக்குச் சென்று, சீனமொழியில். “ஜென்” (Zen) (குறிப்பு 11) என அழைக்கப்பெறும் தத்துவத்தைப் பிரசாரம் செய்தவனாகிய, காஞ்சியைச் சேர்ந்த சிற்றரசனும் ஒருவன், கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டை நோக்கினால், கி.பி. 1374 ஆம் ஆண்டில், விஜயநகர அரசன் முதலாம் புக்கன், அப்போது சீனப் பேரரசனாக விளங்கியவனுக்கு நட்புறவுத் தூது ஒன்றை அனுப்பியதைக் காணலாம். இவ்வகையால், சீனாவுடனான தென்னிந்தியப் போக்குவரத்து, வாணிகத் தொடர்பானது மட்டும் அன்று; பண்பாட்டுத் தொடர்பானதும் கூட.

 

இலங்கையும் தென்னிந்தியாவும்

 

கடலுள் அமிழ்ந்து போன பழைய பெருநிலப் பரப்பிலிருந்து இலங்கை துண்டிக்கப்பட்டுவிட்டது என்றாலும், இலங்கையோடு தென்னிந்தியா கொண்டிருந்த உறவு, துண்டிக்கப்படாமல் தொடர்ந்து இருந்தே வந்தது. (குறிப்பு: 12) இராக்கதர் ஆட்சி, இலங்கையிலிருந்து, தக்ஷிணம் முழுமையும், மற்றும் தென்னிந்தியா முழுமையும் அதற்கு மேலும், கொள்ளைக்காரர்களாகிய இராக்கதர்களிடமிருந்து, அமைதி விரும்பும் நாட்டு மக்களைக் காத்தற் பொருட்டுத் தன் இளம்வயது மகன் இராமனை அனுப்புமாறு தசரதனை, விஸ்வாமித்திரர் வேண்டுமளவு, தசரதன் நாடாகிய அயோத்திவரையும் பரவி இருந்தது. இலங்கை மீது இராமர் எடுத்த படையெடுப்பும் அதன் பின்விளைவுகளும் அனைவரும் அறிந்ததே. அப்பழங்குடியினர்களின் அழியா உயிர் வாழ்க்கை, கி.மு.300ல் கங்கைக்கரைப் பேரரசன் சீயபாகுவின் மகன் விஜயன், இலங்கையில் அடியிடும் வரையும் இருந்தது. இவர்கள் உலக அரங்கிலிருந்தே மறைந்துவிட்ட ராக்கதர்கள் ஆவர். இலங்கையில் உள்ள வெட்டர்கள் (Veddhas) பெரும்பாலும், பண்டைய இராக்கதர்களின் வழிவந்தவராதல் கூடும். புத்தமதம் தென் இந்தியாவுக்கு இலங்கையிலிருந்து கிறித்துவ ஆண்டுத் தொடக்கத்தில் வந்ததாக நம்பப்படுகிறது. (குறிப்பு.13) இக்காலம் முதல் நட்புறவு இருந்ததாகத் தெரிகிறது. சோழ அரசன் கரிகாலன், தன் பாசனப் பணிக்காக இலங்கையிலிருந்து நூற்றுக் கணக்கான பணியாளர்களைக் கொண்டுவந்து பணியில் அமர்த்தினான் எனச் சொல்லப்படுகிறது. இலங்கை அரசன் கஜபாகு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், செங்குட்டுவன், சேரர் தலைநகரில், பத்தினிக் கடவுளுக்கு எடுத்த விழாவிற்கு வந்திருந்தான் எனச் சொல்லப்படுகிறது. ஆறாம் நூற்றாண்டு வரை, அமைதியான நட்புறவு இருந்து வந்துளது. இக்காலம் முதல் 8வது நூற்றாண்டின் கடைசி வரை, பல்லவர்கள் இலங்கைமீது, பலமுறை படையெடுத்து வெற்றி கொண்டான். இது பாண்டியர்களால் தொடரப்பட்டு, இலங்கை அரசன் முதலாம் சேனன் காலத்தில் இலங்கைத் தலைநகர் கைப்பற்றப்பட்டது. ஆனால் இரண்டாம் சேனன் தன் பங்காகப் பாண்டியர் தலைநகர் மதுரையை அழித்தான். பராந்தக சோழன், மதுரையை வெற்றி கொண்டபோது, இராஜசிம்ம பாண்டியன், இலங்கையில் அடைக்கலம் புகுந்தான். இலங்கை மீதான சோழர் படையெடுப்பு ஒன்று இருந்தது. ஆனால் வெற்றி இல்லை. முதலாம் இராஜராஜன், வடஇலங்கையை வெற்றி கொள்ளும் வகையில் அது விட்டு வைக்கப்பட்டது. முதலாம் இராஜேந்திரன், சோழ அரசை இலங்கைத்தீவில், நல்ல வலுவாக நிறுவினான். ஆனால், முதலாம் குலோத்துங்கன், சோழர் ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொள்ளும் முன், சோழ நாட்டில் இருந்த அரசியல் குழப்பத்தைப் பயன் கொண்டு இலங்கை அரசன் விஜயபாகு, கி.பி. 1070 தன்னைத் தனியரசன் ஆக்கிக்கொண்டான். இலங்கையில் தென்னிந்திய அரசர்களின் செல்வாக்கு எத்தகையதாக இருப்பினும், பண்பாட்டுச் செல்வாக்கு மட்டும் அழிவுற்றுப் போகாது வலுவாக இருந்துவந்தது. தன்னுடைய கலை, கட்டிடக் கலை, மற்றும் இலக்கியங்களைக் கற்றுக்கொள்ளக் காலமெல்லாம் தென்னிந்தியாவின் காலடியில் அமர்ந்திருந்தது இலங்கை. இலங்கை முழுவதும் பரவலாகக் கிடைக்கும் பத்தினி தேவி வழிபாடு மற்றும் கடவுள் திருமேனிகள் ஆங்கு இடம்பெற்றுவிட்ட தென்னிந்தியாவின் செல்வாக்கைத் தெளிவாக உணர்த்துகின்றன. சைவ சமயமும், சைவ நாயன்மார்களும், அங்கு நிலைத்த இடம் பெற்றுவிட்டனர். மாணிக்கவாசகர் காலத்தில், அதாவது கி.பி. 9வது நூற்றாண்டில், இலங்கையை ஆண்டுகொண்டிருந்த, புத்தமத அரசன் ஒருவன் சிதம்பரத்திற்கு வந்து சைவனாக மாறிவிட்டான். என ஒரு மரபுவழிச் செய்தி உறுதிப்படுத்துகிறது. இந்நிகழ்ச்சி, வட இலங்கையில், தமிழரசின் தோற்றம் வளர்ச்சிகளின் தொடக்க நிலையாம் எனக் கொள்ளலாம். (குறிப்பு-14) 1344ல் இலங்கைக்குச் சென்றிருந்த அரேபிய யாத்திரீகள் இபன் பதுதா (Ibn Batuta) இலங்கையை ஆண்டிருந்த தமிழ் அரசன், பர்ஷிய மொழியில் சிறந்த அறிவு வாய்க்கப் பெற்றிருந்தான் எனப் புகழாரம் சூட்டியுள்ளான். பிற்காலத்தே, இலங்கை, விஜயநகரப் பேரரசின் ஓர் அங்கமாகிவிட்டது. அக்காலம் முதல், அது தமிழ் நிலமாகவே இருந்து வந்துளது. இக்காலை, யாழ்ப்பாணமும், இலங்கையின் வடபகுதி அனைத்தும் சில குடியேறியவர்கள் தவிர்த்து, முழுவதும் தமிழர்களையே கொண்டுள்ளன.

ஆசியாவின் தென்மேற்கில், டைகிரஸ், யூபிரடஸ் ஆறுகளின் இடைப்பட்ட நாடாகிய மெஸ்படோமியாவில் வழங்கப்பெறும் “எலம்” (Elam) என்ற சொல், பெரும்பாலும், அங்கே குடிவந்தவர்களும், அந்நகரின் வளர்ச்சிக்குப் பொறுப்பானவர்களுமான இலங்கையர் கொடுத்ததாகத் தெரிகிறது. காரணம், இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும், இலங்கை, ஈழம் என அறியப்படவில்லையா? ஈழத்து மக்கள், பண்பாட்டு நிலையில், ஆசிய ஆப்பிரிக்கப் பண்பாடாம் செமிடிக் பண்பாட்டினார் அல்லர் மாறாகப் பாபிலோனியாவைச் சார்ந்த சுமேரியப் பண்பாட்டினர் ஆவர். அதே வழியில், சிற்றாசியா (Asea-Minor) நாட்டின் தெற்கே உள்ள நனிமிகப் பழைய நாடாம் “லிஷியா” (Lycia) வை அடுத்துள்ள “கரியா” (Caria) என்ற இடப்பெயரும், கேரள நாட்டவர், ஆங்குக் குடியேறிய பின்னர், “சேர” (Cera) என்ற சொல்லின் வடிவாம். வளைகுடாவை அடுத்து, ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியாம், சோமாலி நாட்டுச் சோமாலி மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான மொழி ஒருமைப்பாடு குறிப்பிடத்தக்கதாம். உலகப் பண்பாட்டிற்குப் பண்டைய திராவிடப் பண்பாடு அளித்த மதிக்கத்தக்க பங்கு, திராவிட மொழியினதாம். ஒரு சில மொழிகள் தவிர்த்துச். சொல்லோடு சொல், இடையில் எத்தகைய இடையீடுமின்றி இணையும் இயல்புடைய மொழிக் குடும்பங்கள் (agglutinative dialects) தங்கள் தாய் மொழிக்குப் பழந்தமிழ் மொழியை நோக்கியுள்ளன. திராவிட மொழியின் தொண்டு, பேச்சு வழக்கற்றிருந்த மக்களுக்குப் பேச்சுக் கற்றுக்கொடுத்ததாகக் கொள்ளலாம் அல்லவா? தொல் பழங்காலத்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவிய பண்பாடுகள் பற்றிய ஓர் ஒப்பீட்டு ஆய்வு, தென் இந்தியாவில் உள்ள அமைப்புகளுக்கும் நாகரீகம் பெற்றிருந்த அன்றைய உலகின் ஏனைய பகுதிகளில் இருந்த அமைப்புகளுக்கும் இடையில் இருந்த இன உறவு, ஒருமைப்பாடுகளைத் தொடர்ந்து, நான் எடுத்துக்காட்ட இருப்பதுபோல், ஐயத்திற்கு இடனின்றி உணர்த்தும். இரண்டும் துல்லியமாக ஒரே மாதிரியாக இருக்கும் அந்த நிலைக்கு, ஒருவர்க்கொருவர் பரிமாறிக்கொண்டிருந்திருக்க வேண்டிய அடுத்தடுத்து மேற்கொண்ட தொடர்புகளையே காரணம் ஆக்குதல் வேண்டும். வேற்று நாட்டவர் பண்பாடு, நமக்கே உரிய நம் பண்பாடுகளுக்கு, ஊழிக்கு ஊழி தொடர்ந்து அதன் தனித்தன்மைக்கு – சென்னை மாநிலத்திலிருந்து வேற்று நாட்டில் குடிபோய் இருப்பவரிடையே, இன்றும் குறிப்பிட்டுக் காட்டுமளவு இடம் பெற்றிருக்கும் தனித் தன்மைக்கு எவ்வித ஊறும் விளைக்காத வகையில் வளப்படுத்தியிருப்பது இயல்பானதே. 1931ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி, 25 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில், அதிக எண்ணிக்கையில் இலங்கை, மலேயா, மாருதியஸ், தென் ஆப்பிரிக்கா நாடுகளில் வாழ்கின்றனர். அவ்வாறு சென்று வாழும், அச்சென்னைவாசிகள் பற்றி அந்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது; “குடும்பம் தாயகத்திற்குத் திரும்புதல், அவர்களிடையே பொதுவான இயல்பு. தங்கள் வீட்டோடும், மூதாதையர் வழிவந்த தங்கள் நில உடைமைகளோடும் நீண்ட தொடர்பு கொண்டுள்ளனர். சமய வழிபாடு போலும் தனக்கே உரிய அனைத்தையும், சென்ற நாடுகளில் சிறிதும் மாறுதலுக்கு உள்ளாகாமல் தொடர்ந்திருக்கும் வகையில் அவன் கொண்டுள்ளான். சாதி வேறுபாடு, ஐயத்திற்கு இடமில்லாமல் தளர்ந்தே உளது. என்றாலும், சாதி ஒருமைப்பாட்டின் பங்கு. எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் சிறிதளவே ஆம். எந்தச் சென்னைவாசியும், தன் தாயகத்தில் சார்ந்திருந்த சாதித் தொடர்பைவிட்டுக் கொடுப்பதில்லை. தாயகம் திரும்பியதும், தன் பழைய இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ளவே விரும்புகிறான். மேற்கொண்ட தொழில் எதிர்பார்ப்புக்குக் குறைவான பயனையே அளிக்கிறது. மிகப் பெரும்பாலோர் தங்கள் தாயகத்தில் வழிவழியாக மேற்கொண்டிருந்த உழவுத் தொழிலுக்கே செல்கின்றனர். வீடுகளில் எடுபிடி வேலைகளுக்குச் செல்வது, இந்தியாவில் அவ்வேலை செய்தவர்களே. வணிகர்கள், இந்தியாவிலும் பெரும்பாலும் அத்தொழில் புரிந்தவர்கள், சென்னையிலிருந்து குடிவாழச் சென்றவர்கள், தங்களோடு, தங்களுக்கே உரிய உலகை உடன் கொண்டு சென்று. ஆங்குத் தங்களைச் சூழ அமைத்துவிட்டனர்.” (பக்கம் 72)

தென்னிந்தியாவுக்கே உரிய பல தனிச் சிறப்புகளைச் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து மற்றும் கிரீட் ஆகிய நாடுகளில் உள்ள, கைவண்ணப் பொருட்களிலும், கலைகளிலும், சமய, சமுதாயப் பழக்க வழக்கங்களிலும் காணலாம். ஏனைய தொல் பழங்கால நாடுகள் பற்றிச்சொல்லத் தேவை இல்லை. இன்று இரவு, அவற்றுள் சில பற்றிச் சுருக்கமாக எடுத்துக் கூறுகின்றேன். தென்னிந்தியாவில், பழங்காலத்தே தெரிந்திருந்த தொழில்களில் முதல் இடத்தைப் பெற்றது. மீன்பிடி தொழில் மீன்பிடித்தலுக்குக் கட்டுமரங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தன. கனத்த நீண்ட மரத்துண்டங்கள் இரண்டு அல்லது மூன்று, தென்னங்கயிறுகளால் பிணிக்கப்பட்டு, பிளந்த மூங்கில் கழிகள் துடுப்புகளாகப் பயன்படுத்தப்படும். கட்டுமரப்படகும், வள்ளம் எனப்படும் சிறுபடகும் இருந்தன. வளர்ந்துவந்த வாணிக ஆர்வத்தால் படகு கட்டும் தொழில், பெருமளவில் மேற்கொள்ளப்பட்டது. (குறிப்பு-16) படகின் மாதிரிகளும் பலப்பல இடத்திற்கு இடம் வேறுபட்டன. மலபார் நாட்டு ஈர்க்கும் சிறு படகுகள், பாம்பு வகைப் படகுகளும், கோடிக்கரைக் கள்ளத் தோணிகளும், இவைபோலும் பிறவும் உள்ளன. இவையெல்லாம், பண்டைய கட்டு மரங்களில், அழியாது இருப்பனவாம்; சிலப்பதிகாரம், வடிவமைப்புகளிலும், அளவிலும் வேறு வேறுபட்ட எண்ணற்ற படகுகளைக் குறிப்பிடுகிறது. அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடப்படும் வடிவுடையன, திரைமுகப் படகு, யானைமுகப் படகு, சிங்கமுகப் படகுகளாம். (பரிமுக அம்பியும். கரிமுக அம்பியும், அரிமுக அம்பியும்” (காதை 13 176-177):

அவற்றுள் கள்ளத் தோணி வகைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இவை, இருமுனைகளின் இரு பக்கங்களிலும், நல்லன நல்கும் குறியாகக் கருதப்படும் “உ” என்ற குறி, மற்றும் குதிரைகளோடு, கண்கள் செதுக்கப்பட்டிருக்கும். இது, தீமைகளை விலக்குவதற்காக எனக் கூறப்படுகிறது. பண்டைய எகிப்தியர்களும், கிரேக்கர்களும், உரோமானியர்களும் இதை வியப்பூட்டும் நிலையில், பின்பற்றினர். இவற்றின் அழியா நினைவுச் சின்னங்களைச், சீனாவிலும், இந்தோசீனாவிலும், இன்றும், காணலாம். அவை அடிப்பாகம் தட்டையாக உடையவும், சிறு கடல் ஓடும் நாவாயும் (Junks and Sampans) ஆகும். காவிரி மற்றும் பெரிய ஆறுகளில் பக்கத்தில் உள்ள கூடை முடையப் பயன்படும் விரிசல்களால் பின்னப்பட்டு, தோல் மூடிய பரிசில், டைகரஸ் மற்றும் யூபிரடஸ் ஆறுகளைக் கடக்கப் பயன்பட்ட ஒன்றாம்.

தொல் பழங்காலப் பாசன முறைக்கு மூலம் ஆக விளங்கு நிலையால், தென்னிந்தியா மீண்டும் ஒரு புகழுக்கு உரியதாம். குறிப்பு-17 தென்னிந்திய அரிசி நாகரீகம் தென்சீனா மற்றும் இந்தோனேசியா நாகரீகத்தோடு ஒப்பிடக்கூடியதாம். கோதுமை நாகரீகத்தின் மைய இடம், அந்நாகரீகம் எங்கிருந்து மெசபடோமியாவுக்கும் நைல் நதிப் பள்ளத்தாக்கிற்கும் சென்று பரவியதோ, அந்த இடமாம் சிந்துவெளிப் பள்ளத்தாக்காம், ஒன்று கொடுத்து ஒன்று வாங்கும் முறையால், பிற்காலத்தில் இந்தியா பெற்ற மக்காச்சோளம், ஒருவேளை மத்திய அமெரிக்காவைச் சேர்ந்ததாம். தொல் பழங்கால உலகம் முழுவதும், நாகரீகத்தின் முதல் வித்து துவப்பட்ட ஆற்றுப்படுகை அனைத்திலும், தானே வளர்ந்த பாசனவழிப் பயிர் முறை, இருந்திருப்பது இயலக்கூடியதே. அது எந்த ஒரு நாட்டிற்கும், ஏகபோக உரிமை உடையதன்று. ஆனால், தென்னிந்தியா உழவுத் தொழிலைக் கற்காலத்திலிருந்தே தெரிந்திருந்தது என்பது, ஆங்காங்குக் கிடைக்கலாகும். உழவுத்தொழில் கருவிகளால் தெரிய வருகிறது. அதற்குத் தொல்பொருள் ஆய்வாளர்களின் மண்வாரிக்கு நன்றி செலுத்துவோமாக. உழுதொழில் பயிற்சியை உணர்த்த சக்கிமுக்கிக் கல்லால் ஆன உழுகலப்பையின் கொழு முனை, சக்கிமுக்கிக் கல்லால் ஆன சுட்ட ஆப்பம் வைக்கும் அடுக்கு ஆகியவை போதும். சக்கிமுக்கிக்கல் ஆப்ப அடுக்குகள் பண்டைச் சுமேரியா மற்றும் எகிப்திய நகரங்களில் பெருமளவில் ஆளப்படுபவனவாம். சிந்து வெளிப் பள்ளத்தாக்கில் ஆளப்படுவனவாம். சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் அத்தகைய ஆப்ப அடுக்கு காணப்படவில்லை. அந்நிலை பெரும்பாலும் செப்புக் கருவிகள் கிடைத்தமையே ஆம். ஆனால், அந்தப் பண்பாடு, நனிமிக வளர்ச்சி பெற்ற பித்தளை அல்லது செம்பு கலந்த கற்காலத்ததாம்.

உலோகப் பண்பாடு பற்றிய சில இயல்புகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் நிலையில், முறையான வேதியல் ஆய்வின் அடிப்படையில், சிந்துவெளியில் பயன்படுத்த பட்ட பொன், மைசூர் மாநிலம், கோலார் தங்கச் சுரங்கத்திலிருந்து பெற்ற நனிமிகச் சிறந்தது என ஐயத்திற்கு இடன்இன்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. மொகஞ்சொதாரோ மற்றும் ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட விலை உயர்ந்த அமேஸான் வகைக் கற்கள், நீலகிரிக்கே உரிய தனிச் சிறப்பு வாய்ந்த கற்களாம். இக்கண்டுபிடிப்புகளுடன், மொகஞ்சொதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட மைசூர் மாநிலத்திலிருந்து வந்திருக்கக் வேண்டிய, அழகிய பச்சைக் கல்லால் செய்யப்பட்ட நீர்குடிக் குவளையையும் இணைத்துக்கொள்க. இது, தென்இந்தியா, பித்தளை செப்புக் காலத்திலேயே, சிந்து வெளி நகரங்களோடு, நேரிடையாகக் கொண்டிருந்த தொடர்பினை உறுதி செய்யும். என் முதல் சொற்பொழிவில் குறிப்பிட்டது போல், ஊழிப் பெருவெள்ளம் விட்ட வண்டல் வடிவத்தில் கண்டெடுக்கப்பட்ட நீலகிரியைச் சேர்ந்த அமேஸான் வகைக் கற்களால் ஆன குமிழி, கண்டெடுக்கப்பட்ட சுமேரிய நாட்டு “உர்” (Ur) எனும் ஊரின் நிலையும் அத்தகையதே ஆதல் வேண்டும். (குறிப்பு:18) மன்னர் ஆட்சிக்கு முற்பட்ட எகிப்து, பச்சைக் கல்லைப் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கதாம். “ராய்கிர்” (Raigir) என வழங்கப்படும் ஐதராபாத்திலும், கி.மு. 3500 ஆம் ஆண்டு காலத்திய, சுமேரிய நாட்டு “உர்” (Ur) எனும் இடத்திலும் கண்டெடுக்கப்பட்ட நீலக்கல்லால் ஆன, நீண்ட உருளை வடிவிலான குமிழ்களுக்கிடையே, வகையால் மட்டுமன்று, வேலைப்பாட்டு நிலையிலும் உள்ள ஒருமைப்பாட்டினையும் நான்குறிப்பிடுவேன். அதே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட “குவார்ட்ஸைட்டே” என்ற ஒருவகைக் கல்லால், முக்கோண வடிவில் செய்யப்பட்ட மணிமாலைகளும், தொல்பழங்கால எகிப்திய நாகரீகத்திற்கு நிகரானதாகும். கி.மு. 1600 ஆண்டு காலத்திய நாற்சதுர உருளை வடிவிலான, கிரீட்டன்மாதிரி மணிமாலையும், குவார்ட்லைட்டே என்ற ஒருவகைக் கல்லால் ஆன, ஆறுபட்டையும், பீப்பாய் வடிவமும் உள்ள மணிமாலையும் உர் (Ur) எனும் இடத்தில் கி.மு. 3500ஐச் சேர்ந்த புதைகுழிகளில் நமக்குக் கிடைக்கின்றன. கலைநுணுக்கம் வாய்ந்த இப்பொருட்களெல்லாம் ஆங்காங்கே, தனித்தனியாக முகிழ்த்தனவா? இவை தென்னிந்தியாவுக்கும் கிரீட்டுக்கும், பாபிலோனியாவுக்கும் இடையில், தொல்பழங் காலந்தொட்டே இருந்து வந்த, இடைவிடாப் போக்குவரத்து இருந்தமையினை உணர்த்தவில்லையா? இதுபற்றிய முடிவு செய்வதை உங்களுக்கே விட்டு விடுகின்றேன். மேலும், மலையா தீபகற்பத்தின் கூட்டாட்சியைச் சேர்ந்த “குலா” மற்றும் செலிங்ஸிங் (Kuala Selingsing) பகுதிகளில் காணப்பட்ட உலோகத்தில் செதுக்கி வேலை செய்யப்பட்ட, மங்கிய சிவப்புநிற நேர்த்தியான மணிக்கல்லால் செய்யப்பட்ட மாலை வகையும், கி.பி. 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டின் வாணிகத்தின் விளைவாக, அழுத்தமான இந்தியச் செல்வாக்கிருந்தமையினை உணர்த்துகிறது.

ஆதிச்சநல்லூர்ப் புதை குழிகளில் கண்டெடுக்கப்பட்ட, மெல்லிய நீண்ட உருண்டை வடிவிலான, பொன் தகடுகளால் செய்யப்பட்ட பொன் முடிமாலை, நீண்டிருப்பது இறந்தவர் தலைகளைச்சுற்றி, அவற்றைக் கட்டும் வழக்கம் இருந்ததை உணர்த்துகிறது. மதுரை மாவட்டத்துச் சில இனத்தவரிடையே, “பட்டயம் கட்டுவது” என்ற முறையில் இவ்வழக்கம் இன்றும் இருக்கிறது. முழுக்க முழுக்க அதே வடிவிலான, பொன் முடிமாலை, கிரேக்க நாட்டின் கி.மு. 1100 ஆண்டில் சிறப்புற்று விளங்கிய, “மைசினே” (Mycenae) நகரத்திலும் கண்டெடுக்கப்பட்டது வியப்பிற்குரியது. (Ar.S.I.A.R. 1902-3. p. 120) (குறிப்பு:19) எகிப்து நாட்டுக்கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்ட அந்நாட்டு, 17வது அரச இனத்துப் பொன் கழுத்தனி மற்றும் அரைஞாண்களையும், மேற்கூறிய அணிவகையோடு இணைத்துக்கொள்க. இவை வெளிநாட்டு அணிகளாகவே, கருதப்பட்டன. யாழ் வில்லுக்கான, இந்திய மூலத்திற்கும் இந்திய உரிமை மேற்கொள்ளப்பட்டது. நம் தென்னிந்திய இளமகளிர்களும். ஏன்-சில வயது முதிர்ந்த மகளிர்களும் இன்றும் அணிந்துகொள்ளும் கால் சிலம்பும் அணியப்பட்டன. மோகன்லாதரோவில் கண்டெடுக்கப்பட்ட, களிமண்ணால் ஆன சிறு உருவச்சிலை மற்றும் சிறு வெண்கலச்சிலைகளிலிருந்து, சிந்து சமவெளிப்பகுதிகளிலும் சிலம்பு அணியப்பட்டதை அறிகிறோம். மிகவும் வியப்பிற்கு உரியது என்னவென்றால், கிரீட்டு நாட்டுத் தொல்பழம் நகரமாகிய “க்னோஸ்லோஸ்” (Knossos) நகரில் உள்ள சுவர் மற்றும் மேல்மண்டப ஓவியத்தில், மேலே கூறிய மாதிரியான காற்சிலம்பு காணப்படுவதுதான். மிகச் சிறந்த காப்பியமாகிய சிலப்பதிகாரம், ஒரு காற்சிலம்பை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டது.

தொல்பழங்காலத் தென் இந்தியாவுக்கும் மெஸ்படோமியாவுக்கும் இடையில் இருந்த தொடர்புக்கான நம்பத்தக்க காலக் கணிப்பை முறைப்படுத்தும் ஒரு வாயிலைச், சுமேரிய நாட்டில், குறிப்பாக, கிஷ் மற்றும் கஸா (kiss and Susa) பகுதியில், கி.மு. ஐந்து முதல் மூன்று வரையான ஆயிரத்தாண்டு காலத்தைச் சேர்ந்தனவாக அகழ்ந்து எடுக்கப்பட்டவை தந்து உதவுகின்றன. (குறிப்பு:20) அவை. அங்கு. இந்தியச் செய்பொருட்கள் இருந்தமையினை வெளிப்படுத்துகின்றன. வியப்பிற்குரிய சில பொருள்கள் வருமாறு:

1) இழவுவினைக்குரிய மண்பாண்டங்கள்.

2) நீள்வட்ட, குறுகிய கால்களைக் கொண்ட மெருகூட்டப் படாத மண்பாண்டம். 3) இந்தியாவில் மட்டுமே, பொதுவான கலைத் தொழிலுக்குரியதான, சிகப்பு பின்னணியில் வெள்ளை வண்ணக்கோடுகளால் அணிசெய்யப்பெற்ற, குஷ் (Kwsh) நகரத்தில் காணப்பட்ட மங்கிய சிவப்பு நிறம் வாய்ந்த, நேர்த்தியான மணிக்கல்லால் ஆன மாலைகள். இவை கிரீட் நகரிலும் காணப்பட்டன.

4) இந்தியப் படகாகிய, தோல் கொண்டு மூடப் பெற்ற கூடை வடிவிலான பரிசில்களை உபயோகித்தல்.

5) சிந்துவெளியில் உரியதான, எழுத்து மற்றும் காளயிைனைக் கொண்ட முத்திரையினை யொத்ததான, அழுக்குப்போக்கப் பயன்படுத்தப்படும் சவர்க்காரத்தால் ஆன முத்திரை, தொல்பழங்கால, சுமேரியாவைச் சேர்ந்த கிஷ் (Kish) நகரில் காணப்பட்டது.

6) மேற்கு இரான் நாட்டில் உள்ள அழிந்துபோன சுஸா (Susa) நகரில் சங்கும், தொல்பழம் லகேஷ் (Lagash) நாட்டு டெல்லோ (Tello) நகரில் சங்கு அணிகலன்களும் இந்தியாவில் தொல்பழம் காலம் முதல், சங்கு வளையல்களும், போர்க்களத்திலும், இழவுச் சடங்குகளிலும், கடவுள் வழிபாடுகளிலும், பயன்படுத்தப்பட்டன என்பதை இடையே குறிப்பிடுகின்றேன். சங்கைப் பயன்படுத்தும் கலை அறிவு, தென்இந்தியாவில் தொல்பழங்காலத்தில், இரும்பை அறுத்தல், உருக்கல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் நிலைக்குக் கொண்டு சென்றது.

7) தென் மேற்கு ஆசியாவில், யூபிரடஸ் ஆற்றினை ஒட்டிய சுமேரிய நாட்டுப் பீரிட்டிஷ் நிம்ராட் (Biritish Nimrod) நகரத்திலும், உர் (Ur) நகரத்திலும், தேக்குமரத்துண்டும். செவ்வகிலும் காணப்படுவது.

தொல் பழங்காலச் சமய சமுதாய முறைகளுக்குத் தென்னிந்தியா ஆற்றிய பங்கை ஆராயும் நிலையில், தெய்வவழிபாடு, உண்மையில், உலகெங்கும் நிறைந்த ஒன்று என்பதைக் காண்கிறோம்; தாய்த்தெய்வத்தைக் குறிப்பிடும் ‘அம்மா’ என்று சொல்வதாலும் குறிப்பிடத்தக்கது. எகிப்தில் “அம்மோன்” (Ammon) என்ற கோயிலைப் பெற்றிருக்கிறோம். கிரீட், நகரில் உள்ள தாய்க்கடவுளின் சுடுமண்ணால் செய்யப்பட்ட, உருவச் சிலை, மோகன்லாதரோவில் கண்டெடுக்கப்பட்டது போலவே இருக்கிறது. தென்னிந்தியப் பழங்குடியினரின் தொல்பழங்காலப் பெண் தெய்வம் “ஐயை” என்பதாம். (குறிப்பு: 22), அவள் இப்போது, காளியாகவும், பத்ரகாளியாகவும், கேரள நாட்டுப் பகவதியாகவும் மாறிவிட்டாள். தொல்பழங்காலக் கோயில் வழிபாட்டோடு தொடர்புடையது, பெண்களைக் கோயில்களுக்குப் பொட்டுக் கட்டி விடுதலாம். இவர்கள், நம் நாட்டில் “தேவரடியார்கள்” என அழைக்கப்படுவர். பரத்தையர், அல்லது ஆடல் மகளிரைக் குறிப்பிடும் சங்க இலக்கியங்கள். இவர்களைப் பற்றி, அரிதாகக் கூடக் குறிப்பிடவில்லை. கோயில்களுக்குப் பொட்டுக்கட்டி விடும் இவ்வழக்கம் வடஆப்பிரிக்கக் கடற்கரையில் சிக்கா (Sicca) வில் உள்ள பொயினிஷியக் குடியிருப்பு, சிரியா நாட்டு “ஹெலியோபோலிஷ்” (Helio Polis) மற்றும் அர்மீனியா, மேற்குச் சிற்றாசியாவில் உள்ள லிடியா (Lydia) மற்றும், கிரேக்கநாட்டின் தெற்கில் உள்ள கோழின்னித் (Cuzinth) நகரிலும் உள்ளது. (குறிப்பு: 23), சிற்றாசிரியாவில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை நிலைகொண்டிருந்தது. கடவுள் வழிபாட்டாளராகிய மகளிரை, அக்கடவுளுக்கே மணம் செய்து வைக்கும். தென்னிந்தியாவுக்கே உரியதும், கோயிலோடு தொடர்புடையது மான பிறிதொரு வழக்கம், மெஸ்படோமியாவில் பெரு வழக்காம். ஆனால், இப்பழக்கம் மெஸ்படோமியாவில், துரதிர்ஷ்டவசமாகத் தெய்வத்தன்மை வாய்ந்த பரத்தையர் ஒழுக்கத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது. பாபிலோனியப் பழங்கதைகளில் வரும் “மர்துக்” (Marduk) என்ற பழம்பெரும் கடவுள், மற்றும் “ஷமஷ்” (Shamash) என்ற ஞாயிற்றுக் கடவுள்கள், இம்மகளிர் வழிபாட்டாளரை மணந்து கொண்டனர்; ஆனால் மக்கள் குழந்தைகளையே பெற்றெடுத்தனர் எனக் கூறப்படுகிறது.

தலைமயிரைக் கடவுள்களுக்கு அர்ப்பணிக்கும் பிறிதொரு வழக்கத்தையும் ஈண்டு நினைவுகூரலாம். (குறிப்பு :24) கி.பி 290-ல் வாழ்ந்திருந்த, உரோம் நகரத்துச் சமயத்தலைவராம் “லுஷியன்” (Lucian) என்பவர், பொய்னிஷியாவில் “பைப்லஸ்” (Byblus) என்ற இடத்தில் உள்ள கோயிலில், ஒருபெண், தன் தலைமயிரை அறவே வழித்தெடுத்து, அக்கோயிலில் குடிகொண்டிருக்கும் கடவுளுக்கு அர்ப்பணித்ததைக் குறிப்பிட்டுள்ளார். அக்கோயில், இடுப்பிலிருந்து அடிப்பகுதி வரையான மீன் வடிவக் கடவுளுக்கு உரியதாக, வியத்தகு நிலையில் குறிப்பிடப்பட்டுளது. அக்கோயிலோடு மீன்கள் நிறைந்த தெய்வத்தன்மை வாய்ந்த குளம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இது, மத்ஸாவதாரப் பழங்கதையை நினைவூட்டுகிறது (குறிப்பு : 25) மீன் ஒன்று குறிப்பிடப்படும் மெசபடோமிய வெள்ளப் பேரூழிப் பழங்கதை ஒன்றை இத்துடன் இணைத்துக் கொள்க. நான் முன்பே குறிப்பிட்ட, ஓனெஸ் (Oannes) என்ற மனித மீன் பற்றிய பழங்கதை ஒன்றை நம் நினைவுக்குக் கொண்டு வந்தால், இவை அனைத்தும், தொல்பழங்கால உலகத்துச் சமய முறைகளில் இந்தியச் செல்வாக்கு ஓங்கியிருந்ததை உணர்த்தும். மீன் வழிபாட்டு நெறி, இந்தியாவில் பெரு வழக்கில் இருந்தது. இந்திய நாட்டிலிருந்து வெளிநாடு சென்று குடியேறியவர்கள். இவ்வழிபாட்டு நெறியையும், தங்களோடு, அத்தொலை நாடுகளுக்குக் கொண்டு சென்றனர். நாம் எடுத்துக்கொண்ட பொருள் குறித்த ஆய்வுக்குத் திரும்பினால், கிரேக்க நாட்டுப் பழம்பெரும் நகரங்களில் ஒன்றான அக்ரோ நகரத்து, “அர்கிவ்” (Arigive) மகளிர் உரோமர்களின் அறிவு ஆற்றல் கடவுளாம் “ஏதெனெ” (Athene) என்ற கடவுளுக்குத் தம் திருமணத்திற்கு முன்னர்த் தம் தலைமயிரைத் தந்துள்ளனர். தங்கள் வேண்டுகோள் நிறைவேறியதற்காகத் தங்கள் தலைமயிரைத் தாங்கள் வழிபடும் கடவுள்களுக்குக் கொடுக்கும் வழக்கம், திருப்பதி, சுவாமிமலை, வைத்தீஸ்வரன் கோயில், மற்றும், பல இடங்களில் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் மணமாகா மகளிர், மணமான மகளிர், ஆண்சிறார்கள், இவ்விரதத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இன்றும், நம் வழக்கத்தில் உள்ளதாம். திரெளபதி அம்மனோடு, தடையின்றித் தொடர்புபடுத்தப்படுவதும், சிற்றாசியாவின் தெற்கில் உரோம் நாட்டுப் பழம்பெரும் நாடாம் “கப்படோகா” (Cappadacia) வில் உள்ள, திங்கள், மற்றும் கொடுவிலங்கு வேட்டைக் கடவுளாம் ‘ஆர்டெமீஸ்’ (Artemis) என்ற கடவுளின் வழிபாட்டுக்கு நிகரானதுமான நெருப்பு மிதித்தல் பற்றிக் காண்போம்.

அடுத்து, நாக வழிபாட்டை நாம் காண்கிறோம். அது. தொல்பழங்கால நாகர்களின் குலச்சின்னம். (குறிப்பு: 26) நாகத்தைச் சிவனோடும், கந்தனாம் முருகனோடும் தொடர்புப்டுத்துவது, நாகரீக முதிர்ச்சி அற்ற காலத்துச் சமய வழிபாடாம். பழைய செய்தியை நினைவூட்டுவதாம். தென்னிந்தியாவில், நாகக்கல் என்ற வடிவில் இன்றும் வழிபடுகிறோம். அவ்வழிபாட்டு நெறியில், பல்வேறு வகைகள் உள்ளன. சில கற்கள். ஒரே நாகம் நின்ற நிலையில் உள்ளன. மற்றவற்றில் இரு நாகங்கள் தமக்குள் பின்னிக் கொண்டிருக்கின்றன. ஒரு கோயிலில் அல்லது தெய்வத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் மரம் பொதுவாக, அரசு அல்லது வேம்பு மரத்தடிகளில், கூட்டமான நாகக்கற்கள் காணப்படும். தென்னிந்தியாவில் இது பெருவழக்காம் என்றாலும், மலபாரில் அதனினும் பெரு வழக்காம். அது நிலத்தை வளப்படுத்தும் வழிபாட்டு நெறியோடு தொடர்பு படுத்தப்படுகிறது. நாகக் கடவுளை முறையாக வழிபட்டால், மகவீனாத மலடிப் பெண், வயிற்றில் குழந்தையோடு பெருத்து விடுவாள் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. சிந்துவெளி நகரங்களில், வண்ணம் தீட்டப்பெற்ற மட்பாண்டங்கள், கல்வெட்டுப் பலகைகள், மற்றும், களிமண் தாயத்துகளிலும், ஊர்வனவாகிய பாம்பின் பிரதிநிதிகள் காணப்படுகின்றன. இந்நாக வழிபாடு, தொல் பழங்காலக் கிரீட் நாட்டில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்ட கடவுள் வழிபாட்டு நெறியாம். இது, இரட்டைக் கோடரிச் சின்னத்தோடு தொடர்புடையது.

தென்னிந்தியாவில் நிலவும், பிறிதொரு தொல்பழங்கால வழிபாட்டு நெறி, சிற்றாசியாவிலும் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியிலும் பெருமளவில் இருக்கும், திங்களை வழிபடுதலாம், (குறிப்பு: 57) இருக்குவேத சமயம், முக்கியமாக, இயற்கையை வழிபடுதலே எனினும், திங்கள் வழிபாடு, ஒரு வழிபாட்டு நெறியாக முக்கியத்துவம் தரப்படவில்லை. ஆனால், தென்னிந்தியாவின் வழிபாட்டுக் கொள்கை முற்றிலும் வேறுபட்டது. திங்கள் வழிபாடு, பழைய சங்க இலக்கியங்களில், சிறப்பான இடம் கொடுக்கப்பட்டிருப்பதோடு, சிலப்பதிகாரம், பின்வரும் தொடர்களிலேயே தொடங்குகிறது.

“திங்களைப் போற்றுதும்; திங்களைப் போற்றுதும்;

கொங்குஅலர்தார்ச் சென்னி, குளிர்வெண்குடை போன்று, இவ்

அங்கண் உலகளித்தலான்”

தமிழ்நாட்டின் தலைநகர்கள் ஒவ்வொன்றிலும், திங்களுக்கென்றே தனிக்கோயில் (நிலாக்கோட்டம்) இருந்தது. திங்கள் வழிபாட்டு நெறியின், நினைவுச்சின்னம், வளமும் வன்மையும் கொடுப்பதாக நம்பி, மூன்றாம் பிறைத் திங்களைக் காணும் நிகழ்ச்சியில் இன்றும் இருக்கிறது. சோதிடம் மற்றும் வான்கோள் கணக்குகளும், இன்று. “சாந்திரமான” (Candramana) என அழைக்கப்படும் முறையிலேயே உளது. மேலும் வியப்பிற்கு உரியது என்னவென்றால் மாதம் என்பதன் பெயரே, சந்திரனைக் குறிக்கும், திங்கள் என்பதாம். பண்டைய தமிழ் நாகரீகத்தின் எழுத்தாளர்கள், திங்கள் கடவுளை வழிபட்டனர் என்றாலும், அவர்கள், சமஸ்கிருதப் பண்பாட்டோடு தொடர்பு கொள்ளும்வரை எகிப்தியர்களைப் போல, சந்திர கிரகணம் பற்றிய அறிவினையோ, அதை ஒரு நாளகக் கருதுவதையோ அறிந்திலர். பாபிலோனிய நாகரீகத்தில், ஞாயிற்றைக் காட்டிலும், திங்களுக்கே சிறப்பான இடம் அளிக்கப்பட்டது. (குறிப்பு : 28) பாபிலோனிய ஆண்டுக் கணக்கு, திங்கள் முறைக்கே உரியது. திங்களைக் குறிக்கும் ஆப்பு வடிவ குறி “30” என்பதாம். காளை வழிபாடு, பெண்களை அவர்களின் கற்பிற்காகப் பெருமை செய்தல், பெண்களைக் கோயில் பணிக்கென விடுவது போலும், பாபிலோனியப் பழக்க வழக்கம் மற்றும் சமயக் கோட்பாடுகளை இன்டயில் குறிப்பிடுகின்றேன். மேலே கூறியவற்றுள் பெரும்பாலன. இஸ்ரேல் நாட்டு மொழியாம் ஹீப்ரு இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளன. பாபிலோனியப் பண்பாடு, இன்றைய இஸ்ரேல் நாடு எனக் கருதப்படும் ஜோர்டானுக்கு மேற்கிலும், சிரியாவுக்குக் கிழக்கிலும் இருந்த கேனானுக் (Canaan) குப் பரவியது; அல்லது இயூப்ரடஸ் ஆற்றங்கரையில் உள்ள சுமேரிய நாட்டுப்பழம்பெரும் நகரமாகிய “உர்” (Ur) நரகத்திலிருந்து, கிழக்கு ஆப்பிரிக்காவில், எகிப்துக்குத் தெற்கில் உள்ள எதோப்பிய நாட்டின்மேற்கில் உள்ள ஹாரன் (Haran) வழியாகக் கேனனுக்குக் குடி பெயர்ந்தது என நம்பப்படுகிறது. (குறிப்பு : 29) மேலும், கிரேக்க பழங்கதைகளோடு பெருத்த ஒருமைப்பாட்டினையும் நாம் காண்கிறோம். இந்நம்பிக்கைகள் எல்லாம், சிற்றாசியாவிலிருந்து வந்தன என்றும் நம்பப்படுகிறது. இவ்வகையில், இந்தியாவிலிருந்து பாபிலோனியாவுக்கும், பாபிலோனியாவிலிருந்து கிரேக்கத்திற்கும். கேனனுக்கும் மக்கள் குடிபெயர்ச்சி இருந்தது. இன்று அழிவுறாமல் நம்மோடு நிலைகொண்டிருக்கும். இவ்வழிபாட்டு நெறிகளுக்கெல்லாம், தென்னிந்தியாதான் தாயகம் என்பதையும், அவ்வகையில், இவை அடிப்படை ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்பதையும், தென்னிந்தியாவின் உயிரோட்டமான பண்பாடு என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.

தென் இந்தியாவிலும், ஏனைய பிற நாடுகளிலும், தொல்பழங்காலச் சமய நெறியில், காளை வழிபாட்டு நெறி சிறப்பான இடம்பெற்றுள்ளது. சிவனின் வானமாகக், காளை, காலமெல்லாம் வழிபடப்பட்டு வருகிறது. நம் விழாக்களில் ரிஷபவாகன விழாவைச் சிறப்புடையதாக இன்றும் கொண்டாடுகிறோம். மோகன்ஸாதரோவில் கண்டெடுக்கப்பட்ட இரு தாயத்துகளில் காளை உருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்வது காட்டப்படுள்ளது. இது பண்டைய எகிப்தில் சமயச்சார்பான ஊர்வலங்களில் விலங்குகளைத் தூக்கிச் செல்வதை நினைவுக்குக் கொண்டு வருகிறது. மக்கள் வழிபாடும் கடவுள் காளை. ஆகவே, சில விழாக்கள் காளையோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. கொல்லேறு தழுவுதல் அவற்றுள் ஒன்று. ஆயர்குலத்தவர். தம் மகளிர்க்கு, மணமகளைத் தேர்வுசெய்யும் ஒரு வழக்கத்தைச் சிலப்பதிகாரம், தனியே குறிப்பிடுகிறது. எவனொருவன் காளைமீது பாய்ந்து, அதை அடக்குகிறானோ அவனே அப்பெண்ணை மணம் கொள்வதில் வெற்றிகொண்டவன். மத்திய தரைக்கடல் தீவுகளில் ஒன்றாகிய கிரீட்டில் (Crete) உள்ள கிண்ணம் ஒன்றில், காளை ஏறுதல் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. (குறிப்பு : 31), கிரீட்டன் தீவுப் பழக்க வழக்கங்களுக்கும், தென்னிந்தியப் பழக்க வழக்கங்களுக்கும் இடையில் உள்ள ஒருமைப்பாடு, கிரீட் மீது தென்னிந்தியா ஆக்கம் செலுத்தியது என்ற உண்மையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாத அளவு நெருக்கமானதாகும். கிரீட்நாட்டு நாகரீகத்திற்குத் தென் இந்தியப் பழங்குடியினராகிய கிராதர் (Kirata) களே பொறுப்பாவர் எனப் பிறிதோர் இடத்தில் கருத்துத் தெரிவித்துள்ளேன். கிரீட் தன் பெயரை இவ்வினத்திலிருந்தே பெற்றுக் கொண்டது. (குறிப்பு : 32).

எகிப்திய சமய வழிபாட்டு நெறியாகவும் விளங்கிய காளை வழிபாட்டு நெறியோடு நெருங்கிய தொடர்புடையது. பேராற்றலின் படிவமாகக் கருதப்படும் இலிங்க வழிபாடு. (குறிப்பு : 33) மத்தியதரைக் கடல் இனத்தவரிடையே உள்ள பலகிளையினர், இலிங்க வழிபாட்டானராவர். (R.V. Sismadevas VII, 21-5., X 99-3) இலிங்க வடிவம், சிந்துவெளியில் பெருமளவில் கிடைக்கும் கல்லால் ஆன வட்டமும் உருளையும் கொண்டது. தொல்பழங்காலக் கிரீட் நாட்டின், ஆட்சி பூர்வ சமயம், ஒன்று, நிற்கும் நிலையில் உள்ள கற்கம்பம், அல்லது, செதுக்கிச் செய்யப்பட்ட தெய்வீக மரம் ஆகும். கிரீட்டன் மாநிலத்தின் கடவுள் வழிபாட்டு நிலையை இது பிரதிபலிக்கிறது. பண்டைத்தமிழரின் கடவுள், “ஐந்து” எனப்படும் கம்பமாம் என்பது குறிப்பிடத்தக்கது. கம்ப வழிபாடு, ஒரு காலத்தில், இந்தியா முழுவதும் இருந்த ஒன்று. அதனால்தான். பழம்பெருங்காலத்தில் வழிபாட்டு தெய்வமாகக் கருதப்பட்ட கற்கம்பங்கள் மீது, தன் கல்வெட்டுக்களைப் பொறித்தான் அசோகப் பேரரசன், இறந்தார் உடலைப் புதைக்கும் மேடுகளில் நடப்பட்ட புத்தஸ்தூபிகளும், இக்கற்கம்ப வழிபாட்டு நெறியிலேயே அமைக்கப்பட்டன. ஐந்து வடிவம், இலிங்க வடிவமாக, மாறிய பின்னர், பண்டைத் தமிழர், கோயில்களுக்கு முன்னர் த்வஜஸ்தம்பங்களை நட்டு விட்டனர். திருவிழா அல்லது திருமணப் பந்தல் தொடக்கமாக, மூங்கில் கொம்பு அல்லது வேறு மரக்கொம்பு ஒன்றை நட்டு அதற்கு வழிபாடு செய்யும் வழக்கத்தில், இந்த வழிபாடு பிறிதொரு வகையில் இன்னமும் இருப்பதைக் காணலாம். மாற்று வடிவில் செய்யப்பட்ட கொம்பு வழிபாடு, காளை வழிபாட்டை நினைவுபடுத்துகிறது. கிரீட்டில் வழக்காற்றில் உள்ள, கடவுள் அல்லாத அதன் பரிவாரங்களின் வழிபாடு, தென் இந்தியாவில், இன்றும் வழக்காற்றில் உள்ள வழிபாட்டு நெறிக்கு நிகரானதாம். சாம்பிராணி போலும் மணப்புகைகள் எழுப்பப்படும். சங்கு ஊதப்படும். யாழும், குழலும், தெய்வ இசையாக இசைக்கப்படும். மணப்பொருள் எரிக்கப்படும்போது, கைமணி அடிக்கப்படும். அதைத் தொடர்ந்து தாளத்திற்கேற்ப, தேவதாசிகள், அவ்விலிங்கத்தின் முன் ஆடல் புரிவர்.

தாய்த் தெய்வவழிப்பாட்டு நெறியாளரால் மேற்கொள்ளப்பட்ட தாய்வழி உரிமை முறை. பழம்பெறும் நாகரீகத்தின் பிறிதொரு கோட்பாடாம். (குறிப்பு : 34) அது. நாட்டின் ஏனைய பகுதிகளில் நிலவும் மக்கள்தாயம் என்பதற்கு எதிர்மறையானதும், மலபார் நாட்டில் நிலவுவதுமான மருமக்கள் தாயம் ஆகும். மருமக்கள் தாயம், ஒருகாலத்தில், தென்இந்தியா, தென்ஐரோப்பா, சிற்றாசியா, மெசபடோமியா மற்றும், எகிப்து நாடுகளில் இருந்தது. தென் இந்தியாவையும், உலகத்தின் தொல்பழங்கால ஏனைய பகுதிகளையும் இணைக்கும் இணைப்பாக இருந்தது இதுவும் ஒன்று. எகிப்தில் உள்ளது போலவே, கிரீட் நாட்டிலும், குடும்ப வாரிசு, பெண்வழியே ஆகும்.

எடுத்துக்கொண்ட ஆய்வுக்கு ஆன முடிவை உடை வகையில் காணமுற்படினும், இங்கும், மறுக்க இயலா ஒருமைப்பாட்டினைக் காணலாம். கிரீட் மற்றும் எகிப்து நாடுகளில், ஆடவர் இடுப்பு ஆடையை மட்டுமே உடுத்தியிருந்தனர். மேலும் அவர்கள். மிதியடி, மற்றும் மிதிகால் மறையும் அடிபுதை அரணங்களை அணிந்திருந்தனர். பொதுவாகத் தலையின் பின்பக்கமாக இடுப்புவரை தொங்கும் நீண்ட தலைமயிரைக் கொண்டிருந்தனர். தலைமயிரை ஒப்பனை செய்வதில், வியத்தகு முறை ஒன்று கிடைத்துள்ளது. ஒக்கூர்மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர் ஒருவர், நாடாளும் அரசன் அழைக்கத் தன் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்புகிறாள். மகனின் நீண்ட தலைமயிரை, ஒப்பனை செய்யும்போது, அம்மயிரை ஒன்று திரட்டி, யூபிரடஸ் ஆற்றுப்பள்ளத்தாக்கு, தொல்பழம் நிலப்பகுதியாகிய “சுமர்” (Sumer) நாட்டு முறைப்படி, முடித்து அனுப்பி இருக்கிறாள். மோகன்லாதரோ, பல்வேறு வகையான தலைமயிர் ஒப்பனையைக் காட்டுகிறது. என்றாலும், அவை அனைத்தும் நீண்டு தொங்கும் மயிர் உடையனவே. புறநானூறு அளிக்கும் அகச்சான்று, கிரீட் மற்றும் எகிப்து நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதும், பண்டைத் தமிழர்களின் வழக்கத்தில் இருந்ததுமான, வெறுக்கப்பட்ட மயிர்முடியாகும் என்பதைக் காட்டுகிறது.

வகையால் எண்ணில் அடங்காதனவாகிய பழக்க வழக்கம் மற்று இன்பக் களியாட்டங்களில் இங்கு ஒன்று அல்லது இரண்டைக் குறிப்பிடுகின்றேன். பழக்கப்பட்ட உயிரினங்களில் தொல்பழங்காலத்தைச் சேர்ந்தது, முருகனின் கொடியாகிய மயில் ஆகும் (குறிப்பு: 36), கிரேக்கக் கடவுளாகிய அப்பாலோவின் சின்னமும் அதுவே. அப்பாலோவை முருகனாக அடையாளம் கானலாமா? தென்னிந்திய வரலாற்றாசிரியர் ஒருவர் இக்கருத்துடையவராவர். கிழக்கு ஆப்பிரிக்கா, மற்றும், தென்ஆப்பிரிக்கக் கிழக்குக் கரையை ஒட்டி உள்ள மடகாஸ்கரிலும், பழக்கப்பட்ட காட்டுக்கோழி காணப்படுகிறது. காட்டுக்கோழி பழக்கப்படுத்தப் பெற்ற காலமாம், பெருநிலப்பரப்பு கடலுள் ஆழ்ந்து போன, நிலஇயல் காலத்தை, நினைவூட்டுகிறது. இது, தமிழ்வேலன் குறித்த பழங்கதையில் சில அடிப்படையைக் கொண்டதாகும். (குறிப்பு:37),

இன்பக் களியாட்டங்கிளில், கோழிப்போர் தென்னிந்தியாவில் சிறப்பானது. மோகன்ஸாதரோவில் கண்டெடுக்கப்பட்ட தாயத்தின் மீதான முத்திரையில், இரு காட்டுக்கோழிகள் சண்டை இடுவதாகக் காட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து, திருவாளர் மக்கே (Mackay) அவர்கள், சிந்துவெளி மக்களிடையே, கோழிச்சண்டை, ஒரு விளையாட்டாம் எனக்கூறுகிறார்.

மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட ஆய்வு, முறையற்றதாக, மனம்போன படியினதாக இருப்பினும், அது தன்னளவிலேயே தென்னிந்தியப்பண்பாட்டின் அடிப்படை ஒருமைப்பாட்டை நிலைநாட்டவல்ல நல்ல சான்று ஆகும். கால அளவை, இடையறவு படாமல், குறித்து வைக்கிறது. அது தொடர்புகொண்ட, வெளிநாட்டுப் பண்பாடுகளில் மிகச்சிறந்தனவற்றைத் தன்னியலதாக்கும் அதே நிலையில் அது, இன்னமும் உயிர் ஓட்டம் வாய்ந்த ஆற்றலாகவே திகழ்கிறது. தொல்பழங்கால, இடைக்கால, மற்றும் இன்றைய உலகில் அதன் இடம் ஒப்புயர்வற்றது. சில சமயம் உலகத்தவர் கருத்தைக் கவரக்கூடியது. அது, தன் சமய நெறியாலும், மொழியாலும், தொல்பழம் உலகத்தை, அதன் கலையைக் கலைத்தொழிலை நாகரீகம் உடையதாக்கி உளது. இடைக்காலத்தில், அது தான் பெற்ற வெற்றியோடு தன் பண்பாட்டுப் பேரொளியைப் பரப்பிற்று. இன்றும் கூடச்  சென்னை வாசி, பணியாளனாயினும், அரசுப் பணியாளனாயினும், உலகெங்கும், தன்னிடம் உள்ள சிறந்தன அனைத்தையும், மக்கள் சமுதாயத்திற்கு வழங்குவோனாக உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றான். நல்லகாலமாக, இன்றும் அழியாது நம்மோடு இருக்கும் இப்பழம்பெரும் பண்பாடு, நாளுக்குநாள், மேலும் மேலும் வலுப்பெறுமாக!

 

 

இரண்டாம் சொற்பொழிவின்
குறிப்புகள்

 

1) ஊழிப் பெருவெள்ளம் பற்றிய கற்பனைக் கதை குறித்துத் திருவாளர் எல். தெலபொர்டே (L. Delapore) அவர்களின் மெசபடோமியா என்ற நூலைக் காண்க. (Kegan Paul, 1925; Page: 20-21; 138-9; 207-8; Page 31.1-26. சபே (Sabae) தென் அரேபியாவின் பழம்பெரும் நாடு, விவிலிய நூலில் குறிப்பு 1 அவில் The Joktanite Shiba என்ற தொடர் இடம் பெற்றுள்ளது.

ஷீபாவின் பேரரசு, வடபகுதி நீங்க உள்ள அனைத்து அரேபியா (Arabia Felix) வைச் சார்ந்த, யேமன் நாட்டின் பெரும்பகுதியைத் தன்னகத்தே கொண்டுவிட்டது. அதன் முக்கிய நகரங்கள், பெரும்பாலும், அடுத்தடுத்துத் தலைநகராக அமைந்த, ஸெபா ( Seba); ஸனியாஸ் (Sanias) மற்றும் ஸெபர் (Sephar) முதலியனவாம். “லெபர்” என்பது பெரும்பாலும் ஒரு நகரத்தின் பெயரும், பொதுவாக நாட்டையும், நாட்டு மக்களையும் குறிக்கும். “குஷ்” (Cush) என்பானின் மகனாகிய “ராமஹ்” (Raamah) என்பானின் மகனாகிய ஷீபா (Sheba) என்பவன், பர்ஷிய வளைகுடாவின் கரைகளில் எங்கோ ஓர் இடத்தில் வாழ்ந்திருந்தான். இந்த ஷீபாதான், ஜோக்-ஷன் (Jokshan) என்பானின் மகனாகிய, மற்றொரு ‘ஷீபா’வுடன் சேர்ந்துகொண்டு பாலஸ்தீனத்தோடு, இந்தியா கொண்டிருந்த போக்குவரத்தை மேற்கொண்டிருந்தான். 2. பொய்னீஷீயர்களும், இந்தியாவும், இந்தியாவுடான வாணிகம்: பொய்னீஷியர்கள், ஆசியாவின் உட்பகுதியில் இருந்த நாடுகளோடு மேற்கொண்டிருந்த வெளிநாட்டு வாணிகம், அது மேற்கொண்டிருந்த முக்கிய வழித்தடங்களின்படி மூன்று கிளைகளாகப் பிரிக்கப்படும். அவற்றுள் முதலாவது, தென்பால் வாணிகம், அதாவது அராபியாவுடனும், கிழந்கிந்தியாவுடனும், எகிப்துடனும் நடைபெற்ற வாணிகம், இரண்டாவது கீழ்ப்பால் வாணிகம், அதாவது அஸ்லிரியாவுடனும், பாபிலோனியாவுடனும் நடைபெற்ற வாணிகம், மூன்றாவது வடக்கு நோக்கியது. அதாவது அர்மீனியாவுடனும் காக்கஸ் மலைத் தொடர் நாட்டுடனுமான வாணிகம். சமயச் சார்பற்ற எழுத்தாளர்களும், ஹிப்ரு மொழிப் புலவர்களும் குறிப்பிட்டிருக்கும் பல்வேறு விளக்கங்களிலிருந்து, இம்மூன்று வணிகக் கிளைகளுள் முதலாவது ஒன்றே, நனிமிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உறுதிப்படும். அதை, “அரேபிய-இந்திய நட்புறவு” (Arabian-Fast-Indian) என அழைக்கிறோம். அவ்வாறு அழைப்பதற்குக் காரணம், பொய்னீஷியர்களே அரேபியாவைக் கடந்து இந்தியாவுக்குப் பயணம் செய்தனர் என்ற உறுதிப்பட்ட ஒன்றை நாம் மேற்கொள்வது அன்று. மாறாக, அவர்கள் அப்போது வாணிக நிலையங்களில் பெருமளவில் வேண்டப்பட்ட கிழக்கிந்தியப் பண்டங்களை, அரேபியாவில் வாங்கியதே காரணமாம்.

எது எப்படி ஆயினும், பொய்னீஷியர்களின் வாணிகம், தென் ஆப்பிரிக்காவோடு நின்றுவிடவில்லை. பர்ஷிய வளைகுடாவின் கரை நெடுகிலும் விரிந்து இருந்தது. “டேடன் நகரத்து மக்கள் உங்கள் வணிகர்கள்; எண்ணற்ற தீவுகள், உங்கள் நாட்டுப் பெருவாணிக நிலையங்கள்; தங்களுக்கு அவர்கள் தந்தத்தையும், கருங்காலி மரத்தையும். நன்கொடையாகத் தருகின்றனர்.” பர்ஷியன் வளைகுடாவில் அராபியக் கடற்கரைக்கு அணித்தாக உள்ள, “பகாரியன்” தீவுக் (Baharein Islands) கூட்டத்தில் ஒன்று. டேடன் தீவு. இது, ஒருபக்கம் பொய்னிஷியாவுக்கும், பர்ஷிய வளைகுடாவுக்கு இடையிலும், இன்னொரு பக்கம், பொய்னீஷியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலும் போக்குவரத்து இருந்தது என்பதைக் காட்டுகிறது. பொய்னீஷிய வர்த்தகம், டேடனுக்கு அப்பால், பெருமளவில் இருந்த நாடுகள், இந்தியா தவிர்த்து வேறு இருக்க இயலாது. இது வணிகப் பொருள்களால், போதுமான அளவு உறுதி செய்யப்படுகிறது. கி.மு. 1016 முதல் 976 வரை இஸ்ரேல் ஆண்ட மன்னன் சாலமன், தன் தந்தை டேவிட், மேற்கொண்டிருந்த வாணிகத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தான். மேலும், பொய்னீஷியத் துறைமுக நாடாம் டயரை (Tyre) ஆண்டிருந்த அரசனோடு வாணிக ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டான். இவ்வகையால் ஒன்றுபட்ட வாணிக வங்கங்கள், ஒப்பீர் (0phir) நாடு, மற்றும் கிழக்கு நாட்டுப் பொன்னைப் பாலஸ்தீனத்திற்குக் கொண்டு சென்றன. விவிலிய நூலின் பொதுப்பிரிவு இரண்டில், முதல் பிரிவில் (Old Testament) வரும் “ஒப்பீர்” என்ற சொல்லின் பொருள் காண்பது, வரலாற்றுப் பேராசிரியர்களிடையே, ஒரு பெரிய வாதப்பொருளாம். சிலர், அதைப் பம்பாய்க் கடற்கரையைச் சேர்ந்த பண்டைய துறைமுகமாம் “ஸோபாரா” வாகக் கொள்கின்றனர். சிலர், சமஸ்கிருத “அப்ஹீர” (Abhira)அல்லது, சிந்து நதியின் முகத்துவாரமாகக் கொள்கின்றனர். வேறுசிலர், அரேபியா அல்லது “மேஷனாலான்ட்” (Mashonaland) நாட்டில் உள்ள ஓர் இடமாகக் கருதுகின்றனர்.

சாலமன் அவர்களின் பொன்னால் ஆன அரியனை, விலைமதிக்கவொண்ணா அருங்கற்கள், பொன்னால் அடித்துச் செய்யப்பட்ட 300 கேடயங்கள், மனம்மகிழ் பூஞ்சோலையில் உள்ள குரங்கு மற்றும் மயில்கள், திருக்கோயிலின் சந்தன மரத்தால் ஆன கம்பங்கள் ஆகிய, அனைத்தும் இந்தியாவிலிருந்தே கொண்டுவரப்பட்டனவாம். ஆகவே, “ஒப்பிர்” என்பதை இந்தியாவில், அதிலும் குறிப்பாகப், பாம்பாய்க் கடற்கரை நகராம். “சோபாரா” வாகக் கொள்வதே பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று. ஹிப்ரு மொழியில் வரும் “ஷென்ஹாப்பின்” (Shenhabhin) சமஸ்கிருத “இப்ஹதந்தா” (Ibha danta) ஆகிய சொற்கள், தந்தம் எனும் பொருள் உடையவாம். ஹீப்ரு மொழிக், “கோபி” (Kophy) வாலில்லாக் குரங்கு ஆகும். மேலும், அம்மொழி, “துக்கிம்” (Tukhin) என்ற சொல், தமிழ்த்தோகை ஆகும்.

திருவாளர்கள், “பிர்ட்வுட்” (Bird wood) மற்றும் “பாஸ்டர்” (Foster) ஆகியோர் பதிப்பித்த “கிழக்கிந்தியக் கம்பெனியின் முதல் கடிதப் புத்தகம்” (The first Letter Book of the East India Company) என்ற நூலையும், திருவாளர் “எச். ஜி. ராவிலின்சன்” (H.G. Rawlinson) அவர்களின் “இந்தியாவும், மேற்கு உலகத்திற்கும் இடையிலான போக்குவரத்து” (Inter Course between India and the Western World) என்ற நூலையும் காண்க.

திருவாளர் கென்னடி அவர்கள், ஓ.கீ.அ.கு. என்ற செய்தி ஏட்டில் எழுதியிருக்கும் கட்டுரை (ஏப்ரல், 1898) யினையும், திருவாளர் பூலர் (Buller) அவர்களின் “இந்தியா பற்றிய ஆய்வு” (Indian Studies) என்ற நூலையும் (பகுதி. 3. பக்கம் 81-82) காண்க.

திருவாளர் ஹண்டர் (W.W. Hunter) அவர்களின், “பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு” (A History of British India) என்ற நூலின் “லாங்குமென் கிரீன்” (Longmans Green & Co) பதிப்பையும் காண்க. (1919 ஆண்டுப் பதிப்பு: பக்கம். 23-25) அருள் தந்தை ஹீராஸ் அவர்கள், எழுதிய “மேகனின் அரசு” (Kingdom of Megan) என்ற கட்டுரையில், இக்கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

3) இரு கடல்களை இணைக்கும் நீண்டு குறுகிய சூயஸ் நிலப்பகுதியை வெட்ட எடுத்த முதல் முயற்சி.

நைல் நதிக்கும், செங்கடலுக்கும் இடையிலான, நீண்ட, இடர்மிகு, பாலைவனப் பிரயாணத்தின் கொடுமை, நீண்ட காலமாகத் தொடர்ந்து உணரப்பட்டது. வாணிகம் பெருகப் பெருக, இவ்விரு கடல் வழிகளையும், ஒரு கால்வாய் மூலம் இணைக்க வேண்டியதன் இன்றியமையாமை, மிகமிகத் தெளிவாகிவிட்டது. கி.மு. இருபதாவது நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஸெஸொத்ரிஸ்’ நாடு (Sesostris) இத்துறையில் முதல் முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. எகிப்திய மன்னன் நெக்கோ (Necho) வும், கி.மு. 521 முதல் 486 வரை ஆண்ட பர்ஷிய மன்னன் டாரியஸ்ஸும் (Darius), தங்கள் கருத்தாழ்ந்த கவனத்தைத் தீர்வு காணமாட்டா இத்திட்டத்தில் திருப்பினர். இன்றைய சூயஸ் துறைமுகமாம் அன்றைய “அர்சினோஇ” (Arsince) துறை முகத்தைக் கண்டமைக்காம் பெருமையைச் சிற்றாசியாவைச் சேர்ந்த பிலடெல்பஸ் (Philadelphus) ஸில், கி.மு. 285 முதல் 246 வரை வாழ்ந்திருந்த கணிதம் மற்றும் சில நூல் வல்ல தாலமி (P.Tolemy) அவர்களின் மேதகவுக்கே கொடுக்கப்படவேண்டும். ஆனால், வளைகுடாவில், கடல் பயணத்தின் இடர்ப்படு நிலைமை, இதை உடனடியாக அல்லது காலப்போக்கில் கைவிட வேண்டி நேர்ந்தது. ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் சூயஸின் தவிர்க்க முடியாத மிகப் பெரிய நன்மை, பிரான்ஸ் நாட்டு அரசியல்வாதியான டி. லெஸ்லெப்ஸ் (De Lesseps) அவர்கள் மனத்தில் பட்டது. அவர், அதை வெற்றியுற முடித்து வைத்தார். வணிகர்கள், தங்கள் வாணிகப் பொதிகளை யெலனா (Aelana), பண்டைய எஸியோன் ஜெபர் (Ezion Geber) அதாவது இன்றயை அகபா (Akaba) மற்றும், பாலஸ்தீனத்திலிருந்து பாயும் ஜோர்டன் ஆற்றிற்குக் கிழக்கில் உள்ள பெட்டரா (Petra) ஆகிய நகரங்கள் வழியாக, மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் உள்ள லெவன்டினே (Levantine) துறைக்குக் கொண்டு செல்வதையே விரும்பினர் என்பது காட்டப்பட்டது. எச்.ஜீ. ராலின்சன் (H.G. Raulinson) அவர்களின், “இந்தியாவுக்கும் மேலை உலகிற்கும் இடையிலான போக்கும் வரவும்” (Intercourse between, India and western world: 1926, Cambridge p. 89-90) என்ற நூலைக் காண்க.

4) திருவாளர் இ.பி. கெளல் அவர்கள் பதிப்பித்த 1897 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அகராதி, பகுதி. 3 பக்கம் 83) பாபெரு (Baberu) என்ற நிலம், பாபிலோன் ஆகும். இந்திய வணிகர்களால், இந்தியாவிலிருந்து முதலில் ஒரு காக்கையும், பின்னர் ஒரு மயிலும், பாபிலோனுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

5) உரோமப் பேரரசின் கருவூலத்திலிருந்து, உரோம நாணயம் வடித்தல் குறித்து, உரோம் நாட்டு, அரசியல்வாதியும், எழுத்தாளருமான பிளைனி கூறுவது:

“எவ்வளவு குறைவாக மதிப்பிட்டாலும், இந்தியா, சேரநாடு, மற்றும் அரபுநாடுகள், ஆண்டுதோறும், உரோமப்பேரரசிலிருந்து, 10 கோடி உரோம நாணயம், செஸ்டெர்ஸெஸ் (Sesterces) ஐ வடித்துவிடுகின்றன எனக் கூறுகிறார் திரு. பிளைனி, “எங்கள் ஆடம்பர வாழ்க்கைக்கும், எங்கள் மகளிர்க்காகவும் நாங்கள் அவ்வளவு அரிய விலையைக் கொடுக்கிறோம். மீண்டும், மற்றுமொரு முக்கியமான இடத்தில், “இந்தியா போக்குவரத்தில் ஏற்பட்ட செலவோடு பழைய விலை போல நூறு மடங்கு விலைக்குப் பண்டங்களைக் கொடுத்து விட்டு, “செஸ்டெர்ஸெயை” எடுத்துக் கொள்கிறது எனக்கூறியுள்ளார். பண்டைய மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பார்த்தியர்களும் (Parthians) இந்தியர்களும், உரோமப் பேரரசரோடு கடல் வாணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டினர் எனச், சீனநாட்டுச் “சின்-ஷூ” (Chil-Shw) அரச இனத்து வரலாற்றுப் பதிவேட்டின் ஒருபகுதி, பத்து மடங்கு வாணிகத்தைக் குறிப்பிடுவதாலும், அதுபோலவே, கி.மு. 200 முதல் கி.பி. 220 வரை ஆட்சியில் இருந்த பிற்கால “ஹன்” (Han) இனத்து வரலாற்றுப் பதிவேட்டில் வரும் ஒரு பகுதி, பத்து மடங்கு வாணிகத்தைக் குறிப்பிடுவதாலும், மத்தியதரைக் கடலின் கிழக்குக் கரையைச் சேர்ந்த சிரியா, வாணிகத்தால் வளம் பெற்றது என்பதை உய்த்துணரவைப்பதன் மூலம், சீனநாட்டு வரலாற்று மூலமும் இதை உறுதி செய்கிறது. ஆக, பிளைனி அவர்களின் அறிக்கை நனிமிக உயர்ந்த மதிப்பீட்டை உறுதி செய்வதாகத் தெரிகிறது. (உரோமப் பேரரசுக்கும், இந்தியாவுக்கும், இடையிலான வாணிகம், (The Commerce between the Roman Empire and India) பக்கம் : 274-275)

6) உரோமுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையில் கடல் வாணிகம். .

மேலைநாட்டு கிரேக்க எழுத்தாளர்களிடமிருந்து பெறப்படும் அகச்சான்று, உரோமப் பேரரசின் முதல் மன்னனாகிய அகஸ்டஸ் என்பானின் கி.மு. 27 முதல், கி.பி. 14 வரையான ஆட்சிக்காலத்தில் சேர, பாண்டிய அரசுகளுக்கும், உரோமப் பேரரசுக்கும் இடையில் நிலவிய தொடர்புகளை வெளிப்படுத்துகிறது.

1) ‘ச’கரத்தின் மெல்லொலியாலும் இலங்கையர்களால், சேரர் என்பதற்கு ‘ஷேரி’ என்பது ஆளப்படுவதாலும், “ஷெரெய்” அல்லது சீனர்களாகக் குழப்பப்படுவதும், உரோமப்பேரரசனுக்கு நன்றி தெரிவிக்கும். முகத்தான், முசிறியில் (இன்றைய க்ரேங்கனூர்) மன்னன் அகஸ்டஸூக்குக் கோயில் கட்டப்பட்டிருப்பதுமாகிய தென்னிந்தியச் சேர நாட்டிலிருந்து மிளகு வந்தது. ஆகவேதான், ஆப்கானிஸ்தானத்தின் வட கிழக்குப் பகுதியாகிய பாக்டீரிய நாட்டவர் (Bactrians) (குஷான்கள்) அல்லராயின், ஷேரெஷ் (அதாவது சேரர்) அரசியல் தூதவர் ஆயினர்.

2) தன்னுடைய முத்தால் பெருமை பெற்றதும், கிரேக்கர்களால், “பாண்டியோன்” எனப் பெயர் சூட்டப்பட்ட அரசர்களால் ஆளப்பட்டிருப்பதும் ஆகிய பாண்டி நாட்டிலிருந்தும் வணிகப் பண்டங்கள் வந்தன. அவர்கள் தமிழ்நாட்டிற்கே உரிய செய்பொருட்களாகிய விலை உயர்ந்த கற்கள், முத்துக்கள், சில வேளைகளில் யானைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தனர். சோழப் பேரரசும் அரசியல் தூதுவரை அனுப்பியது. இத்தூது அனைத்தும், அலெக்ஸ்யாண்டிரியாவையும், சிரியாவையும் சேர்ந்த கிரேக்கர்களால், முடிந்தால் இடைத்தரகர்களாகிய அராபியர்களை அகற்றுதற் பொருட்டுத் திட்டமிட்டு மேற் கொண்ட வாணிகத்தூதுக்களாம். (E.H.Warningtonp,page:37).

உரோம நாணயம், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது, உண்மையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பெரும்பாலும், விலைமலிந்த உலோகத்தால் செய்யப்பட்ட இந்திய நாணயங்களுக்கு உலகப் பெருஞ் சந்தையில், குறைந்த பண்டமாற்று மதிப்பே இருந்தது. தமிழர்கள் உரோம நாணயங்களை ஏற்றுக்கொண்டனர். தமிழ் மாவட்டங்களில், உரோம நாணயங்களால் ஆன உரோம நாணயச் செலாவணி, திட்டமிட்டு நிலைகொண்டு விட்டது. தரத்தில் குறைந்த உலோகத்தால் செய்யப்பட்ட இந்திய நாணயங்களை உரோமர், குறைந்த பண்டமாற்றிற்கே ஏற்றுக்கொண்டனர். மிகவும்பிற்பட்ட காலத்திலேயே, தரம் குறைந்த உலோகத்தால் ஆன உரோம நாணயங்கள் இந்தியாவை அடைந்தன. தமிழ் நாடு முழுவதும், உரோமப் பேரரசின் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆயிரம் ஆயிரம் உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. பிறஅரசர் காலத்து நாணயங்களைக் காட்டிலும், அகஸ்டஸ், மற்றும் டிபெரியஸ் (Augustus and Tiberius) பேரரசர், சிறப்பாகப் பின்னவர் சின்னம் பொறித்த நாணயங்கள் பெருகிவிட்டன. கி.பி. 69 முதல் 79 வரை ஆண்ட உரோமப் பேரரசன் வெஸ்பாஸியன் (Vespasian) காலத்தனவும். அவனுக்குப் பின் வந்த உரோமப் பேரரசர் காலத்தனவுமான உரோம நாணயங்கள் பெருமளவில் காணப்படவில்லை. ஏறத்தாழ 1898 ஆண்டளவில். புதுக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பொன் நாணயங்கள், திருவாளர் “தர்ஸ்டன்” (Thurston) அவர்கள் பட்டியல்படி பின்வருமாறு:

அகஸ்டஸ் ஆட்சிக்காலம், ⁠ 51 ⁠ நாணயங்கள்
டைபெரியஸ் ” ⁠ 193 ⁠ ”
காயஸ் ” ⁠ 5 ⁠ ”
கிலாடியஸ் ” ⁠ 126 ⁠ ”
நீரோ ” ⁠ 123 ⁠ ”
வெஸ்பாஸியன் ” ⁠ 5 ⁠ ”
ஒருசேமிப்பில் இருந்த மொத்தம் 510 நாணயங்கள்

இது போலவே, மதுரை மாவட்டம், கல்லியம் புத்தூர், பண்டைய நெல்சியண்டா (Neleynda) (பழைய சேரநாடு) ஆகிய கோட்டயம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், கருவூர் நெல்லூர். கிருஷ்ணா மாவட்டம் விணு கொண்டா ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட நீரோவுக்கு, முற்பட்ட பேரரசர் காலத்து நாணயங்களுக்கும், நீரோவுக்குப் பிற்பட்ட பேரரசர் காலத்து நாணயங்களுக்கு இடையிலும் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருந்தது. கி.பி. 193 முதல் 211 வரை ஆண்ட உரோமப் பேரரசன் செப்டிமியஸ் செவெரஸ் (Septimius Severus) காலத்திற்குப் பிற்பட்ட காலத்து நாணயங்கள் காண்பதும் அரிதாம். 1800-ல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலும், 1878-ல் கருவூரிலும், 1891-ல் பெங்களூருக்கு அருகில் யெஸ்வன்புதூரிலும் கண்டெடுக்கப்பட்ட வெள்ளி நாணயங்களுக்கு இடையிலும், எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு செய்து கூட, டைபெரியஸ் காலத்தில் அல்லது அகஸ்டஸ் ஆட்சிக் காலத்துக்கு முன்னர் தொடங்கிற்று. திரு. ஹிப்பாலோஸ் (Hippalos) அவர்கள் கி.பி 45-ல் பருவக்காற்று ஓட்டத்தின் விளைவைக் கண்டெடுக்கவே உரோம நாணயங்கள், கிழக்கு நாடுகள் நோக்கி, வடிந்து போவது குறித்து டைபெரியஸ் முறையிட்டுக் கொண்டான். பொன் நாணயங்களும் வெள்ளி நாணயங்களும், இந்தியாவின் மேற்குக் கரை வாணிக மையங்களில் வந்து கொட்டின. இதற்குப் பெரிய காரணம், தனக்கு முந்திய காலத்தில், இந்தியாவுக்குச் சென்ற நல்ல நாணயங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்துமாறு வணிகர்களைத் தூண்டிவிட்ட நீரோ, நாணயச் செலாவணி மதிப்பைக் குறைத்துவிட்டதே தலையாய காரணம். தமிழ்நாட்டில், நீரோவுக்குப் பின்னர் வெள்ளி நாணயமே இல்லை. உரோமப் பேரரசின் பிற்பட்ட காலத்தை அடையும்வரை பொன் நாணயங்களும் காணப்படவில்லை. திருவாளர் சூவெல் (Sewell) அவர்கள், “பொன் நாணயங்கள் குவியல் குவியல்களாக ஆங்காங்கே புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டன என்றால், பாண்டியப் பேரரசுக்கும் சோழப் பேரரசுக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்ற போர்கள் காரணமாகவே தமிழ்நாட்டு வாழ்வை உரோமர் கைவிட்டனர் என்பதை மறுக்கிறார். பொன் நாணயங்கள், தமிழ்நாட்டில் நனிமிகக் குறைந்த அளவில் காணக் கிடைக்க, (மதுரை மாவட்டத்தில் மூன்று கண்டுபிடிப்பே நிகழ்ந்தன. கோவை மாவட்டத்தில் ஒன்று கூட இல்லை) அதற்கு நேர்மாறாக, வடமாவட்டங்களில் பெருமளவில் காணக் கிடைப்பது, பொற்காசுகள் கொடுத்து வாங்கும் ஆடம்பரப் பொருள்களின் தேவை ஓரளவு குறைந்தமையும், பண்டமாற்று மூலம் வாங்கப்படும் பருத்தியாலான பொருட்கள் போலும், இன்றியமையாத் தேவைப் பொருட்களை ஆர்வத்தோடு திரட்டும் புதிய வாணிகத் தூண்டுதலுமே காரணமாம் என்றும், வாணிக நிலையிலான மொத்த விளைவுகளும், கி.பி. 64-ல் நேர்ந்த கொடிய நீ விபத்து, கிலாடியஸ், வழிப் பேரரசின் வீழ்ச்சி. வெஸ்பாஸியனின் சிக்கன எடுத்துக்காட்டு. கி.பி. 81 முதல் 96 வரை ஆண்ட டோமிட்டியன் (Domitian) கொடுமை, அடுத்து வந்த பேரரசர்கள், செலவினத்தில் காட்டிய நிதானம் ஆகியவை. துணை செய்ய ஏற்பட்ட வாணிக வீழ்ச்சியையே காட்டுகிறது என்று கூறியுள்ளார். நறுமணப் பொருள்கள், விலை உயர்ந்த நவமணிக்கற்கள் ஆகியவற்றில் இந்தியாவோடு கொண்டிருந்த வாணிகம். நீரோ மன்னன் இறப்போடு பெரும்பாலும் முடிவுற்று விட்டது என்ற சூவெல் அவர்களின் முடிவு முழுவதும் உண்மையானதன்று. உண்மையைக் கூறுவதானால், திருவாளர் வார்மிங்டன் காட்டுவதுபோல் நீரோவுக்குப் பிற்பட்ட காலத்து நாணயங்களின் கண்டுபிடிப்பு குறிப்பிட்டுக் காட்டுவதுபோல், இருமடங்கு வளர்ச்சி இருந்தது. முதலாவது தாலமி அவர்களின் நிலஇயல் ஆய்வு நூல், நமக்கு அறிவுறுத்துமாறு, உரோமானிய வணிகர்கள், கன்னியாகுமரியைச் சுற்றிக்கொண்டு, கிழக்குக் கரை வரை சென்று வந்தமையினைச் சுட்டிக் காட்டும். தென்னிந்திய தீபகற்பத்தின் கிழக்குக் கரை வாணிக வளர்ச்சி கடப்பா மாவட்டம் வினுகொண்டா கோட்டை மற்றும் அதிரல் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து காணுமாறு அவர்கள் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களுக்கும், ஏனைய அரசு நாடுகளுக்கும் ஊடுருவிச் சென்றிருந்தனர். இரண்டாவதாகச் சேர நாட்டின் வடமேற்குவரை, வெள்ளி நாணயங்கள் இல்லாமை கொண்டுவந்த வெள்ளி நாணயங்கள் அனைத்தும், பொன் நாணயங்களைச் செய்யாத ஆந்திரர்களாலும் சாகர்களாலும் உருக்கப்பட்டு, மறுவலும் வடித்து வழக்காற்றில் விடப்பட்டது என்ற உண்மையால் விளக்கப்படும். திருவாளர் வார்மிங்டன் பின்வருமாறு கூறுகிறார்: “இதுவும், தமிழ்நாடுகளில் உரோம நாணயங்களின் இடை நிறுத்தமும், பிற வரலாற்று மூலங்களிலிருந்து நாம் உய்த்துணரும் ஒரு மனப் போக்கைப் பிரதிபலிக்கும். முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இரண்டாம் நூற்றாண்டிலும், நறுமண்ப் பொருள்கள், விலையுயர்ந்த நவமணிக்கற்கள் போன்ற பொருட்களுக்குக் குறைவிலாத் தேவை இருந்தது. ஆனால், அதே காலத்தில், இந்தியப் பொருள்களையும், உரோமானியப்பொருள்களையும் தமிழ்நாட்டில் பண்ட மாற்றிக்கொள்வது தடையின்றித் தொடர்வதும், தமிழ்நாட்டுக்கு அப்பாலும், கிழக்கு நாடுகளுக்கு உரோமானியர்களின் கடற் பிரயாணம் தொடர்வதும் ஒருபால் இருக்க, தமிழ்நாட்டிலிருந்து சில வணிகங்களைத் திருவாளர் தாலமி காட்டியவாறு, சிம்யல்லா (Simylla) போலும் நகரங்கள் வளர்ச்சி பெறக் காரணமாக, இந்தியாவின் வடமேற்கு மாவட்டங்களுக்கு மாற்றும் போக்கு இருந்தது. ஆனால், தமிழர்கள், கிரேக்கர்கள், சிரியன்கள், அராபியர்கள், பர்ஷியர்கள், சாகர்கள், ஆந்திரர்கள், குஷான்கள் ஆகியோரிடையே பல்வேறு வாணிக நிலையங்களைக் காணும் வகையில், தம் பண்டப் பொருள்களைத் தங்களால் இயன்ற அளவு மேற்குக் கடற்கரை வரைக்கும் அனுப்பி வைக்கத் தொடங்கிவிட்டனர். இலங்கையும் கூட, அதே நடைமுறையை மேற்கொண்டது. ஆனால், உரோமானியர் அங்கு எப்போதும் சென்றது இல்லை. ஏனைய இரு தமிழ் அரசர் நாடுகளைக் காட்டிலும், சேர நாடு, மிக்க வளம் வாய்ந்தது. மிக்க அமைதி நிலவுவது மேலை நாட்டு வணிகர்களால், மிகவும் எளிதில் அடையக் கூடியது. பார்பரிகான் (Barbaricon) “பரியகஜ” (Barygaza) போலும் இடங்கள், பர்சியர், அராபியர், சிரியர், பால்மைரெனியர், குஷானியர் மற்றும் வேறு சில மக்களால், ஏனைய தமிழ்நாட்டு இடங்களைக் காட்டிலும் எளிதில் அடையப்பெற்றது. திருவாளர் “பெரிபுலூஸ்” (Pariplus) அவர்கள், தம்முடைய காலத்தில், தென் கோடித் தமிழ்நாட்டு முத்தும், பல்வேறு வழிகளில் கிடைத்த ஆமை ஓடும், வாணிகம் காணும் பொருட்டு, மலபார் நாட்டு வணிக நிலையங்களுக்குக் கொண்டுவரப்பட்டன என்றும், இந்திய இரும்பு, (சிறப்பாக, மத்திய இந்திய மாவட்டத்தைச் சேர்ந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சிந்து நகரத்தைச் சேர்ந்தது) வடமேற்கு இந்தியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்ட்டது என்றும், இலங்கையின் செய் பொருள் (சிறப்பாக இலங்கை, பர்மா, சையாம் நாட்டு நீலமணிகள்) இந்தியாவின் கிழக்குக் கரைத்துறை முகங்களோடு தொடர்பு கொண்டிருந்த மலபார் வணிக நிலையங்களுக்குக் கொண்டுவரப்பட்டன என்றும் கூறியுள்ளார். (See. Warmington P.277-917).

7) பண்டைத் தமிழர்கள் மூவகை மரக்கலத்தைக் கண்டறிந்திருந்தனர். அவற்றுள் ஒன்று மீன்பிடி படகு, இரண்டு ஆற்றில் ஒடும் சிறு மரக்கலம். மூன்றாவது, கடலோடும் பெரிய மரக்கலம். மீன்படி படகை எடுத்து கொண்டால், அரபு நாட்டு மாதிரியானதும், பண்டங்களை ஏற்றிச் செல்வதும் ஆகிய சிறு படகு, மற்றும் பொய்னீஷியரின் படைக்கலம் பொருத்திய தட்டையான அடிப்பாகத்தை உடைய கப்பலை ஒத்திருப்பதும், திருவாங்கூர் நீர் விழாவில் பயன்படுத்தப் பெறுவதும் ஆகிய, துடுப்பால் உந்தப்படும் சிறு படகு போலும் உள் நாட்டு மாதிரிகளைக் காணலாம். கன்னியாகுமரிக்கு அப்பால், நூறு மைல் வரையும், பரதவர் கட்டுமரங்களையும், துடுப்பால் உந்தப்படும் மலபார் நாட்டுப் படகு போலும் சிறு படகுகளையும் கொண்டு செல்வர். இவை, நீண்டு பருத்த மரத்துண்டங்கள் இரண்டு அல்லது மூன்றைப் பனைநார்க் கயிற்றால் ஒன்று சேரக் கட்டப்பட்டவை. இச்சிறுபடகு, மெஸ்படோமிய அராபியர்கள், துடுப்பால் உந்தப்படும் தங்கள் மரக்கலங்களுக்கு இட்டு வழங்கும் வள்ளம் என்ற பெயரால் அழைக்கப்படும். பெரிய உந்து படகுகளில் மீன் பிடிக்க எழுவர் அல்லது எண்மர் கடல் மேல் செல்வர்.

கோடிக் கரையில், இன்றும் வழக்காற்றில் இருக்கும் (திருட்டுப்படகு எனும் பொருள் உடையதான) கள்ளத் தோணி, படகு வகைகளில் சிறப்புடைய ஒன்றாம் கண்ணேறுபடுதலால் உண்டாகும் கேட்டினைத் தவிர்த்தல் பொருட்டுக் கை முத்திரை, இடுதல், இதில் குறிப்பிடத்தக்க சிறப்பியல்பாம். இரு பக்கங்களிலும் குறை தீர்க்கும் குறியாம் “உ”, குதிரை வழிபடும் பெண் தெய்வத்தின் பெயர்கள் ஆகியனவும் பொறிக்கப்பட்டிருக்கும். மீன் பிடிக்கப் போவார், போவதன் முன்னர், மாரியம்மனை வழிபடுதல் கோடிக்கரையில் இன்றும் வழக்காற்றில் இருக்கிறது. மேலும் ஒரு வியப்பு என்னவென்றால், இவ்வழக்கம் உலகெங்கும் உள்ள வழக்கமாம். கள்ளத் தோணிக்கு உரியவர்கள் கரந்துறை வெள்ளாளர் என அழைக்கப்படுவர். அஜந்தா குடைவரைகளில் கி.பி. 600 ஆண்டைய வண்ண ஓவியங்களுள், மூன்று பாய்மரங்களோடு கூடிய கப்பல் மற்றும் அரசு விழாக்களில் பயன்படும் வள்ளப்படகு ஆகியவற்றின் ஓவியங்கள் காணப்படுவது காலாகாலமாகக் பின்பற்றப்பட்டு வரும் வழக்கத்தினைக் காட்டுகிறது. இந்தியாவுக்கு வெளியில், கிரேக்கர்களும், உரோமானியர்களும், பண்டைய எகிப்தியர்களும், இவ்வழக்காற்றைப் பின்பற்றினர். சீனாவைச் சேர்ந்தனவும், இந்தோ-சீனாவைச் சேர்ந்தனவும், வட இலங்கையைச் சேர்ந்தனவும் ஆகிய சீனக்கடல் ஓடவல்ல, அடித்தட்டையாக உள்ள மரக்கலங்களில் கண் பொறிக்கப்பட்டது என்பது சொல்லத் தேவை இல்லை. கிருஷ்ணா வரையான கிழக்குக் கடற்கரையில் கட்டுமரங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தன. அதற்கு அப்பால், இதனினும் பழமையானதான கட்டுமரம் வழக்காற்றில் இருக்கிறது. கோதாவரி கழிமுகங்களில் கால் அணியாம் ஷூ வடிவிலான தோணி, காணக்கூடிய ஒன்றாம்.

ஆற்றில் ஓடவல்ல தென்இந்திய மரக்கலம், நான்கு வகைப்படும். தஞ்சையிலும் வங்காளத்திலும் இன்றும் வழக்காற்றில் இருக்கும் வாழைமரத்தண்டுகளால் ஆன கட்டுமரம் நனிமிகப் பழமையானது. மேற்கூறியது போலவே நனிமிகப் பழமையானதும், வேலூரில் இன்றும் காணக்கூடியதுமான மட்கலமிதவை, இரண்டாவது இனம் மூன்றாவது வகை, காவிரி, துங்கபத்திரை, டைகிரிஸ், மற்றும் இயூபிரட்டஸ் ஆறுகளில் விடப்படும் பரிசில், தாம் காய்ச்சிய மது வகைகளை டைகிரிஸ் ஆற்றின் வழியே இயூபிரட்டஸ் ஆற்றுப் பகுதியும் பர்ஷிய வளைகுடாப் பகுதியுமான சால்டியன் (Chaldeen) நாட்டு நகரங்களுக்குக் கொண்டு செல்ல, அஸ்லிரிய மது வணிகர்களால், தோலால் மூடப்பட்ட பரிசில்கள் பயன்படுத்தப்பட்டன என்பதும் ஈண்டுக் குறிப்பிடல் தகும். இப்பரிசில் வகைகள், பரிசிலுக்குத்தார் பூசப்பட்ட மெழுக்குத் துணிகள், பயன்படுத்தப்பட்ட அயர்லாந்து வரையும் பயணம் செய்ததாகத் தெரிகிறது. பனைமரங்கள் இரண்டை ஒன்றாக மூட்டிக் குடைந்து செய்யப்பட்டு “சாங்கடம்” (Sangadam) என்ற பெயரில், கோதாவரித்துறை முதல், தென்னிந்தியா மற்றும் இலங்கை வரை காணப்படும் பரிசில் நான்காவது வகை.

“சுருயல்” (Surual) என வழங்கப்படும் கடல் ஓடும் கப்பல்கள் தென்னிந்தியாவில் உள்ளன. இவை, நீண்ட கிடக்கையிலான, வெள்ளைநிறக் கட்டைகளைத் தாங்கி, சிவனின் அடையாளச் சின்னமாகிய மூன்று பட்டைத் திருநீறு பூசப்பட்டிருக்கம்.

கடல் ஓடும் கப்பல்களில் உள்ள பாய்விரி கப்பல் மற்றும் கப்பல் ஒருபால் சாய்ந்து விடாதபடி காக்கும் பக்கவாட்டுச் சட்டம் ஆகியவற்றின் வடிவமைப்பு, “பொலினிஷிய” ஒருமைப்பாடு உடையதாகக் கொள்ளப்படுகிறது. அது எப்படியாயினும், அந்த ஒருமைப்பாடு, இந்தியாவுக்கு, பொலினீஷியாவுக்கும் இடையில் நடை பெற்ற வாணிக உறவைத் தாங்கியுள்ளது ஆந்திரா மற்றும் குறும்ப அரசர்களின் நாணயங்கள், ஒற்றைப் பாய்விரிதுலம் இல்லாமல் இரட்டைப்பாய்விரி கூம்புகளைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாம். மலேயா நாட்டுக் கப்பல்களுக்கு இடப்பட்டிருக்கும் பெயர் தமிழ்ச் சொல்லாகிய கப்பல் என்பதாம் என்பது நனிமிக வியத்தற்கு உரியது. மலேசிய மொழிகளில், தென்னிந்திய மொழி மூலத்தைக் கொண்ட எண்ணற்ற சொற்கள் உள்ளன. இவைபோலும் உண்மைகள், தென்னிந்திய நாகரீகம், கடல் கடந்த நாடுகளிலும் சென்று பரவின என்பதை மேலும் உறுதி செய்கின்றன.

நனிமிகப் பழங்காலத்திலேயே, தமிழர் செல்வாக்கு எப்படியெல்லாம் உலகெங்கும் பரவியிருந்தது என்பதைக் காண்கிறோம். கண் பொறிக்கப்படுவது, பரிசில்கள் உலகெங்கும் பரவிக் கிடப்பது ஆகியனபோலும் தெளிவான நிகழ்ச்சிகள், அங்கும் ஒரே காலத்தில் தோன்றிய ஒருபோகு நிலையாம் என எளிதில் ஒதுக்கி விட முடியாது.

“வங்காளத்து ஆசிய சமூகத்தவர் நினைவுகள் (Memories of Asiatic Society of Bengal VII) என்ற தலைப்புள்ள திருவாளர் ஜே. ஹார்னெல் (J. Hornell) அவர்களின் கட்டுரையினைக் காண்க (பக்கம் 152-190; 216-227) 8) பூமராங்கு எனப்படும் வளைதடி மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ளது. (J.R.A.S. 1898, page: 379, J.A.S.B. 1924, p. 205).

தக்கணத்தின் தொல் பழங்குடியினரோடு ஒருமைப்பாடுடையவர் ஆஸ்திரேலியர் எனக்கருதும், ஆங்கில நாட்டு உயிரியல் அறிஞரும், எழுத்தாளரும் ஆன, திருவாளர் ஹக்ஸிலி (Huxley) அவர்கள் இருநாட்டிலும் வளைதடி இருப்பது, ஆஸ்திரேலியாவில் உள்ள சில இனத்தவர் கால்வழி ஆகிய பொருள்கள் மீது கருத்தூன்றி ஆய்வு செய்துள்ளார்.

திருவாளர் தர்ஸ்டன் (Thurston) அவர்களுக்குப் புதுக்கோட்டையின் அன்றைய திவான் கொடுத்திருக்கும் அடியில் தரப்பட்டிருக்கும் குறிப்பு கவனத்தோடு படிக்கத் தக்கது:

“வளலரி” எனப்படும் வளைதடி பொதுவாக, நன்கு வயிரம் ஏறிய கடின மரத்தினால் செய்யப்பட்ட படைக்கலன் ஆகும். ஒரோவழி இரும்பால் செய்யப்படுவதும் உண்டு. பிறை வடிவானது. ஒரு முனையைக் காட்டிலும், மற்றொரு முனை கடினமானது. வெளி விளிம்பு கூர் செய்யப்பட்டது. அதைக் கையாளத் தெரிந்தவர், அதன் கனம் குறைந்த முனையைக் கையில் பற்றிக்கொண்டு, விரைந்து பாயவல்ல ஆற்றலை அதற்குத் தரும் வகையில், தம் கோள்களுக்கு மேலாகப் பலமுறை விரைந்து சுழற்றிப் பின்னர் தாக்கக் கருதிய பொருள்மீது வீசி எறிவர். ஒரே வீச்சில் சிறிய வேட்டை விலங்கினை – ஏன் ஒரோ வழி மனிதனையும் வீழ்த்தும் வளை தண்டு வீச வல்லவர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வளைதடி ஒரோவழி முயல் மற்றும் காட்டுக் கோழியை வேட்டை ஆடப் பயன்படுத்தப்படுவதாக அறிமுகம் செய்யப்படுகிறது என்றாலும் புதுக்கோட்டை மாநிலத்தில், வளைதடி வீச வல்லார் எவரும் இப்போது முன்வரவில்லை. ஆயினும், அதன் வாழ்நாள், இறந்த நாளாக ஆகிவிட்டது என்றே கணக்கிடப்பட்ட வேண்டும் கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற பாளையக்காரர்களிடையிலான சண்டைகளில், அப்படைக்கலம் பெரும் பங்கு கொண்டது என மரபு வழிச் செய்தி கூறுகிறது.” (E. Thurston, Castes and Tribes of Southern India. Vol. I introduction p. xxviii-xxix.) .

“பண்டைய எகிப்து, ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் ஐக்கிய நாடுகளின் தென்மேற்கில், மெக்ஸிகோவை அடுத்துள்ள அரிஸோனா (Arizono), புதுமெக்ஸிகோ, மற்றும் இத்தாலியின் மைய நாடாகிய எட்ருஸன் (Etruscan) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குவளைகளிலிருந்து பதிவு செய்யப்பட்ட கணக்கிலா அகச்சான்றுகளிலிருந்து, ஆஸ்திரேலியப் பழங்குடியினரிடையே, எதிர்பாரா நிலையில், தன்னாலேயே தோன்றியதோ, எந்த நிலையிலும், ஆஸ்திரேலிய மண்ணிலேயே தோன்றியதோ அல்லாமல், ஆசியப் பெருநிலப் பரப்பிலிருந்து, ஆங்கு முதன் முதலில் சென்று குடியேறியவர்களால் கொண்டு செல்லப்பட்ட தான வளைதடி, ஒரு வலுவான படைக்கலமாகவே மதிக்கப்பட வேண்டும். திரும்பி வந்துசேரும் ஆஸ்திரேலிய வளைதடிக்கே உரிய சிறப்பியல்புகளாகிய, அலகுபோலும் தட்டையாம் தன்மை, திருகு சுருள் போலும் முறுக்குகளைத் தென் இந்திய வளைதடி இழந்துளது. ஆஸ்திரேலிய வளைதடிகளில், பெரும்பாலன. திரும்பி வரும் வகையில் வடிக்கப்பட்டது அன்று. உண்மையில் திரும்பி வந்தடையும் வளைதடிகளைப் பெறுவது இப்போது அரிது. (E. Thurston Ethnographic Notes in Southern India. P. 555-6).

9) தென்கிழக்கு ஆசியாவில் இந்தியர் குடியேற்றம்.

இன்றைய இந்தோ சைனாவின் தென்பகுதி, மற்றும் கிழக்கிந்தியத் தீவுகளில், மக்கள் குடியேற்றம், திருவாளர் பெர்ராண்ட் (Ferrand) அவர்கள் கூற்றுப்படி, கி.மு.மூன்று அல்லது ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்பே தொடங்கிவிட்டது. திருவாளர் க்ரோம் (Krom) அவர்கள், அத்தீவுகளில் மக்கள் குடியேற்றம். கிறித்தவ ஆண்டுத் தொடக்கத்தில் கூட தொடங்கப்படவில்லை என்று கருதுகிறார். திருவாளர் பெல்லியோட் (Pelliot) அவர்கள் கருத்துப்படி, கம்போடியாவின் தென்பகுதி மற்றும் கொச்சின்-சைனாவை உள்ளடக்கிய “ப்யூனன்” (Fuman) எனும் இடத்தில் மக்கள் குடியேற்றத்தைத் துவக்கி வைத்த திரு.கெளண்டினியன் (Kaundinya) அவர்கள், குறைந்தது கி.பி முதல் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் வைக்கப்படவேண்டும். “சம்பா” பகுதியிலும் அதற்கும் அப்பாற்பட்ட தெற்கு அன்னம் கழித்தே இக்குடிபெயர்ப்பு மேலும் நூறு ஆண்டுகள் கழித்தே நடைபெற்றிருக்க வேண்டும். சுவர்ணதீபம் அதாவது பொன்தீவு என அழைக்கப்படும் சுமத்ரா மற்றும் யவபூமி என்றும், பார்லே நாடு (Land of Barley) என்றும் அழைக்கப் பெறும் ஜாவா முதலியன, சீன யாத்திரீகன் அடியிட்ட குப்த அரசு காலத்தில் புகழ் பெற்றும் விளங்கின.

“மேற்கே, தென் ஆப்பிரிக்க முனையை அடுத்துள்ள மடகாஸ்கர் முதல் கிழக்கே, வியட்நாம்நாட்டின் ஒரு பகுதியாகிய தொங்கிய (Tongking) வரை பரவியிருந்த இந்தியச்செல்வாக்கின் மக்கள் குடியேற்றப்பரவல், வெறும் பொருள் ஈட்டும் பெருமுயற்சி மட்டும் அன்று. அது சமய முடிவுகளையும் கருத்தில் கொண்டது. வைணவம், சைவம், மற்றும் பெளத்தம் ஆகிய சமயங்கள் கொடிய போராட்டத்திற்குக் கொண்டுபோய்விடும் சமய வேறுபாடுகளும் இடம் கொடாமல், புதிய மண்ணில் வேர் ஊன்ற முற்பட்டன. ஆஸ்திரேலியத் தீவுகள் மற்றும், மத்திய, தென்பசிபிக் கடல் தீவுகள், இந்தியக் குடியேற்றப் பகுதியாக ஆனது. கொடும் போரின் விளைவால் நேர்ந்ததாகத் தெரியவில்லை.”

(Paul Masson-Cursel. Helena De Willman-Grabowska, and Philipp Stern அவர்களின் பண்டை இந்தியாவும் பண்டை இந்திய நாகரிகமும் (Ancient India) and Indian Civilization. p. 110-11 | Kegan-Paul, Trench, Trubner & co., Ltd., 1934).

10) மேலைக்கடல் தீவுகள், எகிப்து, ஆப்பிரிக்கா ஆகியவை ஒருபக்கமாகக் கீழ்க்கடல் தீவுகள், வட அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள யுகாடன் (Yucatan) மெக்ஸிகோ ஆகியன ஒருபக்கமாக இரண்டிற்கும், இடையில் நிலவிய இணைப்புக்கான அடையாளங்கள்:

ஜப்பான் நாட்டு சுகுவில் (Sukuh) அழிவுறாமல் விடப்பட்டிருக்கும் கட்டிடங்களுக்கும் வடஅமெரிக்காவின் தென்மேலைப் பகுதிகளாகிய யுகாடன் மற்றும் மெக்ஸிகோவின் மாளிகைகளுக்கும் இடையில் நிலவும் ஒருமைப்பாடு நினைவில் கொள்ளத்தக்க ஒன்று. இதிலிருந்து, திருவாளர் பெர்கூஸன் (Perguson) அவர்கள், மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த கட்டிடம் கட்டும் இனத்தவர், ஜாவாவில், தற்காலிமாகக் குடிவந்த, அதே கட்டிட இனத்தவரே என முடிவு செய்கிறார். அங்ஙனமாக, ஜாவா, தன்கட்டிடக்கலையினை, எங்கிருந்து எவ்வாறு பெற்றது என்பதே அடுத்த கேள்வி. இந்தியா குறிப்பாகத் தென்இந்தியாவே வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்தில், பண்டைய ஜாவா மக்களை, அக்கலைத் துறைக்கு ஈர்த்திருக்க வேண்டும் என்பதே அதற்கு விடையாதல் வேண்டும். .

“ஒரு நாட்டு வீடுகளின் நுழைவாயில், பண்டை எகிப்திய கோபுரவாயில்களைப்போல், எடுத்துக்காட்டுக்கு நைல்நதிக்கரை “கர்னக்” (Karnak) எனும் இடத்தில் உள்ளதுபோல் உள்ளது. என்றாலும், இது போலும் வடிவங்கள், சுகுவில் உள்ளதைக் காட்டிலும் அதிக ஒருமைப்பாடு உடையன சொகொட்டோ,(Sokoto) அடமவ (Adamawa) மற்றும் காண்டோ (Gando) ஆகிய இடங்களில் வாழும் மக்களில் பெரும்பாலனவராக உள்ள சூடான் நாட்டு ஹெளஸா (Haussa) மக்களிடையே, இன்றும் உள்ளன” என்ற குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இது, திருவாளர் “ஸ்டுட்டெர்ஹெம்” (Stutierem) அவர்களைக், கிழக்கு ஜாவா மக்களிடையே, எகிப்தியச் செல்வாக்கு இருந்தது என்ற முடிவினைத் தரச்செய்துள்ளது. ஆனால், நம்முடைய கொள்கைப்படி, எகிப்தியர் தாமும், இந்திய நாகரீகத்தால் இயக்கப்பட்டனர். ஆகவே, உலகத்தின் தொல்பழம் நாகரீகத்திற்குப் பொறுப்பாளி எகிப்து அன்று. இந்தியாவே (R.C. Majundar, Svarnadvipa. Vol, II. Part II, p. 283-84).

இந்தோனேஷியாவில் தென்னிந்தியச் செல்வாக்கு ஒரு சிற்றாய்வு:

புகழ்பெற்ற நாளந்தாப் பல்கலைக் கழகத் தலைவரும், காஞ்சியில், உயர்ந்த அரசுப் பணியாளரின் மகனாகப் பிறந்தவரும், அன்றைய பெரும் புலவர்களில் ஒருவராம் என்ற பெருநிலைக்கு உயர்ந்தவருமான தர்மபாலர், தம் கடைசி வாழ்நாட்களைச் சுமத்ராவில் கழித்ததாகச் சொல்லப்படுகிறது. நாளந்தாப் பல்கலைக் கழகத்தில் அவர் தலைமை வகித்த காலத்தை, தொடக்கத்தில் ஏழாம் நூற்றாண்டில் நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. (திரு. எச்.டி. சங்கலியா அவர்களின் நாளந்தாப் பல்கலைக்கழகம் என்ற ஆங்கில நூலைக் காண்க (பக்கம் 107-8) தர்மபாலர் நாளந்தா பல்கலைக் கழகத்தில் முப்பது ஆண்டுகாலம் பாடம் கற்பித்துவிட்டு, தம் வாழ்நாளின் இறுதியில் சுவர்ணபூமி சென்றடைந்தார். ஶ்ரீவிஜயத்திற்கும் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கும் இடையில் இருந்த மிகப் பெரிய போக்குவரத்து ஏனைய அகச் சான்றுகளேயல்லாமல், தஞ்சைப் பேரரசன் முதலாம் இராஜராஜன் தன்னுடைய ஆட்சி ஆண்டு 23-ல், அதாவது கி.பி. 1007-8-ல் கடாரம் மற்றும் ஶ்ரீவிஜயத்தின் அரசனும் சைலேந்திரன் வழிவந்தவனுமான ஶ்ரீமாரவிஜயோத்துங்கன் நாகப்பட்டினத்தில் கட்டிய சூடாமணி விஹாருக்கு வழங்கிய லெய்டன் கிராண்ட்கல்வெட்டாலும் தெரிய வருகிறது. சோழர் வெற்றி பெற்ற நாடுகளாகமலேயத் தீபகற்பத்தைச் சேர்ந்த நிகோபார் தீவுகள், தகோபா மற்றும் சுமத்ரா ஆகியவற்றைத் திருவாலங்காட்டுச் செப்பேடு குறிப்பிடுகிறது. பிற்காலச் சோழன் ஒருவன், கடாரத்தை வென்று பெருந்தன்மையோடு அதன் ஆட்சிப் பொறுப்பை அதன் அரசன்பால் ஒப்படைத்தான்.

மேற்கில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள டோபோ (Tabo) ஏரியைச் சுற்றி வாழும் கரோ-படகம் (Karo Bataks) பழங்குடியினரின் ஐந்து பிரிவினரில் ஒரு பிரிவினராகிய “மெர்கா சிம்பிரிங்” (Merga Symbiring) என்ற பழங்குடியினரிடையே உள்ள ஈமச்சடங்கு குறித்துச் சிறந்த கட்டுரை ஒன்றைத் திருவாளர் பேராசிரியர் “கெர்ன்” (Kern) என்பார் குறிப்பிட்டுள்ளார். சிம்பிரிங் இனத்தவரின் கிளைப் பிரிவினர் சொலியா, பாண்டியா, மெலியலா, தேபரி மற்றும் பெலவி (பெலவி அதாவது மலாய்) என்பவராவர். முதல் மூன்று பெயர்களும், தென்னிந்தியாவில் நன்கு அறிந்த இனப் பெயர்களாம். அவை இப்போது ஆய்வில் உள்ள பழங்குடியினர் திராவிட இனத்தவராவர் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. ‘பெலியலா” என்பது மலையாளம் என்பதனோடு ஒருமைப்பாடுடையதே; “பெலவி” என்பது “பல்லவா” என்ற சொல்லோடு ஒருமைப்பாடுடையதாகக் கொண்டால் அது நனிமிகு கவர்ச்சிக்கு உரியதாம்” என்கிறார் திருவாளர் “கெர்ன்” அவர்கள். கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றான, “போர்னியோ”வில் உள்ள “கோயிடெய்” (Koetie) என்னும் இடத்தில் காணப்படும் எழுத்து வடிவம், மகேந்திரவாடியிலும், தளவனூரிலும் உள்ள மகேந்திர பல்லவனின் குகைக் கல்வெட்டு எழுத்துக்களோடு ஒரு சார் ஒருமைப்பாடு கொண்டுள்ளது. .

இந்தியாவின் வடகோடியிலிருந்து தென் கோடிக்கும், அங்கிருந்து வங்காள விரிகுடாவைக் கடந்து மலேயத் தீவுகளுக்கும், அகஸ்தியர் குடிபெயர்ந்தார் என்ற சமயக் கோட்பாடு, மேலும் மேலும் ஆதரவு பெற்று வருகிறது. வாயு புராணத்தின்படி, திருவாளர் தீக்ஷிதர் அவர்களின், வாயு புராணத்தின் சில கூறுகள் (Some Aspects of Vayu Purana See. vii) அகஸ்தியர் ஜாவாவைப் போலவே பர்ஹினதீபா. (பெரும்பாலும் , போர்னியோ), குஷதீபா, வராஹதீபா, சாணக்யதீபா மற்றும் மலையதீபா ஆகிய இடங்களுக்கு வருகை தந்தார். ஓர் அகஸ்தியர், தென்னிந்தியாவைச் சேர்ந்த மலைய பர்வதத்திலிருந்து வேறுபட்டதான மலையதீபாவில் உள்ள மஹாமலைய பர்வதத்தின் மேல் ஓர் அகஸ்தியர் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. சுமத்ராவில் உள்ள முக்கியமான ஒரு மலை, இன்றும் மலையமலை என்றே அறியப்படுகிறது. கிழக்கிந்தியத் தீவுகளுக்கு அகஸ்தியர் வருகை தந்தார் என்ற கற்பனைக் கதை, ஒருவேளை, இந்தியப் புண்பாட்டின் குடியேற்றத்திற்கு முந்திய, அதற்கு வழி வகுத்த தென்னிந்தியாவிலிருந்து அலைஅலையாக வந்த பிராமணப் பண்பாட்டின் வரலாற்றுச் சின்னமாம் என வாதிடப்படுகிறது. ஜாவாவில் அகஸ்தியரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சிவன் கோயில், மற்றும் அங்கு, தென்னிந்திய அகஸ்திய கோத்திர பிராமணர் வழிவந்தவர் குடியிருப்பு பற்றிய அகச்சான்று எதுவும் இல்லை. அகஸ்தியர், இந்தோனேஷிய பிராமண நாகரீகத்தின் பெயர் சூட்டு தலைவனாக இல்லையாயினும், பிராமணப் பண்பாட்டுத் தலைவனாக வளர்ந்திருக்கக் கூடும்.

மத்திய ஜாவாவில் டியெங் (Dieng) மேட்டு நிலத்தில் கட்டப்பட்ட சஞ்சயாவில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட பழைய சிவா கோயிலுக்கு அருகில், தென்னிந்திய மூலச்சாயல் உடைய கணேசர், துர்க்கை சிலைகள் உள்ளன. பிரம்மணம் (Prambanam) என்ற இடத்தில் உள்ள இந்து சமயக் கோயில் இடிபாடுகளில் 9, 10, 11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தென்னிந்தியச் சிலைகளின் வடிவமைப்பினையும், உருவத்தால் பொருள் உணர்த்தும் தன்மையினையும் நினைவூட்டுவதாகக் கருதப்படும் சிவன், விஷ்ணு, பிரமன் மற்றும் திரிமூர்த்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருவாளர் ஒ.சி. கங்கோலி அவர்கள் தம்முடைய “தென்னிந்திய வெண்கலங்கள்” என்ற தலைப்புள்ள ஆங்கில நூலில், உமா-மகேஸ்வர மாதிரி, தென்னிந்திய சிலை ஒன்று, உண்மையில் எடுத்துச் செல்லப்பட்டதற்கான ஐயத்திற்கு இடம் இல்லா அகச் சான்றினைக் குறிப்பிட்டுள்ளார்.

எட்டு ஒன்பது நூற்றாண்டுகளில், ஜாவா இயல்புடையதாக ஆக்கப்பட்டதும், அதன் விளைவாக, அதன் இரண்டாம் நிலை இந்துவாம் தன்மையைப் பெற்றதும் ஆகிய பாலித்தீவில், தென்னிந்தியப் பல்லவ கிரந்த எழுத்து திருந்திய வடிவில் வழக்காற்றில் இருந்தது போன்ற, இந்தியாவிலிருந்து நேரிடையாக இடமாற்றம் இருந்தமைக்கான அகச் சான்றுகள் உள்ளன. திருவாளர், ஸ்டுட்டெர்ஹெம் அவர்களின் “பண்டைய பாலி இனக் கலையில் இந்தியச் செல்வாக்கு” என்ற நூலையும், டாக்டர் பி. சிச்சப்ஹர அவர்களின் “பல்லவர் காலத்தில் இந்தோ-ஆரியப் பண்பாட்டின் விரிவாக்கம்” என்ற நூலையும் காண்க. இந்தியாவிற்கு நனிமிகத் தொலைவான நாடுகள் மற்றும் இந்தோனேசிய நாடுகளின் பண்பாடு, பல்லவ ஆவணங்கள், அவை போலும் நிகழ்ச்சிகளுக்கான சிறு குறிப்பினைத்தானும் பெற்றிருக்கவில்லையாயினும் பல்லவர்கள், அத்தொலை நாடுகள் வரையும் தங்கள் அரசாணையைச் செலுத்தி, பரந்த பெரிய காலனி , ஆட்சியை நிறுவி இருக்க வேண்டும் என்ற யூகத்தை உறுதி செய்யவல்ல அசைக்க முடியாத பல்லவ முத்திரையினைக் கொண்டுள்ளது.

11) தென்இந்தியாவுக்கும் தென் சீனாவுக்கும் இடை யிலான தொடர்பு:

தென் சீனாவோடு கொண்டிருந்த தொடர்பைப் பொறுத்த வரையில், அன்னம் எனவும் அழைக்கப்படும் சம்பா நாட்டில் வோகன் (Vocan) எனும் இடத்தில் உள்ள சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், இந்தியா உடனான தொடர்பு அதற்கு முந்திய காலத்தில் இல்லையாயினும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டு போலும் பழங்காலத்தைச் சேர்ந்தது என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. உரோம வணிகர்கள் கடல் வழியாக கட்டிகராவுக்கு அதாவது கொச்சின் சீனாவுக்குக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்தனர். கி.பி. 166-ல் அவர்களில் ஒருவர் இன்றைய தொங் கிங் நகராகிய கியஒ-சு (Kiao-Cho). துறையில் இறங்கினர்.

இந்தோசீனாவில் உள்ள இந்தியர் குடியிருப்புகளில் இருந்தோ அல்லது தம் தாயகமாம் இந்தியாவிலிருந்து நேரிடையாகவோ, கடல் வழியாக வந்த புத்த பிக்குகளால் தென்சீனா பழங்காலத்திலேயே ஆட்கொள்பபட்டுவிட்டது. தென்சீனாவைச் சேர்ந்த பெளத்தப் பண்பாடு, தென் இந்தியாவின் தெளிவான முத்திரையினை ஏற்றுள்ளது. திருவாளர் பி.கே. முகர்ஜி அவர்களின் “சீனாவிலும், தொலைகிழக்கு நாடுகளிலும் இந்திய இலக்கியம்” (Indian Literature in China and the Far East, p. 25- 26) என்ற நூலைக் காண்க.

சீனாவுடனான இந்தியப் பண்பாட்டுத் தொடர்பு:

தென்சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மற்றும் இந்தோனேஷியாவுக்கும் இடையில் கடல்வழித் தொடர்பு கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னரே தொடங்கிவிட்டது.

கி.பி. 618 முதல் 907 வரை ஆட்சியில் இருந்த “டி-வாங்” (Tang) இனத்தவர் காலத்தில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த கடல்வழி, பெரிதும் வணிகர்களாலும், சமயப் பிரயாணிகளாலும் பயன்படுத்தப்பட்டது. தொலைதூர இந்தியத் தீபகற்பமும் கிழக்கிந்தியத் தீவுகளும், இந்திய நாகரீகம் உடையவாக ஆக்கப்பட்டுவிட்டன. ஶ்ரீவிஜயன் பேரரசு, ஜாவா, நாட்டின் கலிங்க மாநிலம், ப்யூனன் அல்லது பண்டைய அன்னம் போன்றவை. இந்துப் பண்பாடு நிலவும் நாடுகளாம் என்ற உலகப் புகழ் பெற்றுவிட்டன. எங்கும் சமஸ்கிருதம் கற்கப்பட்டது. சீனச் சமயப் பிரயாணிகள், தங்களுக்குத் துணைசெய்யவும், தங்க இடந்தரவும் சமஸ்கிருத மொழி வல்லார்களைக் கண்டனர். சீன யாத்திரிகன் இட்சிங்க் கூட இந்த வழியாகவே வந்தான். கி.பி. 618 முதல் 799 வரையான காலத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட பெளத்த சந்நியாசிகள், இந்தியாவுக்கும், அதன் குடியேற்ற நாடுகளுக்கும் சென்றனர். ஏறத்தாழ 400 நூல்கள் சமஸ்கிருதத்திலிருந்து சீன மொழிக்கு, மொழி பெயர்க்கப்பட்டன. அவற்றுள் 300 நூல்கள் இன்றும் அழியாமல் உள்ளன. சமஸ்கிருத்திலிருந்து சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கடைசி நூல் கி.பி. 1280 முதல் 1368 வரை ஆட்சியில் இருந்த ய்யூன் அல்லது மொங்கோல் அரச இனத்து ஆட்சிக் காலத்தில். 12-13 இலங்கை அரசர்கள் முதல் இரண்டு சேனர்களுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையில் நடை பெற்ற போர்கள்:

“பூஜாவலிய” என்ற நூலின்படி, பராக்கிரமபாபு என்ற பேரரசன் காலத்திலிருந்து பின் நோக்கிக் கணக்கிட்டவாறு, முதலாம் சேனன், தன்னுடைய ஆட்சியைக் கி.பி. 819-820-ல் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. அவன் காலத்தில், இலங்கைமீது, பாண்டியர் படையெடுப்பு ஒன்று நிகழ்ந்தது. அந்நாட்டில் வாழ்ந்திருந்த தமிழ் இனத்தவர் அதில் சேர்ந்துகொண்டனர். அநுராதபுர நகரும்கூட அழிக்கப்பட்டது. ஆங்கு வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னங்களாகிய புத்தரின் பல், மற்றும் கமண்டலமும் எடுத்துச்செல்லப்பட்டன என, பிற்கால வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், இதை உறுதி செய்யவல்ல வேறு அகச்சான்று எதுவும் இல்லை. சேனன். அநுராதபுரத்திற்குத் திரும்பி விட்டான். அமைதி நிலைநாட்டப்பட்டது.

இரண்டாம்சேனன் தன் ஆட்சிக்காலத்து ஒன்பதாவது ஆண்டில், அதாவது கி.பி.866-901-ல், அவன் படைத்தலைவன் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்துச் சென்று, மதுரையைக் கைப்பற்றி அழித்துவிட்டு, பாண்டிய அரசன் போரில் பெற்ற புண்ணால் இறந்து போகவே, பாண்டியர் குலத்தவர் எனச் சொல்லிக்கொண்ட ஒருவனை அரியணையில் அமர்த்தினான்.

ஐந்தாம் காசிபன் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 929-939) இராஜசிம்மபாண்டியன், சோழர்க்கு எதிரான போரில் அவன் துணையை நாடினான். ஆனால், இந்தியாவுக்குச் சென்ற, சிங்களப்படை, வெற்றி காணாமல் திரும்பிவிட்டது. ஐந்தாம் தப்புலா காலத்தில் (940-952) கி.பி. 918-19 ஆண்டளவில், பாண்டிய அரசன் இலங்கைக்குச் சோழ நாட்டிலிருந்து தேர்ந்தோடி வருகை தந்தான். சிங்கள அரசன் அவனுக்குத் துணை போவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போது, அந்நாட்டுச் சிற்றரசர்களிடையே உள்நாட்டுக் குழப்பம் திடுமென எழுந்து விடவே, பாண்டியன், தன் முடி மற்றும் அரசியல் அணிகலன்களை அங்கேயே விட்டுவிட்டு, ஏமாற்றத்தோடு மலபாருக்குத் திரும்பி விட்டன.

கி.பி. 942 முதல் 918 வ்ரை ஆட்சியில் இருந்த மூன்றாம் உதயனின் பலவீனத்தைப் பயன்கொண்டு பராந்தக சோழன், ஆங்குப் பாண்டியன் விட்டுச் சென்ற முடி மற்றும் அரச அணிகளைத் திரும்பப்பெற அரசியல் தூது ஒன்றை அனுப்பி வைத்தான். அது மறுக்கப்படவே, பராந்தன் இலங்கை மீது படையெடுத்துச் சென்றான். ஆனால், உதயன் அரச சின்னங்களோடு ரோசனத்திற்கு ஓடிவிட்டான். எதிர்பாரா இராஷ்டிரகூடர் படையெடுப்பு வந்துவிடவே, சோழர், பேரச்சத்தோடு சோழர் தாயகம் திரும்பிவிட்டனர். சோழ நாட்டின் எல்லைப் பகுதிகளை அழித்து உதயன் தானும் பழி தீர்த்துக்கொண்டான்.

கலிங்க நாட்டுச் சிற்றரசி ஒருத்தியை மணந்து கொண்ட நான்காம் மகிந்தன் காலத்தில், ஶ்ரீவல்லப பாண்டியனால் இலங்கை தாக்கப்பட்டது, அப்போரில் பாண்டியன் படைத் தலைவன் கொல்லப்பட்டான். ஐந்தாம் சேனன், கி.பி. 991 அளவில், இலங்கையில் வாழ்ந்திருந்த தமிழர்கள் கிளர்ச்சியால் துன்பப்பட நேர்ந்தது.

இராஜராஜசோழன், மகிந்தனை, அவனுடைய முடி அணிகலன்களைப் பாண்டியன் விட்டுச்சென்ற முடி அணிகலன்களோடும் கைப்பற்றி, தன்வெற்றியை முடித்துக் கொண்டான் இலங்கை, சோழ நாட்டின் ஒரு மாநிலமாகிவிட்டது. பொலனருவா நரகம், ஜனனாதபுரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மகிந்தன், இந்தியச் சிறையில் இறந்துபோனான். முதலாம் சேனன் காலத்து இலங்கைமீது படையெடுத்துச் சென்றவன், ஶ்ரீவல்லப பாண்டியன் மகனாகிய வரகுண பாண்டியனாவன். முதல் இரண்டு சேனர்களும் தென்னிந்தியாவோடு கொண்டிருந்த உறவு பற்றி ஆண்டுகணிப்பு தொடர் வரலாற்றுக் குறிப்பும் பிறவும் தரும் செய்திகளின் பொருந்தாமை மற்றும் முரண்பாடுகள் குறித்துத் திருவாளர் நீலகண்ட சாஸ்திரியார் கூறுவன காண்க (The Pandiyan Kingdom.p. 70-71) ‘இலங்காபுரன் தலைமையில், இலங்கையர் வெற்றி’ பற்றி மகாவம்சம் கூறுவதையும் காண்க.

தமிழர்கள் மீது இலங்கை ஆதிக்கம்:

கி.பி.248 முதல் 551வரை அரசாண்ட ‘கோதப்ஹய்ய’ அரசன் காலத்தில் ஏற்கெனவே இருந்த வைதுல்யன் சமயக் குழுக்களுக்குத் துணையாக, ‘ஸஹல்ய’ எனும் பெயர் உடைய மூன்றாவது சமயக் குழு தோன்றிற்று. பெளத்த மதத் துறவிகள் அறுவர், அரசனால் நாடு கடத்தப்பட்டுக் கப்பல் வழியாக இந்தியாவுக்கு வந்து காவிரிப்பூம்பட்டினத்தில் குடியேறி, ஆங்குள்ள மக்களின் புரவுள்ளத்தால் நன்கு வாழ்ந்தனர்.

“யுஜூ” என்ற பழங்குடியின் புகழ்பெற்ற தமிழனாகிய எலா அரசன், சோழ நாட்டிலிருந்து இலங்கைமீது படையெடுத்துக் கி.பி. 105 முதல் 161 வரை அரசாண்டிருந்த அஸெல் அரசனின் அரியணையைக் கைப்பற்றிக்கொண்டு அந்நாட்டை நாற்பத்து நான்கு ஆண்டு காலம் நண்பர் பகைவர் எனப் பாராமல் நடுவு நிலைமை தவறாமல் நீதி வழங்கி ஆண்டான். அவன் புத்த சமயத்தைத் தாங்கிக்கொண்டது மட்டுமல்லாமல், அதன் நல்ல நண்பர்களுள் ஒருவனும் ஆனான்.

திருவாளர் எச்.கெர்ன் (H Kern) அவர்களின் “இந்திய புத்த மதம் பற்றிய சிற்றேடு” பக்கம் : 245; திருவாளர் ஜி டானோர் (G. Tunoun) அவர்களின் மகாவம்சம்; அதிகாரம் 3 திருவாளர் ‘கெய்கெர்’ (Gegar) அவர்களின் மகாவம்சம்; அதிகாரம் : 27, “துட்டுஜென் மினா முதல் மகாஸேனா வரை” ஆகிய நூல்களைக் காண்க.

இலங்கை புத்த பிக்குகளும், ஏன் சாதாரண மக்களும் கூட இடையில் உள்ள கடலைக் கடந்து தென்னிந்தியாவுக்கும் அங்கிருந்து புத்தகயா வரை ஆறு திங்கள் நடந்து சென்றனர். வங்காளத்தில் உள்ள தமர-லிப்டெ என்ற ஊருக்கான அவர்கள் வழி கடல் வழியாகும். பிராமணர்கள் உறுதியாகத் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள். சிற்றூர்களுக்கு வெளியே குடி வந்தவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பராக்ரமபாகுவிற்குப் பின்னர் அடுத்தடுத்து நடைபெற்ற தமிழர் படை எடுப்புகளும் ஆட்சியைக் கைப்பற்றுதலும் இலங்கை கிறிஸ்துவர் கோயிலின் ஒழுங்கைச் சீர்குலைத்துவிட்டன. 13ஆம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் தம்பெதெனிய்யாவிலிருந்து ஆட்சி புரிந்த கலிகால சாகித்திய பண்டித பாகேசர மகாபிரபு அக்கோயிலை அதன் பழைய நிலையில் கொண்டு நிறுத்தினான். அவன் சோழ நாட்டிலிருந்து புத்த பிட்சுக்களை அழைத்து வந்து புத்தப் பள்ளிகளையும், பர்வீனாக்களையும் நிறுவிக் கற்றலை ஊக்கப்படுத்தினான். இது, அந்த நூற்றாண்டில், தமிழகத்தில் புத்த மதம் அடியோடு மறைந்துவிடவில்லை என்பதைக் காட்டுகிறது. 14. வட இலங்கையில் தமிழ் அரசின் தோற்றமும் வளர்ச்சியும்:

இபன்-பதுதன் என்ற அராபியன் கி.பி. 1344ல் வடஇலங்கைக்கு வருகை தந்தான். புட்டாலம் துறைமுகம் உட்பட, அத்தீவின் வடபகுதி, யாழ்ப்பாண அரசன் ஆரிய சக்கரவர்த்தி என்பான் ஆட்சிக்கீழ் இருப்பதைக் கண்டான். அந்த அரசு, கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் தனிநாடாக ஆயிற்று. ஆரிய சக்கரவர்த்திகள் எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் அதன் அரசர்கள், கங்க வம்சத்தவர்கள் எனத் தங்களைச் சொல்லிக் கொண்டனர். அவர்கள் பதினான்காம் ஆண்டின் பிற்பாதி வரை நல்ல செல்வாக்கோடு இருந்தனர். பின்னர், விஜயநகர அரசுக்கு அடங்கிய சிற்றரசாயினர். பிற்காலப் பாண்டியர்கள். தங்களை ஜடாவர்மன், மாறவர்மன் எனவும், சோழர்கள் தங்களைப் பரகேசரி, இராஜகேசரி எனவும், மாறிமாறி அரியணை ஏறியதற்கேற்ப் அழைத்துக் கொள்ளுமாறு, அக்காலத்து யாழ்ப்பாணத்து அரசர்களும், அரியணை ஏறும் முறைக்கு ஏற்பத் தங்களைப் பரராஜசேகரன் என்றும் ஜெகராஜ சேகரன் என்றும் அழைத்துக்கொண்டனர். ஐரோப்பிய டச்சு நாட்டுப் பயணி வாலெந்தியன் என்பான் கன்னட நாட்டவர் படையெடுப்பு ஒன்றைக் குறிப்பிட்டுள்ளான். அக்கன்னடியர் பெரும்பாலும் விஜயநகர மக்களாவர் கி.பி. 1591-ல் யாழ்ப்பாணத்து அரசன் போர்த்துகீஸியர் ஆட்சிக்கீழ் எனத் தம்மைக் கூறிக் கொண்ட தஞ்சை நாய்க்கர்கள் அவ்வியாழ்ப்பாணத்து அரசை உயிர்ப்பிக்கப் பயன் அற்ற முயற்சிகளை மேற்கொண்டனர் என்றாலும், 1819ல் ஆளும் அரச இனம் பதவி இறக்கம் செய்யப்பட்டது.

கி.பி 1656ல் தஞ்சை இரகுநாத நாய்க்கன், யாழ்ப்பாணத்து அரசர்களைக் காக்க விரும்பி மன்னார் வளைகுடாவைச் சங்கிலிபோல் நின்ற படகுகள் மூலம் கடந்தான்.

17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாடப்பட்ட திருவாளர் மயில்வாகனப் புலவர் அவர்களின் “யாழ்ப்பாண வைபவ மாலை” என்ற நூலையும் பாதிரியார் எஸ். ஞானப் பிரகாசர் அவர்களின், “போர்த்துகீஸியர் காலத்தில் யாழ்ப்பாணம்” என்ற ஆங்கில நூலையும் திரு. ராஜநாயகம் அவர்களின் “பழைய யாழ்ப்பாணம்” மற்றும் “யாழ்ப்பாண வரலாறு” என்ற ஆங்கில நூல்களையும் காண்க.

  1. கரியன்கள் : (சிற்றாசியாவின் தென்மேற்கில் வாழ்ந்த பழங்குடியினர்):

கிரேக்க வரலாற்று ஆசிரியன் ஹெர்ரோடோட்டஸ் (Herodotus) அவர்கள் கூற்றின்படி, கரியர், தீவுகளிலிருந்து உள்நாட்டிற்கு வந்தவராவர். கரியர் என்ற சொல், சேர அல்லது கேர என்ற சொல்லில் இருந்து வந்திருக்கக் கூடும் அல்லவா?

கரியன்கள் தங்கள் தலைக்கவசம் மற்றும் கேடயங்களைப் பறவைகளின் சிறகுகளோடும் கைப்பிடிகளோடும் கொண்டுள்ளனர். ஆகவே, அவர்களின் படைக்கலன்கள், சிற்றாசியாவைச் சேர்ந்த கிரேக்கக் குடிவாழ்நராகிய எல்லெனிக் (Hellence) மக்களின் படைக்கலங்களைவிடச் சிறந்தன என நம்புகிறார் ஏதன் நாட்டு வரலாற்றுப் பேராசிரியர் திருவாளர் துசிதிதெஸ் (Thudydides) அவர்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டு போலும் அத்துணைப் பழங்காலத்திலேயே, கரியன்கள், வளம் தரும் படை கிரேக்கப் பழங்கதையாகிய ‘இலியட்’ (Iliad), உலோகம், தந்தம், மற்றும் தோல்களில் கைவினைப் பொருட்கள் செய்யும் அவர்களின் பழக்கத்தைக் குறிப்பிடுகிறது. பிற்கால வரலாற்று ஆசிரியர்கள், விலை உயர்ந்த கற்களைச் செதுக்குதல், கருஞ்சிவப்பு வண்ணம் தோய்த்தல் போலும் அவர்கள் கைத்திறனைக் குறிப்பிடுகின்றனர். பத்துப் பத்தாக எண்ணும் எண்ணுமுறை, கப்பல் கட்டுதல் தொழில் மேம்பாடு; இசையில் மெருகேற்றல்; புதிய கரங்களைக் காணல், எழுதுகோல் காணல், தானியங்களை அறைக்கும் பொறிகளில் சில முன்னேற்றம் ஆகியவற்றில் அவர்களுக்குப் பெருமை சேர்க்கின்றனர் டாக்டர்ஹோகர்த் அவர்களின், கேம்பிரிட்ஜ் பழைய வரலாறு (The Cambridge Ancient History).

  1. அரேபியாவின் தென்கிழக்கே, ஓமன் கடலில் உள்ள “சொகொட்ரா” (Socotra) என்ற தீவில் வாழ்பவரால் தலைநகர் முஸ்காட் (Muscat) டின் இன்றும் வழக்காற்றில் உள்ளவை திருவாளர் வில்சன் அவர்களின் “பர்ஷிய வளைகுடா” என்ற ஆங்கில நூலைக் காண்க. (பக்கம், 8, 21, 27)

பழங்குடி இனத்துக் கடலோடிகள் மிகவும் பழமை விரும்பிகள். அவர்களின் தொடக்க காலச் சிறு படகு, கற்காலத்து மனிதன் கடலோடு போராடியதைக் காண உதவும் எனச் சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மானியா இடத்துப் பழங்குடியினரை, இந்தோனேஷியாவில் அடையாளம் காணலாம்.

ஆஸ்திரேலியாவை அடுத்துள்ள நியூஸிலென்ட் நாட்டுப் பழங்குடியினராகிய ‘மாவோரி’ (Maoris) மக்களின் மூதாதையர் பொலினீஷிய இனத்தவர் ஆவர். தொடக்கத்தில் இந்தோனேஷியாவில் இருந்து வந்து, பசிபிக் பெருங்கடலில் மேற்குக் கோடியில் உள்ள தீவுகளுக்குக் கடல் வழியாகச் சென்று, அங்கிருந்து பிஜித் தீவுக்கும் மத்திய பொலினீஷியாவுக்கும் சென்று பரவினர். அவர்கள் மலேனேஸியாவின் தொல் பழங்குடியினரை வென்று, தங்களோடு இணைத்துக்கொண்டனர் எனக் கூறுகின்றது ஒரு பழங்கதை.

இந்தோனேஷியா, மற்றும் பொலினீஷியாவைச் சேர்ந்த பழங்குடியினர். கட்டிடக் கலைத் துறையிலும், கடல் ஓடு துறையிலும், மிகப் பெரிய அறிவை வளர்த்துக்கொண்டனர். பசிபிக் கடலில் ஓடவல்ல. சாதாரணச் சிறு படகுகள், அண்மைக்கால நிலையோடு ஒப்பிட்டு நோக்க மதிக்கத் தக்க, நெடுந்தொலைவு ஓடவல்லதாம் என்பது கருத்தில் கொள்ளத் தக்கதாம். திருவாளர் ஜே. ஹோலன் ரோஸ் (J. Holland Rose) அவர்களின் ‘மனிதனும் கடலும்’ என்ற ஆங்கில நூலைக் காண்க. (பக்கம்: 168:173-74)

17) திருவாளர் பெர்ரி (W.J. Perry Page : 24) அவர்கள் கூற்றுப்படி, நீர்ப்பாசனம் மற்றும் உழவுத் தொழிலைக் கண்டுபிடித்த முதல் நாடு எகிப்துதான் என்ற கொள்கை நிலைத்து நிற்கக்கூடிய தொன்றன்று. தொல் பொருள் ஆய்வாளர்களுக்கும் வரலாற்று ஆசிரியர்களுக்கும் தெரிந்த அப்பழங்காலம் முதல் தென்னிந்தியாவில் உள்ள காவிரி ஆற்றுப்படுகை நெல் விளைத்தலிலும், சிந்து நதிப் படுகை, கோதுமை விளைத்தலிலும் சிறந்து விளங்கின. (பக்கம் : 24).

சிந்து நதிப்படுகையில் கி.மு. மூன்று மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் வாழ்ந்திருந்த செப்பு மற்றும் பித்தளை நாகரீகத்து மக்கள், பேரீச்ச மரங்களைப் போலவே, கோதுமையையும், பார்லியையும் விளைவித்தனர். அவர்கள் இமிலேறு, எருமை, குறுகிய கொம்புடைய எருது, ஆடு, பன்றி, நாய், யானை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றைப் பழக்கி வைத்தனர். ஆனால், பூனை, பெரும்பாலும் குதிரை அவர்களுக்குத் தெரியாத விலங்குகள்.

போக்குவரத்துக்கு, ஐயத்திற்கு இடமில்லாமல், எருது பூட்டப்பெற்ற ஈருருளை வண்டிகளை அவர்கள் பெற்றிருந்தனர். உலோகங்களில் பொருள் செய்யவல்ல நன்கு தேர்ந்த கைவினைஞர்கள் ஆங்கு இருந்தனர். அவர்களிடம் பெருமளவில் பொன்னும் வெள்ளியும் செப்பும் இருந்தன. ஈயம் கூட இருந்தது. வெள்ளீயம் பழக்கத்தில் இருந்தது. ஆனால், அது, வெண்கலம் உலோகத்தைச் செய்யும் கலவை உலோகமாகவே பயன்பட்டது. நூற்றல், நெய்தல் ஆகிய தொழில்களில் அவர்கள் கைவந்தவர்கள். அவர்களின் படைக்கலங்களும் வேட்டைக் கருவிகளும், வில்லும், அம்பும் ஈட்டி அல்லது வேல்கம்பு, கோடரி, குத்துவாள் மற்றும் தண்டு முதலியனவாம். நீண்ட பட்டாக்கத்தி காணப்படவில்லை பகைப் படை பாயாவாறு அணிந்துகொள்ளும் மார்புக்கவசம் இருந்தமைக்கான சான்று எதுவும் இல்லை. அவர்களிடம் இருந்த, செப்பு மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட கைக் கோடரி அரிவாள், இன்பம், உளி கூரிய மென்கத்தி, கோடரி முதலியனவாம். சில சமயம் சக்கி முக்கிக் கல்லிலும், கடிய கல்லிலும் கூடச் செய்யப்பட்டன. தானியங்களை அறைக்க, அவர்கள், அம்மி, குழவியையும் கால் கதியொடு கூடிய அறைக்கும் கருவியையும் பயன்படுத்தினர் ஆனால், வட்ட வடிவான மாவறைக்கும் கல் இயந்திரத்தைப் பயன்படுத்தவில்லை. அவர்களின் வீட்டுக் கலங்கள் எல்லாம், பொதுவாகச்சக்கரத்தில் சுற்றிச்செய்து கட்டு இங்கும் அங்குமாகப் பல மாதிரிகளில் வண்ணம் தீட்டப்பட்ட மட்பாண்ட்ங்களாம். மிக அருகி. செப்பு, வெண்கலம், அல்லது வெள்ளிப் பாண்டங்களையும் ஆண்டனர். செல்வந்தர் வீட்டு அணிகலன்கள், விலை உயர்ந்த உலோகங்களாலும் செப்பாலும் பெய்யப்பட்டன. சில பொன் முலாம் பூசப்பட்டன. தந்தத்தாலும், ஏழைகளுக்குப் பொதுவாகக் கிளிஞ்சல்களால் ஆனவை. பெருமளவில், வழக்கத்தில் இருந்த சிறு உருவச்சிலைகளும் விளையாட்டுப் பொம்மைகளும், சுடுமண்ணால் செய்யப்பட்டவை. யூபிரட்ஸ் ஆற்றங்கரை நகராம் சுமரிலும், பொதுவாக மேற்கு நாடுகளிலும், பொதுவாக வழக்கத்தில் இருப்பது போல, கிளிஞ்சல்களாலும், சுட்டு வண்ணம் தீட்டப்பட்டனவாலும் செய்யப்பட்டவை ஆளப்பட்டன. சொந்த அணிகலன்களுக்கு மட்டுமல்லாமல் கல்பதித்து அணி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டன எழுத்துமுறை அறியப்படவே, சிந்து நதிநீர மக்கள் தாமும், எழுதுவதற்கு மேற்கு ஆசியா மற்றும் அண்மைக்கிழக்கு நாடுகளில் ஆட்சியில் இருந்த எழுத்து வடிவங்களின் காலத்தனவும், அவற்றோடு, தெளிவான ஒருமைப்பாடுடையவுமான, ஆனால், இந்தியாவுக்கே உரியவுமான ஓர் எழுத்து வடிவை ஆண்டனர். திருவாளர் ஜான்மார்ஷல் அவர்களின் “சிந்துநதி நாகரீகம்; மற்றும் திருவாளர் எம்.எஸ். வாட்ஸ் அவர்களின், ஹரப்பா அகழாய்வு என்ற நூல்களைக் காண்க. (Ref : to John Marshal Indus Civilization. M.S. Vats. Excavations at Harappa. Vol : I page 5-6)

18) திருவாளர் ஓ.ஜி.எஸ் க்ராபோர்ட் அவர்களின் “தொல்பழங்காலம்” பகுதி 6 பக்கம் : 259 (O.G.S. Crawbord Antiquity VI 259) நீலகிரியில் கண்டெடுக்கப்பட்ட, கிரேக்க நாடோடிப் பாடல்களில் இடம்பெறுவதும், ஒருவகைப் பச்சைக்கல்லால் ஆனதுமான ஜெபமாலைகள், சுமேரியாவில் ஓடும் யூபிரடஸ் ஆற்றங்கரை நகராகிய உர் (Ur) நகரில் ஊழிப் பெருவெள்ளத்திற்கு முந்திய வண்டல் படிவங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. எகிப்தில், பச்சை நிற மணிக்கல்லால் வைடூரியம், முடியாட்சிக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

19) இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு, ஆண்டு அறிக்கை, 19-2-3; usgib: 120 (ArchSurvey ofIndiaAnnual Repport 1902– 3 p. 120)

20) திருவாளர் ஈர்னெஸ்ட் மக்கே (Earnest Mackay) அவர்கள், “மெஸ்படோமியாவில் கண்டெடுக்கப்பட்ட ஜெபமாலை மணிகள், இந்திய மூலம் வாய்ந்ததே என்ற உறுதியான கருத்தைக் கொண்டுள்ளார். (J.R.A.S. for 1926 p. 696 701.) தென்னிந்தியாவில் சேலம் மாவட்டத்திற்கு உரியதாகக் கூறத்தக்கதான சுமேரியநாட்டுக்கிஷ் (Kish) பகுதியில் காணப்பட்ட, வைடூரிய மணிக்கல் ஜெபமாலைகள் குறித்து அதுவே கூறப்படல் வேண்டும்.

21) தாய்க்கடவுள் வழிபாடு:

மண்ணைக் கடவுளாக உருவகித்து வழிபடுதல் பழங்கால மக்களிடையே பரவலாக இருந்தது. இந்தியாவைச் சேர்ந்த பண்டைய ஆரியர்களிடையே வானும் நிலனும், வாழும் உயிர்கள் அனைத்திற்கும், தந்தையும் தாயும் என்ற நிலையில், “டியயுஸ்” (Dvaus) மற்றும் “பிர்திவி” (Prthiv) என்ற பெயர்களில் கணவனும் மனைவியுமாகக் கற்பிக்கப்பட்டனர். அதர்வ வேதத்தில், ‘பிர்திவி’ யான பெண் தெய்வத்தை நோக்கிப் பாடப்பெற்ற அழகிய நெடிய பாட்டு ஒன்று உளது (திருவாளர், தீக்ஷிதர் அவர்களின் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாகிய லலிதவழிபாடு என்ற ஆங்கில நூலைக் காண்க.) பண்டைய கிரேக்கர்களிடையே, உண்மையான நிலத்தெய்வம் மூலப் பொருளாம் நிலமாவதும், கி.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த, அறம் உரைக்கும் புலவனாம் ‘எஸிஓட்’ (Hsiod) காலம் முதல் உள்ள எழுத்தாளர்களால், அதே பொருளில் ஆளப்பட்டதுமான, “கய” (Gaia) அல்லது “கி” (Ge) என்பதாம். நிலமகள் வழிபாடு, டெல்பி (Delph) ஒலிம்பியா (Olympia) மற்றும் டொடொனா (Dodona) போலும் கிரேக்க நகரங்களில் நனிமிகப்பழைய வழிபாடாம் பண்டை உரோமானியர், கருவுற்றிருக்கும் பசுவைப் பலி கொடுத்து நிலமகளை வழிபட்டனர். நிலத்தெய்வம், உரோமப் பழங்கதைகளில் வரும், நவதானியப் பெண் தெய்வமாம் செரொஸ் (Ceres) அல்லது “டெமெடெர்” (Demeter) என்ற தெய்வத்தோடு இணைத்துக் காணப்பட்டது. பாபிலோனியக் கற்பனைப் பழங்கதைகளில், அனு (Anu) என்கிற வான்கடவுளோடு, “இஎ” (Ea) என்கிற, நிலத்துக்கு அடியில் உள்ள நீர்க்கடவுளோடும் இணைத்து வழங்கப்படும் “என்லில்” (Enli) என்ற நிலத்தெய்வம் இருந்தது. மனித முகம், நீண்ட முடி, தாடியோடு கூடிய, கடவுள் போலும் வடிவங்கள், களிமண்ணால் ஆன சிலைகள் உள்ளன. அவனுக்கு “நின்லில்” (Nihil) என்னும் பெயருடைய உயிர்களைப் பெற்றுப் பேணும் பெண் தெய்வமாகிய மனைவியும் இருந்தாள். நின்லில் என்பது ‘என்லில்’ என்பதன் பெண்பாற் பெயராம். திருவாளர் ஜே. ஜி. ப்ரொஜர் (J.G. Frazer) அவர்களின் “இயற்கை வழிபாடு” (Worship of Nature) பக்கம்:348 என்ற நூலைக் காண்க.

பண்டைய எகிப்தியரிடையே, வானாம் பெண் தெய்வத்தை மணந்த ஆண் தெய்வமாக, நிலம் உருவகிக்கப்பட்டது. அவன் ‘ஸெப்’ (Seb) அல்லது ‘கெப்’ (Kab) எனப் பெயர் இடப்பட்டான். அவன் மனைவி, “நட்” (Nut) எனப்பட்டாள். அவன் நில மூலத்தையும் மரம் செடிகொடிகள் வளரும், நில மேல்புறத்தையும், உருவகித்தான். அவன் கிரேக்கர்களால், உரோமர்களின் வேளாண்மைத் தெய்வமாகிய “க்ரோனஸ்” (Ronus) ஆக அடையாளம் காணப்பட்டான். அவனுடைய வழிபாட்டிற்கு அடையாளம் காணப்பட்டான். அவனுடைய வழிபாட்டிற்கு உரிய இடம், சிரியாவில் டமாஸ்கஸ் நகருக்கு அண்மையில் இருந்த நனிமிகப் பழைய நகரமாகிய ‘ஹெலியோசோலிஸ்’ (Heliosolis) என்பதாம். அதாவது அவனும் அவன் மனைவியும் பெரியதொரு முட்டை இட்டு அடைகாக்க, அதை உடைத்துக்கொண்டு வெளிவந்த சூரியக் கடவுளின் நகராம்.

சீனர்கள், நிலத்தைத் தாய்க்கடவுளாக உருவகித்து வழிபட்டனர். நிலத்தின் சரிநகரான வானைத், தந்தை கடவுள் என்ற உரிமையில் வழிபட்டனர். நிலமாம் தாய்த்தெய்வ வழிபாடு சீனாவில் அதற்கும் முந்தி இல்லை என்றாலும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து காணக்கூடும். கி.மு. 140 முதல் 137 வரை ஆண்ட பேரரசர் “வு” (Wu) அவர்கள் ஆட்சிக் காலத்தில், வானையும், நிலத்தையும், வழிபடும் சமய நெறி முக்கியத்துவம் பெற்றிருந்தது. இரண்டு இயற்கைகளை வழிபடும் வழிபாட்டு நெறி சீன, சமயத்தின் தலையாய உயிர்ப் பண்பாகக் கருதப்பட்டது.

மத்திய இந்தியாவைச் சேர்ந்த “ஓரஓனியா” (Oraons) மற்றும் ஏனைய பழங்குடியினரிடையே “தஹர்திமை” (Dharti Mai) வழிபாடு பெருவழக்காய் நிலைபெற்றிருந்தது. நிலத்தாயின் வளத்தைப் பெருக்குவதற்காகக் காலம் தவறா விழாக்களும் இருந்தன. அவ்விழாவில், மனித பலியும் உண்டு. பெரும்பாலும் அது ஒரிஸ்ஸா நாட்டு கோண்ட் பழங்குடியினரிடையேதான்.

வட அமெரிக்காவைச் சேர்ந்த சிவப்பு இந்தியர்களிடையே, நிலத்தைத் தங்கள் தாயாக உருவகப்படுத்தும் பழக்கமும், தங்கள் முதல் மூதாதையர் தாயின் கருப்பையிலிருந்து குழந்தைகள் பிறத்தல் போல, நிலத்திலிருந்து பிறந்தனர் என்ற நம்பிக்கையும் இருக்கும் போது, மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த போபோஸ் (BoBos) எனும் இனத்தவர் போலும், ஆப்பிரிக்கரிடையேயும், நிலத்தாய் வழிபாடு நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வந்தது. வட அமெரிக்க மெக்ஸிகோ நாட்டவரும், நனி உயர்ந்த நாகரீகம் வாய்ந்தவருமான “அஸ்டி” (Aztees) இனத்தவரிடையே, நிலத்தாய்தான், கடவுள்களுக்கெல்லாம் தாய் ஆகும். மத்தியத் தரைக்கடலில் உள்ள கிரேக்கத் தீவாகிய கிரீட்டில் (Crete) உள்ள, தாய்க் கடவுளின் சுடப்பட்ட சிறு உருவ மண்சிலை, மொகன்ஜாதாரோவில் கண்டெடுக்கப்பட்டதை, அப்படியே முழுமையாக ஒத்துளது. திருவாளர். ஒசி கங்கோலி (Gangoly) அவர்களின் பெளத்த கலையில் நிலத்தாய்க் கடவுள் (The Earth Goddess in Buddhist Art I. H. Q. XIX p) என்ற ஆங்கில நூலைக் காண்க.

22) சிலப்பதிகாரம், பதினாறாம் காதை, 817 வரிகளைக் காண்க. அதில் வரும் “ஐயை” என்பாளுக்குப், பாபிலோனியர்களின் சூரியக் கடவுளின் மனைவியாம், “ஐ” அல்லது “ஐய” அல்லது “ஐய்ய” என்பதனோடு ஏதேனும் தொடர்பு இருக்குமா? பாபிலோனிய சூரியக் கடவுளுக்கு, நீதி நேர்மை, நன்னிலம், கனவு உள்ளிட்ட எண்ணற்ற கால்வழி மரபுகள் உள்ளன (பக்கம் :45, 1,28.) திருவாளர் ப்ரேஸர் (Frazer) அவர்களின் “பொன் மரக்கிளை” (The Golden Bough) (சுருக்கம்) என்ற நூலைக் காண்க. 1923 பக்கம் 380-1

23) திருவாளர் ப்ரேஸர் அவர்களின் மேற்படி நூல் பக்கம் 331 ஐக் காண்க. .

24) மேற்படி நூல் மேற்படி பக்கம் காண்க.

25) திருவாளர். தீக்ஷிதர் அவர்களின் “மத்ஸய புராணம் ஒரு ஆய்வு” என்ற ஆங்கில நூலைக் காண்க.

26) இது பற்றிய பொருள், திருவாளர். வோகல் (Wogel) அவர்களின், ‘இந்தியப் பாம்புக் கோட்பாடு’ (Indian Serpent Lore) என்ற நூலில், போதிய ஓவியங்களுடன் நன்கு ஆராயப்பட்டுள்ளது.

27) திருவாளர் எச்.ஆர்.ஹால் (H.R. Hall) அவர்கள் கூற்றுப்படி, பாபிலோனியாவில் இஷ்தர் நின்னி (Istar-Ninni) காதற் கடவுளும், நல்வளக் கடவுளும் ஆம். சிரியாவில், அஷ்டோரெத் டெய்ன்ட் (Ashtozeth-Taint) பெண் திங்கள் கடவுளாம். சிற்றாசியாவாம் அனடோலியாவில், அது, பெரிய தாய்க்கடவுளாம். சிரியாவில், ‘அஸ்டர்டெட்’ மற்றும், “தம்மூஸபு” (Astarte and Tammuz) என்பது, தன்னிலும் இழிந்ததான, ஆண் சூரியன் பணிபுரியத்தக்க, பெண் திங்கள் தெய்வமாம். (The Ancient History of the Near East. page: 207-8-8th Edition.)

28) பாபிலோனியர்களிடையே, “ஷமஷ்” (Shamash) எனப்படும் சூரியக் கடவுள், திங்கள் கடவுளின் மகனாகக் காணப்படுகிறது. சுமேரியாவில் யூபிரட்ஸ் ஆற்றின் கரையில் உள்ள நனிமிகப் பழைய “உர்” (Ur) நகரை ஆண்ட பண்டைய அரசன் சூரியக் கடவுளைத் திங்கள் கடவுளின் பெயர்களுள் ஒன்றான “நன்னர்” (Nannar) என்பதன் கால்வழி வந்ததாக அழைத்துள்ளான். பாபிலோனியாவின் பழங்குடி அரசர்களில் கடைசி அரசனாகிய ‘நபொனிடஸ்’ (Nabonidas) என்பான். அவனுக்கு அதே தந்தையை உரிமையாக்கி உள்ளான். ஆகவே முதல் அரசன் முதல், இறுதி அரசன் வரை, மதிப்பீட்டில் சூரியக் கடவுள், திங்கள் கடவுளுக்குத் தாழ்ந்தவனாகவே வரிசைப்படுத்தப்பட்டுள்ளான். அவனுடைய தாழ்நிலை வேறுவகைகளிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாபிலோனிய பண்டைய சமய நெறியில், ஞாயிறு வழிபாடு, திங்கள் வழிபாட்டிற்கு இரண்டாம் தரத்ததே என்பது ஒரு சிறப்பு இயல்பாம். (திருவாளர் ப்ரேஸ்ர் அவர்களின் “இயற்கை வழிபாடு” (The Worship of Nature) என்ற ஆங்கில நூலைக் காண்க. பக்கம் 530-531).

29) பாபிலோனிய மண்ணிலும், பழங்கதையிலும் ஏப்ருமொழி சமய இலக்கியங்களோடு, ஐயத்திற்கு இடம் இன்றி ஒத்துப்போகக் கூடியன பல உள்ளன. அவ்வொருமைப்பாடு, பாபிலோனியப் பண்பாடுகள், பழங்காலத்திய இஸ்திரேலிய நடனம் கேனனுக்குப் பரவி, தொடக்காலத்திலிருந்தே தொடர்ந்து பெற்றிருந்த

செல்வாக்கு காரணமா? அல்லது ஏப்நு மக்களின் மூதாதையர் இனத்தவராகிய ‘அப்ராமிக்’ (Abrahmic) மக்கள் உள்ள யூபிரடஸ் ஆற்றங்கரையில் (தென் மேற்கு ஆசியாவில்) “சால்டீஸ்” (Chaldees) நாட்டிற்கு ஹாரன் (Harran) வழியாகக் கானனுக்குக் (Canaan) குடிபெயர்ந்தது காரணமா? அல்லது, அடிமைப்பட்டிருந்த காலத்தில், பாபிலோனியர்களின் சுற்றுச் சூழலின் ஆட்சி காரணமா என்பன இன்னமும், நல்ல உறுதியான சான்றுகளோடு உறுதிப்படுத்தப்பட வேண்டி உளது. பெரும்பாலும் இம்மூன்று காரணங்களுமே அவ்வொருமைப்பாட்டைக் கொண்டு வர ஒன்று பட்டிருக்கலாம். (Hall, The Ancient History of the Near East, 8th Edition p. 209)

30) காளைமாடு வழிபாடு

மத்திய தரைக்கடலில் உள்ள கிரேக்கத் தீவாகிய கிரீட்டன் Creton மக்கள் வளர்க்கும் காளைமாடு செயலாற்றல் கடல் ஆற்றல்களை உணர்த்தும் இயற்கைச் சின்னமாம். ஏறு தழுவல் விளையாட்டு, ஓரளவு சமயச் சார்புடையது. ஆகவே அதுதானே காளைமாட்டுக்கு ஒருவித தெய்வத் தன்மையைக் கொடுக்கிறது. ஆனால், கிரீட்டில், காளைமாட்டுத் தெய்வம் எனப் போற்றுவதற்கான, நேரிடை அகச்சான்று எதுவும் இல்லை (The Archaeology of Creat : At Introudction 939)

கிரீட்டனில் உள்ள இடிபாடுகளில் கி.மு. 3000 முதல் 1100 வரையானது எனக் கணிக்கப்படும் வரலாற்றுக்கு முந்திய கால கட்டமாம் “மினோயன்” (Minoan) ஊழிக் காலத்தின் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ஏறு தழுவல் நிகழும் தொழுவக் காட்சியின், அரைத்த சாந்தால் தீட்டப் பட்ட வண்ண ஒவிய நினைவுச் சின்னங்கள் உள்ளன.  கடல் தெய்வமாம் ‘பொசெஇடொனுக்கு’க் (Poseidon) காளைமாடுகள் தொடர்ந்து பலி கொடுக்கப்பட்டு, தெய்வீக அகத் தூண்டுதல் பெறுதல் பொருட்டு, அதாவது தன்மீது தெய்வம் ஏறற் பொருட்டு, பெண் பூசாரியால், அதன் குருதி குடிக்கப்பட்டது. இடி கடவுளின் மரபுச் சின்னமாக, ஞாயிற்றின் அடையாளச் சின்னமாக, ஒரு வகை, இழந்த ஆற்றலை அளிப்பதாக அது பார்க்கப்பட்டது. சிற்றாசியாவிலும், சிரியாவிலும் கி.மு. 2000-700 ஆண்டுக் காலத்தில் வாழ்ந்திருந்தவராகிய “ஹிட்டிட்டெஸ்” (Hittites) மக்களிடையே, இடி மற்றும் செழிப்பின் சின்னமாக அது வணங்கப்பட்டது தந்தை தெய்வத்தின் சின்னமாக மதிக்கப் பட்டது. “சிபெலெ” (Cybele) மற்றும் “அட்டிஸ்” (Attis) என்ற கிரேக்க இயற்கைக் கடவுள்களை வணங்கும் சமய வழிபாடுகளில் அதன் ஆண்குறி பயன்படுத்தப்பட்டது.

காளைமாடு நவதானியச் சிறு தெய்வத்தைச் சுட்டிக் காட்டித் தென் ஆப்பிரிக்க நெட்டாலில் முதல் பழ அறுவடையின் போது நடைபெறும் ஜூலு (Zulu) விழாவில் பலி கொடுக்கவும் பட்டது. பண்டை எகிப்தில் அது பலி ஆடாக ஆக்கப்பட்டது. பண்டைப் பர்ஷியாவின், நளி, உண்மைகளின் கடவுளாம் “மித்ரா” (Mithra)வை வழிபடும் சமய நெறியில், காளைமாடு ஒரு முக்கியமான பொருளாம். புதுப்பழ விழாக் காலத்தில் காளைச்சண்டை, உடற்பயிற்சி விளையாட்டுகள், விழாக்காண வரும் மக்களுக்கு மனமகிழ்ச்சி அளித்தன. – :

31) திருவாளர் ஜி. க்லோட்ஸ் (G. Giots) அவர்களின், “ஏஜியன் நாகரீகம்” {The Aegean Civilization, (Kegan Pawl. 1925) Page , 293-5} என்ற நூலைக் காண்க. கிரீட் நாட்டில், ஏறு தழுவுதல் தேசிய விளையாடல்களில் ஒன்று. பக்கம் 295-ல் ஓர் அழகிய விளக்கப்படமும் உளது.  திருவாளர், ஏ.ஏ. த்ரேவர் (A.A. Trever) அவர்களின், “தொல்பழங்கால அண்மைக் கிழக்கு மற்றும் கிரேக்கம்” (The ancient Near East and Greece page : 123-8) என்ற நூலையும் காண்க.

32) “கெரெத்தி” (Kerethi) அல்லது “செரெத்திம்” (Cherethim) என்ற சொல், மத்திதரைக்கடலில் உள்ள கிரேக்கத் தீவாகிய கிரீட்டில் வழங்கப்பபெறும் மொழியில் விவிலிய நூலின் கிரேக்க மொழி நடையில் “கிரெடன்” (Cretan) என்ற சொல்லுருவில் மாற்றி வழங்கப்பட்டுளது. பாலஸ்தீனியக் கடற்கரை வாழ்வாரிடையே. அவர்கள் கிரீட்டன் நாட்டவர் வழிவந்தவர் என்ற மரபுவழிச் செய்தி ஒன்றும் உள்ளது. கிரீட்டன் நாட்டவர் தாமும், சிரியா மற்றும் பாலஸ்தீனிய மக்களோடு தொடர்புடையவர் ஆதல், பெரும்பாலும், இயலக் கூடிய ஒன்றாம்.

இந்தக் கெரெத்தி மக்களுக்குத் தென்னிந்தியக் கிராடஸ் மற்றும் காட்டுமிராண்டிப் பழங்குடியினர்களோடு ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது வாதத்திற்குரிய பொருளாம். கிரேக்கம், தன் பண்பாட்டு நிலைக்குக் கிரீட் மற்றும் சிற்றாசிய நாடுகளுக்குப் பெரிதும் கடமைப் பட்டுளது. இவர்கள், தங்கள் பண்பாட்டிற்கான அகத் தூண்டுதலை எகிப்து, மற்றும் சுமேரிய நாடுகளிலிருந்தே பெற்றிருக்க வேண்டும். வடஆப்பிரிக்காவில் மத்திய தரைக் கடலையொட்டி உள்ள துனிஸியா (Tunisia) தன் பண்பாட்டிற்கு இந்தியாவுக்குப் பெரிதும் கடமைப் பட்டுளது. நாகரீக வளர்ச்சியில், குறிப்பிடத்தக்க பங்கினை எகிப்து ஆளவில்லை என்ற கருத்து கொண்டுள்ளார், திருவாளர் “வாட்டெல்” (Waddel) அவர்கள்.

33) திருவாளர் ஆர். ஜி. பந்தர்கார் அவர்களின் வைஷ்ணவம், Gசைவம் மற்றும் சிறு சமயங்கள் (Vaishnavism Saivism and

Minor Religions) பக்கம் 114-115) என்ற ஆங்கில நூலைக் காண்க.

34) The Matrilineal System (தாய்வழி வரும் குடிமுறை).

தாய்வழி உறவுக்கும், தாய் ஆட்சிக்கும் இடையில் நிலவும் வேறுபாட்டினைக் கண்டாக வேண்டும். முன்னது பின்னதைக் குறிக்காது. தாய்வழி உறவினைப் பின்பற்றும், வளர்ந்த நாடுகள் பலவற்றில், பெண் ஆட்சி நடைமுறையில் இல்லை. தொல்பழங்காலச் சமுதாயத்தில், தாய்வழி உறவு நிலையினையும், காலம் செல்லச் செல்ல, அது வெளிப்படுத்திய பயன்களைத் திருவாளர் ஜே. ஜி. ப்ராசர் (J.G. Frazer) அவர்கள் விளக்கியுள்ளார். குடிவழிப் பிறப்பையும், குடிவழிப் பொருள்களை அடைதலையும் தாய்வழிப் பெறுவது ஒன்றே, அப்பழங்குடி தாய்வழி ஆட்சியைப் பெற்றிருப்பதாகக் கொண்டுவிடக் கூடாது என அவர் கூறுகிறார். தாய்வழி மரபு தாய் ஆட்சி ஆகிவிடாது. அதற்கு மாறாகப் பெண்கள் எப்போதும் குற்றேவல் செய்யப் படுவோராகவும், பரவலா அடிமைகளாகவும் மதிக்கப்படும். நனிமிகக் காட்டுமிராண்டி இனத்தவரிடையே, தாய்வழி ஆட்சி நிலவுகிறது. எகிப்தில் இருப்பது போலவே, கிரீட்டிலும், அரசுரிமை, பெண்கள் வழியே ஆகும்.

அரசுரிமை, பொருள் உரிமைகளைத் தாய்வழி ஆட்சி முறை மூலம் பெறும் வழக்கம் செல்வாக்குப் பெற்றிருப்பது, உண்மையான ஆட்சி உரிமையை ஆண்களிடமிருந்து எடுத்துக்கொள்ளவில்லை.

35) திருவாளர், தீக்ஷிதர் அவர்களின் “மருமக்கள் தாயமும், சங்க இலக்கியமும்” என்ற நூலினைக் காண்க. (Marumakkal tayam and Sangam Literature. Z.D.M.G. Vol. IX No. 3. p 255).  36) எகிப்தில் உள்ள அட்டி (Attis) இனத்துப் பூசாரிகளின் சின்னமும், நவதானியத் தெய்வமும் கோழிச் சேவலாம். அது அறுவடைக் காலத்தில் பலியிடப்படும். கிரேக்க உரோமப் பழங்கதைகளில் வரும் (Apollo) கடவுள், தமிழ் முருகன் போலவே.இளமைக் கடவுளாம். இளமை, அழகு, ஆற்றல்களின் அடையாளமாம்.

37) இந்தோ-ஐரோப்பிய இனம் மக்கள் ஆகியவற்றின் பிறப்பு மூலம். (The Origin of the Indo European Races and Peoples: 1935) என்ற திரு. சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் நூலைக் காண்க.

 

 

 

 

இணைப்பு 1

 

ஊழி விளக்கம்

  1. ஆர்க்கேயன் பேரூழி (Archaean Zoic):

வேரில்லாக் கடற்பாசியும், பனிப் பாறைகளும் இரும்பு, செப்புப் படிவங்களும் உருவாகியதும், மலைகள் தோன்றி, எரிமலை வெடித்துக் குழம்புகள் பாய்ந்ததும், கண்ணுக்குப் புலப்படாப் புல் பூண்டுகளும், முதல் மர இனமும், மாவினமும் தோன்றியதும், ஆகிய முதல் பேருழி 450 முதல் 60 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.

  1. ஆர்டோவீசியன் பேரூழி (Ordovician):

முதுகெலும்பு இல்லா உயிர்கள் தோன்றிய காலம். சுண்ணாம்புக் கல், ஈயம், துத்தநாகப் படிவங்கள் உருவான காலம். ஆறு கோடி ஆண்டு வயதுடையது.

  1. கார்பானிபெரசு ஊழி (Carboniferous)

வெப்ப நிலைக் காடுகள் தோன்றி அழிந்து நிலக்கரிப் படிமத் தளங்கள் உருவான தொல்லூழி ஆறு கோடி ஆண்டு வயதுடையது.

  1. கேம்பிரியன் ஊழி (Cambrian Era)

பாலெயோ ஜோயிக் ஊழியின் முதல் பகுதி. நிலப்படிவம் தோன்றிய 450 கோடி ஆண்டிலிருந்து 50 கோடி ஆண்டு  வரையான ஊழி. இங்கிலாந்து நாட்டில், இங்கிலாந்து வடமேற்கில் உள்ள வாலெஸ் (Wales) மாவட்டத்துக் காம்பிரியன் (Cambrian) பகுதியில் உள்ள அழிந்து போன இடிபாடுகளில் காணலாம் மடிந்துபோன, நீர் வாழ்வன மற்றும் செடி கொடிகளின் தொல்வடிவம் கொண்டு மதிப்பிடப்பட்ட ஊழி.

  1. சிரிடேசியஸ் ஊழி (Cretaceous Era)

ஆர்க்கேயன் என்ற முதல் ஊழிக்குப் (Archeo Zoic) பிற்பட்ட்தும், மெஸ்ஸோ ஊழிக்கு (Meso Zoic) முற்பட்டதுமான, செரோ ஊழியின் (Cero Zoic) மூன்று பிரிவுகளில் கடைசி காலப் பிரிவு தொடக்க நிலை. பாலூட்டி உயிரினங்களும், மலர்ச் செடிகளும் தோன்றியதும், வெண் சாக்குப் படிவங்கள் உருவாகியதுமான காலப் பிரிவு.

  1. சைலூரியன் ஊழி (Silurian Era) :

ஊர்வனவற்றுள் முதலாவதான தேள் தோன்றிய காலம். மீன் உருவத்திற்கு முந்திய ஊழி. கடலடிப் பவழப் பாறைகள் உருவான காலம். மூன்றரைக் கோடி ஆண்டு வயதுடையது.

  1. ஜுராசிக் காலப் பிரிவு (Jurassic Period)

ஆர்க்கேயன் ஊழிக்கு (Archaean Zoic) மூன்று பிரிவுகளுள், இரண்டாவது பிரிவு. கொம்பு போன்ற மூன்று புடைப்புக்களை, கொண்டையில் கொண்ட விலங்குகளில், பறவைகளும் முதன்முதலாகத் தோன்றிய காலம்.

  1. திராயிக் காலப் பிரிவு (Triassic Period)

ஆர்க்கேயன் ஊழிக்குப் (Archaean 2oic) பிற்பட்டதான கடைப்பேருழியாம் மெஸ்ஸோ ஊழியின் (Mess Zoic) மூன்று பிரிவுகளும், முதலாவது பிரிவு. ஊர்வனவும், சின்னம் சிறு இலைக்கொத்து கொண்ட வெப்ப மண்டலக் காடுகளும் வளர்ந்த காலம்.

  1. டேவோனியன் ஊழி (Devonian Era)

மண்ணியல் படிவ அமைப்புகள் உருவான காலம். மீன் மற்றும் நிலத்திலும் நீரிலும் வாழ்வன தோன்றிய காலம். ஆறு கோடி ஆண்டு வயதுடையது.

  1. பாலியோ ஜோயிக் ஊழி (Paleo Zoic)

வேரில்லாக் கடற்பாசியும், பனிப்பாறைகளும், இரும்புச் செப்புப் படிவங்களும், உருவாகியதும், மலைகள் தோன்றி எரிமலைக் குழம்புகள் பாய்ந்ததும், கண்ணுக்குப் புலப்படாப் புல் பூண்டுகளும், முதல் மாவினமும் தோன்றியதும் ஆகிய ஆர்க்கேயோ ஜோயிக் (Arcaro Zoic) என்ற முதல் ஊழிக்குப் பிற்பட்டதும், ஊர்வனவும், சின்னஞ்சிறு இலைத் தொகுதிகளைக் கொண்டதும், ஆன திரியாஸிக் (Triasica) என்ற காலப் பிரிவு. மண்டையில் கொம்பு போலும் மூன்று புடைப்புகளை உடைய விலங்கினங்களும், பறவைகளும் முதன்முதலாகத் தோன்றிய, ஜுராஸ்ஸிக் (Jurasses) என்ற காலப் பிரிவு. தொடக்க நிலைப் பாலூட்டிகளும், மலர்ச் செடிகளும் தோன்றியதும் வெண் சாக்குப் படிவங்கள், உருவாகியதுமான, க்ரெட்டசியேயஸ் (Cretaceous) காலப் பிரிவு, ஆகிய மூன்று காலப் பிரிவுகளைக் கொண்டதும், பாலூட்டிகள் பெருகியதுமான ஆறு கோடி ஆண்டளவினதும் ஆன செரோ ஜோயின் (Cero Zoic) ஊழிக்கு முந்தியதுமான, மெஸ்ஸோ ஜோயிக் (Meso Zoic) ஊழிக்கு முற்பட்டதும் ஆம்.

  1. பெர்மியன் ஊழி (Permion Era)

5 கோடி ஆண்டு வயதுடையது. தொல் உயிர் ஊழியின் இறுதி அடுக்கு. ஊர்வன பெருகிய காலம். பெரிய மலைகளும், பனிப்  பாறைகளும், உருவான காலம். நிலத்திலும், நீரிலும் வாழ்ந்த உயிரினங்களும் ஆதிக்கம் பெருகிய காலம்.

  1. ப்ரொடெரோ ஜோயிக் (Protero Zoic)

முதல் பேருழியாம் ஆர்க்கேயன் (Archaean) ஊழியை அடுத்தும், பலெயோ ஜோயிக் (Paleo Zoic) ஊழிக்கு முன்னரும் ஆன ஊழி. வேரில்லாக் கடற்பாசிகளும், பனிப் பாறைகளும் உருவான காலம். மண்ணுக்கடியில் இரும்பு, செப்புப் படிவங்கள் உருவான காலம்.

  1. மெஸ்ஸோ பேரூழியாம் இடைப் பேருழி (Meso Zoic)

தொல் பேருழியாம் பாலியோ ஊழியாம் முதல் ஊழிக்குப் (Paleo Zoic) பிற்பட்டதும், திரயாஸிக் (Trassic),ஜூராஸ்ஸிக் (Jurassic) கிரெட்டாசியாஸ் (Cretaceous) என்ற மூன்று காலப் பிரிவுகளைக் கொண்டதும், பால் ஊட்டிகள் பெருகியதும், ஆறு கோடி ஆண்டளவினதும் ஆன, செரோ ஜோயிக் (Cere Zoic) என்ற ஊழிக்கு முந்தியதுமான, இடைப் பேருழி.

 

 

 

 

இணைப்பு 2

 

இடம் மற்றும் பிற பெயர் விளக்கம்

1. அகஸ்டஸ் (Augustus) உரோமப் பெருவீரன் சூலியஸ் சீசரின் வழிவந்தன. கி.மு. 27 முதல் கி.பி.14 வரை, அரசாண்ட பேரரசன்.

  1. அகேயன் (Achean): ஐரோப்பாவில், தென்மேற்கு ஜெர்மானியிருந்து கிழக்காக ஒடிக் கருங்கடலில் கலக்கும் டான்யூப் ஆற்றுப்பகுதியாம் வடக்கிலிருந்து வந்து, கி.மு. 1300ல், கிரீஸில் குடியேறிய தொல்பழங்குடியினர்.
  2. அஸ்லிரியன் (Assyrian): மேற்கு ஆசியாவில், கிழக்குத் துருக்கி, சிரியா, இராக் நாடுகள் வழியாக ஒடிப் பாரசீக வளைகுடாவில் கலக்கும் யூப்பிரடஸ் ஆற்றோடு, தென் துருக்கி, இராக் நாடுகள் வழியாக ஓடி வந்து கலக்கும் டைகிரிஸ் ஆற்றின் மேற்பகுதியில், இந்தியா முதல் எகிப்து மற்றும் சிற்றாசியா வரை பர்வியிருந்த ஒரு பெரிய நாட்டின் தலைநகராகக் கி.மு. ஏழாவது நூற்றாண்டில் விளங்கிய அஸ்ஸிரிய நகரத்தில் வாழ்ந்த மக்கள். அவர்கள், வழங்கிய மொழி, மற்றும் அவர்கள் பண்பாடு.
  3. அஸ்லீட்(Assiut): மத்திய எகிப்தில் உள்ள ஒரு நகரம்.
  4. அட்டிஸ் (Attis): எகிப்து நாட்டில் இருந்த ஒரு பழங்குடியினர்; அவர்கள் மதகுருவின் சின்னம் சேவற் கோழி. 6. அப்போலோ (Appollo): கிரேக்க-உரோமப் பழங்கதைகளில், அழகு, இளமை, ஆற்றல், இசை, செல்வம் ஆகியவை வாய்ந்த ஒரு கடவுள், தமிழர் கடவுளாம் முருகனுக்கு ஒப்பான கடவுள்.
  5. அமஜோனிட்டே (Amazonite) தென் அமெரிக்காவில் ஓடி அட்லாண்டிக் பெருங்கடலோடு கலக்கும் அமேஜான் ஆற்றங்கரையில் காணப்படும், நடுத்தர விலை உள்ள ஒருவகைப் பச்சைக்கல்.
  6. அம்மான் (Ammon) பண்டை எகிப்தியரின் கடவுளாம் ஜேயஸ் (Zeus) அதாவது வியாழக்கடவுள் மற்றும் விவிலிய நூலில் வரும் “லாட்” (Lot) என்பான் வழி வந்து, தென்மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த, கெமிடிக் பழங்குடியினர்.
  7. அர்ட்டேமிஸ் (Artmis) கிரேக்கப் பழம் புராணங்களில் வரும் திங்கள் கடவுள். கிரேக்க அப்பொலோ கடவுளின் உடன்பிறப்பு. பாரத திரெளபதி அம்மனுக்கு நிகராகக் கருதப்படும் கடவுள்.
  8. அர்ஜிவ் (Argive) கி.மு. ஒன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்திருந்த, கிரேக்கப் பழம் புலவரின் பாடல்களில் கூறப்பட்டிருக்கும் கிரேக்க மாவட்டம் ஒன்றில் வாழ்ந்திருந்த பழங்குடியினர்.
  9. அலெப்போ (Aleppo) சிரியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம்.
  10. ஆர்க்கேயன் பாறை (Archaean Rock) நிலநூல் ஆய்வில் முதற்கண் காணப்படாத மதிக்கப்படும் பழம்பாறை.
  11. ஆர்ச்செபெலகோ (Archipelago) கடலிடையே உள்ள தீவுக் கூட்டம்.
  12. ஆன்த்ரோபோகிராபி (Anthropogeography) பழங்குடிமக்கள் இனம், அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை, சமுதாய வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு.
  13. ஏஜியன் (Aegean) மத்திய தரைக்கடலில், கிரீஸுக்கும், துருக்கிக்கும் இடையில் உள்ள ஏஜியன் கடலில் உள்ள தீவுக் கூட்டங்களில், கிரேக்கப் பழங்குடியினர்களுக்கு முன் வாழ்ந்திருந்த வரலாற்றுக் காலத்துக்கு முந்திய தொல் பழங்குடியினர்.
  14. அஸிஸி (Assis) மத்திய இத்தாலியில் உள்ள ஒரு நகரம்.
  15. அஸ்டெக்ஸ் (Aztecs) அமெரிக்க நாட்டுச் சிகப்பு இந்தியர்கள் வழிபடும் நிலத்தெய்வம்.
  16. ஹமிடிக் இனம் (Hamitic Race) வட ஆப்பிரிக்கா, தென் ஆசியா, மற்றும் பண்டைய எகிப்து நாடுகளில், கி.மு.3000 ஆண்டு முதல் வாழ்ந்து வரும் பழங்குடியினர்.
  17. ஹாரன் (Harran) கிழக்கு ஆப்பிரிக்காவில், எகிப்துக்குத் தெற்கில் உள்ள எதோப்பிய நாட்டின் மேற்கில் உள்ள ஒரு நகரம்.

20, இ.அ. (E.A.) பாபிலோனியப் பழம் புராணங்களில் வரும் நிலத்தடி நீர்க்கடவுள், அந்நாட்டு நிலத் தெய்வமாம் என்லியோடு (Enlil) உறவுடையது.

  1. இப்னு பதூதா (Ibnu Batutha) கி.பி. 1304-1368ல் வாழ்ந்திருந்த ஆப்பிரிக்க நாட்டு, உலகப் பணி.
  2. இஷ்தர் நின்னி (Eshar-Ninni) பாபிலோனியா மற்றும் அஸ் ரீயா நாடுகளில் அன்பு மற்றும், வளம் தரும் பெண் கடவுள்.
  3. ஹிட்டிஸ் (Hits) சிற்றாசியாவிலும் சிரியாவிலும், கி.மு. 700க்கு முன் வாழ்ந்திருந்த தொல்பழங்குடியினர். 24. இட்ருசிகன் (Eirusema) மேற்கு, இத்தாலியின், மத்தியப் பகுதியாம் இட்ருசியா என்ற பகுதியில் வாழ்ந்திருந்த தொல்பழங்கால மக்களின் பண்பாடும் மற்றும் மொழி.
  4. யூப்பிரடஸ் (Euphrates) கிழக்குத் துருக்கி, சிரியா மற்றும் இராக் நாடுகள் வழியாக ஓடிப் பாரசீக வளைகுடாவில் கலக்கும் ஆறு. அதனுடன் வந்து கலக்கும் ஆற்றின் பெயர் டைகிரிஸ்.
  5. இயோலித்திக் (Eolithic) கரடுமுரடான கல்லால் ஆன செய்கருவிகள் பயன்படுத்தப் பெற்ற தொல்பழங்கால நாகரீகம் பற்றிய ஆய்வு.

27 இலியட் (liad) கிரேக்கர்கள், சிற்றாசியாவின் வடமேற்கில் உள்ள பழைய நகரமாகிய டிராயை (Troy) முற்றுகை இட்டபோது நடைபெற்ற ட்ரோஜன் (Trojan) சண்டையை இருபத்து நான்கு பத்தகம் அளவு பெரிதாகப் பாடப்பெற்ற பழங்கதை, கிரேக்கப் பெரும்புலவர் ஹோமர் அவர்களின் படைப்பு எனக் கூறப்படுகிறது.

25.ஹிரோடோடஸ் (Hirodotus) கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர்.வரலாற்று நூலின் தந்தை என மதிக்கப்பட்டவர்.

  1. உர் (ப்) யூப்பிரடஸ் ஆற்றங்கரையில் உள்ள சுமேரிய நாட்டுப் பழம்பெரும் நகரம்.
  2. உராலி (Uralis) தென் இந்தியக் காடுகளில் வாழ்ந்திருந்த காடவர்க்கு இனமான தொல் பழங்குடியினர். சோவியத் குடியரசின் மையப்பகுதியில் ஒடும் ஆற்றுப் படுகையில் வாழ்ந்திருந்த பழங்குடியினர் என்றும். அவர்கள் மொழி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பழமையானது என்றும் கூறப்படும்.
  3. ஹெர்ரோபொலிட்டே (Heroopolite) சூயஸ் கால்வாய்க்கு அணித்தாக உள்ள ஒரு வளைகுடா.
  4. “எத்னோக்ரபி” (Ethnography) மனித இனப்பரப்பு, தொல்பழங்கால மனித இனப்பரப்பு வேறுபாடு பற்றிய ஆய்வு அறிவு.
  5. ஹமிடிக் இன்ம் (Hamitic Race) வட ஆப்பிரிக்கா, தென் ஆசியா, மற்றும் எகிப்திய நாட்டில், கி.மு. 3000 ஆண்டு முதல் வாழ்ந்து வரும் பழங்குடியினர்.
  6. ஹெல்லனிக் (Helenic) தொல்பழங்காலக் கிரேக்க நாட்டு மொழி. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

35.ஹெல்லனிஸ்டிக் காலம் (Hellainistic Age) கிரேக்கப் பெருவீரன், அலெக்ஸாண்டர் மறைவுக்கும், அகஸ்டஸ் ஆட்சி ஏற்றதற்கும் இடைப்பட்ட காலம்.

  1. எலாமிட்டே (Elamite) இன்றைய இரான் நாட்டில் உள்ள, பழம்பெரும் நாடாம் எலாம் என்ற நாட்டின் பழங்குடியினர்.
  2. ஹெலியோபொலிஸ் (Helipolis) எகிப்தில், கெய்ரோ நகருக்கு வடக்கில் உள்ள பழம்பெரும் நகரின் இடிபாடுகள்.
  3. என்கி (Enki) பாபிலோனிய நாட்டுப் பழங்குடியினராகிய சுமேரியர்களின் “உலகின் தோற்றமும் பேரழிவும்” என்ற பழங்கதையில் சுமேரிய முன்னோர்களைத் தோற்றுவிக்க அணு என்ற வான் கடவுளோடு, நிலப்பெண் கடவுளுக்கும் ஆண் கடவுளுக்கும் துணை நின்ற நீர்க் கடவுளாகக் கூறப்பட்டுள்ளது.
  4. என்லில் (Enlil) பாபிலோனியப் பழங்கதைகளில் வரும் நிலக்கடவுள்.
  5. ஹொலோபிரெஸ்டிக் (Holophrastic) ஒரு தொடர் அல்லது வாக்கியத்தால் கூறப்படும் ஒரு பொருளை, ஒரே சொல்லில் விளக்குவது.
  6. ஹொமொஜீனியஸ் (Homogeneous) ஒரே மனிதகுலத்தைச் சேர்ந்த…
  7. ஒடிஸி (Odyssey) கிரேக்கப் பெரும் புலவர் ஹோமர் இயற்றியதாகக் கூறப்படும் ஒரு பழங்கதை.
  8. ஒப்ஹிடெஸ் (Ophites) மனித அழிவைக் கொண்டு வந்துவிட்ட நாகப்பாம்பினை வழிபட்ட பண்டைக் கிறித்துவ சமயத்தவர்.
  9. ஒபிர் (Ophir) விவிலிய நூலில் கூறப்பட்டிருக்கும் பொன்வளம் கொழிக்கும் நாடு. சிலர், பம்பாய்க் கடற்கரையைச் சேர்ந்த பழைய துறைமுகமாகிய சோபரா (Sopara) என்றும், சிலர், சிந்துநதி கடலோடு கலக்குமிடத்தில் உள்ள சமஸ்கிருத அப்ஹிர் (Abhira) என்றும் சிலர் அரேபியாவில் எங்கோ உள்ள ஓர் இடம் என்றும் கூறுவர்.
  10. ஓனெஸ் (Oannes) பாரசீக வளைகுடா வரை நீந்தி வந்ததாகவும், தன்னோடு நாகரீகத்தையும் கொண்டு வந்ததாகவும் கூறப்படும் கற்பனை மனித மீன்.
  11. ஹெளஸ்ஸா (Haussa) ஆப்பிரிக்காவில் உள்ள நைசீரியா மற்றும் சூடான் நாட்டில் வாழும் நீக்கிரோக்கள், மற்றும் அவர்களின் மொழி.
  12. ஹரியன்கள் (Hurrians) இன்றைய சிற்றாசியாவாம் பழைய கிழக்கு அனடோலியாவுக்கும், யூபிரடெஸ், டைகரஸ் ஆறுகளுக்கு இடைப்பட்ட நாடாம் வடக்கு மெலபடோமியா வுக்கும் இடையில் அர்மீனிய மலையத்தே தோன்றிய

பழங்குடியினர்: அவர்களின் மொழி. இந்தோ – ஐரோப்பிய மொழியோ, செமிடிக் இன மொழியோ அன்று. ஜார்ஜியன் மற்றும் காகேஸியன் மொழி இனத்தைச் சேர்ந்தது.

  1. கட்டிகரா (Katigara) தென்சீனக் கடலில் உள்ள வியட்நாமின் ஒரு பகுதியாய், சைகோன் நகரைத் தலைநகராகக் கொண்டது. கொச்சின் சைனா (Cochin-china) எனவும் அழைக்கப்படும் நாடு.
  2. கர்நக் (Karnak) எகிப்தில் ஒடும் நைல் நதிக்கரையில் உள்ள ஒரு சிற்றுார்.
  3. கரியன்கள் (Carians) சிற்றாசியாவில் தென்மேற்குப் பகுதியில் இருந்த பழம்பெரும் நாடு.
  4. கலட்(Kalat) தென்மேற்குப் பாகிஸ்தானின் ஒரு வருவாய்க் கோட்டம்.
  5. கனட்டே (Khan-ate) ஓர் அரசன் அல்லது அதிகாரியின் ஆட்சிக்கு உட்பட்டநிலப்பரப்பு: அதாவது வருவாய்க் கோட்டம்.
  6. கிஷ் (Kish) பாபிலோனியாவில உள்ள தொல் பழங்காலச் சுமர் நாட்டில் இருந்த ஒரு நகரம்.
  7. க்யோ-கெள (Kiao-Chow) கிழக்குச் சீனாவில் உள்ள ஒரு நகரம்.
  8. கிரீட் (Crete) மத்திய தரைக்கடலில் உள்ள ஒரு கிரேக்கத் தீவு.
  9. கிரோனஸ் (Cronus) கிரேக்கப் பழம் புராணத்தில் உரானஸ் என்பான் மகனாய்ப் பிறந்து, தந்தையின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டவனும், அவன் மகன் ஜெயஸ் என்பானால் பதவி இழக்கப்பட்டவனும் ஆவன்.
  10. க்ளாடியன் (Claudian) கி.பி.390-404 ஆண்டளவில் இருந்த உரோமப் புலவர்.
  11. க்ளாடியஸ் (Claudius) கி.பி.41 முதல் 54 வரை அரசாண்ட உரோமப் பேரரசன்.
  12. குவார்ட்ஸைட்டே (Quartzite) பெரிய சக்கிமுக்கிக் கல் கலந்த, மின்னொளி வீசும், எளிதில் உருமாற்றம் செய்யக் கூடிய மணற்பாறை.
  13. காப்படொசியா (Cappadocia) சிற்றாசியாவின் கிழக்குப் பகுதி. செமிடிக் இனத்து வணிகர்களால், தொடக்க காலத்தில் குடியேறப் பெற்ற பின்னர், பர்ஷியர்களால் கி.மு.584ல் வெற்றி கொள்ளப்பட்டது.
  14. கேனன் (Cannan) இன்றைய இஸ்ரேல் நாடு எனப் பெரும்பாலும் கருதப்படுவது, ஜோர்டானுக்கு.மேற்கிலும், சிரியாவுக்குத் தெற்கிலும் இருப்பது.
  15. கோயிட்டெய்(Kuetei) கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றாகிய போர்னியாவில் வழக்காற்றில உள்ள எழுத்து.
  16. க்நொஸெஸ் (Knossos) பண்டைய கிரீட் நாட்டின் தலைநகர்.
  17. காக்காஸியன் (Caucasian) தெற்கு ஐரோப்பாவில், கருங்கடலுக்கும், காஸ்பியன் கடல்களுக்கும் இடையில் உள்ள மலைத் தொடர்களின் இரு பக்கங்களிலும் வாழந்த பழங்குடி மக்களின் பண்பாடு.
  18. கூஸ்கோ (Cuzco) தென் அமெரிக்காவில் பசிபிக்கடலைச் சார்ந்துள்ள பெரு நாட்டின் ஒரு நகர். 66. கோண்டு (Gondwana) வனம் கல்தோன்றி மண்தோன்றாக் காலமாம் தொல் உயிர் ஊழிக் காலத்தில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா வழியாக, ஆஸ்திரேலியா முதல் தென் அமெரிக்கா வரை, நீண்டு பரந்து கிடந்த நிலப்பரப்பு.
  19. சப்ஹ (Sabah) தென் சீனக் கடலை ஒட்டி, வடகிழக்குப் போர்னியோவில் உள்ள மலேசிய மாநிலம்.
  20. “சாப” (Saba) தென் அரேபியாவில் இருந்த தொல் பழம் நாடு.
  21. சபஹேயன் (Sabaean) தென் ஆபிரிக்க மொழி – கல்வெட்டுகளில் மட்டுமே காணக் கூடியது.
  22. சாகய்ஸ் (Sakais) மலேயத் தீபகற்பத்தில் வாழ்ந்த பழங்குடியினர்.
  23. சாலமன் (Solomon) கி.மு. 10வது நூற்றாண்டில், இஸ்ரேல் ஆண்ட டேவிட் என்ற அரசன் மகன். முதலாவது கோயிலைக் கட்டியவன். அறிவுக்குப் புகழ் பெற்றவன். . .
  24. சால்டிஸ் (Chaldeas) தெற்கு பாபிலோனியாவில், துருக்கியில் தோன்றி, பாரசீக வளைகுடாவில் கலக்கும் யூப்ரடஸ் ஆற்றின் வண்டல் படிந்து உண்டான கீழ்ப் பகுதியாம் மெஸ்படோமியாவில் உள்ள நிலப்பரப்பு.
  25. சால்டிஸ் (Chaldeams) சால்டீம்ஸ் நாட்டு மக்கள்.
  26. சிக்கா (Sicca) ஆப்பிரிக்காவின் வட கடற்கரையைச் சார்ந்த இடம். பொயினிஷியா மக்களின் குடியேற்ற நாடு; பெண்களைத் தேவதாசிகளாக, அதாவது கடவுளுக்குப் பணி புரிவர்களாகக் கொடுக்கும் வழக்கம் இருந்த ஓர் இடம். 75. சிரியா (Syria) மத்திய தரைக் கடலின் கிழக்குக் கரையைச் சார்ந்த தொல்பழம் நாடு. –
  27. சித்தியன் (Scythian) தென்கிழக்கு ஐரோப்பா, மற்றும் ஆசியாவில், தொல் பழங்காலத்தில் வாழ்ந்திருந்த, நாடோடி வாழ்க்கையும், போர்க் குணமும் வாய்ந்த மக்களின் நாகரீகம், மற்றும் அவர்கள் வழங்கிய இராணிய மொழி.
  28. ஷீபா (Sheba) கி.மு. பத்தாம் நூற்றாண்டில் இஸ்ரேலை ஆண்டிருந்த சாலமன் மன்னனின் பெருமை அறிவாற்றல்களை ஆய்ந்து அறிய அவன் அவைக்குச் சென்ற ராணி. அவள் ஆட்சி தென்மேற்கு அரேபியாவில் உள்ள யேமன் நாடு வரை பரவியிருந்தது.
  29. சிய்பெலெ (Cybele) ஆசியப் பழங்குடி மக்களால் வழிபடப் பெற்ற தொல் பழங்கால, நிலச்செல்வம் கிரேக்க நிலத்தெய்வம் “ரேகா” (Reha) வாகக் கருதப்படும்.
  30. சுக்ஹு (Sukuh) மத்திய அமெரிக்காவில் உள்ள பண்டைய நிலப்பகுதி.
  31. சுசா (Susa) இரான் நாட்டின் தெற்கில் இருந்து அழிந்து போன தொல் பழம் இடம்.
  32. சுமத்ரா (Sumatra) மலையத் தீபகற்பத்திற்குத் தெற்கில் உள்ள கிழக்கிந்தியத் தீவுக் கூட்டங்களில் பெரிய தீவு.
  33. சுமர் (Sumer) யூபிரடஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கின் கீழ்ப் பகுதியில் இருந்த தொல்பழம் நிலப் பகுதி.
  34. சுமேரியன் (Sumerian) தென் மேற்கு ஆசியா, யூபிரடஸ் ஆற்றங்கரையில் இருந்த தொல் பழம் நாடாகிய பாபிலோனியாவில் வாழ்ந்திருந்த, கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முந்திய பழங்குடியினர். 84. செலபெஸ் (Celebes) கிழக்கிந்தியத் தீவுகளில் போரினியோவுக்குக் கிழக்கே உள்ள தீவு.
  35. செல்லீயன் (Chellean) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தது. பழங்கற் காலத்திய செய்கருவிகள் கண்டெடுக்கப்பட்ட இடம்.
  36. சேனா (Sena) கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இலங்கை ஆண்ட அரச இனம்.
  37. செப்ஹர் (Sephar) செபியின் எனக் கருதப்படும் ஒரு நாடு.
  38. செமான்ங்ஸ் (Semangs) ஜாவாவில் வடக்குக் கடற்கரையில் உள்ள ஒரு நகரம்.
  39. ஸெஸ்டெர்செ (Sesterce) உரோம் நாட்டு நாணயம். தொடக்கத்தில் வெள்ளியாலும் அடுத்து, பித்தளை அல்லது செப்பில் செய்யப்பட்டது.
  40. செரம் (Ceram) கிழக்கிந்தியத் தீவுகளில் இந்தோனேஷியாவைச் சார்ந்த ஒரு தீவு.
  41. ஜஸ்பர் (Jasper) ஒரு வகை வண்ணக் கருவிகள்.
  42. ஜஸ்பர்ஸ் (Jaspers) ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு தத்துவ மேதை.
  43. ஸொகொடோ (Sokoto) மத்திய ஆப்பிரிக்காவில், ஹெளஸா இனத்து மக்கள் வாழும் பல பகுதிகளுள் ஒன்று.
  44. ஸொகொத்ரா (Sokotra) இந்தியப் பெருங்கடலில் அரேபியாவுக்குத் தெற்கில் உள்ள ஒரு தீவு.
  45. ஸொலிமி (Solymi) கி.மு.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர் ஒருவரால் தென் ஆசியாவிற்குத் தெற்கில் இருந்த லிசியா (Lycia)வுக்குத் தம் நூலில் இட்டு வழங்கிய வேறு ஒரு பெயர்.
  46. ஸோபரா (Sopara) பம்பாய்க் கடற்கரையைச் சேர்ந்த பழைய துறைமுகம்.
  47. ஸ்ட்ராபோ (Strabo) கி.மு. அல்லது கி.பி. யில் வாழ்ந்திருந்த கிரேக்க நாட்டு நில நூல் வல்லார்.
  48. ஸ்லாவோனிக் (Slavonic) ஐரோப்பிய யுகோஸ்லாவியா நாட்டுக்கு வடக்கில் பால்கன் என்ற உள்நாட்டுக் கடல் பகுதியில் உள்ள நாடு; அந்நாட்டு மக்கள்.
  49. ஜுலுஸ் (Zulus) ஆப்பிரிக்காவின் தென்கிழக்கில் உள்ள பண்டு (Bantu) என்ற நீக்ரோ இனத்தவர்; அவர்கள் வழங்கும் மொழி.
  50. டிமெடெர் (Demeter) கிரேக்கப் பழம் புராணங்களில் வரும் உழவு மற்றும் பயன் அளிக்கும் கடவுள்.
  51. டிராப்பியன் (Trappian rock) ராக் ஒரு வகை அடுக்குப் பாறை.
  52. டாரியஸ் (Darius) கி.மு.588 முதல் 486 வரை பர்ஷிய நாடாண்ட அரசன்.
  53. டெல்பி (Delphi) கிரீஸ் நாட்டின் நடுப்பகுதியில், தெய்வ வாக்குக் கூறப்படுவதாகப் (அதாவது குறி சொல்லப் படுவதாக) புகழ் பெற்ற பழம்பெரு நகர்.
  54. டேடன் (Dedan) பாரசீக வளைகுடாவில் உள்ள தீவுக் கூட்டங்களில் ஒன்று. 105. டொங்-கிங் (Tong-King) பிரென்சு-இந்தோ சீனாவின் பழைய மாநிலம். கி.பி. 1946-ல் வியட்நாம் நாட்டின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது.
  55. டொமிடியன் (Domitian) கி.பி.31 முதல் 96 வரை அரசாண்ட உரோமப் பேரரசன்.
  56. டோடொனா (Dodona) தொல் பழங் கிரேக்க நாட்டின் வடமேற்குப் பகுதியில் இருந்த பழம்பெரும் நாட்டில், சீமை ஆல் அல்லது கருவாலி மரங்கள் நிறைந்த சோலையில் யூதர்களுக்குத் தெய்வ வாக்குக் கிடைக்கும் இடமாகப் புகழ் பெற்ற ஒரு நகரம்.
  57. ட்ரோஜன் (Trojan) வடமேற்குச் சிற்றாசியாவில் இருந்த தொல் பழம் நகராகிய டிராயில் (Troy) இருந்த தொல் பழங்கால மக்கள். பண்டைக் கிரேக்க வீரகாப்பியக் கதைக் களமாய்த் திகழ்ந்தது டிராய் நகர். “பிரியம்” என்ற அரசன் மகள் பாரிஸ் என்பவனால் கடத்தப்பட்ட மெனெலாயஸ் (Menelaus) மன்னன் மனைவி ஹெலன் (Helan) என்பவனை மீட்பதற்காகக் கிரேக்கர் தொடுத்த போர் நடந்த இடமாகும்.
  58. டெளடோனிக் (Teutonic) வட ஐரோப்பாவைச் சேர்ந்த ஜெர்மானியர் உட்பட உள்ள தொல் பழங்குடியினர்.
  59. டைகிரீஸ் (Tigris) துருக்கி மற்றும், இராக் நாடுகளில் ஓடி, யூப்பிரடஸ் ஆற்றோடு அது, பாரசீக வளைகுடாவில் விழும் முன் கலக்கும் ஒர் ஆறு.
  60. டெர்மிலோயி (Termiloi) கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்று ஆசிரியர் அவர்களால், தென் ஆசியாவின் தெற்கில் இருந்ததாகக் கூறப்படும் ‘சொலிமி’ (Solimi)யை அடுத்திருந்த ஒரு நிலப்பகுதி. 112. தகோபா (Takoba) தூர கிழக்கு நாடுகளில் ஒன்றான மலைய தீபகற்பத்தில் உள்ள ஓர் ஊர்.
  61. தாஸ்மானியா (Tasmania) ஆஸ்திரேலியாவுக்குத் தென் கிழக்கில் உள்ள ஒரு தீவு.
  62. தாய்லாந்து (Thailand) தென்கிழக்கு ஆசியாவில், வங்காள விரிகுடா மற்றும் சயாம் வளைகுடாப் பகுதியில் உள்ள ஒரு நாடு.
  63. நீம்ராட் (Nimrod) கிறித்தவ விவிலிய நூலில் வரும் “குஷ்” என்பான் மகன். நல்ல வேட்டையாளன்.
  64. நியோலித்திக் (Neo-Lithic) புதிய கற்காலம். மெருகேற்றப்பட்ட கல்லில் செய்யப்பட்ட படைக் கலங்களைக் கையாண்ட காலம்.
  65. நின்லில் (Ninlil) பாபிலோனியப் பழங்கதைகளில் வரும் ஆண் நிலத் தெய்வம் என்லில் (Enli) என்பான் மனைவி.
  66. நீரோ (Nero) கி.பி. 54 முதல் 68 வரை ஆட்சியில் இருந்த உரோமப் பேரரசன்.
  67. நெக்கோ (Necho) சூயஸ் கால்வாயை வெட்டத் தொடங்கிய எகிப்திய மன்னன்.
  68. நெகிரிட்டோ (Negrito) கிழக்கிந்தியத் தீவுகள், பிலிபைன்ஸ், மற்றும ஆப்பிரிக்கக் காடுகளில் வாழும் பல்வேறு வகை நீகிரோ இனத்தவர்.
  69. நோஅக் (Noah) விவிலியக் கதையில் கூறுமாறு, ஊழிப் பெருவெள்ளத்தின் போது இறைவன், தன் அருளால் ஆற்றலால் படைத்த தோணியை ஓட்டியவர். 122. ப்யூனன் (Funan) இன்றைய தாய்லாந்து, அன்றைய சயாம் வளைகுடாவின் கரையில் உள்ள ஒரு நகரம்.
  70. “ப்யூம்” (Fayum) எகிப்தின் வடக்கு மாநிலம்.
  71. ப்ரான்சி பொதா (Branchi poda) பொதா தட்டையான இலை போலும் உறுப்புகளைக் கொண்ட நண்டு நத்தை போலும் கெட்டியான மேல் தோடுகளைக் கொண்ட, கடல் வாழ் உயிரினங்களோடு உறவுடைய உயிரின வகை.
  72. பதான்ஸ் (Pathans) ஆப்கானிஸ்தானத்து முஸ்லிம் இனம்.
  73. பஹரேயின் (Bahrein) பாரசீக வளைகுடாவில் உள்ள தீவுக் கூட்டம்.
  74. பாரஒக் (Pharoh) எகிப்தியத் தொல்பழக்கால மன்னர்களின் பட்டப்பெயர்.
  75. பிலாஸ்கி (அ) பிலாஸ்கியன் (Pilasgi or Pilasgian) கிரேக்கம் மற்றும் அதன் அண்டை நாடுகளில் வாழ்ந்தவராகக் கருதப்படும், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கி.மு. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த, கிரேக்க மொழியல்லாத மொழி பேசிய ஒரு மக்கள் இனம்.
  76. பாலியோலித்திக் (Paleolithic) பழங் கற்காலத் தொடக்க காலம். புதிய கற்காலம் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட காலம்.
  77. பலுஜிஸ்தான் (Baluchistan) மேற்கு இந்தியாவில் உள்ள ஒரு நாடு.
  78. பஹாலிக் கல்ட் (Phallic Cult) படைப்பு ஆற்றல் சின்னமாக, இலிங்க வடிவை வழிபடும் வழிபாட்டு நெறி. 132. பாக்ட்ரியன் (Bactrian) இன்றைய ஆப்கானிஸ்தானத்தின் வடகிழக்குப் பகுதியில் இருந்த தொல்பழம் நாட்டின் மக்கள், அவர்கள் பண்பாடு.
  79. பாபிலோனியன் (Babylonian) தென்மேற்கு ஆசியாவில், துருக்கி, சிரியா, இரான் வழியாக ஓடிக் கருங்கடலில் கலக்கும் யூபிரடஸ் ஆற்றின் கீழ்ப்பகுதியில் உள்ள தொல் பழம் பேரரசு நிலவும் நாட்டு மக்கள் மற்றும் அம்மக்கள் நாகரீகம்.
  80. பார்த்தியன்ஸ் (Parathians) இராக் இரான் நாடுகளுக்கு வடக்கில் உள்ள காஸ்பியன் என்ற உள்நாட்டுக் கடலுக்குத் தென்கிழக்கில் இருந்து தொல் பழங்கால நாடும் மக்களும்.
  81. பாலி (Bali) கிழக்கிந்தியத் தீவுகளில், ஜாவாவுக்குக் கிழக்கே உள்ள ஒரு தீவு.
  82. பாலிஒண்டாலஜி (Paleontology) மர இனம், மா வினங்களின் அடிப்படையிலான நிலஇயல் ஆய்வின் படி, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து நிலையைக் கணிக்கும் அறிவு.
  83. பாலினெஸ் (Balinese) பாலி நாட்டு மக்கள் அவர்கள் பண்பாடு.
  84. பிரிட்டிஷ் நிம்ராட் (British Nimrod) தென்மேற்கு ஆசியாவில் யூபிரடஸ் ஒட்டிய சுமேரிய நாட்டு நகரங்களில் ஒன்று.
  85. (அ) பிலின்ட் சில்லுகள் (Flint Flakes) மத்திய பாலியோ – லிதிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட முனைகள் சீர் செய்யப்பட்ட தொழில் செய்கருவிகள். ஐரோப்பாவில், மத்திய கற்காலத்தில் சீர்செய்து செதுக்கப்படா நிலையிலேயே பயன்படுத்தப்பட்டன. 140. ப்ய்லோன் (Pylon) எகிப்தியக் கோயில்களின் கோபுர வாயில்.
  86. பிளைனி (Pliny) கி.பி.23 முதல் 79 வரை வாழ்ந்திருந்த உரோம் நாட்டு எழுத்தாளர்.
  87. புன்ட் (Punt) எகிப்தியர்களின் தொல் பழங்கால வாழிடம். கி.மு. 2750 முதல் வாணிக நிலையம். டோமாலி கடற்கரையில் இருந்தது.
  88. பெட்ரா (Petra) ஜோர்டன் ஆற்றுப் பகுதியில் உள்ள அரபு நாட்டின் பழைய நகரம்.
  89. பெரு (Peru) தென் அமெரிக்காவில் பசிபிக் கடற்கரையைச் சார்ந்த நாடு.
  90. பெல்லேரோ போன் (Bellerophon) கிரேக்க நாட்டுப் பழங்கதைகளில் தென் கிரேக்கத்தில் இருந்த ஆடம்பர வாழ்க்கைக்கும், வாணிகத்திற்கும் பெயர் பெற்ற கோரித் (Corith) நகரை ஆண்டவனும், அறிவாற்றலும், பேராசையும் கொண்ட சிஸ்ய்பஹுஸ் (Sisyphus) மன்னனின் பெயரனுமாவன்.
  91. பொலினீஷியா (Polynesia) பசிபிக் பெருங்கடலில் பரவலாகக் கிடக்கும் தீவுக்கூட்டம்.
  92. பொய்னிஷியர் (Phoenicians) மத்திய தரைக் கடலைச் சார்ந்து, இன்றைய சிரியா மற்றும் பாலஸ்தீனத்துத் தொல் பழங்காலத்து நாட்டில் வாழ்ந்தவர். கடல் ஓட வல்ல வணிகர்.
  93. போர் பெரிடிக் (Porpheitic) கரும்சிவப்பு, ஊதா வண்ண எகிப்தியப் பாறை.

149.போர்னியோ (Borneo) கிழக்கிந்தியத் தீவுக் கூட்டங்களில் மிகப் பெரிய தீவு.  150. போஸிடொன் (Poseidon) கிரேக்கப் பழங்கதைகளில் வரும் கடல் தெய்வம்.

  1. மக்காய் (Mackay) ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு துறைமுகம்.
  2. மங்கோலிட் (Mangoloid) மத்திய ஆசியாவைச் சேர்ந்த மஞ்சள் நிற மேனி, கறுத்துக் குந்தி நிற்கும் மயிர், சாய்ந்த பார்வை உடைய மக்கள் இனத்தவர்.
  3. மருடுக் (Marduk) பாபிலோனியப் பழங்கதைகளில் வரும் தலையாய கடவுள்.
  4. மலேஷியா (Malaysia) கிழக்கிந்தியத் தீவுக்கூட்டம்.
  5. மலேயா (Malaya) தூரக்கிழக்கில், தாய்லாந்து உள்ளிட்ட ஒரு தீபகற்பம்.
  6. மவோரி (Maori) பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்குத் தென்கிழக்கில் உள்ள நியூஸிலேண்ட் (New Zealand) நாட்டின், தொல் பழங்குடியினராம் பழுப்பு நிற மேனி மக்கள் மற்றும் அவர்கள் வழங்கும் மொழி.
  7. மார்க்கோ-போலோ (Marco Polo) கி.மு. 1254 முதல் 1224 வரை வாழ்ந்திருந்தவன்.இத்தாலி நாட்டுத் தொல் பழங்கால மாநிலமாம் வெனீஸ்யாவைச் சேர்ந்தவன். உலகம் சுற்றி வந்தவன்.
  8. மிட்டானி (Mitanni) யூபிரடஸ் ஆற்றின் வளைவில் உள்ள தொல் பழம் நாடு. கி.மு. 15ஆம் நூற்றாண்டில் எகிப்தோடு போரிட்டுக் கொண்டிருந்த நாடு.
  9. முண்டா (Munda) பர்மா மற்றும் மலேயத் தீவுகளில் வழங்கிய தொல் பழமொழி. 160. முஸ்காட் (Muscat) அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையில் உள்ள ஒமன் வளைகுடாவை அடுத்து உள்ள ஓமன் நாட்டுத் தலைநகர்.
  10. மெக்ஸிகோ (Mexico) வட அமெரிக்காவில் ஐக்கிய நாடுகளுக்குத் தெற்கில் உள்ள நாடு.
  11. மெம்பிஸ் (Memphis) எகிப்தில் நைல்நதி, மத்திய தரைக் கடலோடு கலக்குமிடத்தில் உள்ள தொல் பழங்கால நகர். ஒரு காலத்தில் எகிப்தின் தலைநகராகவும் இருந்தது.
  12. மெர்கா (Merca) இந்தியப் பெருங்கடலில், ஏடன் வளைகுடாவை அடுத்து, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள டோமாலி நாட்டில் உள்ள ஒரு நகரம்:

164, மெஸபொடாமியா (Mesopotamia) தென்மேற்கு ஆசியாவில், டைகிரிஸ், யூபிரடஸ் ஆறுகளுக்கு இடையில் இருந்த தொல் பழம் நாடு. இன்றைய இராக் நாடு.

  1. மித்திராயிச் சமயம் (Mithraic Religom) பர்ஷிய நாட்டில், தொல் பழங்காலத்தில் இருந்த ஒளி, உண்மைகளின் கடவுளாகக் கருதப்பட்ட மித்ராவை வழிபடும் சமயம்.
  2. மெலனேஷியா (Melanesia) தென் பசிபிக் கடலில் உள்ள பிஜி (Fiji) தீவு உள்ளிட்ட தீவுக் கூட்டம்.
  3. மேகாலித் (Megalith) வரலாற்றுக் காலத்துக்கு முந்திய தொல் பழங்காலத்தில், நினைவுச் சின்னங்கள் அல்லது கட்டிடம் கட்டப் பயன்படுத்தப்பட்டபெரிய பாறாங்கல்.
  4. மோன்-க்மெர் (Mon-Khmer) இந்தோ சீன நாட்டில் வழங்கும் மொழிக் குடும்பம். 169. மெலெனேஷியர் (Melanesians) ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கில் உள்ள பவளத்தீவாம் மெலெனேஷியத் தீவில் வாழும் மக்கள்.
  5. மினோயன் (Minoan) மத்திய தரைக் கடலில் உள்ள கிரேக்கத் தீவாம் கிரீட்டில் (Crete) கி.மு. 3000 முதல் 1100 வரை நிலவியிருந்த வரலாற்றுக்கு முந்திய பண்பாடு.
  6. யுகாட்டன் (Yucatan) வட அமெரிக்கத் தீப கற்பத்தில், மெக்ஸிகோ வளைகுடா வரை நீண்டு இருக்கும் ஒரு நாடு.

172, யேமன் (Yemen) தென்மேற்கு அரேபியாவில் செங்கடல் பகுதியில் உள்ள நாடு.

  1. வில்லா (Villa) இத்தாலி நாட்டில் சிற்றூரில் உள்ள வீடுகளைக் குறிக்கும் பெயர்.
  2. வெஸ்பாஸியன் (Ves-pa-sian) கி.பி. 69 முதல் 79 வரை ஆண்ட உரோமப் பேரரசன்.
  3. வோகன் (Vocan) பிரென்ச்-இந்தோசீனாவில், அன்னம் என்னும் மாநிலத்தில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, சமஸ்கிருதக் கல்வெட்டில் காணப்படும் ஒரு நகரம்.
  4. ஜென் (ZEN) போதி தர்மன் என்ற பெயர் பூண்டு, சீனா சென்ற காஞ்சிச் சிற்றரசன். அங்கு போதித்த தியானத் தத்துவத்திற்கு அங்கு இடம் பெற்ற பெயர்.
  5. ஜூலுஸ் (Zulus) தென்ஆப்பிரிக்கா, நெட்டால் பகுதியில் வாழ்ந்திருந்த பண்டு (Bantu) என்ற நீக்ரோ இனத்தவர், மற்றும் அவர்கள் வழங்கிய மொழி.

 

 

 

 

மணிகள் (Beads)

தொல் பழங்காலத்தில், பல்வண்ணக் கற்களால் பல்வடிவ மணிகள் செய்யப்பட்ட மாலைகள் அணிந்தனர். அவற்றுள் சில:

  1. அமேசானிட் மணிகள் (Amazonite Beads) தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் ஆற்றங்கரையில் காணப்படும் நடுத்தர விலையுள்ள ஒருவகைப் பச்சைக் கற்களால் ஆன மாலை.
  2. எட்செட் கார்னீஸியன் மணிகள் (Etched Carnelian Beads) நன்கு செதுக்கப்பட்ட அல்லது பொறிக்கப்பட்ட, மங்கிய சிவப்பு நிறம் வாய்ந்த கற்களால் செய்யப்பட்ட மாலை.
  3. எக்ஸ்கனல் பேரல் மாலை (Hexagonal Barrel Beads) மின்னல் போல் ஒளி வீசும், எளிதில் உருமாற்றம் செய்யக் கூடிய குவார்ட்ஸைட்டே (Quartzite) என்ற ஒரு வகைக் கல்லால், ஆறு பட்டையும், பீப்பாய் வடிவமும் உள்ள மணி மாலை.
  4. லேப்பிஸ் சிலிண்டெரிகல் மணிகள் (Lapis cylinderical Beads) கந்தக அமிலத்திலிருந்து கிடைக்கும் ஒளி மிகுந்த நீல வண்ணக் கற்களில் இருந்து உருளை வடிவில் செய்யப்பட்ட மணி மாலைகள்.
  5. டிரையாங்குலர் பேரல் மணிகள் (Triangular Barrel Beads) மேற்படி கல் வகைகளால், முக்கோண வடிவில் செய்யப்பட்ட மணி மாலைகள்.

 (முற்றும்)