Recommended Books
-
அகிம்சா மூர்த்திகள்
“இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தவர்கள் நாங்கள்தான்” என்று உரிமை கொண்டாடும் காங்கிரஸ்காரர்கள், ‘அகிம்சா மூர்த்திகள்’ என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் சுதந்திரத்திற்கு முந்தைய அவர்களின் ஆட்சிக்காலத்திலும், சுதந்திரத்திற்குப் பின் நடத்திய ஈராண்டு ஆட்சியிலும் அவர்கள் நிகழ்த்திய ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி, கலைஞர் அவர்கள் ‘மாலை மணி’ பத்திரிகையில் 1951ஆம் ஆண்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
-
இருளும் ஒளியும்
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள், சட்டப்பேரவையிலும் சட்டமன்ற மேலவையிலும் 26-2-1973-ல், எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற சோசலிசக் கொள்கையில் இந்த அரசு அசைக்கமுடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது என்பதையுணர்த்தும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்கள். அப்பேருரைகளின் தொகுப்பே இருளும் ஒளியும்” என்னும் இந்நூல்.
-
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் எழுதிய “களப்பிரர் ஆட்சியில் தமிழகம்” என்ற நூல் களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்ட காலகட்டம் குறித்து ஆராயும் ஒரு முக்கியமான வரலாற்றுப் படைப்பாகும். இந்த நூல், அக்காலத்திய தமிழகத்தின் அரசியல், சமூகம், பொருளாதாரம் மற்றும் பண்பாடு போன்ற பல்வேறு அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.