ப. ராமஸ்வாமி எழுதிய “அலிபாபா” நூல், பிரபல அலிபாபா மற்றும் நாற்பது திருடர்கள் கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு அல்லது தழுவல் ஆகும். இது குழந்தைகளுக்கான இலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு நூல்.
நாட்டில் புரையோடிப் போய்க் கொண்டிருக்கிற சாதிப் பூசல்களுக்கும் கலவரங்களுக்கும் முடிவுகட்டி, சமத்துவ சமுதாயம் காணவேண்டுமென்ற எண்ணத்தைப் பின்னணியாகக் கொண்டு கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதியுள்ள இந்தப் புரட்சிப் புதினம்.
கலைஞர் கருணாநிதி எழுதிய நான்கு சிறுகதைகளின் தொகுப்பு. காளிக்கும் பக்தனுக்கும் நடக்கும் உரையாடலாக அமைந்திருக்கும் ‘கண்ணடக்கம்’ சிறுகதை அறிவியலின் மகிமையைச் சொல்கிறது. மற்ற சிறுகதைகள் உறவுச்சிக்கலையும், ஒழுக்கத்தையும் போதிக்கின்றன.
பண்ணை அடிமைகளாக, வதைக்கப்பட்ட ஒரு குடும்பம் காலமாற்றத்தால் எவ்வாறு எழுச்சி பெறுகிறது. அதற்கு திராவிட இயக்கம் எவ்வாறு உறுதுணை புரிகிறது என்பதை விளக்கும் கதை.